Followers

Monday, December 31, 2012

"சிதம்பரம்: ஒரு பார்வை"-இதில் நம்முடைய பார்வை

"சிதம்பரம்: ஒரு பார்வை"-இதில் நம்முடைய பார்வை



சென்னையில் நேற்று முன்தினம் திமுக தலைவர் கருணாநிதி,"சிதம்பரம்: ஒரு பார்வை" என்ற புத்தகத்தை வெளியிட்டார். இவ்விழாவில் சிதம்பரம், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிதம்பரம் உரையாற்றவில்லை. பார்வையாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருந்தார். புத்தகத்தை கலைஞர் வெளியிட சிதம்பரத்தின் தாயார் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் கருணாநிதி பேசும் போது கூறியதாவது : சிதம்பரம், சிலரது இதயத்தில் நீங்காத உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார்; இவ்வாறு இருக்கையில் அடுத்து நடக்க வேண்டியது என்ன?; வேட்டி கட்டி தமிழன் பிரதமராக வர வேண்டும்.(இதில் உள் குத்து எதுவும் இல்லையே கலைஞர் அவர்களே! ஏனெனில் முன்பு மூப்பனார் பிரதமராக இருந்த சமயம் அதை தடுத்தது நீங்கள்தான் என்ற ஒரு பேச்சு உண்டு) இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார். கருணாநிதியின் பேச்சை முன்மொழிவது போல் கம்ஹாசனும், இந்திய அரசில் சிதம்பரத்திற்கு மிகப்பெரிய இடம் உள்ளது என தெரிவித்தார். இதே போன்று புத்தக ஆசிரியர் இலக்கிய நடராஜனும் தனது வரவேற்புரையில் பிரதமராகும் அனைத்து தகுதிகளும் சிதம்பரத்திற்கு உண்டு என தெரிவித்துள்ளார்.

டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிதம்பரம் கூறியதாவது : எனது வரம்பு என்னவென்று எனக்கு நன்றாக தெரியும்; எனது வரம்புகளுக்கு உட்பட்டே நான் வாழ்ந்து வருகிறேன்; அதன்படியே நான் என்னை வழி நடத்துகிறேன்; உங்களில் சிலர் என்னை முட்டாள் என நினைப்பது எனக்கு தெரியும்; அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது ஒன்று மட்டுமே; நீங்கள் நினைப்பது போல் நான் முட்டாள் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார். (இந்த பதில் கலைஞருக்கும் கமலஹாசனுக்குமா அல்லது பத்திரிக்கை நிருபர்களுக்கா என்பது சிதம்பர ரகசியம்)

அந்த விழாவில் கமலஹாசனும் ஒரு வேட்டிக் கட்டிய தமிழன் பிரதமராக அமருவதை காண ஆசைப்படுகிறேன் என்று சொன்னது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. சிதம்பரத்தைப் பொருத்த வரை அந்த பதவிக்கு மிக்க பொருத்தமானவரே! இதில் மாற்றுக் கருத்து இல்லை. ராகுல் காந்தி தற்போது உள்ளது போல் வெளியில் இருந்து நமது நாட்டுக்கு தேவையான நல்ல காரியங்களை செய்து வரலாம்.

ப.சிதம்பரம் அவர்களின் அரசியலை முன்பிருந்தே கவனித்து வருகிறேன். நிதானமாக மற்றும் உறுதியாக தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பவர் சிதம்பரம். இதுவரை எந்த ஊழல் குற்றச்சாடடிலும் சிக்காமல் தூய்மையான அரசியலை நடத்தி வருகிறார். பரம்பரை பணக்காரர். அரசியலுக்கு வந்துதான் காசு பண்ண வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாதவர். தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் நமது நாட்டுக்கு சிதம்பரத்தை பிரதமராக்க சோனியா காந்தி அவர்கள் முயல வேண்டும். இது சோனியா அவர்களின் மதிப்பை மேலும் உணர்த்தும்.

எதிர் தரப்பில் போட்டியாக மோடியை நிறுத்தப் போகிறார்களாம். ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் ஏற்கெனவே தற்போதய பாஜக வின் அரசியல் நடவடிக்கைகளை வைத்து 100 எம் பி சீட் கிடைத்தாலே பெரிது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதில் மோடியை பிரதம வேட்பாளராக அறிவித்தால் 50 சீட் தேறுவது கூட கஷ்டம்தான் என்பது எனது கணிப்பு. பார்ப்போம் அரசியலில் மேலும் என்னவெல்லாம் கூத்துக்ள் அரங்கேறுகிறது என்று.

Sunday, December 30, 2012

துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…!

அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்


கடுமையான பசியோடு ‘அம்மா…சாப்பாடு ரெடியாயிடுச்சா..’ என்று கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் ஹஸன்! ‘கொஞ்சம் இருப்பா! மழையில இந்த உரியா மட்டை நனைஞ்சு போயிடுச்சு. அடுப்பு பத்த மாட்டேங்குது. இப்போ சரி பண்ணிடறேன்” என்று சொல்லிக் கொண்டே அடுப்பில் தனது வாயால் ஊத ஆரம்பித்தார் தாய் ஆமினா. தனது தாய் அடுப்பு பத்த வைக்க படும் சிரமத்தை பார்த்துக் கொண்டே தனது பள்ளி சீருடைகளை களைய ஆரம்பித்தான் ஹஸன்.

ஹஸன் அரசு பள்ளிக் கூடத்தில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறான். வறுமையான குடும்பம. தாய் ஆமினா வீட்டு வேலை முடிந்த கையோடு அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் பாத்திரங்கள் தேய்த்து கொடுப்பதும் வீடுகளை பெருக்கி கொடுப்பதுமாக மேலதிக வேலையை செய்து வந்தார்.

திண்ணை இணைய இதழுக்காக நான் எழுதிய சிறுகதை. படித்துப் பாருங்கள். முடிந்தால் கருத்தையும் பகிருங்கள்.


http://puthu.thinnai.com/?p=17335

--------------------------------------------------


வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும்கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல. எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது. சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.

‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள் தாம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்டகாலமாகச் சித்தரித்தனர். முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப் படுத்தினர். திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.

இப்படி விஷமத்தில் பிறந்த வரலாறு, நம் நாட்டின் சில தலைவர்களுக்கும் மதவாதப் பிரச்சாரகர்களுக்கும் மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது. இன்று நம் நாட்டில் தலை விரித்தாடிக்கொண்டிருக்கும் மதத் துவேஷமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்துள்ள மதக் கலவரங்களும் இத்தகைய வரலாற்றுத் தத்துவம் மக்களிடையே பரப்பப்பட்டதன்விபரீத விளைவுகள்தாம்.

முஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டும். பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர். மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளைவிடக் கோயில்கள் தான் அதிகம்.

ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில்பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான் காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார். ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார். புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் ஆதில்ஷா. தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக் கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கான தண்ணீரை துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து வருவித்தார். டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிருந்தன.
முஸ்லிம் மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம். ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து ரத்தம் கலந்திருந்தது.

இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.

சிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே கூட்டிக்காட்டுகிறார்.

நாம் நினைவில்கொள்ள வேண்டியது இன்னொன்று.

கோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல. ஆக்கிரமிக்க முற்படும் மன்னர்கள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் எதிரியை அவமானப்படுத்தவும் எதிரிநாட்டின் முக்கிய ஸ்தலங்களை நாசப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மன்னர்களின் ஆளுமையை நிலைநாட்டும் முக்கியச் சின்னங்களாகக் கோயில்கள் திகழ்ந்தன. ஆகவே தான் தங்கள் பெருமையைப் பறைசாற்ற அரசர்கள் கோயில்கள் கட்டினர். இதன் காரணமாகவே கோயில்கள் அந்நியத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்குகளாயின. கோயில்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் இதன் நோக்கம். இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு! எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு!
நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும் காஷ்மீரத்தின் வரலாறு.அதில் ஹர்ஷர் என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இருந்த எல்லாத் தெய்வச்சிலைகளையும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும் அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் ‘தேவோத்பாதநாயகா’ (தெய்வத்திற்குத் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார்.

மற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் சொல்லும்போது, இதே மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார். இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும். அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வது மக்களைப் பிரித்தாளும் சில்லறைத்தனமாகும்.

நமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வரலாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாடமாகிவிட்டது. ஆனால் வரலாறு இன்றி எந்தச் சமுதாயமும் வாழ இயலாது. கல்வி நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான வரலாற்றைப் புறக்கணித்ததன் விளைவு மதவாதிகள் இன்று அதை ‘ஹைஜாக்’ செய்யும் நிலை உருவாகிவிட்டது.

- முனைவர் வசந்திதேவி

சக்தி பிறக்கும் கல்வி என்ற நூலில் இருந்து-பக்-111

Saturday, December 29, 2012

மீனாட்சி புர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி?


தர்மபுரி நாயக்கன் கோட்டை கிராமத்தில் நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் சிறுவர்கள் தங்களின் படிப்புக்காக பள்ளி செல்ல போலீஸ் வாகனத்தில் சென்று வருகின்றனர். சுதந்திர இந்தியாவில் தலித் குழந்தைகளின் நிலையை தற்போது பார்த்தால் காந்தி என்ன நினைப்பார்? பாலஸ்தீனத்தையும், ஆப்கானிஸ்தானத்தையும் ஓயாது பதிவுகளாக எழுதி புளங்காகிதமடைபவர்கள் சற்று தமிழக அல்லல்களையும் பார்த்து அதற்கு தீர்வுகளையும் எழுத முயற்சிக்கலாம்.

----------------------------------------------------

மீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம்.

'இறைவனே என் பாவங்களை மன்னிப்பாயாக! அருட்கொடையின் தலைவாசலை எங்களுக்காக திறந்து வைப்பாயாக'

மீனாட்சிபுரத்தில் உயரமாக நிமிர்ந்து நிற்கும் பள்ளி வாசலின் முன் பக்கம் எழுதப் பட்ட வாசகமே இது. தேவர் இனத்தவரின் சொல்ல முடியாத அடக்கு முறையினால் வேறு வழி இன்றி இஸ்லாத்தை நோக்கி இந்த மக்கள் சென்றனர். தற்போது இந்த மக்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கண்டு வர எங்களது குழு மீனாட்சிபுரத்துக்கு சென்றது.

'மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?'

'நீங்க சொல்லித்தான் நாங்க மதம் மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடு தற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.'.

'மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா?'

'நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் 'டேய் சுப்பையா! டேய் மாடா! இங்க வாடா' என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.'

'வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?'

'எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம். யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை 'முருகேஷா இங்க வாடா' என்று கூப்பிடுபவர்கள் மதம் மாறிய அன்வர் அலியை 'வாங்க அன்வர் அலி' என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?'

நாம் பல இடங்களில் பார்த்த வகையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால் ஒரு பிரச்னை இன்றும் உள்ளது. அதாவது பூர்வீக இஸ்லாமியர்கள் இவர்களை மதிப்பதில்லை எனவும் இவர்களிடம் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை எனவும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது சம்பந்தமாக 'கருப்பாயி என்கிற நூர்ஜஹான்' என்ற கதை முன்பு வெளி வந்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதைப் பற்றி அந்த கிராம மக்களிடம் கேட்டோம்.

'அந்த கதையை எந்த ஊரை மையமாக வைத்து அவர் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. 20 க்கு மேற்பட்ட பெண்கள் இங்கிருந்து அங்கு போயிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையில் அங்கிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏழைகள் ஏழை வீட்டைப் பார்த்து சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். வசதியுள்ளவர்கள் வசதியான இடததில் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சில பூர்வீக முஸ்லிம்கள் எங்களிடம் சம்பந்தம் பண்ண தயங்குவது பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வைத்தே. நாங்களும் அவர்களைப் போல் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்தால் தாராளமாக பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள். சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.

http://www.maattru.com/2011/12/blog-post_6584.html

'கருப்பாயி என்கிற நூர்ஜஹான்' நாவலைப் பற்றி மேலதிக விபரம் அறிய

'உங்களின் கிராமத்தில் இன்னும் சிலர் இந்து மதத்திலேயே உள்ளனரே! அவர்கள் ஏன் மாறவில்லை'

'அதற்கு நாங்கதான் காரணம் என்று சொல்லலாம். மார்க்கத்தை இங்குள்ளவர்கள் சரியாக விளங்காமல் பொடும் போக்காக உள்ளனர். மேலும் இங்கு வந்தால் சில சட்டதிட்டங்கள் கட்டுப் பாடுகள் (தொழுகை, மது உண்ணாமை, வட்டி வாங்காமை, நோன்பு) உள்ளதும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயங்குவதற்கான காரணம். இறைவன் நாடினால் அவர்களும் வருங்காலத்தில் எங்கள் மார்க்கத்தில் இணைவர்'

சில ஆதி திராவிட இந்துக்களையும் சந்தித்தோம். முருகேஷன் என்ற தலித் இளைஞர்:

'மதம் மாறினா இட ஒதுக்கீடு கிடைக்காதுல்ல...அதான் நான் மாறல்ல. ஆனால் சமூகத்துல இன்னமும் 'வாடா முருகேஷா' என்றுதான் இன்றும் அழைக்கப்படுகிறேன். 'வா முருகேஷா' என்று கூட கூப்பிட சாதி இந்துக்களுக்கு நா எழ மாட்டேங்குது."

தேன் மொத்தை ஊராட்சி மன்ற தலைவி. இவர் இன்னும் இந்து மதத்தில்தான் உள்ளார்.

'நான் பஞ்சாயத்து போர்டு தலைவிங்கறதால ஏதோ மதிப்பு கொடுக்கறாங்க. ஆனால் மொத்தத்தில எங்களை சமூகத்துல இன்னும் கீழ்சாதியாத்தான் பார்க்கிறார்கள்'

மற்றொரு தலித் இளைஞரை சந்தித்தோம்

'முஸ்லிமாக மதம் மாறினவங்களுக்கும் உங்களுக்கும ஏதும் பிரச்னை வந்துள்ளதா?'

'இல்லை. நாங்க சாமி கும்புடறப்போ அவங்க தொந்தரவு பண்றதில்லை. அதே போல் அவுங்க தொழுகை பண்ணும் போது எந்த இடைஞ்சலும் நாங்க கொடுக்கறது இல்ல.

எங்கள் குழு ஆராய்ந்த வகையில் தலித்கள் இஸ்லாமியராக மாறியதற்கு பிறகு சமூக அந்தஸ்து அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவே அறிகிறோம்.

நன்றி பிபிசி தமிழோசை.

இதில் முஸலிம்களுக்கு ஒரு பாடம் உள்ளது. வரதட்சணை என்ற ஒரு பெரும் கேட்டை மற்ற மதத்தவரிடமிருந்து கடன் வாங்கியதால் இன்று அந்த மக்களின் இஸ்லாமிய பெண்கள் திருமணம் முடிப்பதில் சிரமம் உள்ளதை காண்கிறோம். அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு இது ஒரு முட்டுக் கட்டையாக உள்ளதைப் பார்க்கிறோம். அதே போல் புதிதாக இணைந்த அந்த மக்களை அன்போடு அரவணைக்க வேண்டியது நமது கடமை. திருமண உறவுகளையும் அவர்களோடு வைத்துக் கொள்ள முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்னால் நமது முன்னோர்களும் ஒரு ராமசாமியாகவோ ஒரு கந்தசாமியாகவோத்தான் இருந்திருப்பார்கள். எனவே நாங்கள் பூர்வீக முஸ்லிம்கள் என்று வெற்று பெருமை பேசிக் கொண்டு இஸ்லாத்தையும் விளங்காமல் காலத்தை ஓட்டாமல் அந்த மக்களை நம்மோடு மேலும் இணைக்க இஸ்லாமியர்கள் முயற்சிக்க வேண்டும்.

வாஜ்பாய் போன்றோர் அந்த மக்களுக்கு ஆளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தருவதாக ஆசை காட்டினர். இந்திய அரசின் விசாரணை கமிசன், தமிழக அமைச்சர் என பலர் பேசியும் எடுத்தமுடிவில் மாறாமலே இருந்தனர் மக்கள். மீனாட்சிபுரத்தை முன்மாதிரியாக எடுத்து மேலும் பல ஊர்களில், பகுதிகளில் மக்கள் பார்ப்பனீய மதத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது. இந்த அளவு தங்கள் முடிவில் உறுதியாக இருந்த அந்த மக்களை நாம் இன்னும் அதிகமதிகம் அன்பு காட்டி அவர்களின் காயங்களை போக்க முயற்சிக்க வேண்டும்.

குடும்பத்தோடு அந்த ஊர்களுக்கு சென்று அந்த மக்களோடு அன்யோன்யமாக பழக வேண்டும். அந்த மக்களையும் நம் ஊர்களுக்கு விருந்தினர்களாக வரவழைத்து நமது அன்பைக் காட்ட வேண்டும். செல்வந்தர்கள் அந்த மக்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்று அந்த சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முனைய வேண்டும். திருமணம் ஆகாமல் உள்ள அந்த இஸ்லாமிய புதிய சகோதரிகளை நமது சொந்தங்களாக ஆக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு இஸ்லாமிய செல்வந்தர்கள் கணக்கின்றி உதவி புரிய வேண்டும். நம் நாட்டில் உள்ள தீராத தலைவலியான தீண்டாமைக் கொடுமை அறவே ஒழிய வேண்டுமானால் இந்த மாற்றங்களை எல்லாம் முஸ்லிம்கள் தங்களின் கடமையாக நினைத்து செய்ல்பட வேண்டும். நமது நாட்டில் தீண்டாமை ஒழிவதற்கு வேறு மார்க்கமும் இல்லை.


