Followers

Thursday, April 29, 2021

மலை போன்ற நன்மைகளை மறுமையில் பெற்றுத் தரும்.

 

மலை போன்ற நன்மைகளை மறுமையில் பெற்றுத் தரும்.



எங்கள் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள மரங்களில் நிறைய சிட்டுக் குருவிகள் வாழ்க்கை நடத்துகின்றன. மணிப்புறாக்களும் நிறைய உலவுகின்றன. மரங்களுக்கு பக்கத்தில் சென்றாலே அவைகளின் கீச்சுக் குரல் மிக ரம்மியமாக இருக்கும்.

 

ஒரு பழைய தண்ணீர் பாட்டிலை அறுத்து மரத்துக்குக் கீழ் வைத்து தண்ணீரும் தற்போது தினமும் ஊற்றுகிறேன். மீதமாகும் ரொட்டித் துண்டுகளை பொடியாக்கி தூவி விடுகிறேன். துவரம் பருப்பை சற்று தூளாக்கி தூவி விடுகிறேன். இதனால் அந்த இடத்தில் சிட்டுக் குருவிகள் ஆனந்தமாக அமர்ந்து தண்ணீர் அருந்துகின்றன. உணவும் உண்கின்றன. தற்போது வெயில் காலம் ஆகையால் வாய்ப்புள்ளவர்கள் இது போன்று ஆங்காங்கே தண்ணீர் வையுங்கள். மொட்டை மாடிகளிலும் இதனை செய்யலாம். நாம் அற்பமாக நினைக்கும் ஒரு செயல் மலை போன்ற நன்மைகளை மறுமையில் பெற்றுத் தரும்.

 

ஹள்ரத் ஸஃத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்களுக்காக நான் தர்மம் செய்யலாமா?’ என்று கேட்டேன். ஆம்என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். சரி தர்மத்தில் சிறந்தது எது?’ என மீண்டும் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் புகட்டுவதுஎன விளக்கமளித்தார்கள்” (நூல்: அஹ்மது நஸயீ-3666)

 

ஒருவர் ஒரு கிணற்றை தோண்டுகிறார். அதிலிருந்து ஜின் இனம், மனித இனம், பறவை இனம் போன்ற உயிரினம் நீர் அருந்துவதால் அவருக்கு மறுமை நாளில் இறைவன் கூலி கொடுக்காமல் இருப்பதில்லைஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)




 

 

 

 

Wednesday, April 28, 2021

ஒரு இந்து இளைஞனின் உருக்கமான வேண்டுகோள்!

 

ஒரு இந்து இளைஞனின் உருக்கமான வேண்டுகோள்!

 

'நான் அனில் வாஸ்தவானி பேசுகிறேன்!

 

நேற்று என் நண்பனும் எனது உறவினர் ஒருவரும் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டனர். உடலை பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவ மனையிலிருந்து அழைப்பு வந்தது. மருத்துவமனையின் கீழ் தளத்தில் இறந்த உடல்கள் நிறைய வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த சில தன்னார்வ முஸ்லிம்கள் உடலை அடையாளம் காட்டி எங்களுக்கு தந்தனர். சூரத் நகரில் உள்ள ஜஹாங்கீர்பூர் மயான மேடையிலும் பல முஸ்லிம்கள் இருந்து பொது சேவை செய்து வந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். இறந்த உடலுக்கு சொந்தமான இந்துக்கள் கொரோனா பயத்தினால் பிணத்தின் அருகில் கூட வரவில்லை. ஆனால் முஸ்லிம்களோ எந்த பயமும் இல்லாமல் கவச உடைகளோடு இறந்தவருக்கான கடைசி கிரியைகளை சங்கோஜமின்றி செய்து கொண்டிருந்தனர். உறவினர்களுக்கு முகத்தை காட்டி மிக்க மரியாதையோடு ஈமக் கிரியைகளை செய்ததை எண்ணி நெகிழ்ந்து விட்டேன்.

 

கொரோனா தாக்கத்துக்கு பின் நாம் யாரையும் வெறுக்காமல் எல்லோரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்ற பரந்த எண்ணத்துக்கு வருவோம் தோழர்களே! வெறுப்பை கைவிடுங்கள். அன்பை கையிலெடுங்கள்..

 

பொது சேவையில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் இறைவன் பூரண நலத்தை தருவானாக! மீண்டும் ஒரு சலாமை அன்பு இஸ்லாமிய உறவுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.'




யுவனுக்கு எதிராக களமிறங்கியிருக்கும் சங்கிகள்!


 


யுவனுக்கு எதிராக களமிறங்கியிருக்கும் சங்கிகள்!

 

அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

குர்ஆன் 8:30.

 

இந்த வசனத்தை யுவன் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். உடனே உலகமெங்கும் உள்ள சங்கிகள் ஒன்றாக அங்கு குழுமி அவருக்கு எதிராக எழுதத் தொடங்கி விட்டனர்.

 

ஒரு குர்ஆன் வசனத்தை எடுத்துப் போடுவது அவ்வளவு பெரிய குற்றமா? பிடிக்கவில்லை என்றால் அவரது பக்கத்துக்கு வராமல் இருந்து கொள். அவரது முகநூல் பக்கத்தில் அவர் எதை விரும்புகிறாரோ அதனை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.

 

 

சங்கிகளுக்கு!

 

உனது இந்து மதம் ஒழுங்காக இருந்திருந்தால் நாங்களெல்லாம் ஏன் மதம் மாறப் போகிறோம்?

 

ஒருவன் தனது தாய் மதத்தை விட்டு வெளியேறுவது என்பது வேறு வழியின்றி எடுக்கப்படும் முடிவு இது. மிகுந்த வலிகளுடனேயே அதனை எடுக்கிறோம். மதம் மாறுவது உனக்கு வருத்தமாக இருந்தால் முதலில் இந்து மதத்தை சீர்படுத்து. அதன் பிறகு யுவனுக்கு பாடமெடு.

 

8:30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

 

Tuesday, April 27, 2021

இது தான் தமிழ்நாடு

 


இது தான் தமிழ்நாடு

 

சவுதி அரேபியாவில் நான் பணியாற்றிய காலத்தில் இந்தியாவின் பல மாநில தொழிலாளர்களும் இந்துக்கள், முஸ்லீம்கள் என என்னுடன் பணியாற்றினர்... தமிழர்கள் ஜாதி மதம் பார்க்காமல் பழகும் இனக்கமான குணம் உடையவர்கள். அப்படிப்பட்ட சூழலை வட மாநிலத்தவர்களிடம் காண்பது அரிதிலும் அரிது

வட மாநில இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஆகவே ஆகாது. போனால் போகட்டும் என்று மேம்போக்காக சும்மா சிரித்து வைப்பார்கள். ஆனால் இருவருக்குள்ளும் உள்ளுக்குள் சைத்தான் சைக்கிளில் வந்து கொண்டே இருப்பான். சைவமோ, அசைவமோ அவர் சமைக்கும் உணவை இவர் சாப்பிட மாட்டார், இவர் சமைக்கும் உணவை அவர் சாப்பிட மாட்டார்.

 

அந்த தொழிலாளர் குடியிருப்பு முழுக்க அது தான் நிலை .ஆனால் தமிழர்கள் மத்தியில் இந்து, முஸ்லீம், கிருஸ்தவன், என்ற வேறுபாட்டையோ அது போன்ற சிந்தனையையோ பார்ப்பது அரிதிலும் அரிது. மாமா, மச்சான் என்று ஒரு இனிமையான குடும்ப சூழல் எப்போதும் நிலவும்.

 

நாங்கள் இருந்த அறையில் (5 பேர் தங்க வசதியான அறை) ஒருவர் வெளியேறிய பின்னர், உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் வந்து சேர்ந்தார். கம்பெனி குவாட்ரஸ் என்பதால் நிறுவனம் யாரை நமது அறையில் நியமித்தாலும் அவரோடு குப்பை கொட்டித்தான் ஆக வேண்டும்.

வந்தவர் பேர் கேட்டவுடன் அவர் இஸ்லாமியர் என்பதை தெரிந்து கொண்டேன். ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக் கொண்டோம், எனது எதிர் அறையில் நாராயணன் என்ற தமிழ் நாட்டு நண்பர் ஒருவர் இருந்தார், மாமா , மாப்பிள்ளை என்று தான் உறவு முறை கூறி அழைத்துக் கொள்ளுவோம். அன்பானவர் , அவரும் வந்து அறிமுகமாகி சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் அந்த உபி பாய் என்னை எச்சரித்தார், அவர்களோடு (இந்துக்கள்) அதிகம் பழக்கம் வைத்துக் கொள்ளாதே என்று அதன் பிறகு என்னை அடிக்கடி எச்சரிக்க ஆரம்பித்து விட்டார். நானும் அவரிடம் ஒவ்வொரு முறையும் 'உன்னோட வட நாடு போல கிடையதுடா தமிழ்நாடு ' என்று கூறி எவ்வளவு விளக்கினாலும் , காதில் ஏறவே ஏறாது, நான் நம்பவே மாட்டேன் என்பார்

 

இப்போது போல அது ஒரு நோன்பு காலம். காலை மூன்றரை மணிக்கு உணவருந்த எழ வேண்டும், இரவு பத்து மணிக்கு உணவு தயார் செய்து வைத்து விட்டு , தூங்க போய்விடுவோம், 3.30 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து உணவை மீண்டும் ஒருமுறை சூடு செய்து சாப்பிடுவோம், சில நாட்களில் வேளை அசதி காரணமாக சிறிது அசந்து தூங்கி விடுவோம், பெரும்பாலும் திருட்டு பயம் இல்லை என்பதால் கதவுகள் திறந்தே இருக்கும், (தொழிலாளிகளிடம் எதுவும் இருக்கவும் செய்யாது) மூன்றறை மணியை தாண்டி 5, அல்லது பத்து நிமிடம் தாமதம் ஆனால் போதும் , நம்ம நாராயணன் மாமா வந்து விடுவார். 'மாமா எழுந்திருங்க , நோன்பு வைக்க நேரமாச்சி ' என சிரித்துக் கொண்டே எழுப்புவார்.

 

போகப் போக அலாரம் அடிப்பதற்க்கு ஐந்து நிமிடம் முன்பே நாராயணன் மாமா வந்து எழுப்பி விடுவார். 'ஏன் மாமா நீங்க போய் தூங்குங்க' என்றாலும், இல்ல மாப்ள இருக்கட்டும் நீங்க சாப்பிடுங்க என்று நாங்கள் சாப்பிட்டு முடியும் வரை அமர்ந்திருப்பார். சில நேரங்களில் எங்களை எழுப்புவதற்கு முன்பே சாப்பாட்டை அடுப்பில் சூடு செய்து வைத்து விடுவார். நாராயணன் மாமாவின் அன்பு, கரிசனம் அந்த உபி பாய்க்கு உள்ளுக்குள் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்திருந்தது, நாராயணன் மாமாவுக்கு ஹிந்தி அவ்வளவாக வராவிட்டாலும் அந்த உபி பாயும் ,மாமாவும் நெருங்கிய நண்பர்கள் போல பழக ஆரம்பித்து விட்டனர். இப்படியாக இரண்டு வருடம் ஒடி விட்டது

 

அந்த உத்தர பிரதேச நபருக்கு விசா முடிந்து நாடு திரும்பும் காலம் வந்து, கிளம்ப வேண்டிய பிளைட் டிக்கெட்டும் வந்தது .அன்று கிளம்ப வேண்டிய நாள், நம்ம நாராயணன் மாமாவை கட்டி அனைத்து கண்ணீர் விட்டு அழுதார் அந்த உபி பாய். மாமாவும் கண் கலங்கி விட்டார்,

 

கடைசியில்தான் அந்த ஹைலைட் நடந்தது, அந்த உபி பாய் என்னிடம் வந்தார் 'அப்துல்லா நீங்க சொன்னப்ப நான் நம்பல, உங்க தமிழ்நாடு பூராம் இப்படித்தான் இந்து, முஸ்லீம் பாகுபாடு இல்லாமல் பழகுவாங்களா' என மீண்டும் கேட்டார். ஆமா பாய் ஆமா இது தான் எங்கள் தமிழர் பண்பாடு என்றேன். உங்களுக்காக நான் அல்லாகிட்ட துவா செய்றேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்... எனக்கு அப்போ 'நம்ம தமிழ்நாடுடா' என காலரை தூக்கி விட்டுக்கிடனும் போல இருந்தது... நன்றி நாராயணன் மாமா , மச்சான்களே.

