'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, November 15, 2013
காதியானிகள் பிஜேபியில் சங்கமம்!
கோத்ராவிலிருந்து பாட்னாவரை இதுவரை நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் பின்னணியில் ஆர்எஸ்எஸ் உள்ளது என்று சங்கர்சிங் வகேலா மீடியாவுக்கு செய்தியாக தந்துள்ளார்.
காதியானிகள் என்ற ஒரு சிறு பிரிவு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருப்பது நமக்கு தெரியும். மிர்ஸா குலாமை முகமது நபிக்கு பிறகு வந்த நபியாக இவர்கள் புனைந்துரைப்பதால் இவர்களை இஸ்லாமியர்களின் கணக்கில் சேர்ப்பதில்லை. தனி வழிபாடு: தனி கொள்கை என்று உள்ளதால் பாகிஸ்தான் அரசும் இவர்களை தனி மதமாக அங்கீகரித்துள்ளது. இஸ்லாத்தில் குழப்பத்தை உண்டு பண்ண இஸ்லாமிய எதிரிகளால் உருவாக்கப்பட்ட இந்த காதியானிகள் தற்போது பிஜேபியில் அங்கம் வகிப்பதாக சங்கர்சிங் வகேலா குற்றம் சாட்டுகிறார். இவர்களை பயன்படுத்தி இஸ்லாத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என்பது இந்துத்வாவின் திட்டம். இதை பல இடங்களில் நிறைவேற்றியும் உள்ளனர்.
ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸில் தீவிரமாக பணியாற்றியவர் வகேலா. மேலும் அவர் கூறியது:புத்தகயா, பாட்னா குண்டுவெடிப்புகளில் குஜராத்தொடர்பை குறித்து விசாரணை நடத்தவேண்டும்.குண்டுவெடிப்பிற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டது குஜராத்தின் ஹாலோல்-காலோலில் என்பது தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வாட்ச், குஜராத்தில் உள்ள மோர்பியில் தயாரிக்கப்பட்டுள்ளது.அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட பைகள்,குஜராத்தில் ஹாலோலில் தயாரிக்கப்பட்டதாகும்.
இதில் இருந்து குண்டுவெடிப்பிற்குசதித்திட்டம் தீட்டப்பட்டது குஜராத்தில் தான் என்பது தெரியவருகிறது. அவ்வாறெனில் குஜராத் போலீஸ் என்னச் செய்தது? இதர மாநிலங்களில் இருந்து மோடியை கொல்ல வரும் தீவிரவாதிகளை(?) கண்டுபிடிக்கும் குஜராத் போலீசுக்கு, சொந்த மாநிலத்தில் நடக்கும் சதித்திட்டம் குறித்து எதுவும் தெரியாது என்று சங்கர்சிங் வகேலா கிண்டலாக தெரிவித்தார்.
அவ்வாறெனில் இது குஜராத் போலீசின் வேலையா? என்பது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அஹ்மதாபாத் மாவட்ட மருத்துவமனை, எல்.ஜி மருத்துவமனை ஆகியவற்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவின் கரங்கள் இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். அன்றைய குண்டுவெடிப்புகளில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை உள்ளது? என்று வகேலாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு சங்கர்சிங் வகேலா பதிலளிக்கையில்,’நான் நீண்ட காலம் அவர்களுடன் இருந்துள்ளேன்.எனக்கு அவர்களை நன்றாக தெரியும்.அவர்களின் கொள்கைகளையும் தெரியும்.’ என்று தெரிவித்தார்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் இஸ்லாமிய எதிரிகளான இந்த இரண்டும் தற்போது ஒன்றாகியிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அரசு காதியானிகளை கண்காணித்து தேச விரோத செயல்களில் இந்துத்வாவோடு சேராது இருக்க முயற்சி எடுக்க வேண்டும். காதியானிகளும் அரபு பெயர்களை வைப்பதால் அவர்கள் செய்யும் அனைத்து தேச விரோத செயல்களுக்கும் முஸ்லிம்கள் பலிகடா ஆக்கப்படுவார்கள். இதைத்தான் மோடியும் பிஜேபியும் விரும்புகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment