
இரு தலைகளும் ஒட்டிப் பிறந்த இந்த சிரிய பெண் குழந்தைகளுக்கு தற்போது ஒரு வருடமும் எட்டு மாதமும் ஆகிறது.. தாகி, யாகின் என்பது இந்த இரு சிறுமிகளின் பெயர். இந்த இரு குழந்தைகளின் மூளைப் பகுதி தனித் தனியாக இருப்பதால் பிரிக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. வசதியற்ற இந்த இரு சிறுமிகளின் பெற்றோர் சவுதி மன்னர் அப்துல்லாவிடம் குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கான உதவியை நாடினர்.
இந்த பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்ற மன்னர் இரு குழந்தைகளையும் பிரிக்கும் உத்தரவை மருத்துவ குழுவுக்கு இட்டுள்ளார். இந்த குழந்தையின் உறவினர்கள் மன்னரின் இந்த தயாள குணத்தை வெகுவாக பாராட்டினர். சுகாதார அமைச்சர் அப்துல்லா அல் ரபியாவுக்கும் தங்கள் நனறிகளை தெரிவித்துக் கொண்டனர். இறைவன் நாடினால் இந்த குழந்தைகள் இருவரும் தனித் தனியே பிரித்தெடுக்கப்பட்டு சுகமான வாழ்வு வாழ்வர். இந்த சிறுமிகளை பிரித்தெடுக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற நாமும் நமது பிரார்த்தனையை இறைவனிடம் வைப்போம்.
தகவல் உதவி
அரப் நியூஸ்
12:03:2014
1 comment:
//சிவாஜி ஒரு சரஸ்வத் பிராமணர், //
சிவாஜி ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர் என்றுதானே படித்துள்ளேன். என்னண்ணா பிளேட்டை மாத்தரேள்! :-)
//யூதர்கள் வந்த கப்பல் விபத்தில் சிக்கி ,கொங்கன் கடற்கரையில் ஒதுங்கவே அங்கேயே செட்டில் ஆகிட்டாங்களாம். பின்னாளில் கொங்கணாஸ்தா /சரஸ்வத் பிராமனர்கள், பரசுராமர் வழி வந்தவர்கள்னு வரலாறும் உருவாக்கிக்கொண்டதாக போகுது கதை.//
இந்த சம்பவம் எனக்கு புதுசு!
Post a Comment