Followers

Wednesday, November 27, 2013

சங்கரராமன் தீர்ப்பும் நமது நாட்டு மனு நீதியும்!



சங்கரராமன் கொலை வழக்கில் ஜயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து, புதுச்சேரி நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வெளியிட்டது.

ஜயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அனைவரின் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி முருகன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பை, ஜயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் தரப்பு வரவேற்றுள்ளது. அதேவேளையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள சங்கரராமனின் மகன் ஆனந்த் ஷர்மா, மேல்முறையீடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

இந்த வழக்கில், சங்கரராமன் குடும்பத்தினரின் பிறழ் சாட்சியமே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையானதற்கு காரணம் என்றும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து தமிழக அரசிடம் பேசி முடிவு செய்யப்படும் என்றும் அரசு தரப்பு வழக்குரைஞர் தேவதாஸ் கருத்து தெரிவித்தார்.



மிகச்சரியான தீர்ப்பு :-) அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு :-(, பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து அத்வானி,உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் விடுதலை, குஜராத் கலவர வழக்குகளிலிருந்து மோடி விடுதலை,நாவரசு கொலை வழக்கிலிருந்து ஜான் டேவிட் விடுதலை: மும்பை கலவர வழக்கில் கிருஷ்ணா வின் தீர்ப்பில் பால்தாக்கரே குற்றவாளி என்று கூறியும் கூட அரசு மரியாதையுடன் அடக்கம். அது மாதிரி இதையும் நினைத்து கொள்ள வேண்டியதுதான். கடுமையான தண்டனைகளெல்லாம் அஜ்மல் சாப்புக்கும், அப்சல் குருவுக்கும் தான். ஏனென்றால் நாட்டின் மனசாட்சியை திருப்திபடுத்த வேண்டுமல்லவா!

இந்து மத நம்பிக்கை படி கோர்ட்டு வாசலில் ஆவலோடு நின்றிருந்த சங்கரராமனின் ஆவி தீர்ப்பை கேட்டு விட்டு கண்ணீர் சிந்தியிருக்கும். சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார். அந்தம்மா கண்டுக்காம இருந்தாலும் சுவாமி தரப்பு சீண்டி விட்டு திரும்பவும் அப்பீல் பண்ண வைக்கப் போறார். எப்படியோ நல்லது நடந்தா சரிதான். நம்ம மஞ்சத் துண்டு வழக்கம் போல எதையும் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவார். ஏனெனில் இந்த முறை 20 எம்பிக்களை எப்படியாவது பெற்று விட பிஜேபியின் தயவை நம்பியுள்ளார். :-(

இந்த நாட்டை அம்பேத்கார் இயற்றிய சட்டங்கள் கட்டுப்படுத்துவதில்லை. மனு நீதி என்ன சொல்கிறதோ அது தான் இந்நாட்டின் எழுதப்படாத சட்டம் என்பதற்கு இந்த தீர்ப்பே சாட்சியாக உள்ளது. பட்டப் பகலில் கொடூரமாக நடந்த ஒரு கொலை: புதிய தலைமுறையில் இந்து முண்ணனி தலைவர் ராம கோபாலன் சொல்லும் போது 'மேல் முறையீடு செய்தாலும் இதே தீர்ப்புதான் வரும்' என்று சொல்லும் நிலையில்தான் நமது நீதித் துறை உள்ளது. புதிய தலைமுறை பேட்டியில் சங்கரராமனின் மனைவி சொல்லும் போது 'உண்மையை பேசினால் கொலை செய்து விடுவோம்' என்று மிரட்டியதாலேயே வாக்கு மூலத்தை மாற்ற வேண்டியதாகி விட்டது. அரசு எங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்தால் மேல் முறையீட்டில் உண்மையை சொல்வோம்' என்கிறார். நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் உள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது அல்லவா!



"பார்ப்பனனுக்குத் தலையை முண்டனம்(அதாவது மொட்டையடித்தல்) செய்தல் உயிர்த் தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு" (8 : 378).

"எந்தப் பாவம் செய்த போதிலும், பார்ப்பனனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக" (8 : 379).

"பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பார்ப்பனனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது" (8 : 379)

இது போன்ற குப்பை சட்டங்களை இந்து மத சட்டங்கள் என்று இன்று வரை பலர் தூக்கி பிடிக்கின்றனர். இதனால் இந்து மதம் வளர ஏதாவது வாய்ப்புண்டா? இதனால் வெறுப்புற்று பிற்படுத்தப்பட்ட மக்கள் தாங்களாக விரும்பி இஸ்லாத்தை ஏற்றால் அங்கும் வந்து தொல்லை கொடுக்கும் இந்துத்வாவினரை எந்த ரகத்தில் சேர்க்கலாம்.

சரி...இனி சங்கரராமன் மேட்டருக்கு வருவோம்.

அப்போ... சங்கரராமனை யார்தான் கொலை செய்திருப்பார்?

'சங்கரராமனை கொலை செய்தது எப்படி?' என்பதை விவரிப்பதற்காக, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய தீவிரவாதிகள், காவல்துறையால் நாளை காஞ்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். இந்த நாட்டில் எதுவும் நடக்கலாம்..

4 comments:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

சலாம் சகோ,

எத்தன முறை கேஸ் போட்டாலும் அவாலம் விடுதலை ஆவத்தான் செய்வா,ஏணா நம்ம நாட்டு வழக்கத்துல உள்ள சட்டம் அப்படி..

பிராமணாள் பண்ற தப்புக்கெல்லாம் பாய்மார்கள் தான் தண்டம் அழுவனும்,ஏணா நம்ம நாட்டு வழக்கத்துல உள்ள சட்டம் அப்படி..

Unknown said...

யோவ் சுவனம்

இதே மாதிரி ஒரு இமாமோ அல்லது முல்லாவோ ரேப்பண்ணி ஜெயிலுக்கு போனா நீங்கள்ளாம் இஸ்ரேல் சதின்னு சொல்ல மாட்டீங்களா?

suvanappiriyan said...

//இதே மாதிரி ஒரு இமாமோ அல்லது முல்லாவோ ரேப்பண்ணி ஜெயிலுக்கு போனா நீங்கள்ளாம் இஸ்ரேல் சதின்னு சொல்ல மாட்டீங்களா?//

கண்டிப்பா அந்த முல்லாவை தூக்கில் ஏற்ற ஒத்துழைக்கும் முதல் ஆளாக நாங்கள் இருப்போம். 'நடமாடும் தெய்வம்' என்றெல்லாம் பிணாத்திக் கொண்டு இருக்க மாட்டோம்.

Anonymous said...

க்ருஷ்ணகுமார் on November 29, 2013 at 6:06 pm

\\\ தமிழகத்தின் சாதாரண அடித் தட்டு மக்களுக்கும் தெரியும் சங்கரராமன் யாரால் கொல்லப்பட்டார் என்று. அதைத்தான் சுட்டிக் காட்டினேன்.\\\

தமிழகத்தின் சாதாரண அடித்தட்டு மக்களுக்கும் தெரியும் சங்கரராமன் கொல்லப்பட்டதில் சங்கராசார்யர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஹிந்து மத த்வேஷத்தால் இவர்கள் இந்த வழக்கில் அரசால் திணிக்கப்பட்டனர் என்று.

ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் சொன்ன விஷயத்தை – அவர் பாணியில் – அப்படியே குஜராத் கலஹங்கள் பற்றியும் திருப்பிப் போடலாம். குஜராத்தின் அடித்தட்டு மக்கள் அனைவரும் (- இதில் – ஹிந்து முஸல்மாணிய மற்றும் க்றைஸ்தவ சமூஹத்தினர் அனைவரும் அடக்கம்) அறிவர் – ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி அவர்கள் குஜராத் கலஹங்களை அடக்கி அதைக் கட்டுக்குள் கொண்டுவர பாடுபட்டவர் என்றும் — மதசார்பற்றவர் என்ற போர்வையில் மதவெறியர்கள் முன்வைக்கும் ஒரு பிம்பம் போல் அவர் கலஹத்துக்குக் காரணமானவர் என்று.

தமிழகத்தின் அடித்தட்டு மக்கள் அனைவரும் அறிவர் — தமிழகத்தில் ஒரு வருஷ காலமாக ஹிந்து இயக்கத்தவரின் கொலைகளுக்குப் பின் உள்ள சக்திகள் எவை என்று – இல்லையா ஐயன்மீர்?

\\\ இந்து, முஸ்லிம், கிறித்தவர், பவுத்தர்,ஜைனர், என்று பலரும் இந்த சலுகைகளை அனுபவிக்கின்றனர். \\\

எப்படி ஐயன்மீர், ஹிந்துக்கள் அனுபவிக்கும் சலுகையாக தாங்கள் சொல்வது ஹிந்துக்கள் சமர்ப்பிக்கும் ஜிஸியா வரியையா?

ஒருபுறம் முஸல்மான் கள் ஹஜ் யாத்ரை செல்வதற்கு ஹிந்துக்கள் தங்கள் வியர்வை சிந்தி சர்க்காருக்கு அளிக்கும் வரிப்பணம் செலவிடப்படுகிறது

இன்னும் ஒரு புறம் – அமர்நாத் யாத்ரைக்கு செல்லும் ஹிந்துக்கள் — தேசத்தின் அவக்கேடான ஷரத்து 370 என்ற அவலத்தின் காரணமாக – அமர்நாத் யாத்ரை செல்வதற்கு வரிப்பணம் கட்டிச் செல்கிறார்கள். இதை தாங்கள் சலுகை என்ற பதத்தில் அடக்குவீர்கள் போலும். அமர்நாத் யாத்ரைக்கு செல்லும் பயணிகள் போதுமான தங்குமிடம் இல்லாது – விரைக்கும் குளிரில் மடிந்தது சில வருஷங்களுக்கு முன் நிகழ்ந்தது நினைவிலிருக்கும் – அவர்கள் யாத்ரை சமயத்தில் தங்குவதற்கு நிரந்தரமாகக் கட்டடம் கட்ட முனைகையில் – இஸ்லாமிய மதவெறி சக்திகள் – ஹிந்துஸ்தானத்தில் உள்ள ப்ரதேசமாகிய ஒரு இடத்தில் ஹிந்துக்கள் வருஷம் ஒரு முறை சென்று வரும் யாத்ரையில் – குளிரிலிருந்து தங்களைப் பாதுகாக்க ஒரு கட்டிடம் எழுப்புவதை – இஸ்லாமிய மதவெறி சக்திகள் முனைந்ததை —

ஹிந்துக்கள் அனுபவிக்கும் சலுகை என தாங்கள் குறிப்பிடுகிறீர்களா ஐயன்மீர்.

எனது தாய் நாடான ஹிந்துஸ்தானத்தை இத்தனை ரணங்களுக்குப் பின்னும் நான் உளமாற நேசிப்பது — இம்மையிலும் மறுமையிலும் இதனுடன் என் வாழ்வு பிணைக்கப்பட்டுள்ளது என்பதால் ஐயன்மீர்.

இணைய தளத்தில் கடுமையான உத்தரங்களுக்கும் மிகப் பணிவான பதங்களால் உத்தரம் கொடுக்கும் வினம்ரதை என்ற விஷயத்தை நான் இன்று வரை அவதானித்து வருவது தாங்கள் உத்தரங்கள் பகிர்ந்து வரும் முறைமையால் ஐயன்மீர்.

தாங்கள் “மனசாட்சியை அடகு வைத்து” என்று அ.நீ அவர்களை குறிப்பிட்டமையையும் ந்யாயாலயம் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்த பின்பும் –எந்த முகாந்தரமும் எந்த ஒரு மேற்தகவலும் இல்லாது — வெறும் வெறுப்பின் அடிப்படையில் தாங்கள் ந்யாயாலயத்தால் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நபரை — குற்றக்கூண்டில் அடைக்க விரும்புவதை —-

தங்களது பொதுவில் வினம்ரதையுடன் உத்தரம் பகிரும் பாங்கிலிருந்து விதிவிலக்காக நான் எடுத்துக்கொள்கிறேன்.

எனது உத்தரம் தங்கள் மனதை புண்படுத்த அல்ல. ஆயினும் தங்கள் உத்தரம் என்னைப்போன்று பல ஹிந்துக்களது மனதை ரணப்படுத்தியுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா.

நாம் ஒருவருடன் உரையாட வேண்டியது மிகவும் அவசியம். தங்களுடைய நிதானம் சார்ந்த உத்தரம் பகிரும் முறையை நான் தொடர்ந்து அவதானித்து வருவேன். விதிவிலக்குகள் என்றும் விதியாகாது என்ற நம்பிக்கையில் ஐயன்மீர்

குதா ஹாஃபீஸ்