Followers

Wednesday, November 13, 2013

கோமாளியாக மாறி வரும் நரேந்திர மோடி!



பிஜேபியால் பிரதமராக முன்னிறுத்தப்படும் மோடிக்கு இந்திய வரலாறு எதுவும் தெரியவில்லை என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா இந்த காணொளியில் மிக அழகாக விவரிக்கிறது. வாயை திறந்தாலே பொய்தான். இப்படி ஒரு வித்தியாசமான சைக்கோவை பிரதமராக்கிப் பார்க்க பல இந்துத்வாவினர் ஆசைப்படுகின்றனர். அவர்களுக்கே ஒரு காலத்தில் மிக ஆபத்தாக முடிவார் மோடி. ஏனெனில் தான் முன்னுக்கு வர தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள எதையும் செய்ய தயங்காதவர் மோடி. பழைய வரலாறு இதை நமக்கு தெளிவுபடுத்துகிறது. பொய் சொல்வது, தனது பேச்சை கேட்காதவர் இந்துத்வாவாதியாகவே இருந்தாலும் உடன் தீர்த்துக் கட்டி விடுவது என்று இவரது புகழ் அமெரிக்கா இங்கிலாந்து வரை பரவியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.!

இனி கோமாளியாக மாறிக் கொண்டிருக்கும் மோடியின் பேச்சின் தமிழாக்கத்தை ஹிந்து பத்திரிக்கையிலிருந்து பார்ப்போம்.

லண்டனில் இந்தியா ஹவுஸ் தொடங்கியதாக சியாமாஜி கிருஷ்ண வர்மாவுக்கு பதிலாக சியாமா பிரசாத் முகர்ஜியை புகழ்ந்தார் மோடி. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் உள்ள கேதாவில் நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியதாவது:

சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசிய சிந்தனையை வளர்க்கும் வகையில் பிரிட்டன் தலைநகரான லண்டனிலேயே இந்தியா ஹவுஸ் அமைப்பை ஏற்படுத்தியவர் சியாமா பிரசாத் முகர்ஜி. அவர் இந்திய புரட்சியாளர்களின் குரு என்று கருதப்படுகிறார். 1930-ம் ஆண்டு உயிரிழந்த சியாமா பிரசாத் முகர்ஜி, தனது அஸ்தியை பத்திரமாக வைத்திருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். குஜராத்தின் பெருமை மிகுந்த மைந்தன் சியாமா பிரசாத் ” என்றார்.

மோடி இவ்வாறு தெரிவித்துள்ளபோதிலும், அதில் உள்ள தகவல்கள் உண்மைக்கு மாறாக உள்ளன. சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தது கோல்கத்தாவில், குஜராத்தில் அல்ல. அவர் உயிரிழந்தது 1953-ம் ஆண்டு (இந்தியா சுதந்திரமடைந்த பிறகு). 1930-ம் ஆண்டில் அல்ல. அவர் உயிரிழந்த பின் மேற்கு வங்கத்தில் தகனம் செய்யப்பட்டது அவரது உடல்.

சியாமாஜி கிருஷ்ண வர்மா

உண்மையில் மோடி கூறிய பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் சியாமாஜி கிருஷ்ண வர்மாதான். சம்ஸ்கிருத பண்டிதரான அவர், குஜராத்தின் மாண்ட்வி நகரில் 1857-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி பிறந்தார். அவர்தான் லண்டனில் இந்தியா ஹவுஸ் அமைப்பை தொடங்கினார்.

வர்மாவின் அஸ்தியை ஸ்விட்சர்லாந்தி லிருந்து 2003-ம் ஆண்டு கொண்டு வர ஏற்பாடு செய்தவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவல்கள் குஜராத் மாநில சுற்றுலாத்துறை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

சியாமா பிரசாத் முகர்ஜி

ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் தொழிற்துறை அமைச்சராக பதவி வகித்த சியாமா பிரசாத் முகர்ஜி, காங்கிரஸிலிருந்து விலகி பாரதிய ஜன சங்கத்தை (பாஜகவின் தாய்க் கட்சி) 1951-ம் ஆண்டு தோற்றுவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குள் செல்ல இந்திய தேசியவாதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டார். பின்னர், சிறையில் இருந்தபோதே அவர் உயிரிழந்தார்.