 

சவுதியில் பணியாற்றும் நண்பர் ஒருவருக்கு நேர்ந்த அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். சிறு சம்பவமாக இருந்தாலும் மதவாத சக்திகள் தமிழகத்தையும் வடநாடு போல சின்னாபின்னமாக்க வரிந்து கட்டி நிற்கும் இந்த சூழலில் இதனை எழுத்து வடிவில் பதிய வேண்டும், என்பதற்காக எழுதி முகநூலில் பதிவிட்டேன்.

 

அஹமத்

 

எந்த நாட்டிலும் இத்தகைய இழிவு மக்களுக்கு ஏற்பட்டதில்லை

 


மத்திய அரசோ மாநில அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு வாழ்வை நகர்த்துகின்றனர்.

 

டெல்லி போகல் மார்க்கெட் ஏரியாவில் தன்னார்வ அமைப்புகள் மூலமாக ஆக்சிஜனை சுவாசித்து சிறிது நேராமாவது நிம்மதியாக இருக்க அலையும் மக்கள். உலகில் எந்த நாட்டிலும் இத்தகைய இழிவு மக்களுக்கு ஏற்பட்டதில்லை. அதுவும் நாட்டின் தலைநகரில்.

மத்திய காவி அரசின் பாகுபாடு அரசியல்

 மத்திய காவி அரசின் பாகுபாடு அரசியல்

கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டு பல மக்கள் வீடுகளையும் பொருட்களையும் இழந்து தத்தளித்தபொழுது ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சார்பில் சுமார் ரூ.700 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் திருவனந்தபுரம் விமானநிலையம் வந்தபிறகு மத்திய காவி அரசால் வெளிநாட்டு உதவி எங்களுக்கு வேண்டாம் என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டது.
அதேபோல் சென்னை பெருவெள்ளத்தின்பொழுதும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்திலிருந்தும் இன்னபிற அயல்நாடுகளிலிருந்தும் சென்னை நோக்கி நிவாரணப்பொருட்களை சுமந்துவந்த விமானங்களை சென்னை விமான நிலையத்தில் பொருட்களை இறக்கவிடாமல் வேண்டாம் என திருப்பி அனுப்பியது மத்திய காவி அரசு.
ஆனால் இப்பொழுது வட இந்திய மாநிலங்கள் ஆக்ஸிஜன் தட்டுப்பாடால் தத்தளித்து மரணங்களை கொத்துக்கொத்தாக பார்த்தபிறகு பிரான்ஸ், சிங்கப்பூர் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து கண்டெய்னர்கள், கண்டெய்னர்களாக ஆக்ஸிஜன் டேங்கர்கள் நிவாரணமாக வந்தபிறகு அதை எங்களுக்கு வேண்டாம் என திருப்பி அனுப்பாமல் வேண்டும் என பெற்று பயன்படுத்திக்கொண்டிருக்கிறது மத்திய காவி அரசு.
தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் ஏற்பட்டது பேரிடர்காலம் என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது.
ஆனால் இந்திபேசும் வட இந்தியாவிற்கு ஒரு அரசியலும், இந்தி பேசாத தென்னிந்தியாவிற்கு ஒரு அரசியலும் செய்கின்றது இந்த மத்திய காவி அரசு.
ஆக தென்னிந்திய மக்களுக்கு நல்லதோ, உதவியோ நடந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது மத்திய காவி அரசு.
ஒரே நாட்டில் மாநிலங்களுக்கிடையே பாகுபாடு அரசியல் செய்யும் மதவாத காவி மத்திய அரசின் சூழ்ச்சிகளை புரிந்த எந்த தமிழனும், மலையாளியும் இனியும் அவன் பின்னால் சென்றால் வரக்கூடிய அடுத்த தலைமுறைகள் உங்களை ஒருபோதும் மன்னிக்காது என்பதை புரிந்துகொண்டு செயல்படுங்கள்.
இதுவரை தென்னிந்தியாவிற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்தவித வளர்ச்சித்திட்டங்களையும் செய்யாத மத்திய காவி அரசிற்கு பின்னாலும் கொடிதூக்கி ஜால்ரா அடிக்க நினைத்தால் நிச்சயம் புரிந்துகொள்ளுங்கள் உங்களுக்கு ஒரு அவசரகால உதவி என்றால் அந்த மத்திய காவி அரசு "எல்லை கைமீறிவிட்டது, எங்களால் உங்களுக்கு உதவிட முடியாது" என்று கைவிரித்துவிடும். எனவே இனியாவது விழித்துக்கொள் தமிழா...!
மருத்துவமனை வேண்டும், மருத்துவர்கள் வேண்டும், கல்விச்சாலைகள் வேண்டும், வளர்ச்சித்திட்டங்கள் வேண்டும் என்று வடஇந்தியாவில் பலரும் யோசித்திருந்தால் இன்று மதவாதிகளின் கையில் நாடு போயிருக்காது.
ராமர் கோவில் வேண்டும் என்றுதானே ஓட்டுப்போட்டீர்கள். இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆக்ஸிஜனும் இல்லை, மருத்துவர்களும் இல்லை. மருந்துகளும் இல்லை. ஆக நீங்கள் எது நாட்டிற்கும் நாட்டுமக்களும் அத்தியாவசியமோ அவற்றை கொண்டுவரும் அரசை ஏற்படுத்தாமல் கோவில் கட்டும் அரசை கொண்டுவர துடித்ததன் விளைவு இன்று தெருவோரங்களில் சாரைசாரையாக பிணங்கள்...!
-வாட்ஸ்அப்பில் வந்த செய்தி....

குஜராத்தை சேர்ந்த இந்த பெண்ணை மறந்திருக்க மாட்டோம்!

 


குஜராத்தை சேர்ந்த இந்த பெண்ணை மறந்திருக்க மாட்டோம்!

 

பல வருடங்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் இந்த பெண் பேசியது...

 

'ஐந்து நேரம் பாங்கு சொல்வதின் அர்த்தம் இறைவன் ஒருவனே... இறைவன் ஒருவனே என்பதாகும்.  பல தெய்வங்களை வணங்கும் நாம் எவ்வாறு இதனை கேட்க முடியும். இறைவனின் தூதர் நபி என்று சொல்கிறார்கள். இதனையும் நாம் எப்படி அங்கீகரிக்க முடியும். இஸ்லாம் ஒரு காட்டுமிராண்டித்தனமான பழக்கங்களை கொண்டது' என்று பொரிந்து தள்ளினார். நபிகளை கேவலமாகவும் பேசினார். தற்போது நோய்வாய் பட்டுள்ளார்.

 

நோயின் தாக்கம் அதிகரித்ததனால் இறப்பின் பயம் வந்துள்ளது. தற்போது முஸ்லிம்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறார். தான் தவறு செய்து விட்டதாகவும் இஸ்லாத்தை கேவலமாக பேசியது தனது தவறென்றும் தன்னை முஸ்லிம்கள் மன்னிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்.

 

மறப்போம். மன்னிப்போம். இறைவன் இந்த பெண்ணுக்கு மேலும் நேர் வழியைக் காட்டுவானாக!

மும்பை பெண்டி பஜாரில் இலவசமாக ஆக்சிஜன்!

 

மும்பை பெண்டி பஜாரில் இலவசமாக ஆக்சிஜன்!

 

ஜீ டிவி ரிப்போர்டர் மும்பை பெண்டி பஜாரில் முஸ்லிம் அமைப்பு இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர் தருவதை உறுதி படுத்தியுள்ளார். ஜாதி, மத பேதமில்லாமல் அனைவரும் இங்கு சென்று ஆக்சிஜன் சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம்.

