Followers

Wednesday, September 26, 2018

சில பெரியாரிஸ்டுகள் இஸ்லாத்தை விளங்காமல்....

சில பெரியாரிஸ்டுகள் இஸ்லாத்தை விளங்காமல் 786 எண்ணை விமரிசித்துள்ளனர். இந்த 786 என்ற எண்ணைப் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன?
அப்ஜத் எனும் இக்கணக்கின் அடிப்படையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்குரிய எண்களைக் கூட்டினால் அதன் கூட்டுத் தொகை 786 ஆகும். 786 என்பதைப் பயன்படுத்தினால் அது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் பயன்படுத்தியதற்கு ஒப்பாகும் என்ற அடிப்படையில் தான் இவ்வழக்கம் சில முஸ்லிம்களிடம் புகுந்தது.
இதற்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்பதை விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணைக் குறியீடாகப் பயன்படுத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லித் தரவில்லை. அவர்கள் இவ்வாறு பயன்படுத்தியதுமில்லை. அவர்கள் முன்னிலையில் மற்றவர்கள் பயன்படுத்தவும் இல்லை. எனவே இதற்கும், இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை.
உண்மையில் அப்ஜத் எனப்படும் இக்கணக்கு யூதர்களின் ஹிப்ரு மொழியை அடிப்படையாகக் கொண்டு யூதர்கள் உருவாக்கி வைத்திருந்ததாகும். அதை அப்படியே காப்பியடித்துத் தான் அறிவீனர்க்ள் இதை அரபு மொழியிலும் நுழைத்து விட்டனர்,
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
ஒருவ‌ர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவ‌ர் குர்ஆனை ஓதியவ‌ர் என்று கருதப்பட மாட்டார். அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவ‌ர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும், எழுதியவராகவும் ஆக மாட்டார்.
786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்னா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.
அப்துல் கபூர் என்ற பெயருடையவரை அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவ‌ர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.
அவனது திருப்பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதி அது முஸ்லிமல்லாதவ‌ர்களின் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.
ஏனெனில் காஃபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு ஸுலைமான் (அலை) அவ‌ர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதியுள்ளார்கள்.
எனவே பெரியாரிஸ்டுகள் இஸ்லாத்தை விமரிசிப்பதற்கு முன் குர்ஆனை ஒரு முறை படியுங்கள். பெரியார் இஸ்லாம் பற்றி என்ன சொல்லியுள்ளார் என்பதையும் விளங்கி பிறகு இஸ்லாத்தை விமரிசிக்க வாருங்கள்.


5 comments:

vara vijay said...

Why you have deficit Islamic calender, it is impossible to calculate seasons in a year which will result in failure of agriculture.

Dr.Anburaj said...

ரம்சானுக்கு பிறை எப்போது தெரியும் என்று நம்ம ஊா் ஜோதிடரிடமோ பிாலா கோளரங்கத்திலோ கேட்டால் உடனே சொல்லிவிடுவார்கள்.அது மட்டுமு் அல்ல 100 -100 ஆண்டுகளுக்கு என்று பிறை தெரியும் என்று கேட்டால் கூட அச்சடித்து கொடுத்து விடுவார்கள். பிறை விசயத்தில் இந்த வருடம் கன்னியாகுமரியில் ஒருநாள் தொளுகையும் பிற இடங்களில் வேறு ஒரு நாள் விசேச தொளுகையும் நடந்தது. ரம்சாம் 22 என்றும் 24 என்றும் தடுமாறிக்கொண்டிருந்தது. இன்றும் முஸ்லீம்கள் பிா்லா கோளரங்கத்தை நம்புகின்றார்களா ? அறிவியலுக்கும் முஸ்லீம்களுக்கும் என்றும் காத தூரம்தானே.

ASHAK SJ said...

பல நாடுகளில் சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் பிறையை பார்த்து நோன்பு பெருநாள் கொண்டாடுகிறார்கள், பருவமழை பொய்த்து போன காலத்தில் சீசனை பற்றி தெரிந்து என்ன செய்யப்போகிறோம்

vara vijay said...

Calender is science if you don't know seasons you can't plan. There are lot of trans continental birds which breeds by season

ASHAK SJ said...

Now u cant justify & expect the season