Followers

Sunday, November 24, 2013

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! - சவுதி அரேபியா



சவுதி கல்வித் துறை, வியன்னாவில் இயங்கி வரும் 'மன்னர் அப்துல்லாஹ் கலாசார மையம்' இந்த இரண்டும் இணைந்து ஒரு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளனர். இந்த பாடத் திட்டமானது உலக மதங்களையும், மார்க்கங்களையும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

'இந்த புதிய முயற்சியானது அனைத்து மதங்களையும் உலக மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இதன் மூலம் அமைதியும் பொறுமையும் கொண்ட ஒரு வெறுப்பற்ற சிறந்த சமூகத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம்' என்கிறார் இளவரசர் ஃபைசல் பின் அப்துல்லா. இவர் சவுதி அரேபியாவின் கல்வி அமைச்சர் ஆவார்.

அவர் மேலும் கூறும் போது 'மன்னர் அப்துல்லா உலக அமைதிக்காகவும், பல கலாசாரங்களை பேணும் மக்கள் வாழும் நாடுகளில் மக்கள் வன்மத்தை விட்டு அன்பை பேணுவதற்கு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.'

'மன்னர் அப்துல்லா ஸ்வீடன் மன்னருடன் இணைந்து 110 நாடுகளில் சில நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இதனால் 20 மில்லியன் மக்களுக்கு இந்த செய்தி சென்றடையும். இந்த முயற்சியானது 'மன்னர் அப்துல்லா தொழில் நுட்ப கல்லூரி' யில் தொடங்கப்பட்டுள்ளது. ஜெத்தாவுக்கு அருகில் உள்ள துவல் என்ற சிற்றூரில் இந்த கல்லூரியானது நடந்து வருகிறது. இக்கல்லூரியில் 7000 மாணவர்கள் என்பது நாடுகளில் இருந்து வந்திருந்து இங்கு தங்கி படிக்கின்றனர். இவர்கள் உலகின் பல்வேறுபட்ட கலாசாரங்களையுடைய மதங்களையும் மார்க்கங்களையும் பின்பற்றக் கூடியவர்கள்.

'இந்த மாணவர்கள் வெறும் படிப்போடு நின்று விடாமல் ஆராய்ச்சியிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். உலக அளவில் வறுமை, உணவு தட்டுப்பாடு, ஆற்றல் பற்றாக் குறை, தண்ணீர் பிரச்னை என்று அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்து இதற்கு என்ன தீர்வு என்பதை மாணவர்கள் சமர்ப்பிக்க வைக்கப்படுகிறார்கள்.'

இது போன்ற ஆய்வுகளானது உலக மதங்களைப் பற்றிய தவறான எண்ணங்களை களையும். பல மதத்தவரிடையே பகைமையை உண்டு பண்ணி அதன் மூலம் சிலர் லாபம் அடைவதை இது போன்ற முயற்சிகளால் தடுக்கலாம்.

சென்ற சனிக்கிழமை 500 வெளி நாட்டு மத குருமார்கள் கலந்து கொண்ட நிகழ்வும் நடந்தேறியது. உலக தலைவர்கள் பலரும் இந்த சீரிய முயற்சியை பாராட்டினர். பாகிஸ்தானின் கல்வி அமைச்சர் பலிகுர் ரஹ்மான், ஆஸ்திரியாவின் கல்வி அமைச்சர் க்ளவ்டியா ஸ்கிமிட் போன்ற முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் பங்கு கொண்டனர்.

பல நாடுகள் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி அதன் மூலம் உலகில் அமைதி நிலவ பாடுபடுகின்றன. அதற்கு மாறாக நமது நாட்டில் தற்போது சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ள ஒரு பெரும் முயற்சியே நடத்தப்படுகிறது. ஆனால் இந்திய மக்கள் மிக புத்திசாலிகள். யாரை எங்கு வைப்பது என்பதை நன்றாகவே அறிவர்.

தகவல் உதவி

அரப் நியூஸ்



1 comment:

Anonymous said...

ஷாலி says:
November 25, 2013 at 6:11 pm

 க்ருஷ்ணகுமார் says:
November 24, 2013 at 9:19 am
அன்பர் ஷாலி,

 \\ தன் தங்கையையே இராமன் மணம் முடித்தான் என்று கூறும் இராமாயணம் இருப்பது தங்களுக்குத் தெரியுமா?\\

தெரியாதே? ராமாயணத்தின் பெயர். எந்த பாஷையில் எழுதப்பட்டது? தாங்கள் சொல்லும் கருத்துக்குகந்த பாடல் எண் – பாடத்தின் மூலம் – மொழிபெயர்ப்பு பகிர்ந்தால் நம் கருத்துப் பரிவர்த்தனம் பயனுள்ளதாகும். நான் பரிஹாசம் செய்வதாக எண்ண வேண்டா. ஆர்வமேலிடவே கேட்கிறேன். தாங்கள் வாசித்த படிக்கு கருத்துப் பகிர்ந்தால் வாசிக்கும் வாசகர்கள் அனைவரும் பயனுறுவர்.

\\ வேறு சில இராமயாணத்தில் சீதையின் தந்தை சாட்சாத் இராவணன் என்று கூறுவது தெரியுமா? \\
Mutatis Mutandis, earlier question is applicable here too

நம்ம க்ருஷ்ண குமார் அண்ணனுக்கு வெளக்கம் சொல்லியே….யே….யே! நான் ஓஞ்சு போயிட்டேன். என்ன விளக்கம் கொடுத்தாலும் எடுபடாது.அவர் போக்கிலேயே சித்தன் போக்கு சிவன் போக்குனு போய்க்கிட்டே இருப்பாரு.என்ன செய்றது,பெரியவுக கேட்டுட்டாக சொல்லித்தானே ஆவனும்.
சென்னை மயிலாப்பூர்,”இராமாயண விலாசம்”என்னும் கிருகத்தில் உள்ள இராமாயண பிரசுரகர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார்.பி.ஏ. என்பவரால் எழுதப்பட்டு 1928 ம் வருஷத்தில் அச்சிட்டு வெளியிட்ட “இதர இராமாயணங்கள்’ என்னும் புத்தகத்தில் நான்கு இராமாயணங்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. 1.ஜைன இராமாயணம் 2.பவுத்த இராமாயணம் 3.யவன இராமாயணம் 4.கிறைஸ்த்த இராமாயணம் என்பவைகளாம்.

இதில் ஜைன இராமாயணத்தில் இராமனுக்கு நான்கு மனைவிகள் என்று குறிப்பிடப்படுகிறது.1.சீதை 2.பிரபாவதி 3.ரதினிபா 4.பூதாமா என்பவர்கள்.

பவுத்த புராணத்தில், தசரதனுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு இராமன்,லட்சுமணன்,என இரண்டு ஆண்களும் சீதை என்ற பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள். இளைய மனைவிக்கு பரதன் பிறந்தான் என்றும் இளைய மனைவியின் கட்டாயத்தால் இராமன் காட்டிற்கு சென்றதாகவும், அண்ணனுடன் தங்கை சீதாவும் 12 வருடம் காட்டிற்கு சென்று பின்பு தசரதன் இறந்ததும் மீண்டும் நாட்டிற்கு வந்து முடி சூடிக்கொண்டதாகவும், ஊர்மக்கள் இராமனுடைய தங்கையாகிய சீதையை இராமனுக்கே மணமுடித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
அண்ணன்,தங்கை உறவை நியாயப்படுத்த திரு.சீனிவாசய்யங்கார் கூறுவது, அந்தக்காலத்தில் அண்ணன் தங்கை மணந்துகொள்ளும் வழக்கம் உள்ளது என்றும், எகிப்து தேச ராஜ தர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும், இதை அறிந்துதான் ரிக் வேதம் 10 வது மண்டலம் 10, 12 சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப்பற்றிருக்கிறதென்றும், அதற்குமுன் அவ்வழக்கம் இருந்து வந்ததற்கு மேலும் ஆதாரமாக சூரியனும்,அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார்.

இதே சி.ஆர்.சீனிவாசய்யங்கார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இராமாயணம் பின் பகுதி குறிப்பு 431 ம் பக்கத்தில் சீதை தசரதனின் மகள் என்றும்,அவளை தசரதன் ஜனகனுக்கு தானம் கொடுத்தார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சீதை இராவணனுடைய மகள் என்று மவுட்கலிய இராமாயணத்தில் உள்ளதாக குறிப்பிடுகிறார்.
க்ருஷ்ணாஜி விசுவாசிக்கிற ஒரே இராமாயாணம் வால்மீகி இராமாயாணம் மட்டுமே! கம்பர் காட்டும் இராமனையும் அவரால் கணக்கிலே எடுக்க முடியலே! நம்ம கண்ணுலே பட்ட இராமாயணத்தைப் பார்ப்போம்.

சமண இராமாயணம், வசிட்ட இராமாயணம்,ஆனந்த இராமாயணம்,அத்யாத்மா இராமாயணம்,லகு இராமாயாணம்,அற்புத இராமாயணம்,பார்த்துவாஜ இராமாயணம், சோரா இராமாயாணம்,பால இராமாயணம்,இரகு வம்ச இராமாயணம், சங்கிரத இராமாயணம்.கன்னட இராமாயணம் –பம்ப இராமாயணம்,குமுதேந்து இராமாயணம்,ஜைன இராமாயணம்,இராமவிஜய தரிசனம்,இராமா கதாவதாரம்,திரி சஷ்டி மகாபுருகுணா அலங்காரம்,ஜீவசம்போதனை, கடைசியா தொலைகாட்சியில் வருடக்கணக்கில் ஓடிய அருண்கோவில். தீபிகா,நடித்த இராமானந்தா சாகரின் இராமாயணம்,இப்ப படித்துக்கொண்டிருக்கிற ஸ்ரீ.ஜெயபாரதனின் சீதாயணம்.

ராமன் எத்தனை ராமனடி-அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி!