Followers

Sunday, March 09, 2014

"அனைத்துலக பாசிஸ்டுகளே ஒன்று சேருங்கள்"



ஹிட்லரும், முசோலினியும் மரணமடையும் தறுவாயில், "அனைத்துலக பாசிஸ்டுகளே ஒன்று சேருங்கள்" என்று அறைகூவல் விடுத்ததாக தெரியவில்லை. ஆனால், 21 ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்டுகள், மொழி வேற்றுமை கடந்து ஒன்று சேர்ந்து வருகின்றனர். இலங்கையிலும், மியான்மரிலும் உள்ள, பௌத்த மத பாசிஸ்டுகள் மட்டும் சும்மா இருப்பார்களா?

இலங்கையின் பாசிச பொது பல சேனா செயலதிபர் ஞானசரா தேரோ, இன்னும் சில பிக்குகளுடன் மியான்மருக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு அவர் மியான்மர் பாசிச 969 அமைப்பின் தலைவர் விராதுவை சந்தித்துள்ளார். மியான்மரில் தனது 39 வது பிறந்த நாளை மியான்மரில் கொண்டாடிய ஞானசரா தேரோவுக்கு, விராது பிறந்தநாள் பரிசளிப்பதை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

இலங்கையை சேர்ந்த பௌத்த-சிங்கள பாசிச அமைப்பான பொதுபல சேனாவுக்கும், மியான்மரை சேர்ந்த பௌத்த- பர்மிய பாசிச அமைப்பான 969 க்கும் இடையில் கொள்கை ரீதியாக எந்த வித்தியாசமும் இல்லை. மியான்மரில் விராது மீது, ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இனப் படுகொலை, இனச் சுத்திகரிப்பு செய்த குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன. முஸ்லிம்கள் மீதான இனத் துவேஷ தாக்குதல்களுக்கு தூண்டி விட்டதை, விராது என்றைக்குமே மறுக்கவில்லை. டைம் சஞ்சிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில், "மியான்மரில் விராது ஒரு பௌத்த பின்லாடன்" என்று அழைக்கப் படுவதாக குறிப்பிட்டு எழுதியது.

இலங்கையின் ஞானசார தேரோவும், பிற பொதுபல சேனா பிக்குகளும், மியான்மரில் "கல்விச் சுற்றுலா" ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அப்படி என்ன கல்வியோ? "முஸ்லிம்கள் மீதான துவேஷத்தை வளர்ப்பது எப்படி? இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு செய்வது எப்படி?" என்று, பர்மியர்களிடம் கேட்டுப் படிக்கப் போயிருப்பார்கள். கூடவே, இலங்கையில் நடந்த, தமிழ் இனப் படுகொலையில் கிடைத்த அனுபவக் கதைகளையும் பகிர்ந்து கொண்டிருப்பார்கள்.

அடுத்த தடவை, பொதுபல சேனா பிக்குகள், இன்னொரு கல்விச் சுற்றுலாவில், குஜராத்திற்கும் சென்று வரலாம். அங்கே நரேந்திர மோடி, அவர்களுக்கு பாடம் நடத்த காத்திருக்கிறார். எது எப்படியோ, உலகம் முழுவதும் பாசிஸ்டுகள் ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர். பாஸிசத்தை எதிர்த்துப் போராட வேண்டிய மக்கள் தான் தமக்குள் பிரிந்து நிற்கின்றனர்.

நன்றி: கலையரசன்

வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் நவநிர்மாண் கட்சி போட்டியிடும் என்றும், வெற்றி பெற்று வரும் எம்.பி.,க்கள் மோடி பிரதமராக ஆதரிப்பார்கள் என்றும் ராஜ்தாக்ரே வெளிப்படையாக அறிவித்துள்ளார். ஆக மற்றொரு ஃபாஸிஸ்டும் மோடியை ஆதரிக்க ஆரம்பித்துள்ளார். உலக ஃபாஸிஸ்டுகள் ஒன்றாகும் போது வழக்கம் போல் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பிளவுகளை சந்தித்து வருவது வேதனைக்குரிய விஷயமே! 

No comments: