Followers

Saturday, March 01, 2014

தொழுகைக்காக கிரிக்கெட்டை நிறுத்திய ஆப்கன் அணியினர்!



சென்ற பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் ஆசிய கோப்பை தொடர் போட்டி வங்க தேசத்தில் நடைபெற்றது. மார்ச் ஒன்றாம் தேதி வங்க தேச அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மாலை (மஹ்ரிப்) நேர தொழுகைக்கான நேரம் வந்தது. நடுவர்களிடம் தாங்கள் தொழுது கொள்ள ஐந்து நிமிட நேரம் ஒதுக்க வேண்டும் என்று ஆப்கன் அணியினர் கேட்டுக் கொண்டனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்ற நடுவர்கள் தொழுவதற்கு அனுமதி வழங்கினர். மைதானத்திலேயே கூட்டாக அந்த வீரர்கள் தங்கள் தொழுகையை நிறைவேற்றியது பார்த்தவரை மெய்சிலிர்க்க வைத்தது. கிரிக்கெட் போட்டியில் தொழுகைக்காக நேரம் ஒதுக்கியது வரலாற்றில் இதுவே முதல்முறை. இந்த போட்டியில் ஆப்கன் அணியினர் வெற்றியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்களுக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில்தான் தொழுகையை நிறைவேற்றினர் என்ற செய்தியும் ஒரு இணைய தளத்தில் உள்ளது. எப்படியோ கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற ஒரு நல்ல நிகழ்வு நடைபெற முன்னுதாரணமாக விளங்கும் ஆப்கான் கிரிக்கெட் டீமை பாராட்டுவோம்.

'நான் கிரிக்கெட்டை மிகவும் விரும்புபவன். ஆப்கன் அணி பல வெற்றிகளைப் பெற பிரார்த்திக்கிறேன்' என்று தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தற்போது தாலிபான்களிடம் அதிக மாற்றங்கள் தென்படுவதை இந்த பேட்டி உணர்த்துகிறது. துப்பாக்கிகளை தூரமாக்கி ஆப்கான் அரசியலில் தாலிபான்கள் தங்களின் முத்திரையை பதிப்பார்களாக!

நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

மேலும் அவர்கள் தம் தொழுகைகளைக் குறித்த காலத்தில் முறையோடு பேணுவார்கள்.

குர்ஆன்: 23:1,2 - 23:9


4 comments:

suvanappiriyan said...

//அது சரி பலப்பேருல அழைத்தாப்போல ,பல வகையில வணங்கிக்கலாமே, அல்லாவுக்கு சூடம் கொளுத்தி,தேங்கா உடைச்சு ,பொங்க வச்சா வேண்டாம்னா சொல்லிடுவாரு?//

தன்னை பல பெயர்களில் கூப்பிடலாம் என்று அனுமதிக்கும் இறைவன் தன்னை இப்படித்தான் வணங்க வேண்டும் என்று இறை வேதங்கள் மூலமாக கட்டளையும் இடுகிறான். எனவே அந்த இறைவன் எப்படி வணங்க வேண்டும் என்று சொன்னானோ அதன்படிதான் வணங்க வேண்டும்.

//மொகமது என்றப்பெயர் ,அவரோட தாத்தாவின் பெயர் அதனையே வைத்துள்ளார்கள்.

சிலைவணங்கியாக இருந்து ,அல்லாவை வணங்க ஆரம்பித்த பின் மொகமது என்றப்பெயரை மாற்றி வைத்துக்கொள்ளவில்லை,ஆனால் ஏன் யுவன் ஷங்கர் ,திலிப் போன்றவர்கள் அல்லாவை வணங்க ஆரம்பித்ததும் ,அப்துல் ஹாலிக், ரஹ்மான் எனப்பேரை மாத்திக்கிட்டாங்க?

மூடத்தனம் தானே?

இல்லை அல்லாவை வணங்க ஆரம்பிச்சதும் பேரு மாத்திக்கிறதுக்குனு சடங்கு எதுவும் இருக்கா? அதில் இருந்து முகமதுவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டதா?//

திலிப் குமாராகவும், யுவனாகவும் பழைய பெயர்களிலேயே இஸ்லாத்தில் தொடரலாம். அரபியில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. ராமன், முருகன் போன்ற கடவுள் பெயர்களை தவிர்த்து தருமி, அன்பழகன், அறிவழகன் என்ற பெயர்களில் இஸ்லாமியராக இருக்கலாம்.

ஆனால் தமிழகத்தில் சாதி வெறி புரையோடிப் போயிருக்கிறது. ரஹ்மான் எந்த சாதி என்று 90 சதமான தமிழர்களுக்கு தெரியாது. அடுத்த தலைமுறையில் 10 சதமான தமிழர்களுக்கும் அவரது சாதி என்ன என்பது தெரியாமல் மறைந்து விடும். யுவன் சங்கர் ராஜா பழைய பெயரிலேயே தொடர்ந்தால் அவரது சாதி அடையாளத்தை பலரும் முன்னிலைப்படுத்துவர். எனவே தான் தமிழகத்தில் இஸ்லாத்திற்கு வந்தவுடன் தங்களது பெயர்களை மாற்றிக் கொள்கின்றனர். சாதி வெறி தமிழகத்தில் குறைந்து விட்டால் பழைய பெயர்களிலேயே இஸ்லாத்தில் தொடரலாம்.

எங்கள் கிராமத்து தெரு பெயர்கள் எல்லாம் என்ன தெரியுமா? ஞாயக்கர் தெரு, கொல்லன் தெரு, பாப்பான் தெரு, செக்கடித் தெரு. ஆனால் வசிப்பது அனைவரும் இஸ்லாமியர்கள். எவருக்குமே தாங்கள் முன்னால் எந்த சாதியில் இருந்து வந்தோம் என்றே தெரியாமல் மறக்கடிக்கப்பட்டுள்ளோம். இதற்காகத்தான் பெயர் மாற்றம்.

முனாஃப் என்பது அன்றைய அரபிகள் வணங்கி வந்த ஒரு தெய்வத்தின் பெயர். சில முஸ்லிம்கள் விபரம் அறியாமல் தங்கள் குழந்தைகளுக்கு அப்துல் முனாஃப் அதாவது முனாஃப் என்ற சாமிக்கு அடிமை என்ற பொருள்பட பெயர் வைத்து விடுகிறார்கள்.

அப்துல் முகமது என்று பெயர் வைத்தாலும் தவறு. முகமதுக்கு அடிமை என்ற பொருள் தரும். முகமது நபி குர்ஆனை விளக்க வந்த தூதர்தானோயெழிய அவருக்கு முஸ்லிம்கள் அடிமை அல்ல. இதனையும் பலர் தவறாக வைக்கின்றனர்.

தற்போது அதனை நாங்கள் விளக்கி அந்த பெயர்களை மாற்றச் சொல்லுகிறோம். எனவே அரபியில் பெயர் வைத்தாலும் அர்த்தத்தோடு வைக்க வேண்டும்.

Anonymous said...

துப்பாக்கியை சுழற்றிய தாலிபான் மாவீரர்கள் இனி கிரிக்கெட் மட்டையை சுழற்ற அல்லாஹ் அருள் புரிவானாக.

suvanappiriyan said...

//அவர் அரபி மொழி அல்லாத நபராக இருந்தால் அரபி மொழியில் எழுத படிக்க தெரியாக முகமது தொடர்ந்து சந்திப்பதில் என்ன பயன்? வாதம் பொய்த்து போகிறதே//

எப்படி பொய்க்கும்? அரபி மொழி எழுதப் படிக்கத் தெரியா விட்டாலும் அந்த மொழியை சரளமாக பேசக் கூடியவர். அவரது மனைவி குடும்பத்து உறவினர்.

நமது தமிழகத்தில் வெளி மாநில ஆட்கள் நிறைய வேலை செய்கின்றனர். அவர்களுக்கு தமிழ் மொழி எழுதவோ படிக்கவோ தெரியாது. ஆனால் தமிழில் சரளமாக பேசுவர். மும்பையில் பல ஆண்டுகளாக வசிக்கும் நமது தமிழர்களுக்கு ஹிந்தி எழுதவோ படிக்கவோ தெரியாது. ஆனால் ஹிந்தியில் சரளமாக பேசுவர். இது எப்படி சாத்தியப் படுகிறதோ அதே போல்தான் முகமது நபியை சந்தித்த அந்த மத குருவின் சந்திப்பும். மேலும் அந்த மத குரு நம்பிக்கை கொண்டிருந்த கிறித்தவ நூலான பைபிளுக்கும் முகமது நபி பெற்றுத் தந்த குர்ஆனுக்கும் அடிப்படையிலேயே பெருத்த வித்தியாசம் உண்டு. இரண்டு வேதங்களையும் படித்தவர்கள் இந்த வித்தியாசத்தை நன்கு உணர்வர்.

//பின் எதற்காக அரபி குரான் தமிழர்களுக்கு? ”அவரது மொழி வேற்று மொழியாகும்” என்பதுபோல் இந்த ”குரானும் வேற்று மொழி குரானே” இதை தமிழர்கள் பின்பற்ற தக்கதல்ல.//

'இந்த குர்ஆன் மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்'
-குர்ஆன் 2:185

இங்கு இறைவன் முஸ்லிம்களை பார்த்து பேசவில்லை. தருமி, வவ்வால், ஆண்ட், யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர் ரஹ்மான், பெரியார் தாசன் என்று உலக மக்கள் அனைவரையும் நோக்கி பேசுகிறான். எனவேதான் யுவன் ஹாலிக்காக மாறியது. திலீபனை ஏ ஆர் ரஹ்மானாக மாற்றியது.

//இவ்வளவு (99) பெயரையும் கடவுள் தனக்குத்தானே வைத்துக்கொண்டாரா? இல்லை, அவரது துதி பாடிகள் (உங்களைப்போல) வைத்த பெயரா?//

இவை அனைத்தும் அந்த இறைவனுக்கு இருக்கக் கூடிய ஆற்றல்கள்: தன்மைகள். இந்த ஆற்றல்கள் அனைத்தையும் கொண்டவனே இறைவனாக இருக்க முடியும். உலகில் உள்ள அனைத்து வேதங்களும் இதனை ஒத்துக் கொள்கின்றன.

Anonymous said...

/// அல்லாவுக்கு சூடம் கொளுத்தி,தேங்கா உடைச்சு ,பொங்க வச்சா வேண்டாம்னா சொல்லிடுவாரு? ///

இதற்கு எவ்வளவு செலவு?. ஒரு பரம ஏழையால் இதெல்லாம் செய்ய முடியுமா?. ஒவ்வொரு கோயிலிலும் உண்டியல் வைத்து உங்கள் கடவுளை பிச்சைக்காரனாக்கி விட்டீர்களே, நியாயமா?

அல்லாஹ் எந்த தேவையுமற்றவன். உன்னிடமிருக்கும் அனைத்தையும் அவன் தந்தான். அவனுக்கு தர நீ யார்?
--------

என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு?

பொன்னுக்கும் பொருளுக்கும் வழி தேடினான்
கல்லை கடவுளக்கினான்
உண்டியல் வைத்தான்
பொன்னும் பொருளும் குவிந்தது
தனது அறிவை மெச்சினான்
இறுமாப்பு கொண்டான்
நான்தான் கடவுள் என்றான்
பஞ்சனையில் படுத்தான்
படுத்தவன் எழவில்லை
வெறுங்கையோடு வந்தான்
வெறுங்கையோடு போய் சேர்ந்தான்
சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது.