Followers

Wednesday, March 05, 2014

நரேந்திர மோடியின் சுயரூபம் வெளி வந்தது!



நேற்று குஜராத்தில் நடந்த வன்முறையை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆம் ஆத்மி தொண்டர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. எந்த காரணமும் இன்றி அரவிந்த் கெஜ்ரிவாலின் பயணம் நிறுத்தப்பட்டது. ஆம் ஆத்மி, பிஜேபி இரு கட்சி ஆட்களும் தற்போது மோதலில் உள்ளனர்.



மோடிக்கு உண்மையிலேயே பயம் வந்து விட்டது. ஏனெனில் உண்மையில் குஜராத்தில் முன்னேற்றம் என்பது மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகச் சொற்பமே! இது வரை ஊடகங்களுக்கு கோடிக் கணக்கில் பணம் கொடுத்து மோடி என்ற நச்சுக் கிருமியை பூதாகரமாக்கிக் காட்டினர். கெஜ்ரிவால் என்ன முன்னேற்றம் என்பதை நான் பார்க்கப் போகிறேன் என்று சொன்னதும் மோடிக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. கண்டிப்பாக உண்மைகளை கெஜ்ரிவால் வெளிக் கொண்டு வந்து விடுவார் என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும்.

எனவே தனது கட்சி குண்டர்களை விட்டு கெஜ்ரிவாலின் காரின் கண்ணாடிகளை உடைத்து பல ஆம் ஆத்மி தொண்டர்களை வன்முறையாக தாக்கியும் உள்ளனர். இந்த தாக்குதல் டெல்லி வரை சென்றுள்ளது என்றால் இவர்களின் நெட்வொர்க் எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். தனது மாநிலத்தை சுற்றிப் பார்க்க வரும் ஒரு அரசியல் தலைவரையே அனுமதிக்க முடியாத துர்பாக்கிய நிலையில் தற்போது மோடி உள்ளார். இவர் கையில் இந்த நாட்டை கொடுக்க துடிக்கும் மேல் சாதி பார்பனர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு தனது குஜராத் பயணம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளதாகவும், தாம் எதிர்பார்த்ததை விட குஜராத்தின் நிலை மிக மோசமாக இருப்பதாகவும் பத்திரிக்கையாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியுள்ளார். "சமி மருத்துவமனை மிகப் பெரிய ஒன்று. அங்கு நான் பார்வையிட சென்றேன். நான் எங்கெல்லாம் செல்கிறோனோ அத்தனை இடங்களையும் செல் போனில் ஒரு அதிகாரி மேலிடத்துக்கு தகவல் சொல்லிக் கொண்டே இருந்தார். மருத்துவமனை சுகாதாரமற்று 31 பெட்களோடு எந்த நோயாளிகளும் இல்லாமல் இரண்டு டாக்டர்களை கொண்டு மட்டும் நடத்தப்டுகிறது. சுகாதாரம் மோசமாக அந்த பகுதியில் இருந்ததை பார்வையிட்டேன். திடீரென்று போலீஸார் அங்கிருந்து அகன்று விட்டனர். இதற்கு மேல் எனக்கு அவர்கள் அனுமதி தர முடியாது என்று தடுத்தனர். தாக்குதலும் ஆரம்பமானது. இதை நான் விடப் போவதில்லை. 25 இடங்களில் ஆத் ஆத்மி தொண்டர் படை குஜராத் முழுக்க ஆய்வுகளை மேற் கொள்கின்றனர். உண்மையை மக்கள் மன்றத்தில் நாங்கள் கொண்டு வந்தே தீருவோம்" என்றும் சொல்லியிருப்பது அரசியல் நோக்கர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

குஜராத் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தேர்தலில் பாஜகவின் 'ABVP' சங்கத்துக்கும் காங்கிரஸ் கட்சியின் 'NSUI' மாணவர் அமைப்புக்குமிடையில் 10 இடங்களில் நடந்த தேர்தலில் 6 இடங்களில் ABVP படுதோல்வி அடைந்து விட்டது. நான்கு இடங்களில் மட்டுமே பிஜேபி வெற்றி பெற்று மற்ற ஆறில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியானது பாராளுமன்ற தேர்தலிலும் கண்டிப்பாக எதிரொலிக்கும் என்கின்றனர் நோக்கர்கள். இது மற்றொரு பெரும் பின்னடைவை மோடிக்கு ஏற்படுத்தியுள்ளது.

"கற்களால் அடி வாங்கினாலும், லத்திகளால் தாக்கப் பட்டாலும், இந்த போராட்டத்தில் நமது உயிரே போனாலும் எதற்கும் கவலைப்படாத தன்னலமற்ற தொண்டர்கள் மட்டும் என்னோடு வாருங்கள்." என்று குஜராத்தை ஆய்வு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். மோடி மிக பயங்கரமான கிரிமினல். அமீத்ஷாவின் யோசனையில் எதையும் செய்யத் துணியலாம். எனவே அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் பாதுகாப்போடு இருக்க வேண்டியது அவசியம்.

நாடு முழுக்க நூறு எம்பி சீட்டுகளையாவது ஆம் ஆத்மி கைப்பற்ற வேண்டும் என்பது எனது ஆசை. தமிழகத்தில் ஐந்து சீட்டுகளாவது இவர்களுக்கு கிடைக்க வேண்டும். ஆளும் காங்கிரஸூம், அதிமுகவும் தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வில்லையாதலால் தவ்ஹீத் ஜமாத் ஆம் ஆத்மியை ஆதரிக்க முன் வரலாம் என்பது எனது விருப்பம். நரேந்திர மோடி இந்த நாட்டின் சாபக்கேடு என்றால் அது மிகையில்லை. மோடி என்ற இந்த தீய சக்தியின் கடைசி அரசியல் அத்தியாயமாக இந்த தேர்தல் அமைய வேண்டும். பிறபடுத்தப்பட்ட மக்களும், தலித்களும், சிறுபான்மையினரும், கம்யூனிஸ்டுகளும் ஒரு அணியில் நின்று பொது எதிரி நரேந்திர மோடியை வீழ்த்த வேண்டும். நமது நாடு அமைதி பூங்காவாக தொடர இதனை நாம் அவசியம் செய்தே ஆக வெண்டும்.

8 comments:

syeed said...

நரேந்திர மோடியை வீழ்த்த வேண்டும்

Anonymous said...

http://timeforsomelove.blogspot.com/2014/03/blog-post_5.html

any comments?

suvanappiriyan said...

//http://timeforsomelove.blogspot.com/2014/03/blog-post_5.html

any comments?//

திரு வருண்!

//மதுரைத் தமிழன்: சாபிர் ஹுசேன் ஒரு இந்துத்தவா வாகக் கூட இருக்கலாம். வித்தியாசமா ஒரு நாடகம் நடத்துகிறார்..//

உண்மையே சொன்னீர்கள். இது போல் முக நூலிலும் இஸ்லாமிய பெயர்களில் பல கொண்டைகள் தீவிரவாத கருத்துக்களை பதிவிடுகின்றன. பலர் அகப்பட்டும் இருக்கிறார்கள்.

இதே யுத்திதான் சைனவிலும் நடக்கிறது. ஹேமந்த் கர்கரேயை கொல்ல பாகிஸ்தானிலிருந்து ஒருவனை மூளை சலவை செய்து இங்கு கொண்டு வரவில்லையா?

இஸ்லாத்தை கருத்தால் வெல்ல முடியாது. இந்து மதமும், கிறித்தவ மதமும் அழியாமல் இருக்க இது போன்ற தீவிரவாத செயல்களை செய்து அதற்கு இஸ்லாமிய மத சாயம் பூசுவதே தற்போது இவர்கள் கையில் எடுத்திருக்கும் சாதனம். யூதர்கள், அமெரிக்கர்கள், பார்பனர்கள்(இந்துத்வாவாதிகள்) என்று அனைவரின் இலக்கும் இஸ்லாமியர்களே! இதன் மூலம் யுவன்களும், ரஹ்மான்களும் உருவாவதை தடுத்து விடலாம் என்பது இவர்களின் எண்ணம். :-)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ''ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர¬லி) நூல்: முஸ்¬லிம் (4661)

இங்கு முஸ்லிம் என்று சொல்லாமல் அடியான் என்று பொதுவான மனிதன் என்று சொல்வதை பார்க்கிறோம். இஸ்லாம் இவ்வாறு போதித்திருக்க இதற்கு மாற்றமாக அப்பாவிகளை கொல்பவர்கள் எப்படி இஸ்லாமியராக இருக்க முடியும்?

Anonymous said...

//
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்://

பைபிள் -மத்தேயு

31 “மனிதகுமாரன் தம்முடைய மகிமையில் எல்லாத் தேவதூதர்களோடும் வரும்போது, தம் மகிமையுள்ள சிம்மாசனத்தில் அமருவார். 32 எல்லாத் தேசத்தாரும் அவர்முன் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்; ஒரு மேய்ப்பன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிப்பதுபோல், அவர் அவர்களைப் பிரிப்பார். 33 செம்மறியாடுகளைத் தம் வலது பக்கத்தில் நிறுத்துவார், வெள்ளாடுகளையோ தம் இடது பக்கத்தில் நிறுத்துவார்.

34 “பின்பு, ராஜா தம் வலது பக்கத்தில் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘என் தகப்பனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள்; உலகம் உண்டானதுமுதல் * உங்களுக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். 35 ஏனென்றால், நான் பசியாக இருந்தேன், எனக்குச் சாப்பிடக் கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், குடிக்கக் கொடுத்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னை வரவேற்று உபசரித்தீர்கள்; 36 உடையில்லாமல் இருந்தேன், எனக்கு உடை கொடுத்தீர்கள். நோயாளியாக இருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள். சிறையில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்றார். 37 அதற்கு நீதிமான்களாகிய அவர்கள், ‘எஜமானே, நீங்கள் எப்போது பசியாக இருப்பதைப் பார்த்துச் சாப்பிடக் கொடுத்தோம், தாகமாக இருப்பதைப் பார்த்துக் குடிக்கக் கொடுத்தோம்? 38 எப்போது உங்களை அந்நியராக இருப்பதைப் பார்த்து வரவேற்று உபசரித்தோம், உடையில்லாமல் இருப்பதைப் பார்த்து உடை கொடுத்தோம்? 39 எப்போது உங்களை நோயாளியாகப் பார்த்தோம் அல்லது சிறையில் வந்து பார்த்தோம்?’ என்பார்கள். 40 அதற்கு ராஜா, ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மிகச் சிறியோரான என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தாலும் அதை எனக்கே செய்தீர்கள்’ என்று பதில் அளிப்பார்.

41 “பின்பு, அவர் தம்முடைய இடது பக்கத்தில் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு விலகி, பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் தயார்படுத்தப்பட்டுள்ள என்றென்றும் அணையாத நெருப்புக்குள் போய் விழுங்கள். 42 ஏனென்றால், நான் பசியாக இருந்தேன், சாப்பிட நீங்கள் எதுவும் எனக்குக் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், குடிக்க எதுவும் தரவில்லை. 43 அந்நியனாக இருந்தேன், என்னை வரவேற்று உபசரிக்கவில்லை; உடையில்லாமல் இருந்தேன், உடை கொடுக்கவில்லை; நோயாளியாகவும் சிறைவாசியாகவும் இருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை’ என்பார். 44 அப்போது அவர்கள், ‘எஜமானே, நீங்கள் பசியாகவோ தாகமாகவோ அந்நியராகவோ உடையில்லாதவராகவோ நோயாளியாகவோ சிறைவாசியாகவோ இருப்பதைப் பார்த்து நாங்கள் எப்போது உங்களுக்குப் பணிவிடை செய்யாமல் இருந்தோம்?’ என்பார்கள். 45 அதற்கு அவர், ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மிகச் சிறியோரான என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்யவில்லையோ அதை எனக்கே செய்யவில்லை’ என்று பதில் அளிப்பார். 46 இவர்கள் நிரந்தர அழிவைப் பெறுவார்கள், நீதிமான்களோ நிரந்தர * வாழ்வைப் பெறுவார்கள்.”

எல்லோரும் நம்புங்கள், அல்லாவின் தூதர் திருவாளர் முகமது எழுதபடிக்க தெரியாதவர்,

suvanappiriyan said...

//எல்லோரும் நம்புங்கள், அல்லாவின் தூதர் திருவாளர் முகமது எழுதபடிக்க தெரியாதவர், //

பைபிளை ஏசுவுக்கு கொடுத்த இறைவன்தான் முகமது நபிக்கு குர்ஆனையும் கொடுத்தான். இரண்டு வேதங்களின் கருத்துக்களும் ஒத்துப் போவது இயற்கையே. ஆனால் பைபிளில் மனிதக் கரங்களும் புகுந்ததுதான் பிரச்னையே!

suvanappiriyan said...

சிவ குமார்!

//அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

இந்த ஒரு வசனம் போதுமே,,,,, நீங்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று நிருபிக்க//

ஒரு இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது? இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஜகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகள், அவர்களிடமுள்ள வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், அவர்கள் விளைவிக்கும் தானியங்கள், மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் அவர்கள் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளைவிக்கும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மம் அல்ல இந்த ஜகாத். மாறாக, இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

ஏழைகள், பரம ஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப்போருக்காக தங்களை அர்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், திக்கற்றோர் ஆகியோர் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாகக் கீழ்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும். முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.

முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது. முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜகாத் அல்லாத வேறு வரி விதிப்பது. இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர் பார்க்கும் நிலை ஏற்படும். வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவர். மனோரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.

ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில் அவமானம் வரி வாங்கப்படாதவர்களுக்கே. வரி வாங்கப்படாதது சட்டப்படியாக அவர்களுக்கு உரிமை இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.

தங்களிடம் மட்டும் வரி வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதாரும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.

suvanappiriyan said...

இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம். ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஜகாத் அமைந்துள்ளது.

இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும், இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும். இஸ்லாம், தன் மதச் சட்டங்களைப் பிற சமயத்தவர்கள் மீது திணித்தது என்ற குற்றச்சாட்டு எழும்.

முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது. அப்படியே விதித்தாலும் அவர்களிடமிருந்து அதைப் பெற இயலாமல் போய் விடும் என்பது மற்றொரு விளைவாகும்.

ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும் உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்கு காட்ட முடியும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். இயன்றவரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது. வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

”ஜகாத்” என்ற வகையில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே ”ஜிஸ்யா” எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விட பலமடங்கு அதிகமாக வரி செலுத்தினர். பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.

Anonymous said...

ஃபாஸிஸத்தின் இன்றைய முகம்!
அவர்கள் முதலில் காந்தியை சுட்டாரகள்
நான் வாளாவிருந்தேன்! ஏனெனில் நான் காந்திய வாதி அல்ல!
பின்னர் காமராஜரை எரிக்க வந்தார்கள்
நான் சும்மா இருந்தேன் ,
ஏனெனில் நான் கங்கிரஸ்காரன் அல்ல!
அவரகள் காமரேடுகளை அழிக்க வந்தார்கள்
நான் வேடிக்கை பார்த்தேன்
ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல
அவர்கள் முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாக வேரறுக்க வந்தார்கள்
நான் வெறுமனே இருந்தேன்
ஏனெனில் நான் இஸலாமியன் அல்ல
அடுத்து கிறிஸ்த்தவர்ரகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தாரகள்
நான் கவலைப்படவில்லை
ஏனெனில் நான் கிறித்தவன் அல்ல
இப்போது என்னை
(ஆம் ஆத்மி) தாக்குகிறாரகள்
எனக்காக குரல் கொடுக்க யாருமே இல்லை.

Zafar Rahmani @ FB