Followers

Monday, March 31, 2014

சாதி வெறியில் மற்றொரு கர்ப்பிணி பெண் கொலை!ஜாதி வெறியால் 'கர்ப்பிணி பெண்' கவுரவக்கொலை : தாய், தம்பி உள்ளிட்ட 4 பேர் கைது!

ராமநாதபுரத்தில் பரபரப்பு !!

வேறு ஜாதியைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கர்ப்பிணியான இளம்பெண்ணை, பெற்றோர்களும், உறவினர்களும் கவுரவக்கொலை செய்து புதைத்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கிராமத்தில், வைதேகி, சுரேஷ்குமாரின் குடும்பத்தினர் பக்கத்துப்பக்கத்து வீடுகளில் குடியிருந்து வந்துள்ளனர்.

சிறுவயது முதலே வைதேகிக்கும், சுரேஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், மதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் மதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

பின்னர் கேரளாவுக்குச் சென்று அங்கு குடும்பம் நடத்தி வந்தனர்.இவர்களது காதல் விவகாரம் வைதேகியின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் வைதேகி 5 மாத கர்ப்பிணியானார். இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் 2 பேரையும் குடும்பத்தில் சேர்த்துக்கொள்வதாக கூறி நம்ப வைத்து நாடகமாடியுள்ளனர்.

இருவரையும் தேனி வீரபாண்டி கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பிய சுரேஷ்குமார் தனது கர்ப்பிணி மனைவி வைதேகியை அழைத்துக்கொண்டு தேனிக்கு வந்துள்ளார்.

வைதேகியை வீட்டுக்கு அழைத்து வந்தபின் அவரை தாயார் வெங்கடேஸ்வரி, தம்பி விமல்ராஜ் மற்றும் மாமன்கள் பாக்கியராஜ், அழகர்சாமி, ஜானகிராமன் உள்ளிட்டோர்,

சுரேஷ்குமார் வேறு சாதி என்பதால் கருவை கலைத்து விடு. வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதாகவும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு மறுத்ததால் வைதேகியை கொலை செய்ய அவர்கள் திட்டம் தீட்டி உள்ளனர்.

இந்த கொலை திட்டத்தை நிறைவேற்ற கடந்த 17-ந் தேதி வீட்டில் வைதேகியை தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டனர்.

அப்போது வைதேகியின் மாமன்கள் அவர்களது நண்பர்களுடன் வீட்டுக்கு வந்து வைதேகியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை சாக்கில் வைத்து மூட்டையாக கட்டி குயவன்குடி சுனாமி குடியிருப்புக்கு பின்புறம் உள்ள வைகை ஆற்றங்கரையில் குழிதோண்டி புதைத்து விட்டுச் சென்று விட்டனர்.

இதன்பிறகு ஒன்றுமே தெரியாததுபோல் வைதேகியின் தாயார் வெங்கடேசுவரி, தம்பி விமல்ராஜ் மற்றும் மாமன்கள் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் சந்தேகம் ஏற்பட்டு சுரேஷ்குமார் விசாரித்துள்ளார்.

மனைவி குறித்து சரியான பதில் கிடைக்காததால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டார்.

இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் முன்னுக்குப்பின் முரணாக தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து வைதேகியின் தாயார் வெங்கடேஸ்வரி, தம்பி விமல்ராஜ், மாமன்கள் பாக்கியராஜ், ஜானகிராம் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

வைதேகி கொலை செய்யப்பட்ட விவரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வைதேகியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவரது தாய் மாமன் பாக்யராஜ், தம்பி விமல்ராஜ் ஆகிய 2 பேரும் அடையாளம் காட்டினர்.

அந்த இடத்தை போலீசார் தோண்டிப்பார்த்தனர். அப்போது சாக்கில் அழுகிய நிலையில் வைதேகியின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கேயே டாக்டர் பழனிக்குமார் பிரேத பரிசோதனை செய்தார். இதன்பின் அதே இடத்தில் உடல் புதைக்கப்பட்டது.

இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து வைதேகியின் தாயார் வெங்கடேஸ்வரி, தம்பி விமல்ராஜ், மாமன்கள் பாக்கியராஜ், ஜானகிராம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த கொடூரக் கொலை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி: தினத் தந்தி

பெற்ற தாயும் உடன் பிறந்த சகோதரனும் அந்த கர்ப்பிணியை கொன்று புதைத்துள்ளார்கள் என்றால் சாதி வெறி நமது சமூகத்தில் எந்த அளவு புரையோடிப் போயுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.

