Followers

Friday, November 01, 2013

சாதித் திமிரின் மற்றுமொரு கோர முகம்!



சிறுமியை பொசுக்கிய சாதி'தீ ..

7 வயது கமலேஷின் அழகிய இளம் பிஞ்சு கைகள் தீயில் பொசுக்கப்பட்டு உருகுலைந்துள்ளது. உபி மதுரா மாவட்டத்தை சேர்ந்த இந்த ஏழு வயது சிறுமி கமலேஷ் பிறக்கும் போது மற்ற குழந்தைகளைப் போல ஆரோக்கியமான கைகளுடந்தான் தான் பிறந்தாள் . இவள் செய்த ஒரே தவறு ஒடுக்கப்பட்ட சாமர் [chamar ] சாதியில் பிறந்தது . ' உயர்ந்த 'சாதியினர் வசிக்கும் தெருவின் வழியாக தனது தாயுடன் சென்று தீட்டு ஏற்படுத்தியதால் எரியும் குப்பையில் தள்ளி இந்த 7 வயது சிறுமியை தண்டித்தனர் அந்த 'உயர்ந்த' மனிதர்கள் . இன்று வரை இந்த சாதி வெறியர்களை சட்டம் தண்டிக்கவில்லை .

அடப் பாவிகளா....அந்த உழைக்கும் மக்களை விட நீங்கள் எந்த வகையிலடா உயர்ந்து விட்டீர்கள்? வெள்ளையனுக்கு வெஞ்சாமரம் வீசி அவன் சொல்லுக்கெல்லாம் ஆட்டம் போட்டு அவனிடம் அரசு உத்தியோகங்களை வஞ்சகமாக பெற்றீர்கள். அதன் தொடர்ச்சியாக படித்தவன் பிள்ளை படித்தவனாக தொடர்ந்து இன்று மேனா மினுக்கியாக உலா வருகிறாய். நாட்டு சுதந்திரத்துக்காக வெள்ளையனை எதிர்த்த கூட்டங்களெல்லாம் தேச துரோக கூட்டமாக வெள்ளையனால் சித்தரிக்கப்பட்டது. அந்த பொய்களை இன்று வரை அச்சில் ஏற்று வருகிறீர்கள். சுதந்திரத்துக்கு உழைத்த கூட்டமான முஸ்லிம்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் இன்று கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின் தள்ளப்பட்டுள்ளார்கள். வெள்ளையனுக்கு ஒத்தூதிய மேல் சாதியினர் இன்று அனைத்து அதிகார வரம்பிலும் நீக்கமற நிறைந்து 'நாங்களே இந்த நாட்டின் உண்மையான தேசபக்தர்கள்' என்று கூவி வருகின்றனர்.

காலம் இப்படியே சென்று விடாது. ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் வெகுண்டெழுந்தால் 3 சதவீதமே இருக்கும் இந்த மேல் சாதியினரின் அயோக்கியத்தனங்களும், அதனை நிலை நிறுத்தி வரும் மனு சட்டங்களும் குப்பை கூடங்களை நோக்கி செல்லும். அந்த நாளுக்காக நாமும் பொறுத்திருப்போம்.

Kamlesh was just seven when she was pushed onto a pile of burning rubbish while walking with her mother. This was her punishment for walking along a path reserved for 'high' caste people. Ironically, Kamlesh comes from the same caste as the Chief Minister of her state, Mayawati.

Much caste-based violence goes unrecorded, but in 2008 alone, 33,000 crimes against Dalits appeared in official statistics. In most cases, perpetrators escape justice, or cases simply drag on for many years. Kamlesh's case continues.

Mathura District, Uttar Pradesh.

http://marcusperkins.photoshelter.com/gallery-image/Indian-Dalits-Being-Untouchable-Preview/G0000cM_1nMFYTKc/I0000ZAN3o3x1E0g

தீபாவளி கொண்டாடும் நமது சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த நாளில் மத வேற்றுமைகளை மறந்து நமது தேசத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல சபதமேற்போம்.

4 comments:

Anonymous said...

தீபாவளியன்று தமிழகத்தில் முஸ்லிம்கள் பலர் பட்டாசு
மற்றும் வாண வேடிக்கைகளை வாங்கி வெடித்ததைப்
பரவலாக்க் காண முடிந்தது. இது இணை வைத்தலுக்குச்
சமமாகுமா? இதற்கு விளக்கம் தர வேண்டும்.

- யூசுப் ஃபஹத், கம்பம்

பட்டாசு வெடிக்கும் எந்த முஸ்லிமும் பிற மத
தெய்வங்களைக் கருத்தில் கொண்டு பட்டாசு
வெடிப்பதில்லை. அதை வழிபாட்டில் ஒரு அம்சமாகவும்
அவர்கள் கருதுவதில்லை. எனவே இணை வைப்பில் இது சேராது.
ஆனால் ஏராளமான ஹராம்களைச் செய்த குற்றத்தை
அவர்கள் சுமப்பார்கள்.

பொருளாதாரத்தைப் பயனில்லாத வழியில்
செலவிடுதல் மார்க்கத்தில் ஹராமாகும்.

காற்றை மாசுபடச் செய்து மனிதர்களுக்கும்
உயிரினங்களுக்கும் கேடு விளைவிப்பதும் ஹராமாகும்.

நோயாளிகளின் நிம்மதியைக் கெடுத்து மாணவ-
மாணவிகளின் படிப்பையும் இது கெடுத்து விடுகிறது.
இதுவும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.

பட்டாசு நெருப்பின் மூலம் குடிசைகள் எரிந்து பிறரது
சொத்துகளும் நாசமாகின்றன. உயிர்களும்
பலியாகின்றன. பட்டாசு வெடிப்பவர்களே பலியாகும்
நிலையும் ஏற்படுகிறது.

இப்படி மார்க்கம் தடுத்துள்ள அதிகமான காரியங்களின்
தொகுப்பாக பட்டாசு வெடித்தல்
அமைந்துள்ளதால் இஸ்லாத்தில் இது
பெரும்பாவங்களில் ஒன்றாகும். இதை முஸ்லிம்கள்
உணர்ந்து பாவத்தில் இருந்து தம்மைக் காத்துக்
கொள்ள வேண்டும்.

http://onlinepj.com/unarvuweekly/muslimkal_pattasu_vedikalama/

வவ்வால் said...

திரு.சு.பி.சுவாமிகள்,

//Ironically, Kamlesh comes from the same caste as the Chief Minister of her state, Mayawati.//

ரொம்ப பழைய செய்தி இப்போவா?

ஆனாலும் இது கொடுமை தான், வடக்கில் பெரியார் போல யாரும் தீவிரம் காட்டலை ,எனவே அதிகம் இப்படி இருக்கு.

அம்பேத்கர் போராடினார் ஆனால் அவர் காலத்துக்கு பின் தணிந்து விட்டது. மேலும் அரசியல்வாதிகள் எல்லாம் மேல்ஜாதி பற்றாளர்களே.

புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கும் அரசு அதிகார்களே இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடக்க காரணம்.

தண்டனை கிடைக்கும்னு தெரிஞ்சா செய்ய துணிச்சல் வருமா?

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//ஆனாலும் இது கொடுமை தான், வடக்கில் பெரியார் போல யாரும் தீவிரம் காட்டலை ,எனவே அதிகம் இப்படி இருக்கு.//

உண்மைதான். சட்டத்தை கடுமையாக்கினால் இந்த கொடுமைகள் குறைய வாய்ப்புண்டு.

Anonymous said...

insha allah odukkappattavargal vegundezhum kaalam vegu thooraththil illai

kalam