 

மற்ற நகரங்களில் உரிய விலையை விட கொள்ளை லாபம் பார்க்கும் ஆட்கள் மத்தியில் இவர்கள் இலசவமாக தருகின்றனர். தேவை முடிந்தவுடன் தீவிரவாதி, நீ நாட்டை விட்டு போ என்று இந்துத்வாக்கள் கூறுவார்கள். இது வழக்கமாக நடைபெறுவதுதான் :-(




பியாரே கான் - மும்பை நாக்பூர்

 பியாரே கான் - மும்பை நாக்பூர்

மஹாராஷ்ட்ரா நாக்பூரை சேர்ந்த செல்வந்தர் பியாரே கான். இவர் தனது சொந்த பணமான 85 லட்சம் செலவு செய்து மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என 400 மெட்ரிக் டன் உபகரணங்களை மஹாராஷ்ட்ர அரசு மருத்துவ மனைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார்.
இவரை விட பணம் படைத்த முதலைகள் பணத்தை சேமித்து வைக்கின்றனர். ஆனால் இந்த ரமலானில் 85 லட்சங்களை ஏழைகள் பயன்பாட்டுக்கு தந்துதவி இறைவனின் நெருக்கத்தை பெற்றுள்ளார் பியாரே கான்.
தகவல் உதவி
இந்தியா டுடே
26-04-2021
Self-made billionaire Pyare Khan from Nagpur, Maharashtra has spent Rs 85 lakh to ensure 400 metric tonnes of medical liquid oxygen reaches government hospitals in and around Nagpur at a time when the whole country is reeling under a shortage of oxygen and a surge in Covid-19 infections.



உத்தரகாண்ட் காசிபூரில் கொரோனா தொற்றால் எரிக்கப்படும் உடல்கள்.

 உத்தரகாண்ட் காசிபூரில் கொரோனா தொற்றால் எரிக்கப்படும் உடல்கள்.


கும்பமேளா நடந்த இடம் உத்தரகாண்ட். அரசு அன்றே தடைகளை ஏற்படுத்தியிருந்தால் இத்தகைய கொடூர மரணங்களை தவிர்த்திருக்கலாம்.




Monday, April 26, 2021

நல்லாவே எடிட் பண்ணியிருக்கார்...

 நல்லாவே எடிட் பண்ணியிருக்கார்...

🙂
அவர் உள் மனதில் என்ன நினைக்கிறார் என்பதையும் புரிந்து வைத்துள்ளார்.
சோகத்தினூடே சிறிது சிரித்தும் வைப்போம்.




முஸ்லிம்களை பாராட்டிய மஹாராஷ்ட்ர முதல்வர்!

 


முஸ்லிம்களை பாராட்டிய மஹாராஷ்ட்ர முதல்வர்!

 

மஹாராஷ்ட்ரா கொல்ஹாபூருக்கு அருகில் உள்ளது இஸால்கஞ்ச் நகர். மும்பையிலிருந்து 380 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது இந்நகர். இங்குள்ள முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாட்டங்களை குறைத்துக் கொண்டு அதற்கான செலவு தொகையையும் ஜகாத் தொகையையும் இணைத்து ஒரு அழகிய பணியை செய்துள்ளனர்.

 

இங்குள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு 36 லட்சம் செலவில் 10 படுக்கை வசதிகளுடன் கூடிய ஐசியூ கட்டிடத்தை தானமாக வழங்கியுள்ளனர். இதனை காணொளி மூலம் மஹாராஷ்ட்ர முதல்வர் உத்தவ தாக்கரே திறந்து வைத்தார். அப்போது அவர்....

 

'நெருக்கடியான இந்த நேரத்தில் ஒரு பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை இஸால்கஞ்ச் முஸ்லிம்கள் நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளனர். இந்நகரில் 10 படுக்கைகளுடன் ஐசியூ வசதியுடன் கூடிய முதல் அரசு மருத்துவமனையாகவும் இது திகழ்சிறது. முஸ்லிம்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

 

தகவல் உதவி

டைம்ஸ் ஆஃப் இந்தியா

27-04-2021

 

ஒரு காலத்தில் பால் தாக்கரே முஸ்லிம்களை அழிப்பதையே குறிக்கோளாக கொண்டிருந்தார். உத்தவ் தாக்கரே பதவி ஏற்பதற்கு முன் மதத்தை வைத்து நாம் முன்பு பல தவறுகளை செய்துள்ளோம் என்று வருத்தப்பட்டிருந்தார். தற்போது முஸ்லிம்களைப் பற்றிய சிறந்த புரிதல் முதல்வருக்கு வந்துள்ளது. இது போன்று நன்மையான காரியங்களை செய்து எதிரிகளையும் நண்பர்களாக்குவோம்.

 

Kolhapur : Praising the Muslims of Ichalkaranji town in the district for making invaluable contribution for setting up of a new intensive care unit in Indira Gandhi Memorial (IGM) hospital for treatment of corona infected patients, Maharashtra Chief Minister Uddhav Thackeray on Monday said that with this donation, they have set an ideal example before the country by putting aside caste-based and religious differences on Ramzan Eid festival.

While dedicating a 10-bed ICU unit at IGM hospital online from Mumbai, Mr Thackeray said that by donating Rs 36 lakh for ICU unit at IGM hospital, the Muslim community has set an ideal example before the country as to how to celebrate the festival.

The Muslims of Ichalkaranji made the donation following an appeal by the state government about avoiding unnecessary expenses for celebrating the Eid-UNI

 

பிரியங்கா காந்தியின் உதவி!

 பிரியங்கா காந்தியின் உதவி!


டெல்லி கங்காராம் மருத்துமனையின் சேர்மேன் டாக்டர் ரானா காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியை தொடர்பு கொண்டு மருத்துவ மனையின் ஆக்சிஜன் தேவை பற்றி கூறியுள்ளார். கண்டிப்பாக முயற்சி எடுப்பதாக கூறியுள்ளார். 


பிரியங்கா காந்தி நவீன் ஜிந்தாலை தொடர்பு கொண்டு ஆக்சிஜன் தேவை பற்றி கூறி ஏற்பாடு செய்ய சொல்லியுள்ளார். இதோ இன்று 10 டன் ஆக்சிஜன் திரவம் ஏற்றிய கண்டெய்னர் கங்காராம் மருத்துவமனைக்கு வந்துள்ளது.


ஒரு கேமரா இல்லை: டேங்கர் முன் நின்று போஸ் கொடுக்கவில்லை: பத்திரிக்கையாளர் பேட்டி இல்லை: ஆனால் நோயாளிகளுக்கான தேவை நிறைவேறியது.


என்றும் மேன் மக்கள் மேன் மக்களே!




பாதிப்படைந்த ஒரு இந்து தாயின் உள்ளக் குமுறல்

பாதிப்படைந்த ஒரு இந்து தாயின் உள்ளக் குமுறல்

 

''மோடிக்கு எதற்காக வாக்களித்தோம்? இப்படி மக்களை கொத்து கொத்தாக கொல்வதற்கா? இந்த நாட்டை சுடுகாடாக மாற்றி விட்டார் மோடி. ஆக்சிஜன் கிடைக்காததற்கு யார் காரணம்? டெல்லி அரசும் மத்திய அரசும்தான் காரணம். எனது சிறு வயது சகோதரன் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்து விட்டார். டெல்லி முழுக்க அலைந்தேன். படுக்கை கிடைக்கவில்லை. ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் யார் காரணம்? இதை எல்லாம் மோடியிடம் கேட்பது யார்? இனி எங்கள் குடும்பத்தை காப்பது யார், மோடி, மோடி, மோடி என்று சொல்லி தலையில் தூக்கி வைத்து கொண்டாடினோம். இன்று வெளி நாடுகளுக்கு ஆக்சிஜன் அனுப்பி விட்டு நாட்டு மக்களைப் பற்றி கவலைப் படாமல் பெங்காலில் வாக்கு சேகரிக்க சென்று விட்டார்'