
டெல்லியில் உள்ள ஜாமியா ஹம்தர்த் பல்கலைக் கழகத்திற்கு ஐந்து மில்லியன் டாலருக்கான உதவியை சவுதி மன்னர் அப்துல்லா வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சி சென்ற புதன் கிழமை டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முஹம்மது பின் சவுத் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சுலைமான் அபா அல் ஹைல், இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் அல் சாதி போன்ற முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த உதவியால் பல ஆயிரம் மாணவர்கள் கல்வி சம்பந்தமான உதவிகளை பெற்றுக் கொள்வார்கள். சமீப காலமாக இந்தியாவோடு நெருங்கிய உறவுகளை பேண மன்னர் அப்துல்லா பல முயற்சிகளை எடுத்து வருகிறார். உலக அளவில் நமது நாடு மிக முக்கியத்துவம் பெறுகிறது என்பதனையே இவை எடுத்துக் காட்டுகின்றன.
வழக்கம் போல் ஜனநாயகத்தின் முக்கிய தூணான இந்திய ஊடகத் துறை இந்த செய்தியை மறைத்து தனது ஊடக நடுநிலையை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டது. :-(
தகவல் உதவி
சவுதி கெஜட்
10-03-2014
2 comments:
அப்துல்லா இந்தியன் இன்ஸ்டியுட் ஆப் டெக்னாலஜி க்கு கொடுக்க மாட்டார் .பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்திற்கு கொடுக்க மாட்டார்.அரேபிய தலைவன் இந்தியாவில் உள்ள அரேபிய அடிமைகளுக்கு உதவுகிறார் .இதில் அதிசயம் ஏதும் இல்லை. அரேபியர்கள் காபீர்களுக்கு நன்மை செய்ய மாட்டார்கள்.காபீர்கள் நன்மை அடைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள் அரேபிய மத வாதிகள். இருப்பினும் இதாவது கொடுத்தார்களே. இந்திய முஸ்லீம் சகோதரர்கள் பயன் பெறுவது குறித்து மகிழச்சிதான்.
கள்ள நோட்டு 5 லட்ச ரூபாய் கைப்பற்றப் பட்டது!
சென்னையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டுக் கொண்டிருந்த அசோக் குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவருக்கு கள்ள நோட்டு கொடுத்து உதவிய கிஷோர் குமார் தப்பி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். கிட்டத்தட்ட ஐந்து லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.
புதிய தலைமுறை செய்தி 11-03-2014
உண்மையின் உரைகல்லான தினமலரில் இந்த செய்தி வராது ஆகையால் நாமே பிரசுரித்து விடுவோம். :-)
Post a Comment