Followers

Friday, November 29, 2013

பள்ளிக் கூடங்களா? நரகக் கொட்டில்களா?



மாணவன்: எனக்கு எவ்வாறு எழுதுவது என்று தெரியாது.

ஆசிரியர்: தற்போதும் எவ்வாறு எழுதுவது என்று தெரியாதா?

மாணவன்: ஆம். எனக்கு உண்மையிலேயே எழுதத் தெரியவில்லை.

ஆசிரியர்: என்ன சொல்ற நீ....

மாணவன்: இந்த பாடத்தை நான் வீட்டில் கற்றுக் கொள்கிறேன் டீச்சர். ஓகே... வீட்டில் நான் நன்கு கற்றுக் கொள்வேன். என்னை வீட்டுக்கு செல்ல அனுமதியுங்கள். ஓகே...டீச்சர்.

ஆசிரியர்: நான் உனக்கு எப்படி எழுதுவது என்று இங்கேயே சொல்லித் தருகிறேன்.

மாணவன்: இறைவன் மீது ஆணையாக... என்னால் முடியாது.. என்னால் இங்கு எழுத முடியவில்லை....

ஆசிரியர்: நான் சொல்லிக் கொடுக்கிறேன். கரும்பலகையிலும் எழுதியுள்ளேனே பார்க்கவில்லையா...?

மாணவன்: இதனை எப்படி எழுதுவது என்று வீட்டில் கற்றுக் கொள்கிறேன். அப்படி நான் கற்றுக் கொள்ளா விட்டால் அதன் பிறகு என்னை நீங்கள் அடிக்கலாம். தயவு செய்து என்னை வீட்டுக்கு செல்ல அனுமதியுங்கள் ஆசிரியரே....(மாணவன் அழுகிறான்)

-------------------------------------------------

இது உண்மையிலேயே ஒரு வகுப்பறையில் நடந்த சம்பவம். ஒரு மாணவனுக்கு எந்த அளவு திறமை இருக்கிறதோ அதை அனுசரித்து பாடம் நடத்தாத வரை அந்த மாணவனுக்கு பாடம் ஏற வாய்ப்பே இல்லை. இதை ஆசிரியர்கள் ஏனோ புரிந்து கொள்வதில்லை. முடிவில் பலகீனமான பல மாணவர்கள் தற்கொலையை நாடுகின்றனர்.

அந்த பிஞ்சு மாணவன் எந்த அளவு இரக்கத்தோடு அந்த ஆசிரியரிடம் உரையாடுகிறான் பாருங்கள். பேசும் திறனிலிருந்து அவனுக்குள் மறைந்துள்ள பல திறமைகள் நமக்கு தெரிகின்றன. ஆனால் அந்த ஆசிரியருக்கு அந்த மாணவனை எப்படி கொண்டு செல்வது என்று தெரியவில்லை. இதில் பெற்றோர்களையும் நாம் குறை காண வேண்டும். இதே போல் பல சம்பவங்களை நாம் வகுப்பறைகளில் தினமும் பார்த்திருப்போம்.

ஒரு மாணவனுக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கும்: ஒரு மாணவனுக்கு படம் வரைவதில் அதிக ஆர்வம் இருக்கும்: ஒரு மாணவனுக்கு விவசாய துறையில் ஆர்வம் இருக்கும்: சில மாணவர்களுக்கு ஆராய்ச்சி துறையில் ஆர்வம் இருக்கும்: குறிப்பிட்ட மாணவனின் திறமையை அதன் பெற்றோர்கள் உன்னிப்பாக கவனித்து அவனது விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொண்டாலே வெற்றி பெற முடியும்.

எனது பள்ளி நாட்களில் என்னோடு படித்த ரமேஷ் என்ற மாணவன் அவனது விருப்பத்தை மீறி பொறியியல் துறையில் அவனது பெற்றோர்கள் சேர்த்ததால் மனமுடைந்து ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். அதுவும் அவன் எனது உடற்பயிற்சி ஆசிரியரின் மகன். இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

8 comments:

suvanappiriyan said...

கார்கில் ஜெய்!

//suvanapriyan,
You must answer Sri.Krishnakumar’s comment. You people are running Sharia law in India. You have triple Thalaq law, Haj subsidy. How do you say it is Manu’s smrithi?//

இது போன்ற சலுகைகள் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல. மத சம்பந்தமான நிகழ்வுகளை அவரவர் மத்தின்படியே நடத்திக் கொள்ள நமது சட்டம் அனுமதி அளிக்கிறது. இந்து, முஸ்லிம், கிறித்தவர், பவுத்தர்,ஜைனர், என்று பலரும் இந்த சலுகைகளை அனுபவிக்கின்றனர். எனது தாய் நாடான இந்தியாவை இத்தனை ரணங்களுக்குப் பின்னும் நான் உளமாற நேசிப்பது எனது மார்க்கத்தை சுதந்திரமாக பின்பற்ற அனுமதிப்பதாலேயே.