பிபிசி யிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள

http://downloads.bbc.co.uk/podcasts/worldservice/tnmuslims/tnmuslims_20121106-1746a.mp3

---------------------------------------------

பல வருடங்களுக்கு முன்பு மதம் மாறிய ஒருவர் அன்று கொடுத்த பேட்டி:

ஆசிரியர்: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.

ஆசிரியர்: எந்தக் காலேஜில்?

உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.

ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!

உமர்செரீப்: ஆமா கிடைச்சது.

ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?

உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.

இப்போது ஏன் இந்த முடிவு?

ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?

உமர்: நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.

Friday, December 28, 2012

குஜராத்தை விட பீகார் முன்னிலை: திட்ட கமிஷன்!

இந்தியாவிலேயே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் மாநிலம் குஜராத் என்றும் அதுவும் மோடியின் தலைமையில் மிகப் பெரிய புரட்சி என்றும் பத்திரிக்கைகள் ஓயாமல் கூவி வருகின்றன. மோடியை அப்படியே தூக்கி பிரதமர் பதவியில்அமர்த்திவிட்டால் இந்தியா ஒரேயடியாக முன்னேறிவிடும் என்றொரு மாயை உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆனால் உண்மையோ வேறு விதமாக உள்ளது. மோடியை விட நிதிஷ் குமார் பீகாரை குஜராத்தை விட சிறப்பு மிக்க மாநிலமாக மாற்றியுள்ளார் என்ற புள்ளி விபரத்தை இங்கு பார்ப்போம்.



திட்ட கமிஷன் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:கடந்த, 2001 - 2005ம் ஆண்டுகளில், 2.9 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன், மிகவும் பின்தங்கிய மாநிலமாக விளங்கிய பீகார், 2006 - 2010ம் ஆண்டுகளில், 10.9 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் மூலம், வேகமாக வளர்ச்சி அடைந்த மாநிலங்களில், பீகார் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதே நேரத்தில், 2001 - 2005ம் ஆண்டுகளில், மிக வேகமாக வளர்ச்சி அடைந்த மாநிலமாக, 11 சதவீத பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்த குஜராத், 2006 - 2010ம் ஆண்டுகளில், வீழ்ச்சி அடைந்து, 9.3 சதவீத பொருளாதார வளர்ச்சியை மட்டுமே பெற்றது. மேலும், அந்த கால கட்டத்தில், வேகமாக வளர்ச்சி அடைந்த, சத்தீஸ்கர், அரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களை விட, குஜராத் பின்தங்கி இருந்தது.அது மட்டுமின்றி, 2006 - 2010ல், வளர்ச்சி அடைந்த, 17 மாநிலங்களில், குஜராத் மட்டும் தான், பொருளாதார வீழ்ச்சி அடைந்த மாநிலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

--------------------------------------------------------

மார்க்கண்டேய கட்ஜூ தனது அறிக்கையில் கூறும் போது....

குஜராத்தில் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கிறதா அல்லது இல்லையா என்பதனை நாம் பார்க்க வேண்டும். குஜராத் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட மக்களின் வாழ்க்கை தரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது. நிலைமை இவ்வாறிருக்க, “குஜராத் மிளிர்கிறது” என்று மக்கள் மத்தியில் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி அதில் மோடி வெற்றி பெற்று விட்டார்.

2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தவிர்த்து வேறு என்ன சாதனை புரிந்து உள்ளார். பட்டியல் இதோ,.

குஜராத்தில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை 48%. இது மிகவும் ஏழ்மையான சோமாலியா நாட்டை விட அதிகம். சோமாலியாவில் வெறும் 33% மட்டுமே. இது குறித்து மோடி கருத்து தெரிவிக்கையில், குஜராத்தில் உள்ள பெண்கள் அனைவரும் உடல் குண்டாகி விடும் என்ற அச்சத்தில் பால் சாப்பிடுவதில்லை . எனவே தான் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என கூறுகிறார். இவையனைத்தும் முட்டாள்தனமான வாதமாகும். குஜராத் குழந்தைகள் தொழிற்சாலைகள், சாலைகள் மின்சாரத்தையா உண்ண முடியும்?

குஜராத்தில் குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 48 ஆக உள்ளது. இந்த மோசமான பட்டியலில் குஜராத் இந்திய அளவில் 10ஆவது இடத்தில் உள்ளது.

குஜராத்தில் வயது வந்த ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் உடல் நிறை குறியீட்டு எண்(BMI) 18.5 க்கு கீழே உள்ளனர். இதில் குஜராத் இந்திய அளவில் 7வது இடம் பெற்றுள்ளது.

பேறுகால இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களை குஜராத்தில் தான் அதிகமாக உள்ளது.

குஜராத்தின் கல்வி, பொது சுகாதாரம், வருவாய் இந்தியாவின் மற்ற 8 மாநிலங்களை விட பின் தங்கி உள்ளது. அதாவது குஜராத் 9ஆவது இடத்தில உள்ளது.

குஜராத்தின் கிராமப்புறத்தில் 51% மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதில் 57% எஸ்.சி, 49% எஸ்.டி , மற்றும் 42% பொதுப்பிரிவினர் உள்ளனர்.

மோடி குஜராத்தில், பெரும் தொழிற்சாலைகளுக்கு மலிவான மின்சாரம் மற்றும் நிலங்களை தந்ததில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குஜராத்தில் அதிகமான வறுமை, மிகவும் குறைந்த அளவு மனித மேம்பாடு இவையே மிகைத்து நிற்கின்றன. அரசுக்கு நேரடி வருமானம் பெறுவது குறித்த நடவடிக்கைகளில் குஜராத் அரசு அதிகமான கவனம் செலுத்துகின்றது. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகின்ற அளவில் குஜராத்தில் வறுமை தாண்டவமாடுகின்றது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

இந்த உண்மையை கண்டிப்பாக ஒருநாள் குஜராத் மக்கள் உணர்வார்கள்,

என தனது கட்டுரையிலே மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டு உள்ளார்.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க நமது பத்திரிக்கைகள் ஏன் இது போன்ற பொய்களை வலிந்து மக்கள் மத்தியில் திணித்து வருகின்றதோ தெரியவில்லை. தினமலர், தினமணி போன்ற இந்துத்வா ஆதரவு பத்திரிக்கைகளுக்கு ஒரு ஆசை இருக்கிறது. அதாவது மோடி பிரமராகி விட்டால் இந்துத்வாவுக்கு உள்ள முட்டுக் கட்டைகள் நீக்கப்படும். இந்து மதம் எழுச்சியுறும் என்று அந்த பத்திரிக்கைகள் நினைக்கலாம். ஆனால் நிலைமை வேறாக மாறும்.

மோடி பிரதமராகி இந்துத்வாவுக்கு வழி விட்டால் வர்ணாசிரமம் திரும்பவும் சபையேறும். பார்பனர்களுக்கு பழைய அங்கீகாரம் கொடுக்கப்படும். பிறபடுத்தப்பட்ட மக்கள் பழைய சூத்திரர்களுக்கு எந்த நிலையோ அந்த நிலையை அடைவர். இதனால் வெகுண்டெழும் அவர்கள் இந்து மதத்தை துறந்து இஸ்லாம் போன்ற மதங்களை நோக்கி நகர்வார்கள். எனவே இந்து மதம் எழுச்சியுறும் என்ற கனவு வேண்டுமானால் அவாள் கண்டு கொண்டிருக்கலாம். உண்மை நிலையே வேறு....

--------------------------------------------------

28 Dec 2012 Samjhauta accused also involved in Jammu blast

புதுடெல்லி:ஜம்மு-கஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு பங்கிருப்பது தெரியவந்துள்ளது.

முதல் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய,

அண்மையில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்தும் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் உண்மை வெளிவந்துகொண்டிருக்கிறது.

2004 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஜம்மு கஷ்மீரில் உள்ள பீர்மித்தா அஹ்லே ஹதீஸ் மஸ்ஜிதில் திரண்டவர்கள் மீது வெளியே இருந்து க்ரேனேடை வீசியவர்கள் தங்களின் குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் க்ரேனேடு வெடித்து 2 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.

தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்கு காரணம் என்று அன்று போலீஸ் கூறியது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை ஜம்மு-கஷ்மீர் போலீசாரிடம் என்.ஐ.ஏ கேட்டுள்ளது.

விசாரணை அறிக்கையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஏதேனும் விபரங்கள் கூறப்பட்டுள்ளனவா? என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து கைது செய்யப்பட்டான்.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பிருப்பதை முந்தைய தினங்களில் என்.ஐ.ஏவிடம் சவுத்ரி வாக்குமூலம் அளித்திருந்தான்.

SOURCE: http://www.thoothuonline.com/samjhauta-accused-also-involved-in-jammu-blast/

காங்கிரஸ் ஆட்சியிலேயே இத்தனை படு பாதக செயலை செய்பவர்கள் இந்துத்வா மத்தியில் அமர்ந்தால் இன்னும் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு இந்த சம்பமே நல்ல உதாரணம்.

டிஸ்கி: டில்லி மாணவி சிகிச்சை பலனின்றி இறந்த செய்தி மிக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாணவியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Thursday, December 27, 2012

முதலாளியை கொளுத்திய தொழிலாளிகள்!



அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுமார் ஆயிரம் பேர் ஒன்று கூடி தேயிலை தோட்ட உரிமையாளரையும் அவரது மனைவியையும் உயிரோடு கொளுத்தியுள்ளனர்.

மிருதுன் பட்டாச்சார்யா என்பவர்தான் எரிக்கப்பட்ட முதலாளி. இவரது மனைவி ரீட்டாவும் பரிதாபமாக இறந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது சென்ற புதன கிழமை நடந்த சம்பவம்.

கௌஹாத்தியிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரத்தில் தினசுகியா என்ற மாவட்டத்தில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.

தனது டீ எஸ்டேட்டில் இருந்த தொழிலாளர் வீடுகளில் இருந்து 10 தொழிலாளிகளை வெளியேறச் சொன்னதும் மூன்று தொழிலாளர்களை காவல் துறை வசம் ஒப்படைத்ததும் தொழிலாளிகளின் கோபத்துக்கு முக்கிய காரணமாக போலீசாரால் சொல்லப்படுகிறது.

நமது நாட்டு தேயிலை உற்பத்தியில் அஸ்ஸாம் 55 சதவீதத்தை தனது பங்களிப்பாக அளிக்கிறது. போன வருடம் 988.32 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்தது குறிப்பிடத் தக்கது. இம் மாநிலத்தில் சுமார் 800 தேயிலை தோட்டங்கள் உள்ளன.

நம் நாட்டு மக்களுக்கு சமீப காலமாக என்ன ஆனது? எங்கு திரும்பினாலும் கொலை, தீவைப்பு, கற்பழிப்பு என்று தினம் தினம் செய்திகள் கவலை கொள்ளச் செய்கின்றன.

ஏன் இந்த கொலை வெறி என் இனிய இந்திய மக்களே!

Wednesday, December 26, 2012

உன் கண்ணை பிடுங்கி எறிந்து விடு!

உன் கண்ணை பிடுங்கி எறிந்து விடு!



அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது. பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளுக்கு தயார் செய்திருந்தாள்.

நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன். புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன. பாடசாலையில் முதல் இடத்துக்கு வருபவன் அவன். காலங்கள் உருண்டன. ஒரு முறை அவன் மிகச்சிறந்த பெறுபேற்றினை ஈட்டி அந்த பிரதேசத்திற்கும், அவனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்தான்.

இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள். மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள். இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன் வீடு வந்து அவனுக்கு பிடித்தமான உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருந்த தாய் மகன் வந்தவுடன் வாஞ்ஞையுடன் அருகில் சென்றாள். ஆனால் மகன் முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன் பேசவில்லை. நேராக அறைக்குள் சென்று படுத்து விட்டான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பதற்றத்துடன் ஓடிச்சென்று என்னவென்றாள் கவலையுடன். மகன் சொன்னான், “ நீ ஏன் என் பாடசாலைக்கு வந்தாய்?. அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என் நண்பர்கள் என்னை குருடியின் மகன் என கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே” என கத்தினான் கோபமாக. அதிர்ந்து போனாள் தாய். ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என சத்தியம் செய்தாள்.

இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான். ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான். அவள் கதறி துடித்தாள், தினமும் தன் மகனை நினைத்து.

இறுதி பரீட்சையில் பாஸாகி, மருத்துவ கல்லூரிக்கு மகன் தேர்வானது அவளுக்கு தெரியவந்தது. தலை நகர் சென்று படிக்க வேண்டும். நிறைய செலவாகும். தன்னிடம் மீதமிருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று மகனுக்கு அனுப்பி வைத்தாள். 5 ஆண்டுகள் பறந்து சென்றன. இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.

அவனை பார்க்க அவள் பல முயற்ச்சிகளை மேற்கொண்டும் எதுவும் பயனற்று போயின. ஒரு கடிதம் மகனிடம் இருந்து வந்தது. அதில், “அம்மா, நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த வைததியர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன் பார்வையை விட்டும் கண்காணாத தேசம் செல்கிறேன்”. இது தான் அந்த கடிதத்தின் வரிகள். துடித்து போனாள் தாய்.

சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும், அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும் வேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்த வீட்டின் எஜமான இளவயதினள். நல்ல இளகிய குணம் படைத்தவள். இறையச்சமிக்கவள். அவளும் ஒரு வைத்தியராகவே இருந்தாள். இந்த தாயை தனது தாயாக நேசித்து வந்தாள். எல்லாம் நன்றாகவே நடந்தன.
அவளது கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான். தனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள் அந்த குருட்டு தாய்.

வீடு வந்த அவளது கணவன், சில நாளிகைகளின் பின்னர் சாப்பிட அமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் அப்பி கொண்டது. சடாரென தனது மனைவியின் முகத்தை பார்த்து கேட்டான், “இதனை நீ தான் சமைத்தாயா?” என்று. மனைவி குழப்பத்துடன் இல்லையே என்றாள். “ அப்படியானால் யார் சமைத்தது” இது அவனது இரண்டாம் கேள்வி. வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான். உள்ளே அவனது குருட்டு தாய்.

அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள் இன்னும் இங்கேயா எனும் ஆத்திரமும், வெறுப்பும் அவன் மூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும், மகிழ்ச்சியும் அந்த தாயின் இதயத்தை நிரப்பின. உணர்சிகளால் இருவருமே பேசவில்லை.

மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த வைத்தியன் சொன்னான் தன் மனைவியை பார்த்து, “இந்த குருடியை உடனடியாக கொண்டு சென்று வேறு எங்காவது விட்டு விடு. கண்காணாத இடத்தில்”. கத்தினான். அவன் சத்தம் அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில் முட்டி மோதி நின்றது. துவண்டு போனாள். வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ வேண்டுமா என எண்ணி அழுதாள்.

தனது கணவனின் பிடிவாதமும், கோபமும், ஆவேசமும் எல்லை மீறி செல்லவே, அவனது மனைவியான அந்த பெண் வைத்தியர் வேறு வழியின்றி அவளுக்கு போதுமான பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் அழுகையுடன்.

காலம் மீண்டும் வேகமாக அசைந்தது. இப்போது அந்த வைத்தியனின் தலை மயிர்கள் பழுக்க ஆரம்பித்து விட்டன. உடல் சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின் தொடரான சுயநலன், நன்றி மறத்தல் போன்ற காரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அந்த வைத்தியரான மனைவியும் இவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம் புரிந்து கொண்டாள். இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. தனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான நிலையில், ஆறுதலுக்கு கூட தலை வருட யாரும் இன்றி தனி மரமாக நின்றான். மெல்ல மெல்ல தான் தன் தாயாருக்கு செய்த துரோகங்கள், அநியாயங்கள், நோகடிப்புக்கள் அவன் உள்ளத்ததை வந்து உசுப்ப ஆரம்பித்தன. ஒரு முறை நடுநிசியில் எழும்பி அம்மா என கத்தி அழும் அளவுக்கு அவனுக்கு தனது பாவங்களின் பாரம் புரிந்து போனது.

ஒரு நாள் காலை அவன் தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது. அவனது தூரத்து உறவினர் ஒருவர் பேசினார். “உன் தாய் தள்ளாத வயதில் மரணிக்கும் தறுவாயில் இருக்கிறாள்” என்பதே அந்த செய்தி. உடனடியாகவே அவன் தனது காரில் கிளம்பி தாயிருக்கும் இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது, அவளது உயிர் பிரிந்து விட்டது. உயிர் போன நிலையில் அவளை கட்டிலில் கிடத்தி வைத்திருந்தனர். இப்போது “அம்மா” என கதறினான். கண்ணீர் விட்டான். இறந்த தனது தாயை நல்ல முறையில் அடக்கம் செய்ய உதவினான்.

இப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர் கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவதாக இருந்தால் மட்டும் கொடுக்குமாறும், இல்லையெனில் எரித்து விடுமாறும் தாயார் கடைசி தருவாயில் வேண்டிக் கொண்டதாகவும் அவர் சொன்னார். பிரித்து வாசித்தான். அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அந்த பாலைவெளியையே சகதியாக மாற்றியது. அதில் இருந்த வரிகள் இதுதான்.............

“அன்பின் மகனே!..

சாந்தியும் சமாதானமும நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக!

எனக்கு தெரியும், என் உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும்
பிடிக்காது என்று. அதனாலேயே, எனது மரணத்திற்கு பின்னர் நீ
வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.

மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது. அது இறைவனுக்கு
மட்டுமே தெரிந்த விஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு
குருடி தாய் இருந்திருக்க கூடாது தான். எனக்கு உன் உள்ளம்
புரிகிறது. உனது உள்ளத்து உண்ர்வுகளை நான் பெரிதுமே
மதிக்கின்றேன். நான் உன்னை சபித்தது கிடையாது. ஏன்
கோபப்பட்டது கூட கிடையாது. எனக்கு ஒரு வாழ்க்கை
வேண்டும் என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம்
முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன். உனக்காகவே நான்
வாழ்ந்தேன். அதை நீ புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்!

மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன் குருடியானேன்
என்று. அப்போது உனக்கு சின்ன வயது. பாதையில் நின்று நீ
விளையாடிக்கொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன்
கண்களில் பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது.
வைத்தியர்கள் இன்னொரு வெண்படலம் இருந்தால் மட்டுமே
உன் பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம் என்றனர்.
என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரமும் போதாது.

அதனால்....

என் ஒரு கண்ணை உடனடியாக தானம் செய்து உனக்கு
பார்வை கிடைக்க செய்தேன். எனது கண்மணியே இன்று
உன் கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை, வாழ்க்கையை
பார்ப்பதும் அந்த கண்களாளேயே!...

உனக்கு இதுவும் அவமானம் என்றால் உனது வலது கண்ணை
பிடுங்கி எறிந்து விடு. ஏனென்றால் அது ஓர் குருடியின் கண்ணல்லாவா?

இல்லை மனமிருந்தால் அப்படியே விட்டு விடு. அந்த கண்களால் நான் உன்னை பார்த்துகொண்டிருப்பேன்.”

இப்படிக்கு,
என்றுமே அன்புள்ள, உன் குருட்டு அம்மா.

by: Abu Maslama
நன்றி: கைபர் தளம்

Tuesday, December 25, 2012

சவுதியில் பெண்களின் உண்மையான முன்னேற்றம்!


சவுதி இளவரசி ரிமா பின்த் தலால் 'உங்களின் அழகு' என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை நடசத்திர ஹோட்டல் ஒன்றில் திறந்து வைத்தார். மூன்று நாடகள் நடந்த இந்த நிகழ்ச்சியில் திறமை மிக்க பெண் டிசைனர்கள், ஓவியக் கலை வல்லுனர்கள், என்று பலதரப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பெண்கள் மேல் ஆடை தயாரிப்பு, நகைகள் டிசைன் செய்தல், வாசனை திரவியங்கள் உருவாக்குதல்போன்ற தொழில்களில் பல ஆண்டுகள் பரிச்சயம் உள்ள பெண்மணிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிக் காட்டினர். சவுதி நோய் தடுப்பு கழகமும், குர்ஆன் மனனமிடுதல் சம்பந்தமான குழுமமும் இணைந்து இந்த கண்காட்சியை நடத்தின.

இளவரசி ரிமா தனது உரையில் 'மன்னர் அப்துல்லா பெண்கள் முன்னேற்றத்துக்கும் இது போன்ற பெண்களுக்கென்றே பிரத்யேகமான கண்காட்சி நடைபெறுவதற்கும் மிகுந்த ஒத்துழைப்பு தருவதாக குறிப்பிட்டார்.

இளவரசி நூரா தனது பேச்சில் 'சவுதி பெண்கள் தங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய ஆபரணத் துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வருங்காலத்தில் இந்த துறைக்கு மிகுந்த வரவேற்பு வரும் வாய்ப்பு உள்ளது. இந்த கண்காட்சி சிறப்பாக அமைய ஒத்துழைப்பு நல்கிய சவுதி பெண்கள் 15 பேரையும் நான் பாராட்டுகிறேன். ஒத்துழைப்பு நல்கி வரும் மன்னர் அப்துல்லாவுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்' என்றார்.

-------------------------------------------------



சவுதி பெண்களின் வேலை வாய்ப்பு:

சவுதி பிஆர்ஜேயின் இயக்குனர் ரோலா பாஸ்மத் தனது அறிக்கையில் 'சவுதி பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் போன வருடத்தோடு ஒப்பிடும் போது 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறுகிறார். போன வருடம் 2011 ஆம் ஆண்டு பிஆர்ஜே 929 வேலை வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்கியது. அதே போல் மறு வருடம் 2012 ஆம் ஆண்டு 2922 வேலை வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்கி சாதனை படைத்துள்ளது' என்கிறார்.

பல கம்பெனிகள் சவுதி பெண்களை வேலைக்கு அமர்த்த ஆர்வமுடன் உள்ளனர். சவுதி பெண்கள் தங்களுக்கு தரப்படும் வேலைகளை மிகவும் திறம்பட செய்து வருவதாகவும், இவர்களின் வேலைகளில் தாங்கள் முழு திருப்தி கொள்வதாகவும் பல கம்பெனிகள் எங்களுக்கு தகவல் தந்த வண்ணம் உள்ளனர். இது ஒரு மாறுதலான மற்றும் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்கிறார் பாஸ்மத்.

இந்த வேலைகள் அனைத்தும் பெண்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது. ஆண் பெண் கலப்பு இங்கு தேவையில்லாமல் தவிர்க்கப்படுகிறது. அவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே ஆண்களை இவர்கள் சந்திக்கின்றனர். அதுவும் கண்ணியமான புர்காவோடு. இதனால் இவர்களின் வேலைகளில் எந்த சிக்கலும் இல்லை. பாலியல் துன்புறுத்தல் இல்லை. வேலையும் ஒழுங்காக நடைபெறுகிறது.

பெண்களின் முன்னேற்றம் என்பது இந்த வகையில் இருக்க வேண்டும். பெண் விடுதலை என்ற பெயரில் ஆபாச உடைகளை உடுத்திக் கொண்டு கண்ட பாய் பிரண்டுகளோடு சுற்றுவதும், இரவு வெகுநேரமாகியும் காதலனோடு சினிமாவுக்கு செல்வதும்தான் பெண் விடுதலை என்று நம் நாட்டில் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி இவர்கள் சினிமாக்களைப் பார்த்து அதை வாழ்விலும் கடை பிடிக்க ஆரம்பிப்பதால் முடிவில் காமுகர்களால் வஞசிக்கப்படுகின்றனர். பிறகு அந்த பெண்ணை காதலனோ சமூகமோ திரும்பிக் கூட பார்ப்பதில்லை. தங்களுக்கு தாங்களே ஏன் இவ்வாறு சிரமங்களை பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அரை குறை ஆடைகளோடு வெளியில் வந்து நீங்கள் சாதித்தது என்ன? தவறு செய்யாதவனைக் கூட உங்களின் உடைகள் அவனை தவறு செய்ய தூண்டுகின்றன.

எனவே உங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆபாச உடைகளை தவிர்த்து கண்ணியமான உடைகளில் வர முயற்சிப்பீர்களாக!..தேவையற்ற பிரச்னைகள் உருவாவதையும் தடுப்பீர்களாக!

Monday, December 24, 2012

சோனாலி முகர்ஜி - ஆசிட் வீச்சால் முகத்தை இழந்தவர்.

புதுடில்லி :காதலிக்க மறுத்ததால், மூன்று இளைஞர்களால், "ஆசிட்' வீச்சுக்கு இலக்காகி, முகத்தை பறிகொடுத்த, சோனாலி முகர்ஜி என்ற இளம் பெண், "கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் பங்கேற்று, 25 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.


தலைநகர் டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட கொடூரம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இது போன்றதொரு, கொடுமையான செயலுக்கு ஆளாக்கப்பட்டவர், சோனாலி முகர்ஜி."ஆசிட்' வீச்சுக்கு ஆளான அவருக்கு முகமே கிடையாது; கருகிய சதை துணுக்குகள் தான் முகத்தில் ஆங்காங்கே உள்ளது. அழகிய முகத்தை இழந்த அந்த பெண், தன் முகத்தையே வெளியே காட்டுவது கிடையாது. ஆனால், அவரை அந்த கொடுமைக்கு ஆளாக்கிய, மூன்று நபர்கள், வெளியே சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இப்போது இருக்கும் அளவுக்கு, "மீடியா' தாக்கம் இல்லை என்றாலும், அப்போதும் பரபரப்பாக இந்த செய்தி பேசப்பட்டது.


ஆசிட் வீசுவதற்கு முன்....



ஆசிட் வீசியதற்கு பின்...

ஜார்க்கண்ட் மாநிலத்தின், தன்பாத் நகர கல்லூரி ஒன்றில் படித்து வந்தார், சோனாலி முகர்ஜி. கல்லூரிக்கு செல்லும் வழியில், மூன்று இளைஞர்கள், அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்தனர். வலுக்கட்டாயமாக, காதலிக்க வற்புறுத்தி வந்தனர்; அதை அந்த பெண் மறுத்து வந்தார்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த அந்த கயவர்கள், கனரக இரும்பு பொருட்களில், துரு அகற்ற பயன்படுத்தப்படும், பயங்கரமான, "ஆசிட்'டை, அந்தப் பெண்ணின் முகத்தில் வீசி விட்டு ஓடினர்.இதில், முகம் பூராவும் வெந்து, இரு கண்களும் குருடாகி, ஒரு காது முற்றிலும் கேட்காத நிலையை அடைந்த சோனாலி, அதற்கு பிறகு வெளியே வருவதே இல்லை.

கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்கள், ஒன்றிரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்கு பிறகு, வெளியே வந்து விட்டனர். ஆனால், அந்தப் பெண் வீட்டிலேயே முடங்கி விட்டாள். எனினும், தன்னம்பிக்கையை கைவிடாமல், "டிவி'யில், நடிகர், அமிதாப் பச்சன் நடத்தும், "கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில், சமீபத்தில் பங்கேற்றார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து, 25 லட்சம் ரூபாயை வென்றுள்ளார்.

""இந்த பணத்தைக் கொண்டு, என் முகத்தில் உரிந்து வரும் பிளாஸ்டிக் இழைகளை சரி செய்ய முடியும்; சில நாட்களுக்கு நிம்மதியாக சாப்பிட முடியும். எனினும், முகம் இனி கிடைக்கப் போவதில்லை. அதற்காக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், வாழ்க்கை என்னாவது என்ற எண்ணத்தில், போட்டியில் பங்கேற்றேன். என் முகத்தை, "டிவி'யில் காட்டினர். அதுவே, அந்த கயவர்களுக்கு உண்மையான தண்டனையாக இருக்கும்,'' என, சோனாலி கூறினார்.நிகழ்ச்சியின் போது, சோனாலியை, நடிகர் அமிதாப் பச்சன், "வீரமான பொண்ணு' என, பாராட்டினார்.

பத்திரிக்கை செய்தி

23-12-2012

இவர் பாதிக்கப்பட்ட அந்த ஆண்டுகளில் பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வெளியில் வந்தால் இதே போன்ற தாக்குதல் நடக்கும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இந்தியா முன்னேறுகிறது என்று பெருமை பட்டுக் கொண்டே எவ்வளவு அரக்க்தனங்களையும் அரங்கேற்றி வருகிறோம்.

http://www.blottr.com/breaking-news/posters-warn-women-they-will-face-acid-attack-if-they-wear-jeans

-------------------------------------------------------

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையத்தில், நேற்று இரவு, 9:00 மணிக்கு, இளம்பெண் ஒருவர் அழுதபடி வந்து கொண்டிருந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரிடம் விசாரணை செய்தனர். இரவு, 8:00 மணிக்கு, தனது உறவினரான காதலனுடன், மணிமுக்தாற்றில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த, நான்கு பேர், தன்னிடம் இருந்த துப்பட்டாவால், தனது காதலனை கட்டிப்போட்டு, தன்னை கற்பழித்ததாகக் கூறினார்.தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, அப்பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். டி.எஸ்.பி., வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சீராளன் விசாரணை நடத்தினர்.அதனைத் தொடர்ந்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின், மேல் சிகிச்சைக்காக, கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

டிசம்பர் 25,2012 - தின மலர்

இது நேற்று நடந்த சம்பவம்.

இந்த அலங்கோலங்கள் அதிகமாகாமல் கட்டுப்படுத்த வேண்டுமானால் கடுமையான தண்டனையும் சினிமாவுக்கு கடுமையான சென்சாரையும் கொண்டு வர வேண்டும். இந்த சமூகம் சீரழிந்ததற்கு இந்த கூத்தாடிகளின் பங்கு மிக அதிகம். இவர்களை சரியாக்கினால் சமூகமும் சரியாகும்.

Sunday, December 23, 2012

குர்ஆனை எரித்தவர் உயிரோடு எரித்து கொலை!

குர்ஆனை எரித்தவர் உயிரோடு எரித்து கொலை!

//பாகிஸ்தானில் முஸ்லிம்களின் புனித நூலான குரானை இழிவு படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபர், 200 பேர் கொண்ட கும்பலால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச் செய்தி சம்பந்தமாக உங்களது கருத்தை அறிய ஆவலாக உள்ளேன் சு.பி. சாமியார் அவர்களே...// - தேன் மதுரன்

சகோ தேன் மதுரன். முதலில் இஸ்லாத்தில் புரோகிதம் கிடையாது. சாமியார்கள் கிடையாது. மவுலவிகள் கிடையாது. இதற்காக பட்டம் கொடுக்க இஸ்லாத்தில் எந்த அமைப்பையும் முகமது நபி உருவாக்கவில்லை. குர்ஆனை யார் நன்கு விளங்கி தேர்ச்சி பெறுகிறாரோ அவர் அறிஞராக மதிக்கப்படுவார். அதற்காக தேவையில்லாத மரியாதையை எல்லாம் பெற்றுக் கொள்ள மாட்டார். பெற்றுக் கொள்ளவும் கூடாது. இனி விஷயத்துக்கு வருவோம்.


பாகிஸ்தானில் இஸ்லாமியத் திருமறையான குரானை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முஸ்லிம் ஒருவரை கும்பல் ஒன்று எரித்துக் கொன்றுள்ளதாக போலிசார் கூறுகின்றனர். நாட்டின் தென்பகுதியில் சீதா கிராமத்தில் (சீதா பிராட்டியாரின் சொந்த ஊரோ) உள்ள ஒரு கிராமத்துப் பள்ளிவாசல் ஒன்றில் அந்நபர் இரவுப்பொழுதைக் கழித்திருந்தார். மறுநாள் காலையில் அந்த பள்ளிவாசலுக்குள் குரானின் பிரதி ஒன்று எரிந்து கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.அவர்தான் குரானை எரித்திருக்க வேண்டும் எனக் கருதிய கிராமவாசிகள் ஆத்திரம் மேலோங்க அவரைத் தாக்கி பின்னர் போலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

ஆனால் ஒரு சில மணி நேரங்களில் இருநூறு பேர் அடங்கிய பெரிய கும்பல் ஒன்று காவல்நிலையத்துக்குள் தடாலடியாக நுழைந்து அந்நபரை வெளியில் இழுத்துப் போட்டு அவரைக் தீவைத்துக் கொளுத்தியிருந்தனர்.இத்தாக்குதல் தொடர்பில் முப்பது பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.கவனக்குறைவாக இருந்தார்கள் என்பதற்காக போலிஸ்காரர்கள் ஏழு பேர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மதநிந்தனை என்பது பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். ஆனாலும் மிகச் சிலருக்கே அங்கு இக்குற்றச்சாட்டுக்காக தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

http://www.indiatvnews.com/news/world/man-torched-for-desecrating-quran-in-pakistan-9992.html


இது இணையத்தில் வந்த செய்தி. இதற்கு இஸ்லாம் என்ன தீர்வு கூறுகிறது என்பதை சற்று பார்ப்போம்.

குர்ஆன் என்றால் எது? அதை எவ்வாறு மதிப்பது? என்ற விபரங்களை அறிந்து கொண்டால் இது பற்றிய தெளிவான விளக்கத்துக்கு நம்மால் வர முடியும்.

இறைவனின் வார்த்தை என்பதால்தான் குர்ஆனுக்கு ஒரு மதிப்பை நாம் கொடுக்கிறோம். இந்த குர்ஆனானது நபியவர்களுக்கு எழுத்து வடிவில் நாம் பார்க்கும் இந்த நிலையில் அருளப்படவில்லை. மாறாக ஓசை வடிவில்தான் அருளப்பட்டது.

குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தினால்தான் நமது வசதிக்காக அதனை எழுத்து வடிவில் ஆக்கிக் கொண்டோம். இவ்வாறு எழுதப்பட்ட காகிதங்களில் காகிதத் தன்மையைத் தாண்டி வேறு எந்த புனிதமும் இல்லை.

இன்றைய கணிணி யுகத்தில் குறுந்தகடுகளிலும், கணிணியிலும், செல்ஃபோன்களிலும் குர்ஆன் பதியப்படுகிறது. குர்ஆன் பதியப்பட்ட காரணத்தால் இந்த நவீன சாதனங்கள் புனிதம் பெற்று விட்டதாக நாம் எண்ணுவதில்லை.

குர்ஆன் என்ற இந்த வேத நூலானது மக்களுக்கு பயன்படுகின்ற சிறந்த உபதேசங்களாகும். இதனை மனிதர்கள் பின் பற்றி நேர் வழி பெற வேண்டும் என்பதற்காக இறைவனால் அருளப்பட்டது. எனவே குர்ஆனின் உபதேசங்களை கடைபிடிக்க வேண்டும். அதை மற்றவர்களுக்கு பரப்ப முயற்சிக்க வேண்டும். இதுதான் குர்ஆனை மதிப்பதற்கான சிறந்த வழி.

ஒருவர் தனது பெற்றோரின் உபதேசங்களை எழுதிக் கொண்டு எழுதப்பட்ட காகிதங்களுக்கு மரியாதை செலுத்தினால் அவர் காகிதங்களுக்கு மரியாதை செய்திருக்கிறார் என்று கூறலாமே யொழிய பெற்றோரையோ அவர்கள் செய்த உபதேசத்தையோ மதித்தவராகக் கருதப்பட மாட்டார். அவர்களின் உபதேசங்களை வாழ்வில் கடை பிடிப்பதன் மூலமாகத்தான் அவர் மரியாதையை வெளிப்படுத்த முடியும்.

முன்பு உஸ்மான் அவர்களின் காலத்தில் பலரும் சிறு சிறு அத்தியாயங்களை முழு குர்ஆன் என்று விளங்கி தங்கள் வீடுகளில் பாதுகாத்து வந்தனர். எது முகமது நபிக்கு அருளிய வரிசைபடுத்தப்பட்ட குர்ஆன் என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குர்ஆனை மனனமிட்ட பல தோழர்களை அழைத்து அவர்களை ஓதச் செய்து அதனை பிரதி எடுத்தார் ஜனாதிபதி உஸ்மான். பிறகு பலர் வீடுகளில் வைத்திருந்த தோல்களிலும், எலும்புகளிலும் எழுதப்பட்ட பல அத்தியாய பிரதிகளை கொண்டு வரச் செய்து அனைத்தையும் எரித்து விட்டார். இங்கு ஜனாதிபதி உஸ்மானை குறை காண முடியுமா?

அந்த எலும்புகளுக்கோ தோல்களுக்கோ ஏதும் புனிதம் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் நினைக்கவில்லை. முகமது நபியும் தனது தோழர்களுக்கு அவ்வாறு கட்டளை இடவில்லை.

தற்போது குர்ஆன் எரித்த விவகாரத்துக்கு வருவோம். முதலில் அந்த குர்ஆனை யார் எரித்தது என்பதே தெரியவில்லை. அப்படியே அந்த நபர் எரித்திருந்தாலும் இஸ்லாமிய சட்டத்தின் படி அது தீயிட்டு கொலை செய்யும் அளவுக்கு மிகப் பெரிய குற்றமும் கிடையாது. அறியாமல் செய்த அந்த தவறை விளக்கி அவரை கண்டித்து விட்டிருக்கலாம். அடுத்து குற்றவாளியை காவல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்த ஒருவரை இந்த கிறுக்குக் கூட்டம் காவல் நிலையம் சென்று அவரை இழுத்து வந்து தீயிட்டு கொளுத்தியிருக்கிறது. இது மடத்தனமான செயல். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. பாகிஸ்தான் அரசும் பணியில் கவனக் குறைவாக இருந்த பல காவலர்களை வேலை நீக்கம் செய்துள்ளது.

இஸ்லாமிய பார்வையில் அந்த நபரை கொன்ற அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை விளங்காத மூடக் கூட்டங்கள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இன்னும் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உண்மையான இஸ்லாமிய போதனைகள் என்ன? குர்ஆன் அவர்களிடம் என்ன எதிர் பார்க்கிறது? என்பதை விளக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் தவ்ஹீத் வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். சவுதியில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுத்து மக்களின் மூட நம்பிக்கைகளை களைய முயற்சிக்க வேண்டும். ஒரு நேர்மையான அரசு அதைத்தான் செய்ய வேண்டும்.

Saturday, December 22, 2012

நம் தமிழகத்தில் அடுத்து ஒரு மாணவி வன்புணர்ந்து கொலை!

நம் தமிழகத்தில் அடுத்து ஒரு மாணவி வன்புணர்ந்து கொலை!

கேட்கவே மனம் கொதிக்கிறது. பள்ளிக்கு படிக்க செல்லும் பெண்களையும் இந்த காமுகர்கள் விடுவதில்லை.


தூத்துக்குடி அருகே, பள்ளிக்கு சென்ற மாணவி கொல்லப்பட்ட சம்பவத்தில், கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம், கிளாக்குளம் சத்துணவு உதவியாளர், பேச்சியம்மாள். இவரது மகள் புனிதா, நாசரேத்தில், விடுதியில் தங்கி, தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தார். புனிதா நேற்றுமுன்தினம் பள்ளி செல்லும் வழியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையாளிகளை பிடிக்க மாவட்ட எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை இச்சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியை அடுத்த பாறைக்குட்டம் என்ற பகுதியைச் சேர்ந்த சுப்பையா (36) என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவி புனிதாவை பலாத்காரம் செய்ய முற்பட்டபோது சத்தமிடவே பயந்து போன இந்த கிறுக்கன் அந்த சிறுமியின் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொன்றுள்ளான். இவன் இது போல் பலரை பலாத்காரம் செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த டிசம்பர் 1ம் தேதி, தனது தங்கை முறையான, சித்தி தாயம்மாளின் மகள் பூர்ணகலா என்பவரிடம் தவறாக நடக்க முயனறதாக கைது செய்யப்பட்ட சுப்பையா, ஜாமினில் வெளிவந்து அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளான். வெட்டியவுடன் அங்கிருந்து தலை மறைவாகியிருக்கிறான். இந்த கேஸில் போலீஸ் அவனை தேடி வந்திருக்கிறது. இதனிடையில் மாணவி புனிதாவை பலாத்காரம் செய்து கொலையும் செய்துள்ளான் இந்த படுபாவி.

இவ்வளவு குற்றம் செய்த ஒருவனை எவ்வாறு ஜாமினில் விட்டனர். நமது நாட்டு சட்டங்களில் உள்ள குறைகளே இது போன்ற குற்றங்கள் பெருகுவதற்கு காரணம. இவனுக்கு முன்பே உரிய தண்டனை கொடுத்து சிறையில் அடைத்திருந்தால் மாணவி புனிதாவின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.

அடுத்து டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி வன் புணர்வுக்கு எதிராக திரண்ட மக்களும் பதிவர்களும் இந்த குற்றத்துக்கு அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. பணம் காரணமா? அல்லது ஜாதி காரணமா? விளங்கவில்லை

அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்கும் மனநிலை என்று நம் நாட்டில் தோன்றுகிறதோ அன்று தான் சமூக நீதி கிடைத்ததாக நாம் பெருமைபட்டுக் கொள்ள முடியும்.

இந்த காமுகனையும் டெல்லி காமுகர்களையும் ஒரே தரத்தில் வைத்து அதிக பட்ச தண்டனை எதுவோ அதை காலம் தாழ்த்தாமல் உடன் கொடுக்க மத்திய மாநில அரசுகள் முயல வேண்டும்.

-----------------------------------------------

திரிபுராவில் நடந்த கொடூரம்!

அகார்தலா: 37 வயதுடைய பெண்மணியை கூட்டாக வன்புணர்ந்து பிறகு அந்த பெண்ணை அடிக்கவும் செய்துள்ளனர் மாபாவிகள்.அந்த பெண்ணை நிர்வாணமாகவும் ஆக்கியுள்ளனர்.இது சம்பந்தமாக ஏழு பேரை நேற்று போலீஸ் கைது செய்துள்ளது. ஐந்து வயது குழந்தைக்கு தாயான இவரை இது போல் இதற்கு முன்னும் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை கூறுகிறது. கிராமத்தில் உள்ள எந்த நபரும் இந்த கொடுமையை தட்டிக் கேட்காததுதான் கொடுமையின் உச்சம்.

மாதர் சங்க பொறுப்பில் உள்ள பூர்ணிமா ராய் இந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சில குண்டர்கள் இந்த செயலை செய்துள்ளதாக செய்தி கூறுகிறது.தோழர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? கார்ல்மாக்ஸை படிப்பதை விட்டு விட்டு காம சூத்ரா படிக்க ஆரம்பித்து விட்டார்களோ என்னவோ.

http://timesofindia.indiatimes.com/india/Woman-gang-raped-stripped-naked-in-Tripura-seven-arrested/articleshow/17722097.cms

-----------------------------------------------

இலங்கையில் கல்வியில் முஸ்லிம்கள் முன்னேற்றம்:


நாட்டில் இடை நிலைக் கல்வியில் நிலவும் சமநிலை இன்மையை முஸ்லிம்கள் புரிந்துகொண்டு சிறப்பாக திட்டமிட்டு செயற்பட்டுவருவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.



அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்;

2009 ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் பல்கலைக்கழக அனுமதி வீதத்தை உற்று நோக்கும் போது முஸ்லிம்கள் கல்வி தொடர்பில் கொண்டுள்ள சிரத்தையை கண்டுகொள்ள முடியும். 2009 முதல் சிங்களவர்களின் பல்கலைக்கழக அனுமதியானது 0.9 வீதத்தாலும் தமிழர்களின் பல்கலைக்கழக அனுமதியானது 0.2 வீதத்தாலும் பின்னடைந்துள்ளதுடன் முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதியானது 10.8 வீதத்தால் அதிகரித்துள்ளது. இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றம்.

முஸ்லிம்கள் எங்களுக்கு முன்மாதிரியாக கல்வி தொடர்பில் நீண்டகால திட்டங்களுடன் செயற்படுகின்றனர். அதனடிப்படையில் முஸ்லிம் பாடசாலைகள் சிறப்பாக செயற்படுகின்றன என்பதை கல்வி அமைச்சர் என்ற வகையில் என்னால் உறுதியாக கூறமுடியும். அத்துடன் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நாம் செயற்படவேண்டும் என்றார்.

நன்றி(விடிவெள்ளி)

சந்தோஷமான செய்தி. இலங்கை முஸ்லிம்களை முன் மாதிரியாகக் கொண்டு தமிழக முஸ்லிம்களும் கல்வியில் முன்னேற்றத்தைக் காண வேண்டும். கடந்த அறுபது ஆண்டு காலமாக மிகவும் பின்தங்கி விட்டோம். அரசு வேலைகளில் தற்போது இட ஒதுக்கீடும் கிடைத்து வருவதால் படித்தவர்களுக்கு அரசு வேலைகளோ அல்லது வளைகுடா நாடுகளிலோ சிறந்த எதிர்காலம் முஸ்லிம்களுக்கு உண்டு. எனவே முன்பு போல் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் பாஸ் போர்ட் எடுக்கும் வேலைகளை பார்க்காமல் எந்த விலை கொடுத்தாவது கல்லூரி படிப்பை முடித்து விடுங்கள்.

வசதியுள்ள முஸ்லிம்கள் வசதியில்லாத எத்தனையோ குடும்பங்களுக்கு படிக்க உதவி செய்யலாம். கடனாகவும் கொடுக்கலாம். இறப்புக்கு பிறகு கல்விக்கு செய்யும் உதவிகள் நன்மைகளாக நமக்கு ராயல்டிகளாக வந்து கொண்டிருக்கும்.

எனக்கு இத்தனை வேலி நிலம் இருக்கிறது, நான் இத்தனை காலனிகளை கட்டி வாடகை பெறுகிறேன் என்று வீண் பெருமை பேசிக் கொண்டிருக்காமல் தேவையுள்ள மக்களுக்கு உங்கள் பணத்தை தாராளமாக கல்விப் பணிக்கு செலவு செய்யுங்கள். அரசு வேலைகளில் முஸ்லிமகள் அதிகம் இடம் பெற உங்களின் பொருளாதாரத்தை செலவு செய்யுங்கள். அதிலும் அந்த கல்வியானது இஸ்லாமிய அடிப்படைகளை தகர்க்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டம். 7 ஆம் வகுப்புக்குப் பிறகு பெண்களையும் ஆண்களையும் தனித் தனியே பயிற்று விக்கும் பள்ளி கல்லூரிகளில் சேர்க்க முன்னுரிமை கொடுங்கள். ஏனெனில் சமூகம் அந்த அளவு சீரழிந்து கிடக்கிறது. மற்ற சமூகங்களுக்கு நாம் வழி காட்டியாக இருக்க வேண்டுமானால் கல்வியில் தன்னிறைவு அடைவது அவசியம். இதை உணர்ந்து நம்மால் முடிந்த கல்வி உதவிகளை கணக்கின்றி செய்வேமாக...

Friday, December 21, 2012

யூகானாவாக இருந்து முஹம்மது யூஸுஃப் ஆக மாற்றியது எது?



யூகானாவாக இருந்து முஹம்மது யூஸுஃப் ஆக மாற்றியது எது?


ட்ரூ கால்” islam.thetruecall இணையதளம் முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான ”முஹம்மது யூஃஸுப்”பிடம் நேருக்கு நேர் கண்ட ”பேட்டி”
உலகில் இஸ்லாம் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட மார்க்கமாக இருக்கிறது. அதனால் இறைத்தூதர் அவர்கள் மீது முஸ்லிமல்லாதவர்களுக்கு அலட்சியம் மற்றும் அவமரியாதை உள்ளது. அவர்கள் மனதில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்களே ஊட்டப்படுகிறது. இருந்த போதிலும் இஸ்லாத்தை நோக்கி பலதரப்பட்ட மக்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவரான பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் ஒருவரை இங்கு நாம் சந்திக்கின்றோம்.

அவர் பிறப்பால் ஒரு முஸ்லீம் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம்.



ஆமாம்! பாகிஸ்தானின் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளைப்புரிந்த பிரபல கிரிக்கெட் வீரர் முஹம்மது யூஃஸுப் தான் அவர்.

ட்ரூ கால்: அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் யூஃஸுப்.

முஹம்மது யூஃஸுப்: வஅலைக்கும் ஸலாம்.

ட்ரூ கால்: உங்கள் குழந்தை பருவம் பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா? எங்கு எப்படி அதை கழித்தீர்கள்?

முஹம்மது யூஃஸுப்: நான் குழந்தை பருவத்தில் ரயில்வே காலனியில் வசித்து வந்தேன், சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். இப்போது நான் அதையே தான் செய்கிறேன்.

ட்ரூ கால்: உங்கள் ஆரம்ப நாட்களில் மதம் பற்றிய முக்கியத்துவம் எப்படி இருந்தது? உங்கள் மத கல்வியை எங்கே பெற்றுக்கொண்டீர்கள்?

முஹம்மது யூஃஸுப்: அப்பொழுதெல்லாம் மத கல்வி போன்ற ஒன்று இருந்தது இல்லை. ஞாயியிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கு செல்லும் பழக்கமுடையவனாக இருந்தேன். ஆனாலும் தொடர்ந்தார்ப்போல் செல்லும் பழக்கமுடையவனாக இருக்கவில்லை. பிற்பாடு மதத்தைப்பற்றி ஓரளவுக்கு புரிந்து கொண்ட பின்னரே ஒவ்வொரு ஞாயியிற்றுக்கிழமைகளிலும் சர்ச்சுக்கு செல்ல ஆரம்பித்தேன்.

ட்ரூ கால்: இதெல்லாம் எப்படி ஆரம்பித்தது? எது உங்களை இஸ்லாத்தின்பால் ஈர்த்தது?

முஹம்மது யூஃஸுப்:
சிறு வயது முதலே எனது எல்லா நண்பர்களுமே முஸ்லிம்கள்தான். அது மட்டுமின்றி நாங்கள் வசித்துவந்த இடமும் முஸ்லிம்கள் வாழும் பகுதியில்தான். நீங்கள் முதலில் கூறியது போல், இந்த உலகில் இஸ்லாம் பற்றி தவறான எண்ணம் நிறைய உள்ளது. ஆனால் அது முஸ்லிமல்லாதவர்களின் தவறல்ல. முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் கட்டளைகளையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலான ”சுன்னா”வையும் சரிவர பின்பற்றாததன் காரணமாகவே பின் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆரம்ப நாட்களில் நான் பழகிய முஸ்லிம் நண்பர்களின் வாழ்க்கை முறைக்கும் எனக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் காண முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் பெயரளவு முஸ்லிம்களாகவே இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நான் என்ன செய்து கொண்டிருந்தேனோ அதைத்தான் அவர்களும் செய்துகொண்டிருந்தார்கள். (பாகிஸ்தானில் இன்றும்கூட ‘தர்ஹா’ வாசிகளே அதிகம் என்பது வெள்ளிடை மலை. அங்குள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் கப்ருகளை தரிசிக்கிறார்கள் மற்ற மதத்தவர்கள் சிலைகளை தரிசிக்கிறார்கள்; அதைத்தான் குறிப்பிடுகிறாரோ!)

ட்ரூ கால்:
சரி உங்களது இந்த திடீர் மாற்றம் பற்றி…?

முஹம்மது யூஃஸுப்:
அது திடீரென்று நடக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே என்னுள் ஒரு மாற்றம் தோன்றிருந்தது. முஸ்லிம் ஜமாத்தின் தொடர்பு எனக்கு இருந்தாலும் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுமாறு கூறவில்லை. அதேசமயம் அவர்களை பின்பற்றி நிறைய பேர் இஸ்லாத்தைத் தழுவுவதை நான் பார்த்தேன். அந்த நேரத்தில் ”ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் ஒரு யூத முஸ்லிமை சந்தித்தேன். 70 – 75 களில் ஜமாத்தின் செயல்முறைகளினால் கவரப்பட்டு இஸ்லாத்தைத்தழுவியிருந்தவர் அவர்.

ட்ரூ கால்:
இஸ்லாத்திற்கு எதிராக மோசமான பிரச்சாரத்தால் மக்கள் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள்… இல்லையா?

முஹம்மது யூஃஸுப்:
ஆம்! ஆனால், இது அவர்களுடைய தவறு அல்ல. நம்முடைய தவறு. முஸ்லிம்கள் தவறு. இது ஒரு இஸ்லாமிய நாடு. (பாகிஸ்தனைத்தான் குறிப்பிடுகிறார்). ஆனால் வெளியிலிருந்து வருபவர்கள் இதை இஸ்லாமிய நாடு என்று எடைபோடவே முடியாது. அது நமது தவறுதான். (அந்த அளவுக்கு முஸ்லிம் பெயர்தாங்கிகளாக மட்டுமே வாழ்ந்து வருகிறோம்.) நபிகள் நாதர் அவர்களின் சுன்னாவை நாம் பின்பற்றினால் நமக்கு வேறு ஒரு வழிகாட்டுதலே தேவையில்லை.