உடனே திருத்திக்கொண்டார்

மோடியின் இந்தப் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சர் மணீஷ் திவாரி, “சியாமா பிரசாத் முகர்ஜி

1930-ம் ஆண்டு லண்டனில் உயிரிழந்தார் என்ற மோடியின் புதிய ஜன சங்க வரலாற்றுப் பேச்சை கேட்டு கல்லறையில் இருக்கும் முகர்ஜியே தர்மசங்கடத்துக்கு உள்ளாகியிருப்பார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதை பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “தனது உரையை முடித்த பின்பு, ஒரு நிமிடத்துக்குள் மீண்டும் மேடைக்கு வந்த மோடி, தான் தவறுதலாக கூறிவிட்டதாகத் தெரிவித்தார்” என்றார். தனது உதவியாளரிடமிருந்து வந்த குறிப்பை படித்த பின்பு, தனது தவறை ஒப்புக் கொண்டு மோடி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் மட்டுமல்ல சில நாள்களுக்கு முன்பு தக்சசீல பல்கலைக்கழகம் இருந்தது பிகாரில் என்று மோடி கூறினார். உண்மையில் இன்றைய பாகிஸ்தான் பகுதியில்தான் அந்த பல்கலைக்கழகம் இருந்தது. - டெல்லி

பிரதமர் கனவை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, சிறுபான்மையினரை கொல்வதை தொழிலாக வைப்பதை தூரமாக்கி இந்திய வரலாறுகளை சிறிது படிக்க ஆரம்பித்தால் அது மோடிக்கும் பிஜேபிக்கும் நல்லது.

4 comments:

Anonymous said...

காரைக்குடி: சாமி கனவில் வந்து, 'உன் மனைவி இறந்தால் தான் நீ நன்றாக இருப்பாய்' என கூறியதாக கூறி , மனைவியை கொலை செய்த முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடி, என்.புதூர், வீரையன்காண்மாய் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம், 70, இவரது மனைவி நாகம்மாள், 60. இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 12 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையி்ல், கடந்த சில நாட்களாக, 'சாமி கனவில் வந்து எனது மனைவி இறந்தால் தான் நான் நன்றாக இருப்பேன் எனறு கூறுகிறது. எனவே, மனைவியை கொல்லப் போகிறேன்' என்று கூறிக் கொண்டு திரிந்தார். இந்நிலையி்ல், இன்று காலை நாகம்மாள், கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற பரமசிவம், மறைவான இடத்தில் நாகம்மாளை சரமாரியாக கத்தியால் குத்தினார். பின், தப்பி ஓடிவிட்டார். அருகில் இருந்தவர்கள் நாகம்மாளை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இது குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


http://www.dinamalar.com/news_detail.asp?id=849373

Unknown said...

நைஜீரியாவில்

1. உலகம் உருண்டை என்று சொன்ன மாணவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டு வைத்து கொன்ரனர்

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

//1. உலகம் உருண்டை என்று சொன்ன மாணவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டு வைத்து கொன்ரனர் //

நரேந்திர மோடியையல்லவா கோமாளி என்று சொன்னேன்! :-)

குர்ஆன் இந்த பூமியானது உருண்டையாக இருப்பதாகவே சொல்கிறது. இதற்கு மாற்றமான கருத்தைக் கொண்டவர்கள் நிச்சயமாக முஸ்லிமாக இருக்க முடியாது. நீங்கள் பகிர்ந்தது தவறான செய்தி என்பது உங்களுக்கே தெரியும். இந்துத்வாவாதிகளுக்கு பொய் சொல்வது சகஜம்தானே! ஹி...ஹி...

Anonymous said...

புதுடெல்லி: பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நாட்டின் வரலாறு பற்றி ஒன்றும் தெரியாது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும் நரேந்திர மோடிக்கு நாட்டின் வரலாறு குறித்து பாரதிய ஜனதா பாடம் நடத்த வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இவ்வாறு கூறியுள்ளார். நரேந்திர மோடியை எப்படி பாரதிய ஜனதா பிரதமர் பதவியில் அமர வைக்க போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரதிய ஜனதாவில் சிறந்த தலைவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதையே இதுகாட்டுகிறது என்று அவர் விமர்சனம் செய்தார். இதனிடையே சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, சட்டீஸகர் மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி வழங்குவதை தங்களது சொந்த பணத்திலிருந்து வழங்குவதை போல சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் விளம்பரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. குஜராத் வளர்ச்சி பற்றி பெருமையாக பேசிக் கொள்ளும் மோடி, அதற்கான பணம் அவரது தாத்தா வீட்டிலிருந்து வருகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=68240