Followers

Thursday, March 27, 2014

வெளிநாட்டில் வசிப்பவர்களும் வாக்களிக்கலாம்!

வெளிநாட்டில் வசிப்பவர்களும் வாக்களிக்கலாம்!

பணி நிமித்தமாகவோ, படிப்பு காரணமாகவோ வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றமுடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். இனி அவர்களும் தங்கள் சொந்த தொகுதியில் நிற்கும், தனக்கு பிடித்த வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்.

என்.ஆர்.ஐ-கள் (வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்) வாக்களிக்கக்கூடிய முறை பற்றிய விவரங்களை தேர்தல் கமிஷனின் இந்த இணைப்பில் காணலாம் :

http://eci.nic.in/eci_main/nri/regelectors.pdf


வாக்குரிமை கோரும் 6ஏ படிவத்தை இந்த இணைப்பில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம் :

http://eci.nic.in/eci_main/forms/Form-6A.pdf

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்த 6ஏ படிவத்தை தரவிறக்கி, பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் அவர் வசிக்கும் நாட்டிலிருக்கும் தூதரக அதிகாரி ஒப்பமிட வேண்டும். பின்னர் இந்த படிவத்தை தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். தேர்தல் அதிகாரிகள் சான்றுகளை சரிபார்த்து, விண்ணப்பித்த வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க அனுமதி அளிப்பார்.

ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் நிலையில், என்.ஆர்.ஐ.களுக்கான வாக்களிக்கும் வசதி இந்திய ஜனநாயகத்தின் மாண்பை மேலும் வலுவாக்குகிறது.

உங்கள் உறவினர்கள் யாராவது வெளிநாட்டில் இருந்தால், இத்தகவலை அவர்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

நன்றி
தகவல் தந்தவர் யுவகிருஷ்ணா

2 comments:

ஹுஸைனம்மா said...

//பின்னர் அவர் வசிக்கும் நாட்டிலிருக்கும் தூதரக அதிகாரி ஒப்பமிட வேண்டும்.//

இதுக்கு எத்தனை நாள் படையெடுக்கணுமோ?

//பின்னர் இந்த படிவத்தை தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். தேர்தல் அதிகாரிகள் சான்றுகளை சரிபார்த்து, விண்ணப்பித்த வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க அனுமதி அளிப்பார்.//

எலெக்‌ஷன் முடியறதுக்குள்ள அனுமதி அனுப்பிடுவாங்களா?

இந்தளவு முயற்சி எடுக்க எல்லாராலயும் சாத்தியப்படாது. ஆதார் அட்டை, வோட்டர்ஸ் ஐடி, பாஸ்போர்ட் எல்லாத்தையும் ஒருங்கிணைச்சா, ரொம்ப சுலபமா இருக்கும்.

suvanappiriyan said...

//இந்தளவு முயற்சி எடுக்க எல்லாராலயும் சாத்தியப்படாது. ஆதார் அட்டை, வோட்டர்ஸ் ஐடி, பாஸ்போர்ட் எல்லாத்தையும் ஒருங்கிணைச்சா, ரொம்ப சுலபமா இருக்கும். //

எம்பஸியோடு நெருங்கிய தொடர்பிலிருக்கும் ஒரு சகோதரரரிடம் மேலதிக விபரம் கேட்டுள்ளேன். பார்ப்போம் என்ன பதில் வரகிறதென்று.