Followers

Friday, March 14, 2014

மலேசிய விமானத்தை மை போட்டு பார்க்கும் மூடர்கள்!மாயமான விமானத்தைத் தேடும் பணியில் பல நாட்டு கப்பல்களும், விமானங்களும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மலேசிய அரசு மந்திரவாதிகளின் உதவியை நாடியுள்ளது.

இப்ராஹிம் மத் ஸின் என்ற புகழ்பெற்ற மந்திரவாதி, கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு வரவழைத்த மலேசிய அரசு, கடந்த சனிக்கிழமை காலை காணாமல் போன விமானம் தற்போது எங்கிருக்கிறது என்பதை அறிந்து சொல்லுமாறு கூறியது. :-)

பல்வேறு மந்திரப் பொருட்களை வைத்து, மாயாமான விமானம் குறித்து இப்ராஹிம் மத் ஸின் கூறியதாவது, தற்போது அந்த விமானம் வானத்தில் பறந்து கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் நிச்சயம் அது விபத்துக்குள்ளாகி, நீருக்கடியில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் அறிந்ததும், பொதுமக்கள் பலரும், ஆதரவாகவும், எதிர்த்தும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-தினமணி 13-03-2014

“சூனியக்காரன் எங்கு சென்றாலும் ஒரு போதும் வெற்றி பெறமாட்டான்” (20:69)

‘எவன் ஜோதிடம் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை நம்புகிறானோ அவன் முஹம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தை நிராகரித்தவன் ஆவான். (அஹ்மத்)

இவ்வளவு தெளிவாக இஸ்லாமிய சட்டங்கள் இருக்க இந்த கேடுகெட்ட அயோக்கியர்களை மார்க்க அறிஞர்கள் என்று நம்பி ஒரு கூட்டம் காணாமல் போன விமானத்தை கண்டுபிடித்து தரச் சொல்கிறது.

விமானத்தை கண்டு பிடிக்க பல நாட்டு விமானங்களும் கப்பல்களும் முயற்சியை மேற் கொண்டுள்ளன. விபத்தா அல்லது தீவிரவாதிகள் செயலா? அல்லது அமெரிக்க ரஷ்ய இஸ்ரேலின் அரசியல் விளையாட்டா என்பது சில நாட்களில் தெரிந்து விடும். சொந்தங்களை பிரிந்து வாடும் உறவினர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள். அதே சமயம் இது போன்று ஏய்த்து பிழைக்கும் மத குருமார்களையும் நாம் கண்டிக்க வேண்டும். தமிழகத்தில் ஓரளவு இந்த புரட்டர்களை அடையாளம் காட்டி விட்டோம். மலேசியாவில் இது போன்ற தவ்ஹீத் இஸ்லாமிய அமைப்புகள் உண்மையை மக்களுக்கு விளக்க முயற்சிக்க வேண்டும்.


2 comments:

Anonymous said...

மனதை தொட்ட (கதைகள்) நிகழ்வுகள்.

சவுதி அரேபியாவில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு.

சவுதி அரேபியா நாட்டில் சுவாரஸ்யமான ஒரு சுயம்வர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

சவுதியில் வாழும் ஒருவர் தனது குடும்ப செலவினங்களுக்காக ஒரு பணக்காரரிடம் இருந்து சிறுகச் சிறுக சுமார் 30 லட்சம் ரியால்களை கடனாக வாங்கியிருந்தார்.

நீண்ட காலம் ஆகியும் வாங்கியவர் பணத்தை திருப்பி செலுத்தாததால் வெறுத்துப் போன பணக்காரர், போலீசில் புகார் அளித்தார். அந்நாட்டின் சட்டத்தின்படி, இது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் கடனை அடைக்கும் வரை பிரதிவாதியை சிறையில் அடைக்க நேரிடும்.

குடும்பக் கடனை அடைக்க முடியாமல் பெற்ற தந்தை சிறையில் வாடப் போவதை அன்றாடம் நினைத்து, நினைத்து அழுது தவித்த ஒரே மகள், அவரை தண்டனையில் இருந்து மீட்பதற்காக தனது இளமையை தியாகம் செய்ய தீர்மானித்தார்.

கடன் கொடுத்த 60 வயது முதியவரை இருபதே வயதான அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என் தந்தை மீதான கடனை தள்ளுபடி செய்தால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன். அந்த பணத்தை எனக்கு தந்த மஹராக கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

தனது வீட்டுக்கு வந்து, திருமணம் செய்து அழைத்து செல்லும்படி கூறிய அந்த பெண், அதற்கான ஏற்பாடுகளையும் துரிதமாக செய்தார். திருமணப் பதிவாளரை வீட்டுக்கு வரவழைத்த அவர் மணமகனின் வரவுக்காக வழி மீது விழி வைத்து காத்திருந்தார்.

சொன்ன நேரத்திற்கு சரியாக வந்த ‘மாப்பிள்ளை’ அந்த இளம் பெண்ணுடன் சுமார் ஒரு மணி நேரம் தனியாக பேசினார்.
தனக்கு ஏற்கனவே 3 மனைவியர் இருப்பதாக அவர் கூறியபோது, ‘நான்காவதாக ஒரு ஓரத்தில் இருந்து கொள்கிறேன். கடனில் இருந்து என் தந்தையை விடுவித்தால் போதும்’ என்று கெஞ்சினார்.

ஒரு முடிவுடன் வழக்கறிஞருடன் வந்திருந்த முதியவர், தான் வழங்கிய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

அத்துடன் மேலும் 3 லட்சம் ரியால் ‘செக்’கை எழுதி கையொப்பமிட்டு அவர் அந்த பெண்ணிடன் அளித்தார். ‘இதை என்னுடைய திருமண மஹராக ஏற்றுக்கொள். உன் வயதுக்கு ஏற்ற ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டு நீ மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்’ என ஆசீர்வதித்து விட்டு சென்றார்.

தந்தையை பிரிய விரும்பாமல் முதியவரான தன்னை திருமணம் செய்துக் கொள்ள முன்வந்த அந்த இளம்பெண்ணின் குடும்பப் பாசத்தையும், தியாகத்தையும் மெச்சிப் பாராட்டிய அவர், மீண்டும் இதைப் போன்ற முடிவுக்கு நீ சென்று விடக் கூடாது என்று எச்சரித்து விட்டும் சென்றார்.

சுமார் 30 லட்சம் ரியால் கடனை தள்ளுபடி செய்ததுடன், கடன்காரரின் மகளுக்கு மேலும் 3 லட்சம் ரியாலை திருமண அன்பளிப்பாக வழங்கிய அந்த முதியவரின் தயாள குணம் பாராட்டப்பட வேண்டியதே.

நன்றி,
மடவளை நியூஸ்.

Anonymous said...

மலேசிய விமானம் மாயம் - அமெரிக்க மாணவரின் அதிர வைக்கும் தியரி

டம்ளர் என்ற வலைத்திரட்டியில் ஆண்ட்ரூ என்கிற அமெரிக்க மாணவர் எழுதியுள்ள கட்டுரை பரபரப்பாகியிருக்கிறது. ஆண்ட்ரூவின் அப்பா ஒரு புரொபஷனல் பைலட். அதனால் சிறுவயதிலிருந்தே விமானம் பற்றி ஆர்வம். அதனால் மலேசிய விமானம் மாயமானதும் அது தொடர்பாக நிறைய வாசித்து அம்மாணவர் எழுதியுள்ள கட்டுரை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் அக்கட்டுரையில் உள்ள நம்பகத்தன்மை.

சில விமானங்களில் சில கோளாறுகள் ரெகுலர். அது போல போயிங் 777 விமானங்களின் முதுகில் துருப்பிடிக்கக்கூடிய கோளாறுகள் ரெகுலர்.

போயிங் 777 விமானங்களின் முதுகுப்பகுதியில் சாட்டிலைட்டை தொடர்பு கொள்ள உதவும் SATCOM Adapterகள் உள்ளன. அவை பொருத்தப்பட்டுள்ள இடங்கள் அடிக்கடி துருவேறி பிளந்து கொள்ள வாய்ப்பு உண்டாம்.

"cracking in the fuselage skin underneath the satellite communication (satcom) antenna adapter"

விமானத்தின் முதுகுப்பகுதியில் பிளவு ஏற்பட்டால் என்ன ஆகும்? விமானத்திற்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே போய், மயக்கம் ஏற்பட்டு, இறுதியில் சுவாசமே நின்று போகும்.

கிட்டத்தட்ட 120 விமானங்களில் இந்தக் கோளாறுகள் இருப்பதாக செப்டம்பர் 26, 2013ம் தேதி வெளியான FAA அறிக்கை கூறியுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு போயிங் 777 வகை விமானத்தில் 40.6 செ.மீ அளவுக்கு ஒரு பிளவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக FAA ரிப்போர்ட் ஒன்று கூறுகிறது.

மலேசிய விமானம் MH370க்கும் இதே கதி ஏற்பட்டிருக்கலாம். திடீரென பிளவு ஏற்பட்டதும் முதலில் சாட்டிலைட் தொடர்புகள் அனைத்தும் முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் ஆக்ஸிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்திருக்கும். அதைப்பற்றி உணர்வதற்குள் பைலட்டுகளும், பயணிகளும் தாங்களே அறியாமல் ஆழ்ந்த உறக்கத்துக்கும், மயக்கத்துக்கும் உள்ளாகியிருப்பார்கள்.

ஆனாலும் ஆட்டோ பைலட் நிலையில் இருந்த விமானம் தொடர்ந்து அதே உயரத்தில் பறந்திருக்கலாம். பின்னர் விமானத்துக்குள் அழுத்தம் குறைவு மற்றும் எரிபொருள் காலியானது காரணமாக கிழக்கு சைனா அல்லது பசிபிக் கடலில் விழுந்திருக்கலாம்.

PPRUNE - Professional Pilots Rumour Network என்ற ஆன்லைன் குழுத்தளம் ஒன்று உள்ளது. அங்கிருந்துதான் இந்த சிந்தனைக்கான இழையைப் பிடித்ததாக ஆண்ட்ரூ கூறியுள்ளார்.
http://selvaspeaking.blogspot.com/2014/03/blog-post_13.html?m=1