Followers

Tuesday, March 11, 2014

பாரத் மாதா கீ ஜே!



டெல்லி ஜந்தர் மந்தரில் பெண்கள் தினத்திற்காக ஆம் ஆத்மி பார்ட்டி ஒரு கூட்டத்தை நடத்தியது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது உடன் அவருக்கு பின்னிருந்து வந்த 38 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் 'பாரத் மாதா கீ ஜே! பாரத் மாதா கீ ஜே!' என்று கோஷத்தை எழுப்பியவாறு யோகேந்திர யாதவ்வின் முகத்தில் கரியை பூச ஆரம்பித்தார். இதனை எவரும் எதிர் பார்க்கவில்லை. அருகில் இருந்த ஆம் ஆதிமி தொண்டர்கள் உடன் அவனை பிடித்து பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத யோகேந்திர யாதவ் பிறகு சுதாரித்துக் கொண்டார்.

ஆம் ஆத்மி வழக்கமாக அணியும் தொப்பியை அணிந்து கொண்டு யாரும் சந்தேகப்படாத அளவு முன்னேறி தனது காரியத்தை இந்த இளைஞன் செய்து முடித்துள்ளான். அவன் தனது செயலை செய்யும் போது 'பாரத் மாதா கீ ஜே' என்று கூப்பாடு போடுவதையும் பார்க்கிறோம்.

பாரத் மாதா யார்? இவருக்கு என்ன உருவம்? இவரால் இந்த நாட்டுக்கு என்ன நன்மை? ஒன்றும் இல்லை. பிஜேபியும் இந்துத்வாவும் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒரு கற்பனை பாத்திரம் தான் இந்த 'பாரத் மாதா'.

பிறந்த தாய் நாட்டை மதிக்க வேண்டும்: பிறந்த தாய் நாடு முன்னேற நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்: இதில் மாற்றுக் கருத்து இல்லை. இது ஒவ்வொரு குடிமகனுக்கும் இயற்கையாகவே வரக் கூடிய உணர்வு. ஆனால் 'பாரத் மாதா' என்ற போலியான ஒரு பிம்பத்தை உண்டாக்கி அதன் மூலம் தனது ஓட்டு அறுவடை செய்ய முனையும் பிஜேபியின் கீழ்தரமான அரசியல் விளையாட்டைத்தான் நாம் இங்கு கண்டிக்கிறோம்.

குஜராத்தில் நடந்த கலவரமாகட்டும், வேறு எந்த இடங்களிலும் இந்துத்வாவினர் தங்களின் வன்முறையை நிகழ்த்த கையில் எடுக்கும் ஆயுதம்தான் இந்த 'பாரத் மாதா'. ஆம் ஆத்மி வைக்கும் கேள்விகளுக்கு எந்த பதிலும் பிஜேபியிடம் இல்லை. மோடி அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து ஓட்டமெடுக்கிறார். கடந்த இரண்டு மாதங்களில் ஒட்டு மொத்த இந்தியாவில் அரவிந்த் கெஜ்ரிவாலின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அதே சமயம் நரேந்திர மோடியின் செல்வாக்கு அதே அளவு கீழிறங்கி உள்ளதாகவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. குஜராத்தில் கெஜ்ரிவாலுக்கு கூடும் கூட்டம் மோடியின் பிரதமர் கனவை ஏறத்தாழ களைத்து விட்டது என்றே கூறலாம்.

3 comments:

பாலா said...

//பாரத் மாதா யார்? இவருக்கு என்ன உருவம்? இவரால் இந்த நாட்டுக்கு என்ன நன்மை? ஒன்றும் இல்லை. பிஜேபியும் இந்துத்வாவும் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒரு கற்பனை பாத்திரம் தான் இந்த 'பாரத் மாதா'. //

//பிறந்த தாய் நாட்டை மதிக்க வேண்டும்: பிறந்த தாய் நாடு முன்னேற நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்: இதில் மாற்றுக் கருத்து இல்லை//

இங்கே தாய் தாய் என்று சொல்லி இருக்கிறீர்களே, அதைத்தான் இந்தியில் மாதா என்கிறார்கள். வேறொன்றும் இல்லை. சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவதில் நீங்கள் (இது உங்களை மட்டுமே குறிக்கிறது பிற நல்ல முசல்மான்களை அல்ல)வல்லவர்.

//பாரத் மாதா' என்ற போலியான ஒரு பிம்பத்தை உண்டாக்கி அதன் மூலம் தனது ஓட்டு அறுவடை செய்ய முனையும் பிஜேபியின் கீழ்தரமான அரசியல் விளையாட்டைத்தான் நாம் இங்கு கண்டிக்கிறோம்.//

இது கிட்டத்தட்ட அல்லாகு அக்பர் என்று சொல்லிக்கொண்டு அடாத செயல்கள் செய்வது போலத்தான். அதற்காக அல்லா என்பது இல்லாத போலி பிம்பம் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வராதா? தயவு செய்து அடுத்தவர்கள் உணர்வுக்கும் மரியாதை கொடுங்கள். பிஜேபி கும்பல் தவறு செய்தால் அவர்களை கண்டியுங்கள். அதை விடுத்து, கிடைக்கிற கேப்பில் எல்லாம் இந்துக்களை புண்படுத்தாதீர்கள்.(சத்தியமா நான் இந்த்துத்துவா இல்லீங்க) ஏன் சொல்றென்னா இப்படி பேசின உடனே, பூணூலை மாட்டி விட்டுடுறாங்க, இல்லைனா சங்(கு), இந்துதுவா என்று பட்டம் கட்டி விட்டுடுறாங்க.....

பாலா said...

// கெஜ்ரிவாலுக்கு கூடும் கூட்டம் மோடியின் பிரதமர் கனவை ஏறத்தாழ களைத்து விட்டது என்றே கூறலாம்.//

இவ்வளவு நாளாக மோடி பிரதமர் ஆகி விடுவாரோ என்ற பயத்தில் இருந்தவர்களுக்கு இப்போது கேஜ்ரிவால் ஒரு தற்காலிக (தேர்தல் முடிவுகள் வரைக்குமாவது) ஆறுதல். அது உங்கள் பேச்சில் இருந்தே தெரிகிறது. மோடிக்கு கேஜ்ரிவால் வெற்றி பெற்று விடுவாரோ என்கிற உதறலை விட, எங்கே மோடி ஜெயித்து விடுவாரோ என்கிற உதறல்தான் உங்க ஆள்களது எழுத்துக்களில் அதிகமாக தெரிகிறது.


அதெப்படி கரி பூசியவர் பிஜேபி என்று கண்டு பிடித்தீர்கள்? ஊகமா? நீங்கள் சொன்னால் மட்டும் அது சரி. அதே சமயம் மற்றவர்கள் சொன்னால் இந்துத்வா. என்ன சார் நியாயம்?


//அருகில் இருந்த ஆம் ஆதிமி தொண்டர்கள் உடன் அவனை பிடித்து பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர்//

செய்தியை திருப்பி போடுவது என்றால் இதுதான். கொண்டு சென்றார்களா? இல்லை அடித்து உதைத்தார்களா? இதே வேலையை பிஜேபியினர் செய்திருந்தால் உங்கள் பதிவில், முகத்தில் கரி பூசிய 'அப்பாவி' இளைஞரை கொலைவெறி கொண்டு இந்துத்வா வெறியர்கள் தாக்கினார்கள் என்று எழுதி இருப்பீர்கள்.

அது சரி மலேசிய விமானத்தை கடத்தியது 'இசுலாமிய தீவிரவாதிகளாக' இருக்கலாம் என்று அந்த அரசு படம் போட்டு செய்தி கொடுத்திருக்கிறதே, ஒரு வேளை மலேஷியாவில் உள்ள சங் பரிவார் கும்பலின் வேலையாக இருக்குமோ? அந்த அரசும் மோடியின் பினாமி அரசாக இருக்குமோ?

என் கருத்துக்களை வைத்து நான் பிஜேபி என்று நீங்கள் முடிவு கட்டினால் அதற்கு நான் பொறுப்பல்ல. என் மனதில் தோன்றி உள்ள கேள்விகளை கேட்டுள்ளேன். அவ்வளவே.

suvanappiriyan said...

//தயவு செய்து அடுத்தவர்கள் உணர்வுக்கும் மரியாதை கொடுங்கள்.//

அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். பாரத நாட்டை மதிப்பது என்பதற்கும் அதனை வணங்குவது என்பதற்கும் வித்தியாசம் உண்டு. இந்து மதத்தில் எதையும் வணங்கலாம். ஆனால் இஸ்லாத்தில் தாயைக் கூட வணங்கக் கூடாது. தாயை மதிக்க வேண்டும்.

ஆனால் வட மாநிலங்களில் பல பள்ளிகளில் பாரத மாதா என்ற கற்பனை உருவத்தை வணங்க அனைத்து மதத்தவரும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வந்தே மாதரம் என்ற பாடலை பாடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இந்துத்வாவினரை விட தேச பக்தியில் சற்றும் குறைந்தவர்கள் அல்ல முஸ்லிம்கள். அதை மற்றவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமும் மண்ணின் மைந்தர்களான எங்களுக்கு இல்லை.

//அது சரி மலேசிய விமானத்தை கடத்தியது 'இசுலாமிய தீவிரவாதிகளாக' இருக்கலாம் என்று அந்த அரசு படம் போட்டு செய்தி கொடுத்திருக்கிறதே, //

அது எப்படி உங்களுக்கு மாத்திரம் இந்த செய்தி வந்துள்ளது. :-)