Followers

Wednesday, November 20, 2013

கால் மிதி வாங்குவதற்கு தட்சணை 501 ரூபாயாம்!




இவன் தான் கால்மிதி சாமியார், இவனிடம் கால்மிதியால் ஆசிர்வாதம் வாங்கினால், பாவங்கள் நீங்கி, செல்வ செழிப்புடன், நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து சொர்க்கம் சென்றடையலாமாம்.

குறிப்பு::- இந்த டுபாகூருக்கு தட்சனை ரூ-501.

ஃபேஸ் புக்கில் நேற்று இந்த செய்தியை நண்பர் ஒருவர் ஷேர் செய்திருந்தார். பல இந்துத்வாவாதிகளின் குற்றச்சாட்டு என்னவென்றால் 'இஸ்லாமியர்கள் இந்து இளைஞர்களை நிறைய மத மாற்றம் செய்து வருகின்றனர்: இதனை அரசு தடை செய்ய வேண்டும்' என்பதே!

மேலே உள்ள படத்தை பாருங்கள். சுய மரியாதை உடைய எவனாவது இவ்வாறு தனது தாயின் தலையில், மனைவியின் தலையில், சகோதரிகளின் தலையில் கால் வைக்க சம்மதிப்பானா? இதை பக்தி என்று நாம் சொல்ல முடியுமா? பெரியார் தனது வாழ்நாளையே இது போன்ற மூடப் பழக்கங்களை ஒழிப்பதற்காக செலவிட்டார். இருந்தும் இந்த மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனாலெல்லாம் வெறுப்புற்று தானாக விரும்பியே பல இளைஞர்கள் குடும்பத்தோடு இஸ்லாத்தை தழுவுகின்றனர்.

இது போன்ற மன மாற்றங்களை தடுக்க வேண்டும் என்றால் இந்து மதத்தில் உள்ள சாதி வேற்றுமைகளையும், மூடப் பழக்க வழக்கங்களையும் ஒழிக்க பாடுபடுங்கள். 1000 ஆண்டுகள் மொகலாயர்கள் இந்த நாட்டை ஆண்ட போதும் எவரும் வாள் முனையில் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அன்றும் இந்து மதம் இருந்தது: அழிந்து விடவில்லை. இன்று இந்தியாவைப் பொருத்த வரை முஸ்லிம்களுக்கு எந்த அளவு அநீதி இழைக்கப்படுகிறது என்பதை அறியாதவர்கள் அல்ல நாம். குஜராத்தில் 2000 க்கும் அதிகமான முஸ்லிம்களை திட்டமிட்டு கொலை செய்த நரேந்திர மோடி என்ற கயவனை பிரதமர் வேட்பாளராக பிஜேபி அறிவிக்கும் நிலையில் தான் இன்றைய இந்திய அரசியல் உள்ளது. இந்த நிலையிலும் பல இந்து நண்பர்கள் இஸ்லாத்தை ஏற்கிறார்கள் எனறால் தவறு எங்கு இருக்கிறது என்பதை ராம கோபாலன், ராஜா, இல கணேசன் போன்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

---------------------------------------------------

காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையில் கடந்த 15-11-2013 அன்று கிருஷ்ணன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை சாதிக் என மாற்றிக் கொண்டார். மேலும் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் டிவிடிகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………….



-------------------------------------------------

வட சென்னை நேதாஜி நகர் கிளையில் கடந்த 15-11-2013 அன்று பாலசுப்ரமணி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மது பஷீர் என மாற்றிக் கொண்டார்……………….



------------------------------------------------

வட சென்னை மாவட்டம் புதுப்பேட்டை கிளையில் கடந்த 5-11-13 அன்று பால்பாண்டி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் காதர் என மாற்றிக் கொண்டார் இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.



-----------------------------------------------

வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 10-11-2013 அன்று பானுப்பிரியா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஆயிஷா என மாற்றிக் கொண்டார்………



----------------------------------------------

இந்த மன மாற்றங்கள் எல்லாம் கடந்த ஒரு வாரத்தில் நடந்தவை. இந்த அளவு ஆர்வத்தோடு தாங்களாகவே விரும்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் தவறு எங்கிருக்கிறது என்பதை சற்று யோசியுங்கள். ஒருவன் பிறந்த மதத்தை விட்டு விட்டு வேறொரு மதத்தை தழுவுவது என்பதை அவ்வளவு லேசான காரியமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. திடமான மன உறுதி வேண்டும். தனது பிறந்த வீட்டை தனது சுற்றத்தார்களை எல்லாம் பகைக்க வேண்டி வரும். புதிய கலாசாரத்துக்கு இந்த அன்பர் மாறுகிறார். அரசாங்கத்தின் நெருக்குதல் வேறு அடிக்கடி இவருக்கு வரும். இத்தனையையும் மீறி இஸ்லாத்தை தழுவுகிறார் என்றால் எந்த அளவு அவரது சொந்த மதத்தில் காயப்பட்டிருப்பார் என்பதை சொல்லத் தேவையில்லை.



3 comments:

shueib said...

அத்தனை பேரும் தன் மதத்தில் சுயமரியாதை இல்லாததால் தான் இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்ற கருத்து தவறானது. யூதர்களும் இஸ்லாத்தை தழுவுகிரார்களே, அது ஏன்? 90% அதிகமானவர்கள் இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்று புரிந்தே இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்பது என் கருத்து

shueib said...

அத்தனை பேரும் தன் மதத்தில் சுயமரியாதை இல்லாததால் தான் இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்ற கருத்து தவறானது. யூதர்களும் இஸ்லாத்தை தலுவுகிரார்களேஅது ஏன்? 90% அதிகமானவர்கள் இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்று புரிந்தே இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்பது என் கருத்து

Anonymous said...

IIM Ganapathi Raman says:
November 18, 2013 at 5:40 pm

ஜயபாரதன் எழுதுவதற்கும் கிருஸ்ணகுமார் எழுதுவதற்கும் ஆதாரங்கள் கிடையா. வெட்டவெளியில் அந்தரத்தில் தொங்குபவர்கள்தான் இருவரும் ! அப்படித் தொங்க முடியாது. கற்பனையாகத்தான்.

இராமாயணம் பலரால் பலவிதமாக எழுதப்பட்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றில் இராவணன் தங்கை சீதை. இது ரெலவெண்டு வெரி வெரி ரெல்வன்ட் ஆர்குமென்ட். ஹியர். ஷாலிமட்டும் சொல்லவில்லை. வரலாறு சொல்லிவிட்டது. மறுக்கமுடியால் கிருஸ்ணகுமாரால்.

75 லட்சங்களுக்கு முன் நடந்ததாக சொல்லப்படும் கதையிது இக்கதைக்கு எவரேனும் ஆதாரம் தரமுடியுமா என்ற கேள்வி ரெல்வன்ட். இப்படிப்பட்ட ஒன்றை பலரும் அவரவர் கற்பனைக்கேற்ப எழுதித்தள்ளுவார்கள் என்பதும் ரெலவண்ட். ஆக, கிருஸ்ணகுமாரோ, ஜயபாரதனோ, தங்கள்தங்கள் கற்பனைக்கேற்ப புனைந்துகொள்ள இந்துமதம் அனுமதிக்கிறது. மறுக்க முடியுமா? முடியாது.

சரி, இதில் என் கருத்தென்ன? முதலிலேயே சொல்லப்பட்டதுதான்: பிடித்தவர்கள் படிக்கட்டும் என்றுதான் திண்ணை போடுகிறது. பிடிக்காதாவர்கள் வேறுகட்டுரைகளைப்படிக்கலாமே? என்ன பிரச்சினை?

ஒருதாயிடம் மகள் வருத்தத்துடன் சொன்னாள்: “அம்மா அவன் என்னையே பார்க்கிறான்”

தாய்: “அவன் பார்க்கிறான் என்று உனக்கு எப்படி தெரிந்தது?”

அதேதான் நான் கிருஸணகுமாரிடம் சொல்வது: ஜயபாரதனின் சீதாயாணம் சரியன்று எப்படித் தெரிந்தது? ஏனென்றால் அதைப்படிக்கிறார் இவர். எனக்குத்தெரியவில்லை. ஏனெனில் நான் படிப்பதே கிடையாது. அதே வேளையில் அவரெழுதுவதற்கு திண்ணை அனுமதித்தல் சரியே. என் வாதமெல்லாம் அவருக்குள்ள உரிமையைப்பற்றியே. அந்த உரிமை எப்படி வருகிறது என்றும். மேலும் பலர் விரும்பலாம். ஒரு இதழ் பலருக்குமென்றிருந்தால் ஒருவருக்குப் பிடித்ததுமட்டுமே போடப்படும் என்பது அவரின் மூர்க்கத்தனம்.

பிறரெழுத‌ – அவர் வேறுமதத்தவராகயிருந்தாலும் கூட – அனுமதி மறுததலோ ஆவேசப்படுதலோ இந்துவின் குணமன்று. இந்துப்பெயரை வைத்துக்கொண்டால் போதாது. மனத்தாலும் இந்துவாக இருக்க வேண்டும். பரந்த மதம் இம்மதம். இங்கிருப்போர் பரந்த மனதுடையாராக இருந்தால் மட்டுமே இந்து. சகிப்புத்தனமை இல்லாத இந்து தீவிரவாதி. You cant alter Kuran. But you can do with Ramayanam if you like. You enjoy the freedom in this religion. Why r you denying that to Jeyabarathan? This is the most relevant question for you! Take it.

விதவிதமான இராமாயணங்கள் எழுதியோர் கிருத்துவரோ இசுலாமியரோ இல்லை. தெரியாதமாதிரி நடிக்கக்கூடாது.

இவ்வாரம் மட்டுமே ஜயபாரதன் கதையின் படங்களப் பார்த்தேன். அதிலிருந்து ஒன்று சொல்லலாம். பெரியபிராட்டி கண்ணீர் வடிக்கும் படங்களைக்காணும்போது, இவரன்றோ உண்மை இந்து என்று ஜயபாரதனைப்பார்த்துச்சொல்லத் தோன்றுகிறது. But the credit should be shared with the illustrator. Seethai is weeping, touching her eyes with the end of her saree. That lacerates. If Jeyabarathan can bring out the sorrow more and more, I shall thank him.

– TM