ஆனால் கிரிமினல் சட்டங்களைப் பொறுத்த வரை எல்லோருக்கும் பொதுவானதே... பாபரி மசூதி இடிப்பாகட்டும், மும்பை கலவரம், குஜராத் கலவரம், மாலேகான் குண்டு வெடிப்பு என்று எங்குமே முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால் பல சாட்சிகள் இருந்தும் அனைவரையும் மிரட்டி இன்று சட்டத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளதைத்தான் நான் குறிப்பிட்டேன். தமிழகத்தின் சாதாரண அடித் தட்டு மக்களுக்கும் தெரியும் சங்கரராமன் யாரால் கொல்லப்பட்டார் என்று. அதைத்தான் சுட்டிக் காட்டினேன்.


ஆஷா பர்வீன் said...

நரகக்கொட்டில்கள் தான் எல்லாம்....
10 சப்ஜெக்டும் படிச்சா தான் அறிவாளி என்ற போதையில் இருந்து யார் தான் நம்மக்களை மீட்டெடுப்பது....

கல்லூரியில் மட்டும் பிடித்த துறையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும்...

பிள்ளைகளின் குழந்தைப்பருவத்தை அனுபவிக்க விடாமல் செய்யும் கூட்டுச்சதி :/

ஹுஸைனம்மா said...

நீங்க சொல்லியிருப்பது சரிதான். ஆனா, இந்தச் சிறுவன் வீட்டிற்குச் செல்லும் ஆர்வத்தில்தான் ‘வீட்டுக்குப் போய்ப் படிச்சுக்கிறேன்’னு சொல்றானோன்னும் தோணுது. அவன் பேச்சைக் கேட்டு, வீட்டுக்கு பள்ளி நேரத்தில் அனுப்பமுடியுமா? அனுப்பினாலும், பெற்றோர்கள் ‘பள்ளிக்கூடத்தில் பீஸ் கட்டுறது, வீட்டில நாங்க சொல்லிக்குடுகிறதுக்கா’ன்னு சண்டைக்கு வருவாங்களே! :-)

பிள்ளைகளின் திறமைகளைப் பெற்றோர் கணிக்க வேண்டும் என்பது சரியே. அதே சமயம், இன்றைய டீனேஜர்கள் சரியான புரிதலில்லாமலும், மேலோட்டமான - ஆழமில்லாத அறிவினாலும் தமக்கான துறையைத் தேர்ந்தெடுப்பதில் அத்தனை சிறப்பாக முடிவெடுப்பதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் எல்லா பெற்றோர்களும் - எல்லா ஆசிரியர்களும் இதனைக் கணிக்கும் திறம்படைத்தவர்களாகவும் இருப்பதில்லை.

உலக நடப்புகளைப் பார்க்கும்போது குழம்பித்தான் போய்விடுகிறது. :-) :-(

suvanappiriyan said...

பாண்டியன்!

// suvanappiriyan , ஹஜ் யாத்திரை என்பது நீங்கள் உங்க சொந்த பணத்தில் போக வேண்டியது – அதைதான் உங்கள் மதம் சொல்லுகின்றது. குடிமக்களின் வரிப்பணத்தில் இல்லை .//

இந்த சலுகையை எந்த முஸ்லிமும் கேட்கவில்லை. அது அவசியமும் இல்லை. ஏனெனில் ஹஜ் கடமை என்பதே உடல் வலிமையும், பொருளாதார வலிமையும் உள்ளவருக்கே கடமை என்று குர்ஆன் கூறுகிறது. இந்த சலுகையை ரத்து செய்தால் முதலில் சந்தோஷப்படுபவன் நானாகத்தான் இருக்கும்.

முஸ்லிம்கள் எதிர் பார்ப்பது அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடே.... தொப்பி போட்டுக் கொள்வது, நோன்பு கஞ்சி குடிப்பது, மணி மண்டபம் கட்டுவது போன்ற மத்தாப்பு திட்டங்களை எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கவில்லை. உரிய வேலை வாய்ப்புகள் கிடைத்தாலே வழி தவறி செல்லும் பல இளைஞர்களை நேர் வழிக்கு கொண்டு வரலாம். அதைத்தான் பல கமிஷன்களும் சுட்டிக் காட்டுகின்றன.

