'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, November 24, 2013
'மோடி மீது சிபிஐ விசாரணை தேவை' - பிரதீப் சர்மா ஐ.ஏ.எஸ்
இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அந்த மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து அவர் இப்போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதனுடன் குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவும் தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் சிங்காலும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 150 பக்க அறிக்கையையும் அவர் இணைத்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டில் பெங்களூரைச் சேர்ந்த 27 வயது பெண் பொறியாளரை குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் பின்தொடர்ந்து வேவு பார்த்ததாக கோப்ராபோஸ்ட், குலைல் ஆகிய இணையதள ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன. குஜராத் மேலிட உத்தரவின்பேரிலேயே இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக அந்த இணையதளங்கள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், குஜராத் அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா, இளம்பெண் விவகாரம் காரணமாகவே தன் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கோப்ராபோஸ்ட் வெளியிட்டுள்ள தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நரேந்திர மோடி, பெங்களூர் பெண் குறித்த விவகாரம் எனக்குத் தெரியும். அதன் காரணமாகவே என் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதை தவிர எனது தம்பி குல்தீப் சர்மா, குஜராத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றுகிறார். 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பல்வேறு தவறான செயல்பாடுகளை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இதுவும் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம். என் மீதான அனைத்து வழக்குகளையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தனது மனுவில் பிரதீப் சர்மா கோரியுள்ளார்.
இதனிடையே, தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியி ருப்பது:
2004-ம் ஆண்டில் பவ நகரில் நடைபெற்ற பூங்கா திறப்பு விழாவில் முதல்வர் மோடி பங்கேற்றார். அந்த விழாவில்தான் பெங்களூர் பெண் பொறியாளரை முதல்வருக்கு நான் அறிமுகம் செய்தேன். அதன்பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.
தனது மகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக அவரது தந்தை அறிக்கை வெளியிட்டிருப்பதில் உண்மை இல்லை. மிரட்டலின்பேரிலேயே அவர் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.
தகவல் உதவி
தி ஹிந்து, என்டிடிவி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
1. டாட்டாவின் நானோ திட்டத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.900க்கு தரப்பட்டது. அது டாட்டா குழுமம் அடித்த ஜாக்பாட் ரூ.33,000 கோடி.
2. அதானி குழுமத்திற்கு முந்த்ரா துறைமுகம் மற்றும் முந்த்ரா விசேட பொருளாதார மண்டலம் உருவாக்கிட நிலம் சதுர அடி/ ச.மீ. ஒன்றுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு அதாவது வெறும் 10 பைசாவிற்கு தரப்பட்டது. இதனை அதானி குழுமம் பின்னர் சதுர மீட்டர் ரூ.100க்கு விற்று கொழுத்த இலாபம் பார்த்தனர். இந்த விற்பனை சட்டவிரோதமானது.
3. கே.ரஹேஜா என்ற ரியல் எஸ்டேட்டுக்கு முக்கிய பகுதியில் ஒரு ச.மீ. ரூ.470 வீதம் 3.76 லட்சம் சதுர மீட்டர் விற்கப்பட்டது. அதற்கு அருகாமையில் விமானப்படை நிலம் கேட்டபொழுது ஒரு சதுரமீட்டர் ரூ.1100 என கூறப்பட்டது.
4. நவ்சாரி விவசாயப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 65,000 ச.மீட்டர் நிலம் சத்ராலா ஓட்டல் குழுமத்திற்கு விடுதிகட்ட தாரைவார்க்கப்பட்டது. இதனால் குஜராத் அரசுக்கு இழப்பு ரூ. 426 கோடி.
5. அண்டை நாட்டின் எல்லை ஓரத்தில் உள்ள நிலம் அரசின் கைகளில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இது தேச பாதுகாப்புடன் தொடர்புடைய அம்சம். ஆனால் ஒரு பெரிய பரப்பளவு உள்ள நிலம் உப்பு நிறுவனங் களுக்கு தரப்பட்டது. இந்த நிறுவனங்கள் வெங்கையாநாயுடுவின் உறவினர்களுக்கு சொந்தமானது. வெங்கையா நாயுடு மோடியை ஏன் ஆதரிக்கிறார் என்பது புரிகிறதா?
6. எஸ்ஸார் கார்ப்பரேட் குழுமத்திற்கு 2.08 லட்சம் சதுரமீட்டர் நிலம் தரப்பட்டது. இதில் ஒரு பகுதி வனங்கள் நிறைந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இது சட்டவிரோதமானது.
7. அகமதாபாத் நகரின் அருகில் சந்தை நிலவரப்படி விலை உயர்ந்த 25,724 ச.மீ. இடம் பாரத் ஒட்டல் குழுமத்திற்கு தரப்பட்டது. இதற்காக டெண்டர் எதுவும் கோரப்படவில்லை.
8. 38 மிகப்பெரிய ஏரிகளில் மீன்படிக்கும் உரிமை டெண்டர்கள் கோரப்படாமலேயே ஒரு சிலருக்கு தரப்பட்டது.
9. ஹாசிரா எனும் இடத்தில் L&T நிறுவனத்திற்கு 80 ஹெக்டேர் அளவுள்ள நிலம் சதுர மிட்டர் ஒன்றுக்கு வெறும் ரூ.1/- அதாவது சதுர அடி வெறும் 10 பைசாவிற்கு தாரை வார்க்கப்பட்டது.
10. Vibrant குஜராத் விழாக்களில் பங்கேற்ற தொழில் அதிபர்களுக்கு நகரின் பல முக்கிய இடங்களில் சந்தையில் விலை உயர்ந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
11. கால்நடை தீவனங்கள் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து ஒரு கிலோ ரூ.48-க்கு வாங்கப்பட்டது. ஆனால் வெளிச்சந்தையில் இந்த தீவனம் ரூ. 24க்கு கிடைக்கிறது.
12. அங்கன்வாடி மையங்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்கியதில் இரு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி. இதன்காரணமாக நஷ்டம் ரூ. 92 கோடி.
13. GSPC எனும் நிறுவனம் தொடங்கிட குஜராத் அரசாங்கம் ரூ. 4993.50 கோடி முதலீடு செய்தது. இதுவரை வருமானம் ரூ. 290 கோடி மட்டுமே. ஆண்டிற்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.
14. Sujalam Sufalam yojana எனும் திட்டத்திற்கு 2003ம் ஆண்டு ரூ. 6237.33 கோடி ஒதுக்கப்பட்டது. 2005ம் ஆண்டு இத்திட்டம் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் இதுவரை பூர்த்தியாகவில்லை. குஜராத் சட்டமன்றத்தின் பொதுக் கணக்கு குழு (Public Accounts Commitee) இதனை ஆய்வு செய்த பொழுது ரூ. 500 கோடி ஊழல் நடந் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழுவில் பிஜேபி உறுப் பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
15. நரேந்திர மோடி விமானத்தில் பயணிக்கும் பொழுது குஜராத் அரசாங்கத்தின் விமானத்தையோ அல்லது ஹெலிகாப்டரையோ பயன்படுத்துவது மிகவும் சொகுகான தனியார் முதலாளிகளுக்கு சொந்தமான விமானங்களில்தான் அவர் பயணிப்பார். அதன் செலவு தொழில் அதிபர்கள் ஏற்றுக்கொள்வர்.
16. இண்டிகோல்டு எனும் நிறுவனம் சட்டத்தை மீறி 36.25 ஏக்கர் பண்ணை நிலத்தை வாங்கி அதிக விலைக்கு விற்று கொழுத்த லாபம் அடைந்தது. இதுவரை இந்த நிறுவனம் மீது நடவடிக்கை இல்லை.
17. குஜராத் அரசுக்கு சொந்தமான பிப் பவர் மின்நிலையத்தின் 49சதவீதப் பங்குகள் ஸ்வான் எனர்ஜி எனும் நிறு வனத்திற்கு விற்கப்பட்டது. இதற்காக எந்த டெண்டரும் கோரப்படவில்லை.
லோக்பால் அமைப்பை குஜராத்தில் ஏற்படுத்த கவர்னர் எடுக்கும் முயற்சிக்கு ஏன் மோடி முட்டுக்கட்டை போடுகிறார் என்பதை மக்கள் வெகு விரைவில் அறிவர்
http://www.sinthikkavum.net/2013/11/blog-post_24.html
Post a Comment