தமிழக அரசே..!!! இந்துத்வாவாதிகள் மீது நடவடிக்கை எடு..!!!
அ.தி.மு.க இனையதளத்தை முடக்கி அதன் பழியை முஸ்லீம்கள் மீது சுமத்தி தமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட துடிக்கும் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு.
------------------------------------------
சென்னை: அ.தி.மு.க அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஊடுருவி, மோசமான வாசகங்களும் பாகிஸ்தான் ஆதரவு வாசகங்களும் எழுதிய நபரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் "பாகிஸ்தான் ஹேக்கர்ஸ்" என்ற குழுவால் கடத்தப்பட்டது. தளத்தினை ஊடுருவிய கடத்தல்காரர்கள், "லாங்லிவ் முஸ்லிம்ஸ், பாகிஸ்தான் ஜிந்தாபாத், இஸ்லாம் ஜிந்தாபாத்" முதலான வாசகங்களையும் மண்டைஓடு படத்தையும் போட்டு, நாங்கள் பாகிஸ்தான் ஹேக்கர்ஸ் என தளத்தில் படம் போட்டிருந்தனர்.
இதனால் அ.தி.மு.க தலைமையும் தொண்டர்களும் அதிர்ச்சிக்குள்ளாயினர். இதனைத் தொடர்ந்து தளத்தை ஹேக் செய்த சமூக விரோத கும்பலைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இப்புகாரின் மீது உடனடி நடவடிக்கை ஆரம்பித்த சைபர் க்ரைம் காவல்துறையினர், அ.தி.மு.க இணையதளத்தை மூடிவிட்டு அத்தளத்தின் சர்வரில் யார் யார் நுழைந்துள்ளனர் என்ற விவரத்தை சர்வர் லாக் ஃபைலிலிருந்து எடுத்து சோதனை செய்தனர்.
அப்போது சுமார் 300 க்கும் அதிகமான தடவை ஒரு குறிப்பிட்ட ஐ.பி முகவரியிலிருந்து அ.தி.மு.க இணையதளத்தினுள் நுழைந்திருந்தது தெரிந்தது. உடனடியாக அந்த ஐ.பி முகவரிக்குச் சொந்தமான கணினியினையும் நபரையும் பிடிக்க காவல்துறையினர் விசாரணை ஆரம்பித்தனர்.
பெங்களூருவில் ஒரு பிரபல ஐ.டி நிறுவனத்தில் பணி புரியும் வியாசர்பாடியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்ற பொறியாளரே இக்குற்றத்தின் பின்னணியில் இருந்தவர் என்பது கண்டறியப்பட்டது. 23 வயதாகும் இளைஞரான இவர், கடந்த 2011 ஆம் பொறியியல் பட்டம் பெற்றவர்.
உடனடியாக அவரைக் கைது செய்த காவல்துறையினர், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66 -ன் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் 15 நாட்கள் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், விளையாட்டுக்குத் தாம் அவ்வாறு செய்ததாக ஈஸ்வரன் கூறியுள்ளார்.
ஆனால், ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே மோசமாக மக்கள் கருதும் வகையிலான வாசகங்களை, பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி எழுதியது நிச்சயமாக விளையாட்டுக்குச் செய்த காரியமல்ல எனவும் இவரின் செயல் மதவெறி கூட்டத்தின் திட்டமிடப்பட்ட செயலாக இருக்கலாம் எனவும் இவரின் பின்னணியில் ஒரு சதி கூட்டம் இயங்கியிருக்க வாய்ப்புள்ளது எனவும் அது குறித்து தீவிர விசாரணையினைக் காவல்துறை மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வரும் நாட்களில், இக்குற்றச் செயலின் பின்னணி குறித்து கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.inneram.com/news/tamilnadu/3225-engineer-arrested-for-hacking-admk-site.html
காவி தீவிரவாதிகள் முஸ்லிம்களை சிக்க வைக்க எப்படி எல்லாம் திட்டம் தீட்டுகின்றனர்! இந்த நாட்டை மோடி கும்பலிடமிருந்து காக்க தீவிர பிரசாரம் அவசியம். நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் இந்துத்வாவாதிகளின் நாடகங்களை உடனுக்குடன் அம்பலப்படுத்தி அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இஸ்லாமியர்களின் மீது வெறுப்பை உண்டு பண்ண இந்த யூத அடிவருடிகள் எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா.... தமிழக முதல்வர் சம்பந்தப்பட்ட இந்துத்வவாதிக்கு தக்க தண்டனையை பெற்றுத் தர வேண்டும். அப்பொழுதான் இது போன்ற மோடி மஸ்தான் வேலைகள் ஓரளவு கட்டுக்குள் வரும்.
இதனை காதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது! தமிழக முதல்வருக்கு இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பை விதைக்க இப்படி ஒரு கோழைத்தனமான வேலையை யூதர்களின் வாரிசுகள் செயல்படுததியுள்ளனர். இரும்புக் கரம் கொண்டு இதனை முதல்வர் ஒடுக்குவார் என்று எதிர்பார்ப்போம்.
1 comment:
எனக்கு என்னவோ சுவனப்பிரியன் மேலத்தான் சந்தேகமா இருக்குது
Post a Comment