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//உலக நடப்புகளைப் பார்க்கும்போது குழம்பித்தான் போய்விடுகிறது. :-) :-(//

எனக்கும் தான் :-)

suvanappiriyan said...

சகோ ஆஷா பர்வீன்!

//நரகக்கொட்டில்கள் தான் எல்லாம்....
10 சப்ஜெக்டும் படிச்சா தான் அறிவாளி என்ற போதையில் இருந்து யார் தான் நம்மக்களை மீட்டெடுப்பது....

கல்லூரியில் மட்டும் பிடித்த துறையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும்...//

சரியாகச் சொன்னீர்கள். ஆமோதிக்கிறேன்.

suvanappiriyan said...


//ஆனால் ஒரு பெண்டாட்டி கட்டினாலும் 8 குழந்தைகளுக்கு குறைவாக பெறுவதே இல்லை. நான் கூறுவது சத்தியம்.//

ஹானஸ்ட் மேன்! எழுத்திலும் ஹானஸ்ட் இருக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் எடுத்துக் கொண்டால் 8 பிள்ளைகள் உடைய இஸ்லாமியர்களை உங்களால் ஒரு சதவீதம் கூட காட்ட முடியாது. இதில் சத்தியம் வேறு செய்கிறீர்கள்.

இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இந்தியாவில் உயருவதற்கு காரணம் பெரும்பாலான பிறபடுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தை தழுவுவதே. காரணம் இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம கோட்பாடு.

//தன் வழி தன் வழி என்று கூறுகிறீர்களே, இந்த வழி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? உங்கள் பாரம்பர்யதிளிருந்து தானே? உங்கள் சாதி , உங்கள் பாரம்பர்யத்தின் குறியீடு தானே? இந்த சாதியை ஒழித்து விட்டால் நீங்கள் சொன்ன “தன் வழி” எப்படி பாதுகாக்கப்படும்? இந்த அபத்தம் தான் இப்பொழுது நடந்துக்கொண்டிருக்கிறது. ஹிந்து மதத்தின் வேற்றுமையை ஒழித்துவிட்டு விஞான வளர்ச்சி என்ற பெயரில், அதை இன்னொரு ஆபிரகாமிய மதமாக்கும் முயற்சி தான் இங்கே நடந்துக்கொண்டிருக்கிறது. ஹிந்து மதத்தின் வேற்றுமை அதன் சாதி மற்றும் அதற்குரிய வழிபாடுகளில் தான் இருக்கிறதே தவிர, அதன் கடவுள்களில் இல்லை. நாம் இப்பொழுது சாதி மற்றும் அதன் வழிபாடுகலையெல்லாம் ஒழித்துவிட்டு வெறும் கடவுள்களை வைத்து என்ன செய்யப்போகிறோம்?//

இதே பதிவில் வியாஸ் என்பவரின் பின்னூட்டமே நாம் பார்ப்பது. இவ்வளவு சாதிப் பிடிப்பும் தீண்டாமையும் இருந்தால் அநீ பயப்படுவது போல் இந்து மதத்தை இன்னும் 100 ஆண்டுகளில் இந்தியாவில் தேட வேண்டியிருக்கும். பார்ப்பனர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். மொகலாயர்களின் காலத்தை விட இன்றுதான் அதிக அளவில் மத மாற்றங்கள் நடந்து வருகிறது. அதற்கு காரணம் இந்து மத வர்ணாசிரமம் என்றால் மிகையாகாது.

suvanappiriyan said...

திரு க்ருஷ்ணகுமார்!

//எனது உத்தரம் தங்கள் மனதை புண்படுத்த அல்ல. ஆயினும் தங்கள் உத்தரம் என்னைப்போன்று பல ஹிந்துக்களது மனதை ரணப்படுத்தியுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா.//

உங்களின் மனதை சங்கடப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு துளியும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இந்த வழக்கைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. பாதிக்கப்பட்ட குடும்பம் சம்பந்தப்பட்டவர்களை மன்னித்து விட்டால் இடையில் நமக்கு பேச ஒரு அதிகாரமும் இல்லை. இஸ்லாமும் அதைத்தான் சொல்கிறது.

//குதா ஹாஃபீஸ்//

நான் உர்து முஸ்லிம் என்ற எண்ணத்தில் பின்னூட்டத்தை இவ்வாறு முடித்துள்ளீர்கள். எனது தாய் மொழி தமிழ். எனது பெற்றோருக்கு தமிழைத் தவிர வேறு மொழிகள் தெரியாது. பத்து வருடங்களுக்கு முன்பு தான் எனக்கும் உருது மொழி தெரிய வந்தது. அதுவும் சவுதியில் வந்து கற்றுக் கொண்டதே.