Followers

Thursday, March 27, 2014

பண்டிட் ரவி சங்கர் முகமது நபியைப் பற்றி கூறுகிறார்!பவிஷ்ய புராணா

வேற்று நாட்டைச் சேர்ந்த வேற்று மொழி பேசக் கூடிய ஆன்மீகவாதி தன் தோழர்களோடு தோன்றுவார்.அவர் பெயர் முகமத். இவர்கள் அனைவரும் பாலைவனப் பிரதேசத்தில் தோன்றுவார்கள். இவர் மனிதருக்கெல்லாம் முன் மாதிரியாக திகழ்வார்.

- பவிஷ்ய புராணா - ப்ரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - சுலோகம் அய்ந்திலிருந்து எட்டு வரை.

மிகத் தெளிவாக முகமது நபி வருகையைப் பற்றி இங்கு சொல்லப் படுகிறது.

பவிஸ்ய புராணம்

'இந்த வேற்று நாட்டுத் தூதர் அரபுலகம் அனைத்தையும் தமது ஆளுகையின் கீழ்க் கொண்டு வருவார். ஆரிய தர்மம் அவரது நாட்டில் காணப்படாது.பல தெய்வ வணக்கம் ஒழிக்கப்படும்அவருக்கு பல எதிரிகள் உண்டாவார்கள்.அனைவரையும் வெற்றிக் கொண்டு உண்மையை நிலை நாட்டுவார்.அவர்கள் தாடி வைத்திருப்பார்கள்.மாமிசத்தை சாப்பிடுவார்கள்.பன்றிக் கறியை சாப்பிட மாட்டார்கள். வேதம் அனுமதித்த அனைத்தையும் சாப்பிடுவார்கள். பிரார்த்தனைக்காக அழைப்பும்(பாஙகு) கொடுப்பார்கள். அவர்கள் முசல்மான் என்று அழைக்கப் படுவார்கள்.

பவிஸ்ய புராணா - பிரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - ஸ்லோகம் பத்திலிருந்து இருபத்தி ஏழுவரை.

அது எப்படி இவ்வளவு துல்லியமாக பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்ல முடியும் என்ற கேள்வி நமக்கெல்லாம் வரும். அதற்கு இறைவன் குர்ஆனிலேயே பதிலும் அளிக்கிறான்.

'பூமியிலும் வானத்திலும் அணு அளவோ அதை விடச் சிறியதோ அதை விடப் பெரியதோ உனது இறைவனை விட்டும் மறையாது. அவை தெளிவான பதிவேட்டில் பதியப்பட்டிருக்கிறது.

- குர்ஆன் 10 :61

இந்த வசனத்தின் மூலம் எத்தனை நபி வருவார். எங்கெங்கெல்லாம் வருவார் அவர்களின் சட்டங்கள் என்பன போன்ற விபரங்களை ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டுள்ள பதிவேட்டிலிருந்து எடுத்து இறைவன் கொடுத்திருக்கிறான் என்று விளங்க முடிகிறது. இந்து மத வேதங்கள் முன்பு இறைவனால் மனிதனுக்கு அருளப்பட்டவையே! ஆனால் வாய் வழியாகவே நீண்ட காலம் வந்ததால் அந்த வேதங்களில் பல இடைச் செருகல்கள் ஏற்பட்டு அதன் உண்மைத்துவத்தை இழந்து விட்டன. அந்த இறைச் செய்திகளில் ஒன்றிரண்டு இன்றும் இந்து கிறித்தவ வேதங்களில் உள்ளது. அதைத்தான் பண்டிட் ரவி சங்கரும் உறுதி செய்கிறார்.

6 comments:

ஆனந்த் சாகர் said...

புராணங்கள் கட்டுக்கதைகள். அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. கடவுள் மீன்(மச்சாவதாரம்), பன்றி(கூர்மாவதாரம்) உட்பட பல அவதாரங்களை எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இவற்றை எல்லாம் நம்ப மறுக்கும் மூளையற்ற உங்கள் மூமின் கூட்டம், பாவிஷ்ய புராணத்தில் இருக்கும் இந்த ஸ்லோகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதை முஹம்ம்துவின்மேல் திணித்து, திரித்து பைத்தியக்கார நடனம் ஆடுவது கேலிக்கூத்து.

ஆனந்த் சாகர் said...

ரவி ஷங்கருக்கு முஹம்மதை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் அவ்வளவாக தெரியாது. ஒரு விஷயத்தை பற்றி நான்கு தெரிந்து கொள்ளாமல் அதை பற்றி கருத்து சொல்வதை, குறிப்பாக முஹம்மதுவை பற்றி முஸ்லிம்கள் அளந்து விடுவதை ஒட்டி கருத்து கூறுவதை ரவி ஷங்கர் நிறுத்திக்கொள்வது நல்லது.

ஆனந்த் சாகர் said...

ரவி ஷங்கருக்கு முஹம்மதை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் அவ்வளவாக தெரியாது. ஒரு விஷயத்தை பற்றி நான்கு தெரிந்து கொள்ளாமல் அதை பற்றி கருத்து சொல்வதை, குறிப்பாக முஹம்மதுவை பற்றி முஸ்லிம்கள் அளந்து விடுவதை ஒட்டி கருத்து கூறுவதை ரவி ஷங்கர் நிறுத்திக்கொள்வது நல்லது.

ஆனந்த் சாகர் said...

//வேற்று நாட்டைச் சேர்ந்த வேற்று மொழி பேசக் கூடிய ஆன்மீகவாதி தன் தோழர்களோடு தோன்றுவார்.அவர் பெயர் முகமத். இவர்கள் அனைவரும் பாலைவனப் பிரதேசத்தில் தோன்றுவார்கள். இவர் மனிதருக்கெல்லாம் முன் மாதிரியாக திகழ்வார்.//

முஹம்மதை ஆன்மீகவாதி என்று கூறுவது கேலிக்கூத்து. ஆன்மீகத்துக்கும் முஹம்மதுவுக்கும் எந்த சம்பந்தமும் இருந்ததில்லை. ஆன்மீகம் என்றால் என்னவென்று முஹம்மதுவுக்கும் தெரியவில்லை, அவரை பின்பற்றும் முஸ்லிம்களுக்கும் தெரியாது.

ஒரு மனிதன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு வேண்டுமானால் முஹம்மதை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்.

ஆனந்த் சாகர் said...

//இந்த வசனத்தின் மூலம் எத்தனை நபி வருவார். எங்கெங்கெல்லாம் வருவார் அவர்களின் சட்டங்கள் என்பன போன்ற விபரங்களை ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டுள்ள பதிவேட்டிலிருந்து எடுத்து இறைவன் கொடுத்திருக்கிறான் என்று விளங்க முடிகிறது.//

நபித்துவம்(நுபுவத்), தூதுத்துவம்(ரிஸாலத்) என்ற பொய்களின் மேல் பைத்தியமாகிவிட்டீர்கள். பைத்தியம் முற்றிப்போய் இப்படி உளறிக்கொண்டு இருக்கிறீர்கள். அந்தோ பரிதாபம்.

ஆனந்த் சாகர் said...

//இந்து மத வேதங்கள் முன்பு இறைவனால் மனிதனுக்கு அருளப்பட்டவையே!//

வஹி வருது, வஹி வருது என்று தேவைக்கு ஏற்ப புருடா விட்டு ஹிந்து மத வேத நூல்கள் எழுதப்படவில்லை.

// ஆனால் வாய் வழியாகவே நீண்ட காலம் வந்ததால் அந்த வேதங்களில் பல இடைச் செருகல்கள் ஏற்பட்டு அதன் உண்மைத்துவத்தை இழந்து விட்டன. //

முஹம்மது புருடா விட்டு உளறிக்கொட்டிய குர்ஆன் சற்றும் உண்மைத்தன்மை இல்லாதது என்பது அறிவுடன் சிந்திக்கும் எவருக்கும் நன்கு புலப்படும்.

முஹம்மது இறந்து 19 வருடம் ஆன பின்புதான் உதுமான் நியமித்த குழுவால் தற்போதைய குர்ஆன் தொகுக்கப்பட்டது. அந்த சமயத்தில் பல்வேறுபட்ட குர்ஆன்கள் மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. பல வசனங்கள், அத்தியாயங்கள் ஆகியவற்றில் பல்வேறு குர்ஆன்களுக்கிடையே பல முரண்பாடுகளும் வித்தியாசங்களும் இருந்தன.

ஆனால் உதுமான் தான் தொகுத்த குரானை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற குர்ஆன்களை எல்லாம் எரித்து அழித்துவிட்டார். இன்றைக்கு புழக்கத்தில் இருக்கும் இந்த குரானில் மட்டும் முஹம்மது சொல்லாத இடைச்செருகல்கள் எதுவும் இல்லை என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.