ட்ரூ கால்:
இஸ்லாத்தைப்பற்றி சிறப்பாக என்ன தெரிந்து கொண்டீர்கள்? இந்த மிகப்பெரிய (இஸ்லாத்தை தழுவிய) முடிவை எடுக்க காரணமென்ன?

முஹம்மது யூஃஸுப்:
நான் இன்னும் இஸ்லாம் மற்றும் கற்றல் விஷயங்களில் புதியவன் தான். ஆனால் எனக்கு ஊக்கம் கொடுத்த மக்கள் என்னை; ”இஸ்லாமிய வாழ்க்கை ஒரு முழு வழி” என்று உணரச் செய்துள்ளார்கள். வாழ்நாள் முழுவதும் அழைப்புப்பணியை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தை ஊட்டியுள்ளனர். இது நபிமார்களின் வேலையாகும். முஹம்மது நபி. அவர்களுக்குப்பிறகு வேறு நபி எவரும் கிடையாது. எனவே அவர்கள் விட்டுச்சென்ற இந்த ‘அழைப்புப்பணி’யை செய்ய வேண்டியது நமது கடமையாக உள்ளது. ஆகவே முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் வழியில் மற்றவர்களை அழைக்க வேண்டும். ஆனால் நாம் வீடுகளிலேயே உட்கார்ந்து விடுகிறோம். அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கையில்லை. நமது எண்ணப்படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது நஃப்ஸின் விருப்பப்படியே வாழ்கிறோம். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கின்றோம். ஆனால் உண்மை எதுவெனில் அல்லாஹ் நாடாமல் எதுவும் நடக்காது.

ட்ரூ கால்:
குழப்பங்கள், வேலை நிறுத்தங்கள், எதிர்ப்புகள் போன்ற இன்றைய குழப்பமான சூழ்நிலையை முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று கருதுகிறிர்கள்?

முஹம்மது யூஃஸுப்:
நாம் அமைதியை பராமரிக்க வேண்டும். எதிர்ப்புகள் அமைதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் நாம் முதலில் நம்மை திருத்தி கொள்ள வேண்டும். நாம் உண்மையான முஸ்லிம்களாக வாழ்கிறோமா? நாம் அல்லாஹ் அமைத்த விதிகள் மற்றும் முஹம்மது நபி அவர்கள் கற்பித்த வழிகளில் வாழ்கிறோமா? முதலில் இந்த மதிப்பீட்டை நாம் செய்ய வேண்டும். நாம் நம்மை திருத்திக் கொள்ளாவிட்டால் மற்றவர்கள் நம்மை கேலி செய்யத்தான் செய்வார்கள்.

ட்ரூ கால்:
(இஸ்லாத்தைத்தழுவிய) உங்கள் முடிவு உங்களுக்கு கடினமாக இருந்திருக்குமே! குடும்பத்தார்களின் எதிர்ப்பு எப்படி இருந்தது?

என்னுடைய மன (மத) மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். கடுமையான கோபம் கொண்டார்கள். ஆனால் பரந்த நோக்குடன் சிந்தித்தால் ”இந்த உலகம் நமது முக்கிய குறிக்கோள் அல்ல” என்று விளங்கும். இந்த உலகில் வெற்றி உண்மையான வெற்றி அல்ல, இந்த உலகில் தோல்வி உண்மையான தோல்வி அல்ல. எல்லோருமே இந்த உலகைவிட்டு பிரியக்கூடியவர்களாகவே இருக்கிறோம். இவ்வுலகின் மிகப்பெரும் உண்மை மரணமாகும். நமது வாழ்க்கை மிகப்பெரும் துரோகமாகும். (இறைவனுக்கு மனிதர்கள் செய்யும் துரோகத்தை சொல்கிறாரோ!)

ட்ரூ கால்: உங்கள் மன (மத) மாற்றதை நீங்கள் தெரிவித்தபோது உங்கள் மனைவியின் ரியேக்ஷன் என்னவாக இருந்தது?

முஹம்மது யூஃஸுப்:
நான் முஸ்லிமானதை முதலில் என் மனைவியிடம் சொல்லவில்லை. என் மன அமைதிக்காக சில காரியங்களை நான் செய்கிறேன், அது எனக்கு நிம்மதியைத்தருவதாகவும் சொன்னேன். இஸ்லாமியக் கல்வி போதிக்கப்படும் இடங்களுக்கு செல்லுமாறு அவளை கேட்டுக்கொண்டேன். அதுமட்டுமின்றி அதில் ஏதேனும் நல்ல விஷயங்களை அவள் கண்டுகொண்டால் இஸ்லாத்தைத் தழுவும்படியும் கேட்டுக்கொண்டேன். ஏனெனில் இஸ்லாத்தில் எதையும் கட்டாயப்படுத்துவது கூடாது. இஸ்லாம் வன்முறையால் பரவாமல், அன்பு மற்றும் பாசம் மூலமே பரவியுள்ளது. இது மனித இனத்தின் நன்மைக்காக பரவியுள்ளது. இது அவர்களின் எண்ணங்களை தூய்மைப்படுத்தவும் அல்லாஹ்வை நெருங்கவும் உதவுகிறது.

ட்ரூ கால்:
நீங்கள் உண்மையை உணர, உதவி செய்த பெருமை யாரைச்சார்ந்தது?

முஹம்மது யூஃஸுப்:
அல்லாஹ்வின் கட்டளைகளை, திருத்தூதர் அவர்களின் வழிமுறைகளை பேணக்கூடியர்களால் இது சாத்தியமானது. (பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர்) ஸயீத் அன்வர் போன்றவர்களிடம் இவ்வழிமுறைகளை நான் கண்டேன்.

ட்ரூ கால்:
நீங்கள் என்ன ஆலோசனைகளை இஸ்லாம் பற்றிய உண்மையை அறிய விரும்பும் மக்களுக்கு, இஸ்லாம் என்றாலே அழுத்தம் என்று அஞ்சும் மக்களுக்கு சொல்ல விரும்புகிறீர்கள்?

முஹம்மது யூஃஸுப்:
ஒரு முஸ்லிமை முஸ்லிமல்லதவராக மாற்றுவதுதான் கடினம். முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக மாற்றுவது கடினமல்ல. காரணம் மற்ற நம்பிக்கைகளில் இஸ்லாத்தில் கிடைக்கக்கூடிய அமைதியை காணமுடியாது. எனவே இஸ்லாத்திற்குள் நுழைவது எனக்கு எளிதாகவே இருந்தது. குடும்பத்தில் சில தடைகள் இருந்தது உண்மையே! ஆனால் உண்மையாகப் பார்த்தால் இஸ்லாம் உண்மையானது. உண்மையான மார்க்கம் இஸ்லாமே.
ஒரு முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக வாழச்செய்வது கடினமல்ல. ஆனால் ஒரு முஸ்லிமை உண்மையான முஸ்லிமாக வாழச்செய்வதுதான் கடினமான காரியமாகத்தெரிகிறது. என்னுடைய சகோதரர்களுக்கு நான் தெரிவிக்கும் செய்தி என்னவெனில் அல்லாஹ்வின் ஆணைகளை மற்றும் நபி அவர்களின் ”சுன்னா”வை கடைப்பிடியுங்கள். முஸ்லிமல்லாதோரை முஸ்லிமாக்குவது கடினமான காரியமல்ல.

ட்ரூ கால்:
நீங்கள் ஒரு கிறிஸ்துவராக இருந்தபோது, முஸ்லிம்களைப்பற்றிய உங்களது எண்ணம் எதுவாக இருந்தது?

முஹம்மது யூஃஸுப்:
ஒரு உண்மையான முஸ்லிமை காணும்பொழுது இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்று தோன்றும். எவர் அல்லாஹ்வின் உத்தரவுகளை பின்பற்றுவோராகவும் இறைத்தூதர் அவர்களின் வழிமுறையான ”சுன்னா” வை கடைப்பிடிக்கக்கூடியவராகவும் இருப்பாரோ அப்படிப்பட்டவர்தான் உண்மையான முஸ்லிம்.

ட்ரூ கால்:
உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன?

முஹம்மது யூஃஸுப்:
இஸ்லாத்தை மதிப்பவராக இருந்தால்; எவருக்கும் எதிர்காலத்தைப்பற்றி தெரியாது. என்னை இஸ்லாத்தில் ஐக்கியமானவனாகவே பார்க்க விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கை அல்லாஹ்வால் வழங்கப்பட்டது. எதுவரை அல்லாஹ் வாழ்நாளைத் தருகிறானோ அதுவரை அல்லாஹ்வின் பாதையிலேயே செலவிட விரும்புகிறேன்.

ட்ரூ கால்:
உங்களின் பரபரப்பாக நேரத்தில் ”பேட்டி” அளித்தமைக்கு மிக்க நன்றி.

முஹம்மது யூஃஸுப்: جَزَاكَ اللَّهُ خَيْرًا – Jazaakallaahu khairan
தமிழ் மொழியாக்கம்: எம்.ஏ.முஹம்மது அலீ

Thursday, December 20, 2012

பாடகி நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை!

பாடகி நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை!



அதிர்ச்சியான செய்தி. ஒரு முறை கும்பகோணத்தில் இவரது கசசேரியை நேரிலேயே கேட்டிருக்கிறேன். மிகவும் வசீகரமான குரல். அந்த பாடல்களுக்கு ஏற்றவாறு இவரது முக பாவனைகளும் மிக சிறப்பாக இருக்கும். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் திடீரென இப்படியொரு சோகம்.



மனிதனுக்கு பணம் மட்டுமே வாழ்வில் நிம்மதியைக் கொடுத்து விடாது என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் நமக்கு பாடமாக அமைகின்றன. தங்கள் குழந்தைகளை நாட்டியத்திலும், சினிமாவிலும் கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் அனேகம் பேரைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. இது போன்ற கலைஞர்களின் வாழ்வு வெளி உலகுக்கு பகட்டாக தெரிந்தாலும் உள்ளுக்குள் மிகப் பெரிய போராட்டங்களையே அனேகர் நடத்தி வருகின்றனர்.

இவர் சினிமாவில் பாடுவதும், கச்சேரி என்று பல நாடுகள் சுற்றுவதும் கணவருக்கு பிடிக்கவில்லை என்றும் அதுதான் முக்கிய காரணம் என்றும் செய்திகள் கூறுகின்றன. தனது தாயாரின் இறப்பை தாங்கிக கொள்ள முடியாமல்தான் தற்கொலையை நாடினதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. அதற்காக தற்கொலை முடிவு என்பது கோழைத்தனமானது. மனைவியை அன்பாக திருத்த முயற்சித்திருக்கலாம். ஒரு சிறந்த பாடகியின் வாழ்வில் திடீரென புயல் வீசி உள்ளது.

ஆழந்த அனுதாபங்கள்.



----------------------------------------------------

குஜராத் தேர்தலில் பணம் கொடுத்து ஊடங்களில் செய்தி:பிரச்சனையை கையில் எடுத்த கட்சு!

குஜாரத்தில் தேர்தலில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும் அரசியல் வாதிகள் பணம் கொடுத்து ஊடகங்களில் செய்தி வெளியிட வைத்தாகவும் பிரஸ் கவுன்சில் தலைவர் கட்சு குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனக்கு புகார் வந்ததும் இதை விசாரிக்க “உண்மை கண்டறியும் தனிக் குழுவை” அமைத்து அவர்களை இது குறித்து விரிவாக விசாரித்து தனக்கு அறிக்கை சமர்பிக்குமாறு கட்சு உத்தரவிட்டுருந்தார்.

பிரஸ் கவுன்சில் உறுப்பினர் ராஜிவ் ரஜ்சன் தலைமையில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு இது குறித்து விசாரித்து முதல் கட்ட தகவலை கடந்த 17-12-2012 அன்று கட்சு அவர்களிடம் தெரிவித்துள்ளது.

பிரஸ் கவுன்சில் தலைவர் கட்சு அவர்கள் இது குறித்து கூறுகையில்:

”பத்திரிக்கை ஊடகங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி ஊடகங்களும் இதில் பெருமளவு ஈடுபட்டுள்ளது. பணத்தை வாங்கிக் கொண்டு குஜராத் தேர்தலில் அரசியல் வாதிகளுக்கு சாதகமாக செய்தி வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது” என பிரஸ் கவுன்சில் உறுப்பினர் ராஜிவ் ரஜ்சன் என்னிடம் முதல் கட்ட அறிக்கை அளித்துள்ளார்.

எனினும் இந்த புகார் குறித்த முழுமையான அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கின்றது. அது விரைவில் என்னிடம் சமர்பிக்கப்படும், முழு அறிக்கை எனது கைக்கு வந்ததும், தேர்தல் ஆணையத்திற்கு ”பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்த அனைத்து அரசியல் வாதிகளின் கேட்டிடேட்களையும் ரத்து செய்யுமாறு தெரிவிக்கப் போகின்றேன். சமீபத்தில் உபி தேர்தலில் ரத்து செய்யப்பட்டது போன்று!' எனக் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பதோடு சம்பந்தப்பட்ட இலாக்கா அதிகாரிகளிடமும் இது குறித்து பேசவிருக்கின்றேன் என தற்போது கட்சு கர்ஜித்துள்ளார்.

கட்சு ஒரு பிரச்சனையை கையில் எடுத்தால் அவர் எவ்வளவோ பெரிய ஆளாக இருந்தாலும் அவரை ஆட்டம் காண வைத்து விடுவார் என்பது மஹாராஷ்ட்ர முதல்வர் சவான் விசயத்தில் அனைவரும் அறிந்ததே!


தற்போது மோடியை திரும்பவும் முதல்வராக்கியிருக்கின்றனர் குஜராத் மக்கள். போன தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை குறைந்திருப்பதை பார்க்க வேண்டும். இடங்களும் குறைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு எதிராக முழு ஊடகத்துறையும் வரிந்து கட்டிக் கொண்டு எழுதின. அதே போல் மோடியை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளின. இத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து காங்கிரஸ் முன்பை விட தற்போது அதிக இடங்களையும், அதிக வாக்குகளையும் பெற்றுள்ளது ஆச்சரியமான ஒன்றுதான். இமாசல பிரதேசத்தில் பிஜேபியை வீட்டுக்கு அனுப்பி விட்டு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையும் கவனிக்க வேண்டும்.

குஜராத்தில் மோடியின் வெற்றி குறித்து சிதம்பரம் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றுள்ளது; இந்த தேர்தலில் மோடியும், பா.ஜ.,வும் 117 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி உள்ளன; ஒருவேளை பா.ஜ., 93 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் அங்கு நாங்கள் தான் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருப்போம்; மோடி, காங்கிரசை மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்திலேயே வென்றுள்ளார்; ஆகையால் அது உண்மையான வெற்றி அல்ல. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அடுத்து மோடி தனது இந்துத்வா அஜெண்டாவை தூர வைத்து விட்டு முஸ்லிம்களை அரவணைக்க துவங்கியுள்ளார். இர்ஃபான் பதானையும் கூடவே பிரசாரத்துக்கு அழைத்துச் சென்றதையும் நோக்க வேண்டும். இனி வருங்காலங்களில் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சராக நடந்து கெட்டு போன தனது பெயரை சரி செய்ய முயல்வாராக!

இந்துத்வா இந்த நாட்டை தூக்கி நிறுத்தி விடும் என பலரும் எண்ணியிருந்தனர். ஆனால் இந்த நாட்டுக்கு எதிராக குண்டு வெடிப்புகளையும் அப்பாவி மக்களை கொல்வதிலும் முன்னுக்கு நிற்பது இந்துத்வா ஆட்களே என்பதை சமீபத்திய சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு கைதுகளும், ஹைதரபாத் குண்டு வெடிப்பு கைதுகளும் நமக்கு உறுதிபடுத்துகின்றன. எனவே இந்த நாட்டின் முதல் அச்சுறுத்தல் இந்துத்வா என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. நாட்டு நலனில் உண்மையிலேயே மோடிக்கு அக்கறை இருந்தால் இந்துத்வா வாதிகளை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த தொடங்க வேண்டும். அதுதான் அவருக்கும் நல்லது. நமது நாட்டுக்கும் நல்லது.

Wednesday, December 19, 2012

டெல்லி கற்பழிப்புகள் தொடராமல் இருக்க என்ன வழி?

டெல்லி கற்பழிப்புகள் தொடராமல் இருக்க என்ன வழி?

டில்லியில், கடந்த ஞாயிறன்று இரவு, நண்பருடன் பஸ்சில் பயணித்த, 23 வயது மருத்துவ மாணவி, ஏழு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். அவரது நண்பரும், கடுமையாகத் தாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டார். நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, இந்த கொடூர சம்பவம், நேற்று பார்லிமென்டில் எதிரொலித்தது. இதில் இரு அவைகளில் பெண் எம்.பி.க்கள் கொந்தளித்து போயினர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசத்துடன் பேசினர். நேற்று காலையில், ராஜ்யசபா கூடியதும் கேள்வி நேரம் ஆரம்பமானது. ‌எனினும் முக்கிய பிரச்னையாக டில்லி கற்பழிப்பு சம்பவம் குறி்த்து எம்.பி.க்கள் பேசினர்.

ஜெயா பச்சன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு கணம் விக்கித்து நின்று கண் கலங்கி விட்டார். இந்த சபையில் நின்று பேசவே வெட்கப்படுவதாகவும் சொன்னது அனைவரையும் உலுக்கி விட்டது. சுஷ்மா சுவராஜ் ஒரு படி மேலே போய் அவர்களை தூக்கில் இட வேணடும் என்று கோரிக்கை வைத்தார். அந்த குற்றவாளியின் தந்தையும் அந்த கயவனை தூக்கில் இட்டாலும் பரவாயில்லை என்று சொல்லியுள்ளார். இந்த மிருகங்களுக்கு உச்சபட்ச தண்டனை எதுவோ அதனை அரசு கொடுக்க வேண்டும்.

இந்நிலையில் நேற்று இரவு காங். தலைவர் சோனியா , சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மாணவியை , டில்லி சப்தர்ஜூங் மருத்துவமனைக்கு ‌நேரில் சென்று பார்த்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்..



அஸ்ஸாமில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதிவாசி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை இந்த காணொளி விவரிக்கிறது. இவ்வளவு தெளிவாக ஆதாரம் கிடைத்தும் சம்பந்தப்பட்ட குண்டர்களை இந்த அரசு என்ன செய்திருக்கும்? இந்த அளவு பத்திரிக்கைகள் அந்த செய்தியை பிரபல்யப்படுத்தியிருக்குமா என்பது கேள்விக் குறியே? இது போன்று இரு அளவு கோல்களை நாம் கடைபிடிப்பது சமூகத்தில் முதலில் மாற வேண்டும்.

நீதியதி மார்க்கண்டேய கட்ஜூ

சம்பவம் குறித்து மார்கண்டேய கட்ஜூ கூறுகையில், "டில்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த சம்பவத்திற்காக, பார்லிமென்ட்டிலும், நாட்டிலும் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள், கண்டனக்குரல்கள், இதே விஷயம் இந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் நடக்கும் போது ஏன் எழுப்பப்படுவதில்லை. டில்லி மட்டுமே இந்தியா அல்லவே.

விதர்பா, ஆந்திரா ஆகிய இடங்களில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலையில் நாடு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நான் பாலியல் பலாத்காரத்தை நியாயப்படுத்தவில்லை. இந்திய தண்டனை சட்டம் 376ன் படி பாலியல் பலாத்காரத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் ஏன் மரண தண்டனை வேண்டும் என கேட்கிறார்கள் என்பது எனக்கு புரிய வில்லை. அதே நேரத்தில் இது மட்டுமே நாட்டின் பிரச்னை அல்ல. இந்தியாவில் அனைத்து பிரச்னைகளுக்கு ஒரே சமமான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள், வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் எவ்வளவோ பேர் நாட்டில் உள்ளார்கள். விலைவாசி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த பிரச்னைகளுக்கும் இதே போன்ற முக்கியத்துவத்தை அளித்து, அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட வேண்டும்" என தெரிவித்தார்.

சபாஷ் கட்ஜூ! உங்களைப் போன்றவர்கள்தான் தற்போது இந்த நாட்டுக்கு தேவை. தினம் தினம் இந்தியாவின் கிராமப்புறங்களில் எத்தனையோ இளம் பெண்கள் கற்பழிப்புக்கும், தீண்டாமைக்கும் உள்ளாகி தினம் செத்து மடிகின்றனர். அங்கெல்லாம் செல்லாத அல்லது கண்டு கொள்ளாத மீடியாக்கள் டில்லியை மட்டும் ஏன் முன்னிலைப் படுத்த வேண்டும்? டெல்லி மட்டும் தான் இந்தியாவா? இங்கு காட்டும் அக்கறையில் பாதியையாவது கிராமப் பகுதிகளிலும் காட்டினால் நமது நாடு என்றோ நிமிர்ந்திருக்கும்.

இதில் மற்றொரு புறத்தையும் நாம் பார்க்க வேண்டும். இரவு 11 மணிக்கு தன்னந்தனியாக வேறொரு ஆடவனுடன் அந்த பெண் ஏன் ஊர் சுற்ற வேண்டும். கேட்டால் காதல் கத்தரிக்காய் என்று சொல்வீர்கள்? தற்போது அந்த மாணவியின் நிலைக்கு யார் பொறுப்பேற்பது? பெற்றவர்களும் வயது வந்த பெண்ணைப் பற்றி எந்த கவலையும் படாமல் தண்ணி தெளித்து விட்டு விடுவதும் முக்கிய காரணம். மேலும் இளம் பெண்கள் சினிமா நடிகைகளைப் பார்த்து அது போன்று உடை அணிய ஆரம்பித்ததும் ஒரு காரணமாகப் பார்க்க வேண்டும். நீங்கள் கண்ணியமாக உடை அணிந்து தக்க பாதுகாப்புடன் தந்தை அண்ணன் போன்றவர்களுடன் சென்றால் தவறு செய்ய எவருக்கும் துணிவு வராது. எனவே கூடிய வரை பெண்கள் இரவு நேரங்களில் அதிக நேரம் கண்டவனுடன் ஊர் சுற்றாமல் கண்ணியமான உடை அணிந்து தக்க பாதுகாப்போடு வெளியே வந்தால் 90 சதவீதமான பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.


தலை அலங்காரம் தேவைதான். அதற்காக இப்படியா பயமுறுத்தறது......

தாய்மை இழிவாக்கப்பட்டால் அந்த சமூகமே இழிவாகி விடும். எனவே தங்களின் பொருப்புணர்ந்து பெண்களும் நடந்து கொள்வார்களாக!

இது போன்ற பாலியல் குற்றங்களுக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதனை இந்த சம்பவத்துக்கு பிறகாவது நமது பாராளுமன்றம் பரிசீலனக்கு எடுத்துக் கொள்கிறதா என்று பார்ப்போம்.

----------------------------------------------------


(சீரியஸான பதிவை படிச்சுட்டு அதே சீரியஸோட போனா எப்புடீ....அதான் கொஞ்சம் தமாசுக்கு.....)


Tuesday, December 18, 2012

மாயன் காலண்டரும் மூடப் நம்பிக்கைகளும்!

குஜராத் வாக்காளர் மனதுக்குள்.....






'கடவுளே! பத்திரிக்கைகள் கருத்துக் கணிப்பில் மோடியே திரும்பவும் முதல்வராவார் என்று பயமுறுத்துகின்றன. மாயன்கள் 21ந்தேதி உலகில் பல அழிவுகள் ஏற்படலாம் என்று ஆரூடம் கூறியிருக்கிறார்கள். அவர்கள் கூறியது குஜராத்தில் திரும்பவும் மோடி முதல்வராவதை நினைத்தோ என்னவோ! நான் என்ன செய்வேன்! இந்த அழிவிலிருந்து எங்களுக்கு விமோசனம் தற்போதைக்கு கிடைக்காதா?'

---------------------------------------------

தென் அமெரிக்க பழங்குடியான மாயன்கள் 21-12-2012 ல் உலகம் அழிந்து விடும் அல்லது மிகப் பெரும் பூகம்பங்கள் அல்லது சுனாமி வரலாம் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைத்துள்ளனர். இந்த மூட நம்பிக்கையை பலரும் நம்பி வருவது ஆச்சரியப் பட வைக்கிறது. அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்படாத ஒன்று என்று அறிவியலார் ஒதுக்கி விட்டனர். மூடப் பழக்கங்களுக்கு வழமையாக அடிமையாகும் மக்களுக்கு அந்த நாள் நெருங்க நெருங்க பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

எந்த பயமும் வேண்டாம். உலகம் வழமையோல் தனது கடமைகளை செவ்வனே செய்து வரும். இறைவன் நாடினால் ஒழிய எந்த தீங்கும் நமது பூமிக்கு ஏற்படாது.

Monday, December 17, 2012

கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கிலிட்டது ஏன்?

முதலில் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன். எனது தாய் நாட்டின் மீது எந்த அயோக்கியனும் தாக்குதல் நடத்துவதை என்னால் பொருத்துக் கொள்ள முடியாது. அது பாகிஸ்தானாக இருக்கட்டும், அல்லது இலங்கையாகட்டும். நான் வாழும் தேசத்தை நேசிக்கிறேன். ஒரு முஸ்லிம் பெயர் தாங்கியே இந்தியாவுக்கு எதிராக அநியாயமாக நடந்தால் அந்த முஸ்லிம் எனக்கும் எதிரியே! அந்த வகையில் அஜ்மல் கசாப் நமது நாட்டின் மீது ஒரு கும்பலோடு வந்து நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை கொன்றதாக பிடி பட்டான். சில நாள் விசாரணைக்கு பிறகு அவனை மிக ரகசியமாக தூக்கில போட்டதாக நமது அரசு சொன்னது. இவ்வளவு ரகசியமாக அவனை தூக்கிலிட என்ன அவசியம் வந்தது? என்ற சர்ச்சை அன்றே பலரால் எழுப்பப்பட்டது. தற்போது இது சம்பந்தமாக சகோ குலாம் அவர்கள் எழுப்பும் சில கேள்விகளை அப்படியே உங்கள் முன்னும் வைக்கிறேன். குலாம் முகம்மது வைக்கும் குற்றச்சாட்டுகளில் நியாயம் உள்ளதா? அல்லது நமது அரசு சொல்லும் அறிக்கைகள் உண்மையை உரைக்கிறதா என்பதை படிப்பவர்களின் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன். மும்பை தாக்குதலில் அஜ்மல் கசாப் ஈடுபட்டிருந்தால் கண்டிப்பாக தூக்கு மேடைக்கு செல்ல வேண்டியவன் என்பதில் இரு வேறு கருத்தில்லை என்பதையும் பதிக்கிறேன்.

இனி குலாம் முகம்மதுவின் கட்டுரையைப் பார்ப்போம்.

2008 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26 ஆம் நாள் நமது மும்மை நகரம் மிகவும் மர்மமான முறையில் திடீரென தாக்கப்பட்டது. இதில் இந்தியாவில் 16 குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்துத்துவ தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்திய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேயும் கொலை செய்யப்பட்டார். அவர் அப்போது மராட்டிய மாநில தீவிரவாதத் தடுப்புப்படையின் தலைவராக இருந்தார்.


மும்பைத் தாக்குதலே ஹேமந்த் கர்கரேயைக் கொலை செய்வதற்கான முன்னேற்பாடு என்பதை நிரூபிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, ‘கசாப்’ஐ திடீரென இரகசியமாகத் தூக்கிலே போட்டதாகக் கூறி, உடனேயே புதைத்து விட்டாகவும் செய்திகளைப் பரப்பி விட்டார்கள். கசாப்போடு மொத்த விவகாரத்தையும் புதைத்துவிட்டார்கள். இதில் புதைந்துபோன பல உண்மைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

நமது இந்திய அரசு திடீரென ஒரு அதிர்ச்சியை (21-11-2012 காலை 7.30 மணிக்கு) மக்கள் மன்றத்தில் வைத்தது. அதுதான் அஜ்மல் கசாப்-ஐ யாருக்கும் தெரியாமல் தூக்கிலிட்டது. யாருக்கும் தெரியாமல் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்களும் அடங்குவார்கள்.

நாட்டின் நிருவாக இயந்திரத்தை இயக்கும் மாலுமி, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் 26/11 மும்பை தாக்குதலில் பழி சுமத்தப்பட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதைத் தெரிந்து கொண்டாராம்.

டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைப் போல் மிகவும் முக்கியமானவர் சோனியா காந்தி. ஏனெனில் நாட்டை ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சி காங்கிரஸ்-ன் தலைவர். சோனியாகாந்தி அவர்களும் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டராம். அவ்வளவு இரகசியமாக ‘கசாப்’-ஐ தூக்கிலிட வேண்டிய காரணம் என்ன?

கருணை மனு

இதில் அனைவர் கண்களிலும் மண்ணைத் தூவும் மற்றொரு செய்தி என்னவெனில், 'கசாப்' தனது தண்டனைக்கு எதிராக நமது குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்த 'கருணை மனுவும்' நிராகரிக்கப்பட்டு விட்டதாம். இந்த நிராகரிப்பு, நவம்பர் 8 ஆம் நாள் நடந்தது என நமக்கு 21 ஆம் நாள் செய்தி சொல்லின. ஆனால் அடுத்த நாள் நமது பத்திரிகைகள் எல்லாம் நவம்பர் ஐந்தாம் நாளே அந்த நிராகரிப்பு நடந்ததாக குறிப்பிட்டன. இதில் எது உண்மை என யாரும் கேட்டிடக் கூடாது. ஏனெனில் இந்தியாவில் அப்படியொரு நீதி நிருவாகம் நடந்து கொண்டிருக்கின்றது. உண்மையைச் சொன்னால் திரைமறைவு நிருவாகம் ஒன்றை மத்திய உளவுத்துறை நடத்திக் கொண்டிருக்கின்றது.

குடியரசு தலைவர் அவர்களுக்கு, அவர்கள் அலுவலகத்திற்கு அனுப்பட்ட, கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரியுமோ என்னவோ, யாமறியோம்.

அந்தத் திறைமறைவு நிருவாகம் அவ்வளவு அழுத்தம் நிறைந்தது போலும். தன் முன்னால் வரும் கருணை மனுவை ஏன் நிராகரித்தேன் என்பதற்கான காரணங்களைக் குடியரசு தலைவர் மக்கள் மன்றத்திற்கு சொல்லியாக வேண்டும். இஃது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வரும் நியதி. ஆனால் இங்கே பத்திரிகையாளர்கள், தகவல் அறியும் உரிமையின் கீழ் தகவல் கேட்ட பின்பும் அது கிடைக்கவில்லை (இந்தக் கட்டுரை அச்சேறும் வரை அது தான் நிலை.)

இன்று கசாப், நாடறிந்த கொலைகாரன். அப்படிதான் ஊடகங்கள் மக்கள் மன்றத்தை நம்ப வைத்துள்ளன. அவனது கருணை மனுவை நிராகரித்த தேதியையும், காரணங்களையும் அத்துணை மறைவாக வைத்திட வேண்டிய காரணம் என்ன?

கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கிலிடாமல் வழக்கமான தூக்குத் தண்டனைகளைப் போல், தேதியை மக்களுக்கு அறிவித்துத் தூக்கிலிட்டால், என்ன நடக்கும்? அப்போதும் ஊடகங்கள் நமக்குக் காட்டும் முகங்கள், ஏதோ 26/11க்கு நீதி கிடைத்துவிட்டதாக பாராட்டித்தான் இருக்கும். யதார்த்தங்கள் இப்படி இருந்திடும் போது, அத்துணை அவசரமாக இரகசியமாகத் தூக்கிட வேண்டிய காரணம் என்ன?

அரசியல் காரணம்!

நம் நாட்டில் எது நடந்தாலும் அதற்கோர் அரசியல் பின்னணி இருப்பது வழக்கம்.

இந்த வகையில் கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கில் போட்டதற்கும் ஓர் அரசியல் காரணம் சொல்லப்படுகின்றது. அது நவம்பர் 22 ஆம் நாள் நாடாளுமன்றம் கூடிட இருந்தது. எதிர்கட்சிகள், நம்பிக்கை இல்லா தீர்மானம் உட்பட பல கபளீகரங்களை செய்திட இருந்தன. இதனால், கசாப்-ஐ தூக்கில் போட்டு எல்லாக் கட்சிகளிடமும் ஓர் இணக்கத்தைச் சம்பாதிக்கலாம் என அரசு முடிவு செய்திருந்தது. அப்படியானால், சோனியாவும், மன்மோகனும் நாங்கள் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டோம் எனச் சொன்னது பொய்யா?

ஊர் அறிய இதைச் செய்திருந்தால், இதனால் இன்னும் அதிகமான இணக்கம் கிடைத்திருந்திருக்கும். மக்களும், இப்போது போல் அரசை ஆகோ, ஓகோ எனப் பாராட்டி இருப்பார்கள் என்பதே உண்மை. இத்தனையும் இருக்கும் போது ஏன்? இரகசியமாகத் தூக்கிலிட வேண்டும்.

ஆகவே இரகசியமாகத் தூக்கிலிட்டதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றிற்குள் புகுமுன் கசாப்-இன் பக்கம் சற்றே திரும்புவோம்.

அவன் பட்ட சித்திரவதைகளால் ஏற்கெனவே மடிந்து கொண்டிருந்தான். பொய் வாக்குமூலங்களை வாங்குவதற்கு அவனைப் படுத்திய சித்திரவதைகள் அவை.

தான் சற்றும் அறிந்திடாத ஒரு குற்றத்திற்கு இப்படி சித்திரவதை செய்கின்றார்களே என்ற மன வேதனையில் அவன் எப்போதோ மனதால் மடிந்து போயிருந்தான். அவன் நீதிமன்றங்களில், நீதிபதியிடம் பேசிட வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் என்னை தூக்கில் போட்டுவிடுங்கள் என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். மரணந்தான் அவனுக்கு விடுதலை, நிம்மதி!

கிடைத்த மரணம் சித்திரவதைகளிலிருந்து விடுதலை. இன்னும் சொன்னால் சிறைச்சாலையில் அவன் அடிக்கடி தன் தலையை சுவற்றில் மோதிக்கொண்டான். இதனை அசிஸ் சவுதிரி என்ற எழுத்தாளர், (இவர் மும்பை தாக்குதலில் தன் உறவினரில் சிலரை இழந்தவர்) கூறுகின்றார்: TH:23/11/2012.

யார் இந்த கசாப்?

இந்த ‘கசாப்’ நமக்குச் சொல்லப்படுவதைப் போல், பாகிஸ்தானில் இருந்து 2008 ஆம் ஆண்டு மும்பையைத் தாக்குவதற்காக வந்தவனல்ல. அவன் 2006 ஆம் ஆண்டு வறுமை தாளாமல் நேப்பாள்- என்ற நமது அண்டை நாட்டுக்கு பிழைப்புத்தேடி வந்தவன். அவன் மட்டுமல்ல இப்படி எத்தனையோ பேர் பாகிஸ்தானிலிருந்து வயிறு பிழைக்க நேப்பாளுக்கு வந்திருக்கின்றார்கள்.

இவர்களில் யாரும் நேப்பாளத்திற்குள் ஊடுருவி விடவில்லை. அவர்கள் அத்தனை பேருமே முறையான document-கள் வழி நேப்பாளத்திற்குள் வந்தவர்கள்தாம். பல நேரங்களில் அவர்களை நேப்பாள அரசு கைது செய்து முறையான வேலை அனுமதியைப் பெற்று வந்திட வேண்டும் என திரும்ப அனுப்பியுள்ளது.

இப்படிக் கைது செய்யப்படுவர்களில் சிலரை இந்திய உளவுத்துறை இங்கே கடத்தி வந்துவிடுவது உண்டு. சிலரை இந்தியாவைத் தாக்கிட நேப்பாளத்திற்கு வந்ததாகவும், பின்னர் நேப்பாளத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருந்தாகவும் கூறி முறையாக அழைத்து வருவதும் உண்டு. எப்படி அழைத்து வந்தாலும், அவர்களை நேப்பாளிலிருந்து அழைத்து வந்ததாகவோ, கடத்தி வந்ததாகவோ பதிவு செய்வதில்லை. இத்தனைக்கும் நமது இந்தியாவிற்கும் நேப்பாளத்திற்கும் Deportation Agreement என்று சொல்லக் கூடிய தேவைப்படும் நபர்களை அனுப்பித் தந்திட வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கின்றது.

ஆனால் நம்மவர்கள் நமது உளவுத்துறையின், ஏற்பாட்டின் கீழ் அவர்களை இந்தியாவில் ஒரு பயங்கர பதுங்குமிடத்தில் வைத்துக் கைது செய்ததாகவே காட்டுவார்கள். இந்த மொத்த விவகாரத்தையும் தி வீக் ‘The Week’ பத்திரிகை வெளியிட்டிருக்கின்றது.

அப்படி நேப்பாளிலிருந்து கொண்டு வரப்படுபவர்களை என்ன செய்வார்கள்? அவர்களை இந்தியாவிலிருக்கும் பல்வேறு சித்திரவதைக் கூடங்களிலும் வைத்து சித்திரவதைச் செய்வார்கள். பின்னர் அவர்களைத் தங்கள் விரும்பும் இடத்தில் வைத்து, விரும்பிய குண்டு வெடிப்புகளில் சம்மந்தப்படுத்திக் காட்டுவார்கள். உண்மையில் அந்தக் குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள், அபிநவ்பாரத் போன்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.

இப்படித்தான் அஜ்மல் கசாப் சிக்க வைக்கப்பட்டான். அவன் 2006 முதலே நமது உளவுத்துறையின் கைகளில் இருக்கின்றான், என்பதை நமது முன்னாள் காவல்துறை அதிகாரி ஷி.வி.முஷ்ரிப் அவர்கள் எழுதிய “கர்கரேயை கொலை செய்தது யார்?” என்ற நூலில் தெளிவுபடுத்துகின்றார்.

நேப்பாளத்திலுள்ள உச்ச நீதிமன்றத்தில் இவருடைய வழக்கு 2006இலேயே நடந்தது. இவருக்காக பாகிஸ்தானைச் சார்ந்த, வழக்கறிஞர் சி.வி.பாரூக் என்பவர் வந்து வாதிட்டார். ஆனால் அந்த வழக்கில் நேப்பாள உச்ச நீதிமன்றம் கசாப்-ஐ விடுதலை செய்ய மறுத்து விட்டது. காரணம் கேட்டபோது “Not on the Merits of the Case, but on the Technical Grounds” எனக் கூறியது. இதன் பொருள், அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதனால் அல்ல; மாறாக, அவரை விடுதலை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முறையாக அமையவில்லை என்பதனால்தான். இப்படி நேப்பாளத்தில் உச்சநீதிமன்றம் வரை விவாதித்திற்குள்ளானவர் 2008 இல் தாக்குதல் நடந்தபின் கையில் ஒரு AK 47 ரக துப்பாக்கியுடன் அத்துணை ஒய்யாரமாக நடந்து வருவானாம். இருவர் படம் எடுப்பார்களாம். நம்புங்கள் எங்களை என்கின்றார்கள் மும்பை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தவர்கள். கசாப்-ஐ 2006இலேயே இந்திய உளவுத்துறையிடம் நேப்பாள் அரசு ஒப்படைத்தது என்கின்றார் வழக்கறிஞர் சி. வி. பரூக். Source: The News Revalpindi, Tol: DEC16, 2008.

கர்கரேயைக் கொலை செய்தது யார்? என்ற நூலை நாம் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய நாள் முதலே, நாம் ஒரு செய்தியை நினைவுபடுத்தி வருகின்றோம்.

மும்பை CST என்ற சக்கரவர்த்தி சிவாஜி இரயில் நிலையம் என்ற மும்பை விக்டோரிய ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்கள் முகத்தை நன்றாக மூடிக்கொண்டுதான் தாக்குதலை நடத்தினார்கள். அவர்கள் துப்பாக்கிகளை இயக்கிய வேகம் யாரும் அவர்களைப் படம் எடுக்கும் நிலையில் இல்லை. ஆகவே அஜ்மல் கசாப்-ஐ அங்கே ஜோடித்திருக்கின்றார்கள், வீடியோக்களில் தங்கள் விளையாட்டுக்களைக் காட்டி. இதனை மும்பை ரெயில் நிலையத்தில் உணவு விடுதி நடத்தி வரும் ஷஷிகுமார் சிங் என்பவரும் உறுதி செய்துள்ளார்.

தாக்குதலை நடத்தியவர்களை போட்டோ எடுத்து யார்?

மும்பை ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்களை போட்டோ எடுத்தாகக் கூறப்படுபவர்கள் இரண்டு பேர். இவர்கள் இருவரும் இருவேறு பத்திரிக்கையைச் சார்ந்தவர்கள்.

ஒருவர் மும்பை மிரர் என்ற ஆங்கில பத்திரிகையைச் சார்ந்தவர்: பெயர் செபாஸ்டின், டி சவோசா. மற்றொருவர் “புடாரிபூன்” என்ற மராட்டிய பத்திரிகையைச் சார்ந்தவர். இந்த இரண்டு போட்டாக்களும் ஒன்று தான். அதாவது அது அவர்களின் கைகளில் (மேற்படி)யாளர்களால் திணிக்கப்பட்டவை. ஆனால் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, "இந்த இருவரையும் சாட்சியம் கூறிட கொண்டு வாருங்கள்! அவர்களிடம் அவர்கள் எப்படிப் படம் எடுத்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டும்" என கேட்டார்கள், அஜ்மல் கசாப்பிற்காக அரசு நியமித்த முதல் வழக்கறிஞர்கள்.

அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திட இயலாது என அடம்பிடித்தார் நீதிபதி. "அவர்களை குறுக்கு விசாரணைச் செய்ய அனுமதிக்க மாட்டோம். அவர்கள் எழுதி தந்துள்ள அறிக்கையை அப்படியே அட்டி இன்று ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார் நீதிபதி தகல்யானி. "அவர்களை நீதிமன்றம் கொண்டு வந்தாக வேண்டும். அவர்களிடம் போட்டோ எப்படி எடுத்தார்கள் என்பதையெல்லாம் விசாரித்தாக வேண்டும்" என அடம்பிடித்தார் அரசு தரப்பில் கசாப்பிற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்.

நீதிபதி அந்த வழக்கறிஞரை மாற்றினாரே அல்லாமல், போட்டோ எடுத்தவர்களை சாட்சியம் சொல்ல தருவிக்கவில்லை. அடுத்து இன்னொரு வழக்கறிஞரை நியமித்தார்கள். அவர் தான் அப்பாஸ் காஸ்மி. அவர் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். ஒன்று அஜ்மல் கசாப்-ஐ ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும். அதுவும் தனிமையில். இரண்டு, போட்டோ எடுத்தவர்களை நேரில் விசாரிக்க வேண்டும்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி இரண்டு கோரிக்கைகளையுமே நிராகரித்தார். அத்தோடு அந்த வழக்கறிஞரையும் நீதிபதி நீக்கிவிட்டார். இறுதியில் கசாப்பின் தரப்பில் பொம்மைதாம் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பெயர் K.P. பாவர். TH: 1/12/009. அவர் கசாப்-ஐ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும் என்று கசாப்பிற்காக வாதாடினார். என்னே நீதி இங்கே!.

அரசே நியமித்த வழக்கறிஞர் அரசே வெளியே தள்ளியது...?

26/11 வழக்கை நடத்திய நீதிபதி எம்.எல்.தகாலியானி அவர்கள், தன் சார்பில் ஒரு விஷயத்தை ஏற்க வேண்டும் என்றார் வழக்கறிஞர் அப்பாஸ் காசிமி அவர்களிடம். அது, "இந்த வழக்கில் 71 சாட்சிய அறிக்கைகளை வைத்திருக்கின்றோம். அஜ்மல் கசாப் சார்பில் அவற்றை ஏற்றுக் கொள்ளப்பட்ட சாட்சியங்களாக அங்கீகரிக்க வேண்டும். இந்த 71 சாட்சிய அறிக்கைகளையும் தந்த சாட்சியங்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும், அவர்களை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனக் கேட்கக் கூடாது."

இதனையும் அப்பாஸ் காஸ்மி ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி அவர்களைக் கண்டித்தார் நீதிபதி தகல்யானி.

20,000 பக்கங்களைப் படிக்க.

கசாப் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை 20,000 பக்கங்களைக் கொண்டது. இதைப் படிக்க, சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகால்யானி கொடுத்தது எட்டே நாள்கள் தாம். இந்த எட்டு நாள்களில், மூன்று நாட்கள் கசாப்-இன் வயது பற்றிய விவகாரத்தில் கடந்துவிட்டன. மீதமுள்ள ஐந்து நாள்களில் 20,000 பக்கங்களைப் படித்திட முடியாது என்ற கோரிக்கையை அவசர நீதிபதி தகாலியானி ஏற்றுக் கொள்ளவில்லை ஐந்து நாள் கால அவகாசத்தை அப்பாஸ் காசிமி ஏற்றுக் கொள்ளவில்லை. SOURCE: FRONTLINE SEPT 16, 2012. GAISIW Kasab case

இதுவும் அப்பாஸ் காசிமியை வெளியேற்றிட, அதாவது கசாப்பிற்காக வாதாடுவதிலிருந்து அப்பாஸ் காசிமியை வெளியேற்றிட தகல்யானி கண்டுபிடித்த இன்னொரு காரணம். ஏனெனில் தகாலியானியை நியமித்தவர்கள் தூக்குத் தண்டனையை விரைந்து வழங்கிட வேண்டும் எனக் கட்டளை இட்டிருந்தார்கள்.

கசாப் -இன் வயது: நமக்குப் பொதுவாகக் காட்டப்படுவதைப்போல் கசாப் ஒரு வளர்ந்த வாலிப வயதைச் சார்ந்தவன். அவனுக்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் அவன் ஒரு ‘ஜீவனைல்’ என்ற குழந்தைகள் வயதிற்குள் வரும் ஒரு பையன் என்றே நினைத்தார்கள். ஆகவே அவனை நேரடியாகத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பை நீதிபதி தகாலியானிடம் கேட்டார்கள். நீதிபதி சந்திக்க விடமாட்டேன் எனக் கூறிவிட்டார். இதனால் கசாபுடைய வயதை அறிந்திட இருந்த அனைத்து வழிகளும் அடைக்கப் பட்டுவிட்டன.

ஆனால் நமது சட்டங்கள் குறிப்பாக “குழந்தைக் குற்றவாளிகள் சட்டம் 2001” என்ன சொல்லுகின்றது என்றால், குற்றவாளியின் வயதை சரியாக தெரிய வேண்டும் என்ற விண்ணப்பம் வைக்கப்படுமேயானால், அதனை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும். உண்மையான வயதை அறிந்து ஆவணங்களில் கொண்டு வந்திட வேண்டும்.

ஆனால் நீதிபதி தகயல்யானி தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிட விரும்பினார். வயது குறித்த மனுதாக்கல் செய்யப்பட்ட அதே வேகத்தில் அதை நிராகரித்தார்.

அஜ்மல் கசாப்பிற்காக நமது இந்திய அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி, மேல் முறையீட்டுக்குத் தயாரானார். உடனேயே சிறப்பு அரசு வழக்கறிஞர் யுஜ்ஜவால் நிக்காம் நீதிபதி தகல்யானி முன், அஜ்மல் கசாப்பின் வயதை அறியும் மனு ஒன்றை வேகமாகத் தாக்கல் செய்தார்.

இவ்வளவு அவசரப்பட்டதற்குக் காரணம் அஜ்மல் கசாப்பின் உண்மை வயது எங்கே வெளியே வந்து விடுமோ, எங்கே நாம் அவனை விரைந்து தூக்கிலிடுவது சிக்கலாகிவிடுமோ என்ற எண்ணங்கள்தாம்.

அஜ்மல் கசாப்-ஐ விரைந்து தூக்கிவிட்டால் தான், இங்கேயுள்ள பலரைக் காப்பாற்றிட இயலும். ஆகவே அரசு வழக்கறிஞர் யுஜ்ஜவால் நிக்காம் மனுவை (அதாவது அஜ்மல் கசாப் இன் வயதை அறியும் மனுவை) தனது சார்பில் பதிவு செய்தார். அதே வேகத்தில் அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அஜ்மல் கசாப் இன் வயதை அறிந்திட ஏற்பாடு செய்தார்கள். அவன் குழந்தை குற்றவாளி வயதைக் கடந்த வயதுக்கு வந்துவிட்டான். “வயது சுமார் 21” என அறிவித்தார்கள். SOURCE: FRONT LINE: Sept 16, 2012.

யார் சொன்னது எனக் கேட்டபோது எக்ஸ்ரே வல்லுநர்கள் சொன்னார்கள் என்றார்கள். "அவர்களில் ஒருவரை நீதிமன்றத்தில் நிறுத்தி ஒரு நிமிடம் கேள்வி கேட்கலாமா" என்று கோரியபோது முடியாது, கூடாது எனக் கூறிவிட்டார்கள்.

"சரி அவர்கள் தந்த எக்ஸ்ரே அறிக்கையை வேறு ஒரு நிபுணரிடம் காட்டி ஒரு கருத்தைக் கேட்கலாமா? நீதியின் பெயரால் ஒரே ஒரு வாய்ப்பாவது வழங்கப்படுமா? அந்த X ray -ரிப்போர்ட்டின் உண்மை நகல் ஒன்று கிடைக்குமா?" எனக் கேட்டபோது, அதற்கும் அனுமதிக்கவில்லை. "நீ வெளியே போ" என அஜ்மல் கசாப்புக்காக வாதாட அவர்களே நியமித்த வழக்கறிஞரை தூக்கி வீசிவிட்டார்கள்.

இந்த தகவல்களைத் தரும் FRONTLINE இப்படிக் கூறுகின்றது “Getting other Experts Opinion may have helped kasmi in contesting the technical evidence”. ஏனைய நிபுணர்களின் கருத்தைத் தெரிந்திடுவது. காசிமிக்கு நீதிமன்றத்தில் காட்டப்படும் “டெக்னிக்கல்” சாட்சியங்களை எதிர்த்து வழக்காட பெரிதும் உதவி செய்திருக்கும். FRONT LINE; Sept 16, 2012. வயதைப் பொறுத்தவரை மருத்துவ சான்றிதழை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வரையறுக்கப்பட்ட மருத்துவ நியதிகள். ஒரு குழந்தை குற்றவாளியை தூக்கில் போடுவது எல்லா விதத்திலேயும் தடுக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல் கசாப்பும் இன்னும் 9 பேரும் முதலில் ஒரு கப்பலில் பாகிஸ்தானிலிருந்து வந்தார்கள். பின்னர், அந்தக்கப்பலில் இருந்து வெளிபோந்த குயூபர் போட்டில் வந்தார்கள் -தீவிரவாதிகள் என கதை கட்டினார்கள்.

இந்த குயூபர் போட்டையும் பார்வையிடவேண்டும் என காசிமி கேட்டார். அதேபோல், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 27 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட எல்லாத் தளங்களையும் பார்வை இடவேண்டும் எனக் கோரினார். இதற்கெல்லாம் நீதிபதி தந்த ஒரே பதில் - நீ ஒத்துழைக்கமாட்டேன் என்கின்றாய். வெளியே போ.

மூத்த வழக்கறிஞர் Fali S.நரீமான், அப்பாஸ் காசிமியை நீக்கிய விதத்தைக் காரணங்காட்டியே உயர் நீதிமன்றம், இந்த மொத்த தீர்ப்பையும் நிராகரித்திருக்கலாம். ஆனால் ஆச்சர்யப்படக் கூடிய அளவில் உயர்நீதிமன்றம், இந்த மொத்த விவகாரத்தையும் கண்டுகொள்ளவே இல்லை.

இதில் அதிர்ச்சிதரும் தகவல் என்னவெனில், உச்சநீதிமன்றம் ராக்கட் வேகக்தில் ஆகஸ்ட் 29இல் வழங்கிய தீர்ப்பிலும் இதைக் கண்டு கொள்ளவில்லை.

உயர்நீதிமன்றத்தில்:

உயர் நீதிமன்றத்தில் கசாப்புக்காக வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்கள் அமின் சோல்கர், பர்கானாஷா ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம், "தாங்கள் கசாப்-ஐ சற்று கூப்பிடு தூரத்தில் நின்றாவது சந்திக்க அனுமதி வேண்டும்" எனக் கேட்டார்கள்.

அதற்கு உயர்நீதிமன்றம் "அவன் உங்களையும் சிறையில் வைத்து ஏதேனும் செய்துவிடுவான். அதனால் சந்திக்க அனுமதிக்க முடியாது" எனக் கூறிவிட்டார்கள்.

