Followers

Saturday, March 01, 2014

பெண்களை இதை விட அசிங்கப்படுத்த முடியாது!கோவை பூச்சியூரில் வேட்டைக்கார சாமி ஊர்வலத்தில்தான் இந்த காட்சி. எந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்? பெண்களுக்கு இஸ்லாம் கண்ணியத்திற்காக சில கட்டுப்பாடுகளை விதித்தால் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுபவர்கள் இந்த கொடுமையை வாயளவில் தட்டிக் கேட்கவும் தயங்குகிறார்கள். சுய மரியாதை உடைய எந்த பெண்ணாவது இவ்வாறு ஆண்களால் மிதி வாங்க விருப்பப் படுவாரா? இது போன்ற கொடுமைகள் தினமும் மதத்தின் பெயரால் அரங்கேறினால் இஸ்லாத்தை நோக்கி ஓடாமல் என்ன செய்வார்கள்?

சிந்திக்க மாட்டீர்களா?

--------------------------------------------------------

இறைவனை நெருங்க எளிய வழிகாட்டும் இஸ்லாம்‬!

ஊட்டி அருகே நஞ்சநாடு என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் இரு தரப்பினரில் யார் முதலில் வழிபாடு நடத்துவது என்று ஏற்பட்ட தகராறில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.

கடவுளை வழிபடுவதில் யாருக்கு முன்னுரிமை என்ற போட்டியில் இரு உயிர்கள் பலியானது வேதனையான சம்பவம்.

மொழியால், குலத்தால், பணத்தால், நிறத்தால், தேசத்தால் பல பிரிவினையை ஏற்படுத்தி ஏற்றத்தாழ்வுகளை போதிப்பதுதான் கடவுளை வழிபட பெரும் தடையாக உள்ளது.

ஆனால் இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் இஸ்லாம் அழகான தீர்வை சொல்லித்தருகின்றது.

வழிபாட்டுத்தலத்திற்குள் யார் முதலில் வருகின்றார்களோ அவர்களுக்கு முதல் வரிசையில் முன்னுரிமை. அவ்வாறு முதலில் வருபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி; அரசனாக இருந்தாலும் சரி! முதலில் வருபவருக்கே முன்னுரிமை; அப்படி வரிசையில் நின்று வணங்கும்போதும் கூட பின்னால் நிற்பதால் இறைவனை வணங்குவதில் பின்னாடி போய்விட்டோம் என்று அஞ்சத்தேவையில்லை.

தொழுகையின் போது இறைவனுக்காக நம்முடைய நெற்றியை நிலத்தில் வைத்து அவனுக்கு சிரம் பணிவதுதான் அவனை மிகமிக அருகில் நெருங்குவது என்று அழகான ஒரு வழிகாட்டுதலை இஸ்லாம் வழங்குகின்றது.

இவ்வாறு சிரம் பணிந்து இறைவனிடத்தில் மிக அருகில் நெருங்குவதற்கு
பணம் தேவையில்லை;
பட்டம் தேவையில்லை;
பதவி தேவையில்லை;
அந்தஸ்து தேவையில்லை;

பணக்காரனும் நெருங்கலாம்; ஏழையும் நெருங்கலாம்.
வெள்ளையறும் நெருங்கலாம்; கறுப்பரும் நெருங்கலாம்.
எந்த ‪#‎மொழி‬ பேசக்கூடியவரும் நெருங்கலாம்.

இப்படி இறைவனை மிக எளிய வழியில் நெருங்க இஸ்லாம் வழிகாட்டுகின்றது.

மற்ற மதங்களிலோ இத்தகைய வழிகாட்டுதல்கள் இல்லாமல் அமைதியை தொலைத்துவிட்டு ஆன்மீகத்தை தேடி வருகின்றனர்.
கடவுளைத் தேட புறப்பட்டு அமைதியை தொலைத்தவர்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அன்பான அழைப்பு விடுக்கின்றோம்.

வாருங்கள்... எளிய வழியில் இனிய முறையில் இறைவனை நெருங்கி அவனது அன்பைப்பெறுவோம் என்று அழைக்கின்றது இன்றைய தினம் ஒரு தகவல்

video : http://thowheedvideo.com/dinam_oru_thagaval_bayan/

4 comments:

Anonymous said...

இவர்களுடைய கோயில் சுவர்களில் போய் பாருங்கள். மிருகங்களும் இவர்களுடைய பெண்களை விட்டு வைக்கவில்லை.

சுவனப் பிரியன் said...

திரு தருமி!

//ரொம்ப நாளா நச்சரிக்கிற கேள்வி ஒண்ணு இருக்கு, சுபி.

அதென்ன 23 வருஷமா வஹி வருது. ஆனால் அத்தனை ஆண்டுகளும் ஒரு மனுஷனுக்கு எழுதப் படிக்க ஒரு மொழியாளுமை இல்லைன்னா என்ன மனுஷன் அவர்? அப்படிப்பட்ட ஒரு அறிவிலியையா கடவுள் நபியா தேர்ந்தெடுப்பார்.

நாமளே தேவைன்னா சில மாதத்தில் ஒரு மொழியை எழுதப் படிக்க தெரிந்து கொள்கிறோமே... நம்மள விட நம்ம நபி அம்புட்டு மோசமா?//

"முஹம்மதே! இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்."
(அல்குர்ஆன் 29:48)

உங்கள் கேள்விக்கு அழகிய பதிலை இறைவன் கொடுப்பதை பாருங்கள். முகமது நபி எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருந்திருந்தால் பைபிளிலிருந்தும் தோராவிலிருந்தும் அனைத்து வசனங்களையும் காப்பி அடித்து விட்டார் என்று அன்றைய அரபுகள் குற்றம் சுமத்துவர். ஏனெனில் முந்தய வேதங்களின் வரலாறுகள் சில மாற்றங்களுடன் குர்ஆனில் வருகின்றன. அவர் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்பது அந்த மக்களுக்கும் நன்றாக தெரிந்திருந்தது. எனவேதான் யாரோ சொல்லிக் கொடுத்து இந்த முகமது வேதத்தை தருகிறார் என்றும் குற்றம் சுமத்தினர். அனைத்து குற்றச்சாட்டுகளும் அந்த மக்களாலேயே பொய்யாக்கப்பட்டு இஸ்லாம் வளர ஆரம்பித்தது.

எனது கம்பெனியில் பஞ்சாபை சேர்த்த ஜெஹூருத்தீன் என்ற கார்பெண்டர் வேலை செய்கிறான். ஆள் பார்க்க ஹீரோவைப் போல் இருப்பான். எந்த வேலையைக் கொடுத்தாலும் மிகக் கச்சிதமாக முடிப்பான். ஆனால் அவனது பெயரை அவனால் உருதுவில் எழுதத் தெரியாது. கேள்வி ஞானத்தில் அவன் அருகில் எவருமே செல்ல முடியாது. எனவே எழுதப்படிக்கத் தெரியாதது ஒரு குறைபாடு அல்ல. இழிவும் அல்ல.

அரபு மொழி பாண்டித்தியம் பெற்றவர்களுக்குத்தான் குர்ஆனின் வசனங்கள் எந்த அளவு உயர்ந்த நடையில் இருக்கிறது என்பதை விளங்க முடியும். அதோடு சாமான்யனுக்கும் விளங்கும் வகையில் உள்ளது. புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்கள் கூட 'குர்ஆனைப் படித்து விட்டுத்தான் நான் இஸ்லாத்தை தழுவினேன்' என்று கூறுவதைப் பார்க்கிறோம். அன்றைய அரபுகள் குர்ஆனின் வசனத்தில் உள்ள கவி ஆளுமையை கண்டு ஆச்சரியப்பட்டனர். ஆட்டையும் ஒட்டகத்தையும் மேய்த்துக் கொண்டிருந்த முகமதுக்கு இவ்வளவு கவித்துவம் வாய்ந்த பொருள் பொதிந்த வசனங்கள் எவ்வாறு கிடைக்கின்றன என்று ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

அடுத்து 'இனி எக்காலத்தில் உம்மால் எழுத படிக்க தெரிந்தவராக ஆக முடியாது' என்றும் குர்ஆன் கூறுகிறது. அவ்வாறு எழுதப் படிக்க கற்றிருந்தால் அதனை வைத்தே எதிரிகள் குர்ஆனைப் பொய்யாக்கியிருப்பர். உலக அறிஞர்கள் இன்று வரை ஆராய்ந்து ஒரு அறிவியல் குற்றத்தையோ வரலாற்றுக் குற்றத்தையோ கண்டு பிடிக்க முடியவில்லை என்பதிலிருந்து இது இறை வேதம்தான் என்ற முடிவுக்கு எவரும் வருவர்.சுவனப் பிரியன் said...

திரு ஆண்ட்!

//அரபு மொழி அல்லாதவர்களுக்கு அல்லா யார் என்றே தெரியாதே? அல்லாவின் சட்டமும் தெரியாதே பின்னர் எப்படி தெரியவைப்பது? புரிய வைப்பது?//

'அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'
குர்ஆன் 17 :110

நீங்கள் இறைவன், கடவுள் என்று எப்படி அழைத்தாலும் அது அந்த ஏக இறைவனையே குறிக்கும். நமது தமிழ் மொழியிலும் ஏக இறைவனைப் பற்றிய பல பாடல்கள் வந்துள்ளன.

'ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.'
-ரிக் வேதம் 1:164:46

அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை பிரம்மா, விஷ்ணு என்று வரிசையாக பட்டியலிடுகிறது.

-ரிக் வேதம் 2 : 1

இந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன.


இறைவனின் வல்லமையைக் காட்டக் கூடிய பல பெயர்கள் குர்ஆனில் ஆங்காங்கே வரும். இறைவனின் பண்புகளாக வரக் கூடிய சிலவற்றைப் பட்டியலிடுகிறேன் :

ரப் (அதிபதி) - பஷீர் (பார்ப்பவன்) - ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) - ஹக்கிம் (ஞானமிக்கவன்) - ஹமீது (புகழுக்குரியவன்) - ஹய்யு (உயிருள்ளவன்) - ரவூப் (இரக்கமுடையவன்) - ரஹ்மான் (அருளாளன்) - ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) - சலாம் (நிம்மதி அளிப்பவன்) - அஜீஸ் (மிகைத்தவன்) - அலீம் (அறிந்தவன்) - குத்தூஸ் (தூயவன்) - ஹாக்கிம் (தீர்ப்பு வழங்குபவன்) - மலிக் (அரசன்) - வக்கீல் (பொறுப்பாளன்)

- இது போன்று மொத்தம் 99 பண்புகளை இறைவன் ஆங்காங்கே குர்ஆனில் விவரித்துச் சொல்கிறான்.

'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக தண்டிக்கப் படுவார்கள்.'
குர்ஆன் 7 : 180

எனவே தவறு இறை வேதங்களில் இல்லை. அதனை தவறாக விளங்கிக் கொண்ட மனிதர்களிடம்தான் உள்ளது.

Anonymous said...

/// நாமளே தேவைன்னா சில மாதத்தில் ஒரு மொழியை எழுதப் படிக்க தெரிந்து கொள்கிறோமே... நம்மள விட நம்ம நபி அம்புட்டு மோசமா?//
-----

சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்களை ஒப்பிக்கிறார்கள். இவர்களால் சமஸ்கிருதத்தில் பேச முடியுமா?. குருட்டாம் போக்கில் வந்தே மாதரம், ஜனகனமன பாடுகிறார்கள். அது எந்த மொழி, என்ன அர்த்தமென்றாவது இவர்களுக்கு தெரியுமா?.

ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடமென்று பல மொழி பேசுகிறார்கள் தமிழர்கள். அந்த மொழியில் எதாவது ஒரு வரி எழுதப் படிக்கத் தெரியுமா?

அவ்வளவு ஏன்?. 200 கோடி முஸ்லிம்கள் உலகத்தில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைவருக்கும் திருக்குரான் படிக்கத் தெரியும். திருக்குரானை மனப்பாடம் செய்த முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அரபியில் நன்றாக எழுதப் படிக்கவும் தெரியும். ஆனால் எவ்வளவு பேரால் அரபியில் பேச முடியும்?

சவுதியில் வேலை செய்யும் லட்சக்கணக்கான ஹிந்துக்கள் அரபி மொழியில் சரளமாக பேசுகிறார்கள். எத்துனை பேருக்கு அரபியில் எழுதப் படிக்கத் தெரியும்?.