- நூல்: அஹ்மத்

17 comments:

சுவனப் பிரியன் said...

திரு பாலா!
//முன்னொரு காலத்தில் நீங்களெல்லாம் சுப்பனாகவும் குப்பனாகவும் மூக்காண்டியாகவும் சுப்பாண்டியாகவும் எங்களின் சகோதரர்களாக சுற்றிக்கொண்டிருந்தவர்கள் தான்.. என்பதை எப்போது புரிந்து கொள்வீர்கள் நண்பர்களே.//

நான் இனத்தால் திராவிடன். மொழியால் தமிழன். தேசத்தால் இந்தியன். மார்க்கத்தால் இஸ்லாமியன். இவை அனைத்திலும் எனது பங்கு சரிசமமாக உண்டு.

ஆனால் குப்பனாகவும் சுப்பனாகவும் இருந்த நான் அதே பெயரிலேயே, அதே கலாசாரத்தையும் பின்பற்றி வாழ்ந்தால் நான் இஸ்லாமியனாக மாறியதற்கு அர்த்தமே இல்லாது போயிருக்கும். சாதி விட்டு சாதி திருமணம் செய்ததால் கர்ப்பிணி பெண்ணை தாயும், சகோதரனும் மாமன்களும் சேர்ந்து அடித்து கொலை செய்து புதைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு சாதி வெறி பிடித்த சமூகத்தை வெறுத்துதான் எனது முன்னோர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இப்படிப்பட்ட ஒரு சாதி வெறியோடு கூடிய சமூகத்தில் நான் இரண்டற எப்படி கலப்பேன்?
http://suvanappiriyan.blogspot.com/2014/03/blog-post_31.html

சாதி வெறியற்ற ஒரு சமூகமாக இந்த தமிழ் சமூகம் மாறும் போது எனது பெயரும் தமிழ் பெயராக பரிணமிக்கும். இந்த சமூகத்தோடு ஒன்றர கலக்கவும் செய்வேன். இதற்கு இஸ்லாம் எந்த தடையையும் விதிக்கவில்லை. அது வரை எனது தொப்புள் கொடி உறவுகளிடமிருந்து சற்று தூரமாக இருக்கிறேன். அவர்களின் சாதிப் பற்று என்னையும் பாதித்து விடாமல் இருப்பதற்காக!

அதீத தமிழ் பற்றால் இன்னும் அதிகமாக இந்து சமூக பழக்க வழக்கங்களோடு நான் கைகோர்த்தால் கிறித்தவத்தை ஆரியம் விழுங்கியது போல் இஸ்லாத்தையும் விழுங்கி விடும். எனவேதான் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கிறோம்.

ஆனந்த் சாகர் said...

//அதீத தமிழ் பற்றால் இன்னும் அதிகமாக இந்து சமூக பழக்க வழக்கங்களோடு நான் கைகோர்த்தால் கிறித்தவத்தை ஆரியம் விழுங்கியது போல் இஸ்லாத்தையும் விழுங்கி விடும். எனவேதான் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கிறோம்.//

மற்ற மதங்களை, கலாச்சாரங்களை இஸ்லாம் என்ற பயங்கரவாத அரசியல் இயக்கம் கபளீகரம் செய்யாமல் இருப்பதற்காக காஃபிர்கள் முஸ்லிம்களோடு மிகவும் எச்சரிக்கையோடு இருக்கிறார்கள்.

ஆனந்த் சாகர் said...

//சாதி வெறியற்ற ஒரு சமூகமாக இந்த தமிழ் சமூகம் மாறும் போது எனது பெயரும் தமிழ் பெயராக பரிணமிக்கும். //

முஸ்லிம்கள் தங்கள் மத வெறியை விட்டுவிட்டு ஹிந்து சமுதாயத்தில் உள்ள சாதி வெறியை பற்றி பேசட்டும்.

ஆனந்த் சாகர் said...

//சாதி விட்டு சாதி திருமணம் செய்ததால் கர்ப்பிணி பெண்ணை தாயும், சகோதரனும் மாமன்களும் சேர்ந்து அடித்து கொலை செய்து புதைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு சாதி வெறி பிடித்த சமூகத்தை வெறுத்துதான் எனது முன்னோர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இப்படிப்பட்ட ஒரு சாதி வெறியோடு கூடிய சமூகத்தில் நான் இரண்டற எப்படி கலப்பேன்?//

சுன்னி இஸ்லாமிய வெறி பிடித்த நீங்கள் ஷியா இஸ்லாமியர்களை உங்கள் பள்ளிவாசலுக்குள் அவர்கள் சுன்னத் வழியில் தொழுகை நடத்த அனுமதிக்க தயாரா? அப்படியே அஹ்மதியா முஸ்லிம்களையும் அனுமதிக்க தயாரா? அவர்களோடு திருமண பந்தமும் வைத்துக்கொள்ள உங்கள் சுன்னி இஸ்லாமிய வெறி கூட்டம் தயாரா? இல்லையென்றால், உங்களுக்கு ஹிந்து சமுதாயத்தில் உள்ள சாதி அமைப்பை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.

ஆனந்த் சாகர் said...

//அது வரை எனது தொப்புள் கொடி உறவுகளிடமிருந்து சற்று தூரமாக இருக்கிறேன்.//

உங்கள் மதவெறி கூட்டத்திலிருந்து நாங்களும் எச்சரிக்கையாக விலகி இருக்கிறோம்.

// அவர்களின் சாதிப் பற்று என்னையும் பாதித்து விடாமல் இருப்பதற்காக!//

உங்கள் கூட்டத்தின் மத வெறி எங்களையும் பாதித்து விடாமல் இருப்பதற்காக!

ஆனந்த் சாகர் said...

//இந்த சமூகத்தோடு ஒன்றர கலக்கவும் செய்வேன்.//

நீங்கள் முஹம்மதின் அடிமையாக இருக்கும்வரை எங்களுடன் சேராமலிருப்பதே எங்களுக்கு நல்லது.

ஆனந்த் சாகர் said...

//இப்படிப்பட்ட ஒரு சாதி வெறியோடு கூடிய சமூகத்தில் நான் இரண்டற எப்படி கலப்பேன்?//

நீங்கள் எல்லாம் ஒதுங்கியே இருந்து எதையாவதை பிதற்றிக்கொண்டே இருங்கள்.

Anonymous said...

சுவனபிரியர்,
சாதி வெறியோடு கூடிய சமூகத்தில் நீர் கலக்க விரும்பாதது போலவே மூளை சலவை
செய்யப்பட்டு மத வெறி ஊட்டப்பட்ட உமது இனத்தை நாங்களும் வெறுக்கவே
செய்கிறோம். உமது தொப்புள் கொடி உறவுகளிடம் இருந்து நீர் விலகி இருப்பதை
விட உமது கூட்டம் ஒட்டு மொத்தமாக இந்த காபிர் நாட்டை விட்டு போய்விடுவது
அல்லவா சிறப்பாக இருக்கும்.

Anonymous said...

சாதி
வெறி என்பது மனித குலத்திற்கே தீமையான ஒன்று என்பதை யாரும் மறுக்க
முடியாது. ஆனால் உலக மகா மத வெறியர்கள் ஏதோ அவர்கள் உத்தமர்கள் போல 'சாதி
வெறி, சாதி வெறி' என்று ஊளையிடுவது தான் உலக மகா நகைச்சுவை.

சுவனப் பிரியன் said...

//உமது தொப்புள் கொடி உறவுகளிடம் இருந்து நீர் விலகி இருப்பதை
விட உமது கூட்டம் ஒட்டு மொத்தமாக இந்த காபிர் நாட்டை விட்டு போய்விடுவது
அல்லவா சிறப்பாக இருக்கும்.//

எனது தாய் நாட்டை விட்டு என்னை வெளியே போ என்று சொல்வதற்கு இந்த நாட்டில் எவனுக்கும் அதிகாரம் இல்லை.

ஆனந்த் சாகர் said...

//எனது தாய் நாட்டை விட்டு என்னை வெளியே போ என்று சொல்வதற்கு இந்த நாட்டில் எவனுக்கும் அதிகாரம் இல்லை.//

இந்த மண்ணின் கலாச்சாரத்தை அழித்து அரேபிய காட்டுமிராண்டி கலாச்சாரத்தை இங்கே நிர்மாணிக்க வேலை செய்துகொண்டிருக்கும் உங்கள் துரோக கூட்டத்திற்கு இந்த புண்ணிய பூமி தாய் நாடுமல்ல; தந்தை நாடுமல்ல. உங்கள் கூட்டம் உங்கள் எஜமான நாட்டுக்கு ஓடிப்போவது எங்களுக்கு, இந்த புண்ணிய பூமிக்கு நல்லது.

சுவனப் பிரியன் said...