அதன்பின் கசாப்-ஐ தூக்கில் தொங்கவிடும் ஆணையை உறுதி செய்யுமுன், அவனது மனநிலை பற்றிய ஆய்வு ஒன்றை நடத்திட வேண்டும் என்பது சட்டத்தின் தேவை. ஏனெனில் அவன் திருந்தும் வாய்ப்பிருந்தால் அல்லது சிறையில் சந்தித்த தனிமை போன்றவற்றால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், ‘mitigating circumstance’ தூக்குத் தண்டனையை தவிர்க்கும் சூழல் ஏற்படும். இது கருணை மனுவில் பெரிய அளவில் உதவி செய்யும்.

இதற்கான ஏற்பாட்டைச் செய்திட வேண்டும் என கசாபிற்காக உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், கேட்டபோது அந்தக் கோரிக்கையையும் தூக்கி வீசிவிட்டார்கள்.

ஒரு பாகிஸ்தான் குழந்தையை 2006 இல் நேப்பாளிலிருந்து பிடித்து வந்து 2008 மும்பை தாக்குதலின் ஒரே குற்றவாளி எனக் கூறி கொலை செய்துவிட்டார்கள். இதில் உச்ச நீதிமன்றமும் உடந்தை!

மேலும் விளக்கங்களுக்கு படியுங்கள் "கர்கரேயைக் கொலை செய்து யார்?"

நீதிபதி தகலியானி-இன் சட்டத் துரோகம்:

ஒரு வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு நிற்கும் ஒருவனுக்கு, வழக்காட வக்கில்லை என்றால், அரசு ஒரு வழக்கறிஞரை நியமிக்கின்றது. அவருக்குச் சம்பளமும் தருகின்றது.

வழக்கறிஞரை நியமிக்கும் உரிமைதான் அரசுக்கு இருக்கின்றதே அல்லாமல், அவரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் உரிமை அரசுக்கில்லை. ஆனால் அந்த உரிமை குற்றம் சாட்டப்பட்ட திக்கற்ற குற்றாளிக்கு மட்டுமே உண்டு.

ஆனால் இங்கே கசாப்-ஐ தூக்கிலிட்டு, அத்தனை இந்து ராஷ்டிர சிற்பிகளையும் காப்பாற்றுவதே நோக்கம். அதனால் நமது நீதிபதிகள், நமது நாட்டுச் சட்டங்களுக்கு கசாப் வழக்கில் துரோகம் செய்வதை தேசிய சேவை என எடுத்துக் கொண்டார்கள்.

மேல் முறையீடு:

“என்னை விலக்கியது சரியல்ல, அதில் நீதிபதி சட்டத் துரோகத்தைச் செய்துவிட்டார்” என வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி அவர்கள் உயர் நீதிமன்றம் சென்றார். கசாப்-ஐ தூக்கில் போடும் வரை உயர்நீதிமன்றம் இந்த மனுவின் மேல் முடிவெடுக்கவில்லை. FRONTLINE: SEPT 16, 2012.

எப்படி இருக்கின்றது நீதிபரிபாலனம்? நம் நாட்டில் அரசியலில் முகவரி இழந்துவரும் சோற்றால் அடித்த பிண்டங்கள் பல, சட்டத்தின் எல்லா கதவுகளும் கசாப்பிற்கு திறந்து விடப்பட்டிருந்தன எனப் பிதற்றுகின்றன. வெட்கம்! வெட்கம்!! மாபெரும் வெட்கம்

புகைப்படமும் கசாப்பும்.

கசாப்-ஐ அதாவது அவன் லாவகமாக மும்பை CSTஇல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தபோது படம் எடுத்த பத்திரிகையாளர்களை கடைசிவரை நீதிபதியிடமோ, நீதிமன்றத்திலோ நிறுத்திடவில்லை.

ஆனால் மும்பை CST ரெயில் நிலையத்தில் - துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் - 18 ‘CCTVS’ என்ற கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை துப்பாக்கிச் சூடு நடந்ததை மட்டுமல்ல, அங்கே நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் நீண்ட நாள்களாகவே படமெடுத்து வருகின்றன. அவற்றின் பதிவுகள் தாம் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதை நம்மைப் போன்றவர்கள், S.M. முஷ்ரிப் தலைமையில் கேட்டபோது "அந்த பதினெட்டுக் கேமராக்களும் அன்று வேலை செய்யவில்லை. ஆனால் மீதமுள்ள 20 கேமராக்களும் வேலை செய்தன" என்றார்கள். "இரண்டனவற்றை வேறு பக்கம் திருப்பி விட்டுவிட்டோம்" எனக் கூறிவிட்டார்கள்.

இந்து ரஷ்டிரவுக்காக அதாவது நம் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்துக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றிட நமது பிரதிநிதியான உள்துறை அமைப்பு செய்த ஏற்பாடு. அவர்கள் இப்போது நமது அரசாங்கத்தில் நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் - என்னே அவலம்!

கசாப் - யாரைக் காப்பாற்ற இந்த அவசர தூக்கு?

உண்மையிலேயே மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் யார்? மும்பை ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்களின் செல்போன்களும் சிம் கார்டுகளும் கிடைக்கவே செய்தன. மாவட்டம் வே தாலுக் கும்பப் புகார்வாடி கிராமத்தவர்களுக்குச் சொந்தமானவை.

ஒன்றின் உடைமையாளர் அஷோக் ஷார்க், அவர் அதனை இரத்தின கிரி என்ற இடத்தில் தொலைத்து விட்டதாகக் கூறினார். ஆனால் அதை பயன்படுத்திக் கொண்டிருந்தவர் சத்தீஷ்கர் மாநிலத்தில் சங்கப் பரிவாரத்தின் பிரச்சாரகர். இன்னொரு சிம் கார்டு, அதே முத்தாரா மாவட்டத்திலுள்ள வாலி தாலுகாவிலுள்ள ஒரு பெண்ணுக்குச் சொந்தமானது.

"இந்த சிம் கார்டு, இதனை பயன்படுத்தியவர்கள் - இவர்களையெல்லாம், ஏன் விசாரணைக்குக் கொண்டு வந்திடவில்லை?" எனக் கேட்டதற்கு, "இவர்களையெல்லாம் விசாரிக்க வேண்டும் என நாங்கள் கருதவில்லை" எனக் கூறிவிட்டார்கள்.

இவர்களையெல்லாம் விசாரித்தால் இங்குள்ள இந்துத்துவ அமைப்புகள், மொத்தமாக சிக்கி இருக்கும். அவர்களை காப்பாற்றத் தான் இந்த அவசர இரகசிய தூக்கு.

சட்டம் தன் கடமையைச் செய்ததா?

இல்லை! கசாப்-இன் கருணை மனுவை நிராகரித்திருந்தால் கூட, அவன் மீண்டும் நீதிமன்றங்களை அணுக உரிமை உண்டு. என்னென்ன காரணங்களுக்காகக் கருணை மனு நிராகரிக்கப்பட்டதோ அதை சீர்தூக்கிப் பார்த்திடும் அளவில் அவன் மறுபரிசீலனைக்கு மனு போடலாம். இதனை விளக்கமாக அறிந்திட பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்த குற்றவாளி கேகர் சிங் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது ஓர் எடுத்துக்காட்டு.

பிரதமர் இந்திராகாந்தி கொலையும் கேஹர் சிங்கும் Kaher Singh Vs Union of India (AIR 1989 SC 653)

கேகர் சிங் என்பவர் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்தவர்; கொலை செய்திட சதிதிட்டம் தீட்டியவர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பெற்றவர். குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப் பெற்றவர்.

அவர் தனக்கு வழங்கப் பெற்ற மரணதண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது; மரண தண்டனையை உறுதி செய்தது. அவருடைய மகன் குடியரசு தலைவருக்கு மனு ஒன்றை அனுப்பினான். அதில் "அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 72இன் கீழ் தனது தந்தைக்கு கருணை காட்டிட வேண்டும். மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டான். அதையும் குடியரசு தலைவர் நிகராகரித்து விட்டார்.

பின்னர் கேகர் சிங் தான் குடியரசு தலைவரைத் தனியாகச் சந்தித்து சில விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள விரும்பி, அதற்காக மனு கொடுத்தார். இதனை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

"கருணை மனுவைத்தான், தான் பரீசிலிக்க முடியும். அஃதல்லாமல் வேறு யாரையும் அதுகுறித்து சந்திக்க இயலாது. காரணம் இதுவரை நம் நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் நெறிமுறைகளுக்கு அஃது நேர் எதிரானது" எனக் கூறிவிட்டார் குடியரசு தலைவர்.

குடியரசு தலைவரின் பதிலையும், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார் கேகர் சிங். டெல்லி உயர் நீதிமன்றம் அவர் மனுவை நிராகரித்தது.

உச்ச நீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் "குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு எல்லாம் உட்பட்டது. கருணை மனுக்களை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது என்பது நீதிமன்றங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை குடியரசு தலைவர் பெறுவதுதான். ஆனாலும் நீங்கள் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த சாட்சியங்களை மறுபரிசீலனை செய்யலாம். நாங்கள் வழங்கியுள்ள தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்யலாம்" எனக்கூறியது. இதில் உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவரின் அதிகாரத்தின் எல்லை விரிவானது என்பதை விளக்கியது. அதனால் அனைவரும் குடியரசு தலைவர் தனது அதிகாரத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம் என்கின்றனர். உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட நிலைபாட்டைப் பாராட்டினார்கள்.

மொத்த சூழலையும் பாராட்டிய மாதாபுஷி கிரிதர் (இவர் ஹைதராபாத் சட்டக்கல்லூரி பேராசிரியர்) கூறுகின்றார். “நமது உச்ச நீதிமன்றம் தவறு செய்தால், அதனை குடியரசு தலைவர் சீர் செய்யலாம். குடியரசு தலைவர் தவறு செய்தால், உச்ச நீதிமன்றம் சரி செய்யலாம்" என்கின்றார். (The Hindu, No.22,2012.)

இந்த மொத்த விவகாரத்திலும் குற்றவாளிக்கு கருணை மனுவோடு விவகாரம் முடிந்திடவில்லை. குடியரசு தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணங்களை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றமும், அதுவும் மறுத்தால், உச்ச நீதிமன்றமும் சென்றிட முடியும்.

நீதி தேடிடும் மீதமிருக்கும் வழிமுறைகளை முற்றாக மறுத்துவிட்டு சட்டம் தன் கடமையைச் செய்தது எனச் சொல்லுவது நாம் ஓர் சர்வாதிகார நாடு என்பதையே சொல்லும்.

சுருக்கமாக இந்துராஷ்டிரவின் சட்டம் செயலில் வந்துள்ளது. இதனால்தான் கசாப்-ஐ நமது நீதி நிறுவாகம் கொலை செய்துவிட்டது. இப்படித்தான் கசாப்-இன் கொலையை An Act of Constitutional Improperiety என்கின்றார்கள். அதாவது அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி ஓர் அடாத செயல்.

உள்துறை அமைச்சர் ஷுஷில் குமார் ஷிண்டே-இன் அறியாமை.

ஏன் அவசர அவசரமாகத் தூக்கில் போட்டீர்கள் என்பதற்கு இப்படிப் பதில் சொல்லி இருக்கின்றனர். “நான் ஒரு காவல்துறை அடியாளாய் பயிற்சி எடுத்தவன். இவற்றில் இரகசியம் காப்பது என் இயல்பு." இப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வருகின்றது. அதாவது காவல் நிலையத்தில் அமர்ந்து அப்பாவிகள் மீது பொய் வழக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தவர் மத்திய அமைச்சராகி இருக்கின்றார். அத்தோடு இப்படியும் கூறியுள்ளார்.

"இன்னொரு முறை மனித உரிமைகள் அமைப்புகள் இதில் பிரச்னைகளை உருவாக்குவார்கள் என்பதால் தான் நான் இரகசியமாக வைத்திருந்தேன்." இப்படி ஒரு மத்திய அமைச்சர் கூறியிருப்பது, நம் நாட்டை ஒரு சர்வாதிகார நாடாகவே மக்கள் மனதில் பதிய வைக்கும் என்கின்றார் இந்து பத்திரிகையின் கட்டுரையாளர்.

ஆனால் நமது ஷிண்டேயை விஞ்சி மனித உரிமை அமைப்புகள் வேகமாக செயல்படுகின்றன. மும்பையிலிருந்து ஓர் மனித உரிமை அமைப்பு அனுப்பிய சுற்றறிக்கை:

IB-இன் வேலை

ஆதிமுதல் அனைத்தும், IB என்ற மத்திய உளவுத்துறையின் வேலை இது என்கின்றார்கள்.

1. அஜ்மல் கசாப்-இன் கருணை மனுவை கசாப் தயாரித்ததாகக் கூறப்படுகின்றது. அதுவும் 3 முதல் 4 நாள்களுக்குள் தயாரித்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

உண்மையில் கசாப்பிற்கு ஆங்கிலம் தெரியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆங்கிலத்தில் தான் வெளியே வந்தது. அது 400 பக்கங்களைக் கொண்டது. பிரபல வழக்றிஞர்களே 400 பக்கத் தீர்ப்பை படிக்க நாற்பது நாள்கள் கேட்டார்கள். ஆனால் ஆங்கிலம் தெரியாத கேசாப் 4 ஐந்து மூன்று முதல் 4 நாள்களில் படித்து, தனக்குத் தெரியாத மொழியில் கருணை மனுவை தயாரித்து விட்டானாம்.

அது உடனேயே உரிய துறைகள் மூலம் குடியரசுத் தலைவருக்கு விரைந்து சென்றதாம். குடியரசுத் தலைவர் 29 மனுக்கள் தனக்குப் பின்னால் இருக்க இந்த மனுவை முதன் முதலில் எடுத்தாராம். மறுத்தாராம்-கசாப் செத்தாராம். அனைத்தும் மத்திய உளவுத்துறையின் வேலை என்கின்றது மும்பை மனித உரிமை குழுமம்.

2. ஆனால் மேலே நாம் சொன்ன இந்த உண்மைகளையெல்லாம் மனுவாக மாற்றி மராட்டிய மாநில அரசிடம் தந்தார் வழக்கறிஞர் எங் சவுதிரி என்பவர். ஆனால் மத்திய உளவுத்துறை அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. உச்ச நீதிமன்ற (அ) நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி அந்த மனித உரிமை அமைப்பின் அறிக்கை இப்படிக் கூறுகின்றது.

“உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் மத்திய உளவுத்துறை ஏமாற்றிவிட்டது. இந்தியாவிலுள்ள ஒரே ஏதேச்சதிகாரி மத்திய உளவுத் துறைதான். இது பிரதம அமைச்சர் குடியரசு தலைவர், அரசு அனைத்தையும் விஞ்சி அதிகாரம் கொண்டது. சொல்லப்போனால் நாடாளும் மன்றத்தை விஞ்சும் அதிகாரத்தைக் கொண்டது. இங்கே உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே அது வரை கோட்டில் கையெழுத்துப் போட செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்தத் தீர்ப்பைத் தயாரித்தவர்கள் தங்கள் புலனாய்வில் இடம் பெற்ற ஓட்டைகளையெல்லாம் அடைப்பதற்குரிய வரிகளை தீர்ப்பில் திணித்திருந்தார்கள். இந்த வரிகளை தொடக்க நாள் முதல் இந்தச் சதியின் அனைத்து அம்சங்களையும் தெரிந்தவர்களால் மட்டுமே வரைந்திட முடியும். நீதிபதிகள் இருவரில் ஒருவர் முஸ்லிமாக இருந்ததால் உளவுத் துறையின் வேலை மிகவும் எளிதாகிவிட்டது. முஸ்லிம்கள் பதவியில் உயர, உயர அழுத்தங்களுக்கு எளிதில் ஆளாகிவிடுகின்றார்கள்." (page 6 of the Human Rights Report) பாபரிமஜ்ஜித் வழக்கில் IB பகிரங்கமாகத் தலையிட்டது என்பதை நாம் தெளிவு படுத்தி இருந்தோம்.

ராஜீ ராமச்சந்திரன்

இவர் அரசால் உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட நீதிமன்ற நண்பன். இவர் கசாப்பிற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையில் நட்பை ஏற்படுத்த வேண்டும். இதிலும் ராதாகாந்த் யாதவ் - இவர்தான் நமது சார்பில் கர்கரையைக் கொலை செய்தது யார்? என நீதிகேட்டு உச்சநீதிமன்றத்திற்கும் மும்பை உயர் நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்றவர் - தந்த தகவல்களின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக விவாதித்தார். கசாப் நிச்சயமாக விடுதலை பெறுவான் என நம்பினார். ஆனால் தீர்ப்பு அவருக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இதனால் அவருக்கு உச்ச நீதிமன்றம் தந்த 11.43 லட்சம் ரூபாயையும் அவருடைய உதவியாளருக்குத் தந்த 3.50 லட்சம் ரூபாயையும் மறுத்துவிட்டார்.

மு.குலாம் முஹம்மது

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22309

டிஸ்கி: ஒரு அரசு தனது குடிமகனுக்கு தேவைப்படும் விபரங்களை அளிக்கக் கடமைபட்டுள்ளது. கசாப் உண்மையான குற்றவாளி என்றால் எனது நாட்டின் மீது தாக்குதல் தொடுத்த அவனை தூக்கில் இட்டது முற்றிலும் சரியே! ஆனால் கட்டுரையாளர் சொல்லும் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த நாட்டில் பல கருப்பு ஆடுகள் அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு யாருக்கோ வேலை செய்து வருகின்றனர். உண்மையை அதிக நாட்கள் மூடி வைக்க முடியாது. அது ஒன்றுதான் தற்போது நம்மால் சொல்ல முடியும்.