'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, March 30, 2014
ஒபாமாவிடம் விருது வாங்கிய சவுதி பெண்மணி!
மாஹா அல் முனீஃப் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடமிருந்து பொது சேவைக்கான நற்சான்றிதழ் பத்திரத்தை பெற்றுக் கொண்டார். நேற்று சனிக்கிழமை இந்த நிகழ்வு தலைநகர் ரியாத்தில் நடைபெற்றது. சவுதியின் உள்நாட்டு பிரச்னைகள், மற்றும் குழந்தைகள் பாலியல் தொந்தரவு போன்ற கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடியதற்காக இந்த விருது அளித்து கௌரவப்படுத்தப்பட்டுள்ளார். பொது சேவைகளில் சவுதி பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பெண்களை வீட்டிலேயே அடைந்து கிடக்கச் சொல்லி இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை. பெண்களின் கண்ணியத்துக்கு குறைவு ஏற்படாமல் அவர்கள் தங்களின் உடற்கூறுக்கு ஏற்றவாறான வேலைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு இஸ்லாம் என்றுமே தடை சொன்னதில்லை. இதனை பல சவுதி பெண்கள் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர். அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இதே போன்று பெண்கள் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்த முயற்சிக்க வேண்டும்.
தகவல் உதவி
சவுதிகெஜட்
29-03-2014
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இது இந்தியாவில் சாத்தியமா? ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் .
65 கோடி ரூபாய் செலவில் பாக் அரசு திருப்பணி செய்து பூஜைகள் நடக்கும் இடிந்து கிடந்த இந்துக் கோவில்கள்.
பாபர் மசூதி இடிப்பிற்குத் தலைமை தாங்கிய அத்வானி அடிக்கல் நாட்டி பாக் அரசு திருப்பணி செய்த இடிந்து கிடந்த இந்துக் கோவில்கள்
>>> மேலும் படிக்க
.
.
//பொது சேவைகளில் சவுதி பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. //
பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் உங்கள் கூட்டத்திற்கு இது வியப்பாக இருப்பதில் எங்களுக்கு வியப்பே இல்லை!
Post a Comment