//இந்த மண்ணின் கலாச்சாரத்தை அழித்து அரேபிய காட்டுமிராண்டி கலாச்சாரத்தை இங்கே நிர்மாணிக்க வேலை செய்துகொண்டிருக்கும் உங்கள் துரோக கூட்டத்திற்கு இந்த புண்ணிய பூமி தாய் நாடுமல்ல; தந்தை நாடுமல்ல. உங்கள் கூட்டம் உங்கள் எஜமான நாட்டுக்கு ஓடிப்போவது எங்களுக்கு, இந்த புண்ணிய பூமிக்கு நல்லது.//

இந்த மண்ணின் கலாசாரம் என்பது என்ன?

பார்பனர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். மற்ற சாதியினர் சூத்திரர்கள் என்ற இழி பெயரை சுமக்க வேண்டும்.

கணவன் இறந்தால் சதி என்ற பெயரில் மனைவி தீயில் புக வேண்டும்.

தேவரடியார்கள் என்ற பெயரில் இளம் பெண்களை கோவிலுக்கு நேர்ந்து விட்டு பலரும் அனுபவிக்க வேண்டும்.

சாதி வெறியில் சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் பெற்ற தாயே தனது மகளை கொன்று விட்டு சாதி வெறியை நிரூபிக்க வேண்டும்.

சாமியை பார்பனர் மட்டுமே நெருங்க முடியும். சூத்திராள் அனைவரும் தூரமாக நின்று சாமியை தரிசிக்கலாம்.

மனுதர்மம் போன்ற குப்பைகள் இந்நாட்டை ஆட்சி செலுத்துவதாக இருக்க வேண்டும்.

இதுதானே இந்த நாட்டின் கலாசாரம். இஸ்லாம் வளர்வதால் ஆனந்த் சாகர் போன்ற மேட்டுக்குடி மக்களின் ஆளுமை சரிந்து வருவதை நாம் பார்த்து ரசிக்கிறோம். இது மேலும் அதிகரிக்கும். பெரியாராலேயே முடியாத புரட்சியை இன்னும் சில ஆண்டுகளில் இந்த மண்ணில் இஸ்லாம் சாதித்துக் காட்டும்.

ஆனந்த் சாகர் said...

//இந்த மண்ணின் கலாசாரம் என்பது என்ன?

பார்பனர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். மற்ற சாதியினர் சூத்திரர்கள் என்ற இழி பெயரை சுமக்க வேண்டும்.

கணவன் இறந்தால் சதி என்ற பெயரில் மனைவி தீயில் புக வேண்டும்.

தேவரடியார்கள் என்ற பெயரில் இளம் பெண்களை கோவிலுக்கு நேர்ந்து விட்டு பலரும் அனுபவிக்க வேண்டும்.

சாதி வெறியில் சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் பெற்ற தாயே தனது மகளை கொன்று விட்டு சாதி வெறியை நிரூபிக்க வேண்டும்.

சாமியை பார்பனர் மட்டுமே நெருங்க முடியும். சூத்திராள் அனைவரும் தூரமாக நின்று சாமியை தரிசிக்கலாம்.

மனுதர்மம் போன்ற குப்பைகள் இந்நாட்டை ஆட்சி செலுத்துவதாக இருக்க வேண்டும்.

இதுதானே இந்த நாட்டின் கலாசாரம்.//

ஹிந்து சமுதாயத்தில் பிற்காலத்தில் ஏற்பட்டுவிட்ட தீமைகளை ஹிந்துக்களே தீர்த்துக்கொள்வர். ஹிந்து மதம் இயற்கை நியதியின்படி சிந்தனை பரிணாமத்திற்கு உட்பட்டது. எனவே பரிணாம வளர்ச்சியில் காலப்போக்கில் அது தீமைகளை ஒழித்து புது பொலிவு பெறும். அதை நிறைவேற்ற புது புது ஆசாரியர்கள் தோன்றி உண்மைகளை போதிப்பர்.

அரேபியனின் செருப்பை நக்கிக்கொண்டிருக்கும் அரேபிய அடிமைகள் ஹிந்து மதத்தை, ஹிந்து கலாச்சாரத்தை பற்றி நீலிக்கண்ணீர், முதலைக்கண்ணீர் எல்லாம் சிந்த வேண்டிய அவசியம் இல்லை.

சுவனப் பிரியன் said...

//அரேபியனின் செருப்பை நக்கிக்கொண்டிருக்கும் அரேபிய அடிமைகள் ஹிந்து மதத்தை, ஹிந்து கலாச்சாரத்தை பற்றி நீலிக்கண்ணீர், முதலைக்கண்ணீர் எல்லாம் சிந்த வேண்டிய அவசியம் இல்லை.//

அதெப்படி? என் தொப்புள் கொடி உறவுகளை நட்டாற்றில் விடலாமா? 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அந்த மக்களையும் எங்களைப் பொல நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்க வைக்க வேண்டாமோ?

முருகானந்தம் என்ற ஒரு சூத்திரன் அப்துல்லாவாக மாறியவுடன் எந்த பார்பனனாவது 'அப்துல்லா சூத்திரன்' என்று கூப்பிட நா எழுமா? சிந்திக்கவும்.

ஆனந்த் சாகர் said...

//இஸ்லாம் வளர்வதால் ஆனந்த் சாகர் போன்ற மேட்டுக்குடி மக்களின் ஆளுமை சரிந்து வருவதை நாம் பார்த்து ரசிக்கிறோம்.//

உங்களுடைய தமாஷை நாங்களும் ரசிக்கிறோம்.

//இது மேலும் அதிகரிக்கும். பெரியாராலேயே முடியாத புரட்சியை இன்னும் சில ஆண்டுகளில் இந்த மண்ணில் இஸ்லாம் சாதித்துக் காட்டும்.//

மூடி மறைக்கப்பட்டு வந்த முஹம்மதுவை பற்றிய, இஸ்லாத்தை பற்றிய உண்மைகள் உலகெங்கும் வெளிப்பட தொடங்கிவிட்டது. முஸ்லிம்களால் இனி மேலும் பொய்களாலும், பயங்கரவாத செயல்களாலும் இந்த உண்மைகள் வெளிப்படுவதை தடுக்க முடியாது. இந்த நூற்றாண்டுதான் இஸ்லாத்துக்கு கடைசி நூற்றாண்டு.

உங்கள் கூட்டம் இஸ்லாம் வளருகிறது என்று வெறுமனே கத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

ஆனந்த் சாகர் said...

//அதெப்படி? என் தொப்புள் கொடி உறவுகளை நட்டாற்றில் விடலாமா? //

அந்நிய பயங்கரவாத கலாச்சாரத்துக்கு அடிமையாகிவிட்ட உங்கள் கூட்டத்தோடு முஸ்லிமல்லாதோருக்கு எந்த தொப்புள் உறவும் இல்லை, அக்குள் உறவும் இல்லை!

//'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அந்த மக்களையும் எங்களைப் பொல நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்க வைக்க வேண்டாமோ?//

ஏன் அவர்களையும் பயங்கரவாதிகளாக ஆக்கி சாகடிக்கவா? உங்கள் கூட்டம் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டுக்கு சாபக்கேடாகவே இருக்கிறீர்கள். நோய் பரப்பும் கிருமிகளை போலவே மற்றவர்களையும் உங்களை போல மாற்றுவதற்கு துடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆனந்த் சாகர் said...

//முருகானந்தம் என்ற ஒரு சூத்திரன் அப்துல்லாவாக மாறியவுடன் எந்த பார்பனனாவது 'அப்துல்லா சூத்திரன்' என்று கூப்பிட நா எழுமா? சிந்திக்கவும்.//

பட்டானி, லப்‌பை, சய்யது, மரைக்காயர், மாப்பிள்ளை போன்ற உங்கள் ஜாதிகளில் எந்த ஜாதியில் அவர் சேருவார்? சுன்னி இஸ்லாத்தில் சேருவாரா அல்லது ஷியா இஸ்லாத்தில் சேருவாரா? அல்லது அஹ்மதியா முஸ்லிமாக மாறுவாரா? பஹ்லவி முஸ்லிமாக மாறுவாரா அல்லது போஹ்ரா முஸ்லிமாக மாறுவாரா?

சுன்னி இஸ்லாத்தில் சேர்ந்தால், அவர் சுன்னத் ஜமாத்தில் சேருவாரா அல்லது தவ்ஹீத் ஜமாத் என்று சொல்லிக்கொள்கிற அஹ்லே ஹதீஸ் கூட்டத்தில் சேருவாரா? அல்லது சமீபத்தில் தோன்றிய அஹ்லே குரான் கோஷ்டியில் சேருவாரா? அவர் தப்லீக் ஜமாத்தில் சேர்ந்தால் சுன்னத் ஜமாத்காரர்கள் அதை விரும்புவார்களா?

எந்த ஜாதியில், ஜமாத்தில், கூட்டத்தில் முருகானந்தம் சேர்ந்தாலும் அவர் இறக்கும்வரை அவரை நவ முஸ்லிம் என்றுதானே அழைப்பீர்கள்? அவரின் நிலை நிலை பரிதாபம்தான்!