

நமது நாட்டு தீண்டாமை பழக்கமானது படித்து விட்டால் மறைந்து விடும் என்றோம். எனவே சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களை படிக்க வைத்தோம். ஆனால் படித்தவர்களிடம் தான் தீண்டாமை அதிகம் உள்ளது என்பதை இணையத்தின் வாயிலாகவே தெரிந்து கொள்கிறோம். மத்திய அமைச்சரானாலும் அவரை ஒரு தாழ்த்தப்பட்டவராகவே பார்க்கும் மனோபாவம் தான் இன்றும் நிலவுகிறது. ஜெகஜீவன்ராம் எந்த அளவு வேதனைப் பட்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.
வெளி நாடுகள் சென்று விட்டால் இந்த தீண்டாமை முற்றாக அழிந்து விடும் என்ற வாதமும் வைக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதை விளக்குவதே இந்த பதிவு.
கடந்த அக்டோபர் 19ந்தேதி லண்டன் மாநகரில் 1000க்கும் அதிகமான மக்கள் தீண்டாமைக்கு எதிராக ஊர்வலமாக சென்றுள்ளனர். அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் நமது இந்தியர்கள். அதாவது நாடு விட்டு நாடு சென்றாலும் நமது இந்திய நாட்டின் சாதி திமிரையும், தீண்டாமையையும் எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று வீராப்புடன் நாம் இன்றும் உள்ளதை இந்த ஊர்வலம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
நமது நாட்டிலாவது சேரிகள் சுத்தமில்லாமல் இருக்கும். அங்கு வாழும் மக்கள் சிறந்த உடைகளை உடுத்துவதில்லை. எனவே சமூகத்தவரால் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டனர் என்று சமாதானம் கூறலாம். ஆனால் லண்டன் தெருக்கள் மிக சுத்தமாக இருக்கும். இங்கிருந்து சென்ற தலித் மக்களும் நன்றாக படித்து சிறந்த உத்தியோகங்களை பார்க்கின்றனவர்கள்.
இப்படி சமூகத்தில் சிறந்த நிலையில் உள்ளவர்களையே பிறந்த சாதியைக் காரணம் காட்டி ஒதுக்குகின்றோமே இதற்கு இந்தியனான நாம் வெட்கப்பட வேண்டாமா? உழைத்து சம்பாரிக்கும் இந்த மக்களை விட எந்த விதத்தில் உயர் சாதியினர் உயர்ந்து விட்டனர்?
இந்த மக்கள் போராட்டமானது ஹைட் பூங்கா வழியாக மிக முக்கிய சாலைகளை கடந்து சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பெண்கள், சிறுவர்கள், வயோதிகர்கள் என்று அனைவரும் தங்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளை உரத்துச் சொல்லிச் சென்றனர்.
அவர்கள் கொண்டு சென்ற பதாகைகளில் அதிகம் “Down with Caste System”, “We want freedom- now”, “We want equality” என்ற வாசகங்கள் அதிகம் இருந்தன. பஞ்சாபியர்கள் இதில் அதிகம் கலந்து கொண்டனர். கணிணி யுகத்தில் வாழ்ந்து வரும் நாம் இன்றும் 'எங்களை சமமாக நடத்துங்கள்' என்று அந்த மக்கள் கேட்பதை நினைத்து இந்தியர்களாகிய நாம் வெட்கப்பட வேண்டாமா?
இந்தியாவை புரட்டிப் போட வந்திருப்பதாக இந்துத்வாவாதிகளால் அடையாளம் காட்டப்படும் நரேந்திர மோடி இது போன்ற சமூக அவலங்களை கையில் எடுக்கக் கூடாதா? இஸ்லாமியர்களை கொன்று அதன் மேல் பிரதமர் பதவியில் அமரத்துடிக்கும் மோடி இது போன்ற சமூக அவலங்களை கையில் எடுத்தால் நமது நாட்டு மானமாவது ஓரளவு காப்பாற்றப்படும். ஆனால் இது போன்ற சீர்திருத்தங்களைக் கையில் எடுத்தால் ஆர்எஸ்ஸால் ஓரங்கட்டப்படுவோம் என்பதையும் அறியாதவர் அல்ல மோடி. இந்த கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி இஸ்லாத்தை ஏற்றால் அங்கும் வந்து அவர்களை கொடுமைப்படுத்தும் நம் நாட்டு இந்துத்வாவினரை என்ன செய்வது?
நமது நாட்டையும் மக்களையும் இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.
http://breakfastnews.tv/thousands-march-through-london-calling-on-government-to-implement-caste-legislation-now/
2 comments:
சு.பி சுவாமிகள்,
தீவாளி பட்சணம் சாப்பிட்டு ஓய்வா இருப்பீங்கனு நினைச்சேன் ஆனாலும் கடமையில் கண்ணா இருக்கீங்க,அருமை!
# வெளிநாட்டுக்கு போனால் போயிடும்னு யாரு சொன்னா,அங்கே தான் இன்னும் நல்லா டெவெலப் ஆகுது.
சீக்கியர்களிடம் நல்லா தெரியும், குருத்துவாராக்குள்ள விட மாட்டாங்க.
இது சாதி தாண்டி குரு யாருனும் பிரச்சினை இருக்க ஒன்னு. சன்னி,ஷியா போல.
#தீவாளி ரிலீஸ் படமெல்லாம் பார்த்து விமர்சனம் எழுதலாமே,உங்க விமர்சனம் வித்தியாசமா இருக்கும். அமீர் கான் படம் கூடவா பார்க்க மாட்டீங்க?
திரு வவ்வால்!
//தீவாளி பட்சணம் சாப்பிட்டு ஓய்வா இருப்பீங்கனு நினைச்சேன் ஆனாலும் கடமையில் கண்ணா இருக்கீங்க,அருமை!//
10 நிமிடம் முன்னால் தான் தீபாவளி பலகாரமெல்லாம் சாப்பிட்டு முடித்தேன்.....
//#தீவாளி ரிலீஸ் படமெல்லாம் பார்த்து விமர்சனம் எழுதலாமே,உங்க விமர்சனம் வித்தியாசமா இருக்கும். அமீர் கான் படம் கூடவா பார்க்க மாட்டீங்க? //
இரண்டறை மணி நேரத்தை செலவிடும் அளவு படங்கள் தரமாக இருப்பதில்லை. எனவே அதிகம் படங்கள் பார்ப்பதில்லை. ஆரம்பம் ஓரளவு நன்றாக இருப்பதாக விமரிசனம் பார்த்தேன். முடிந்தால் பார்ப்போம். அமீர்கான் படமும் நன்றாகவே இருக்கும.
'தி மெஸ்ஸேஜ்' தமிழில் வந்துள்ளதே.... பார்த்து விட்டீர்களா? அதுபற்றிய உங்களின் விமரிசனத்தை எதிர்பார்க்கிறேன் உங்கள் பிளாக்கில்.
Post a Comment