Followers

Saturday, March 08, 2014

பெல்ஜியத்தையும் விடவில்லை இஸ்லாம்!பெல்ஜியத்தின் ஜென்ட் நகரில் இயங்கி வரும் இஸ்லாமிய கலாசார கழகம் 25 வருடம் தனது சேவையை பூர்த்தி செய்ததை விமரிசையாக கொண்டாடியது. இந்நகரமானது பிரஸ்ஸில்ஸ் நகரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு 25000 முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

1989ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இஸ்லாமிய முறைப்படி எவ்வாறு இறைச்சிகளை கையாள்வது என்பதில் தொடங்கி பின்னாளில் அவ்வாறு அறுக்கப்படுபவைகளுக்கு சான்றிதழ் தரும் அமைப்பாகவும் பரிணமித்தது. அதன் பிறகு அரபு மொழியை பயிற்றுவிப்பதில் முக்கிய பங்கை இந்த அமைப்பு ஆற்றியது. குர்ஆனின் கட்டளைகள் அந்த மக்களின் வாழ்வில் வருவதற்காக பல பாடங்களை இந்த அமைப்பு எடுத்தது. மிக சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த முயற்சியானது தற்போது 200 மாணவர்களையும் தாண்டி வெற்றி நடை போடுகிறது. குர்ஆனை மட்டும் சொல்லாது அந்த மாணவர்கள் தங்களின் வாழ்வை எவ்வாறு இஸ்லாமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் அழகிய முறையில் விளக்குகிறது. மொராக்கோவிலிருந்து வருகை புரிந்த முஸ்தபா அல் திவானி 1975 லிருந்து மாணவர்களுக்கு பாடங்களை எடுக்கிறார்.

பெல்ஜியத்தையே பூர்வீகமாக கொண்டு அந்த மொழியில் பாண்டித்தியம் பெற்ற பல மாணவர்களை இமாம்களாக இந்த அமைப்பு மாற்றியுள்ளது. பெல்ஜியத்தின் கலாசாரத்தில் மயங்காது இவ்வாறு இஸ்லாத்தை வாழ்வியலாக அவர்கள் கொள்வது பார்வையாளர்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகிறது. பதினேழு வயதையே உடைய அனஸ் என்ற இளைஞன் இன்று குர்ஆனை மனனமிட்டு ஓதக்கூடிய ஹாஃபீஸாக தேர்வு பெற்றுள்ளான். இந்த இளைஞர்கள் பகுதி நேரமாக இஸ்லாமிய படிப்பை படித்துக் கொண்டே பெல்ஜிய அரசின் படிப்பையும் தொடர்கின்றனர்.. ஒரே நேரத்தில் இரண்டு வேலையும் நடக்கிறது. இஸ்லாமிய கல்வியை பொருள் ஈட்ட பயன்படுத்தாமல் அதற்கென தனியாக படிப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. இதைத்தான் இஸ்லாமும் எதிர்பார்க்கிறது. (இவ்வாறு தமிழகத்தின் பெரும்பாலான மதரஸாக்களில் தொழிற் கல்வியும் பயிற்றுவிக்கப்பட்டு அந்த மாணவர்களை சுய மரியாதையோடு வெளியாக்க வேண்டியது நமது கடமை)

கம்யூனிஸம் வளர்ந்த இந்த நாட்டில் முற்போக்கு சிந்தனைகளால் இஸ்லாத்தை முஸ்லிம்கள் விட்டு விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறது இந்த அமைப்பு. நாத்திகத் தன்மை இவர்களை ஆட்கொண்டு விடாமல் இருக்க இறைவனைப் பற்றிய உண்மைகள், குர்ஆனும் அறிவியலும் எந்த வகையிலெல்லாம் ஒத்துப் போகின்றன என்பதற்காகவும் பல சிறந்த பாடங்களை சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.

ஐரோப்பிய யூனியனில் பெல்ஜியமும் நெதர்லாந்தும் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களைக் கொண்டிருப்பதாக ஜெடோஸ்டோன் இன்ஸ்டிட்யூட் தெரிவிக்கிறது. துருக்கி, மொராக்கோ போன்ற நாடுகளின் முஸ்லிம்கள் நிறைந்து காணப்படுகின்றனர். கம்யூனிஸத்தை வெறுத்து புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் பெல்ஜியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. (நமது தமிழகத்திலும் இதே நிலைதானே) :-)

பெல்ஜியத்தில் உள்ள மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 650000 ஆகும். இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் அரசியலிலும் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக பெல்ஜிய முஸ்லிம்கள் திகழ்வார்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

(அட...இதிலும் நம் தமிழகத்தை ஒத்தே பெல்ஜியர்கள் உள்ளனரே!...:-))

தகவல் உதவி

அமல் அல் சிபாய்
சவுதி கெஜட்
28-02-2014

2 comments:

Anonymous said...

அந்நிய அடிமைகளுக்கு ஒரு கடிதம்,
வஞ்சகர்களே, மத வியாபாரிகளே, எங்கள் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் அந்நிய அடிமைகளே, எங்கள் பூமியை எங்களுக்கே அந்நியன் ஆக்க நினைக்கும்
சூழ்ச்சிக் காரர்களே, உங்களிடம் சில கேள்விகள் பதில் சொல்ல முடியுமா நீங்கள் ?
உங்கள் கூற்று படியே ஆரியன் கைபர் கணவாய் வழியாய் வந்தான் என்பதை நீங்கள் புகைப்படம்
எடுத்தே வைத்துக்கொண்டுள்ளீர் என்றாலும், இப்போது அவன் இனம்
இந்தியாவிற்கு வெளியே எங்கிருக்கிறது. இந்தியாவை விட்டு வெளியே உள்ள எவனுக்கு நாங்கள் அடிமை ? இந்த இந்திய பூமியை தானே நாங்கள் போற்றுகிறோம்.
இந்தியாவில் உள்ள திருத்தலங்களை தானே நாங்கள்
புனிதமாக கருதுகிறோம். இந்தியாவில் ஓடும் நதிகளைதானே நாங்கள்தாயாகவும், புனித நதிகளாகவும் கருதுகிறோம்.
இந்தியாவை நோக்கிதானே நாங்கள்
வெள்ளையர்களையும், வேற்று நாட்டவர்களையும்
கூட வரவழைத்து அதன் புனித
தலங்களை வணங்கச் செய்கிறோம்.
ஆனால் நீங்கள் ? ஒரு கூட்டம்
கூழாங்கல்லை எடுத்துக்
கொண்டு அரேபியா செல்கிறது. அதுதான் புனித பூமியாம். அதுதான் இறைவன் இறைத்தூதரிடம்
இறை வசணங்களை இறக்கி வைத்த இடமாம். அங்கு சென்று வருவது தான் முழு முதற்
கடமையாம் !! என்ன கொடுமையடா இது. சொந்த
நாட்டில் உள்ள நதிகளும், வழிபாட்டுத் தளங்களும்
உங்களுக்கு கேவலம்,
எங்கோ உள்ளது உயர்ந்ததா ? புனிதமா ? பாலைவண பழக்க வழக்கங்களை பசுமையான
பாரதத்திலும் பின்பற்றுகிறீர்களே, இது நியாயமா ?
நம் மண்ணில் முளைத்த, நம் மண்ணுக்காக உழைத்த, யோகிகளையும், குருமார்களையும்
இழிவாக பேசும் நீங்கள், எங்கோ உள்ள பாலைவண முல்லாக்களையும், முத்தவாக்களையும் தலையில்
சுமக்கிறீர்களே இது அடுக்குமா ?
சௌதி அரேபியாவில் இந்திய மற்றும் ஆசிய
முஸ்லீம்களை கேவலமாக வைத்துள்ள
நிலை உங்களுக்கு தெரியாததா ?
இல்லை புரியாததா ? சௌதிய விமான
நிலையத்தின் வரிசையில் நீங்கள்
நிற்கையிலேயே ஒரு அடிமைத்தனம் உங்களுள்
உருவாகுவதை அனுபவிக்காதவரா ? சௌதிய
இனவெறி தாண்டவமாடுவது நீங்கள் அறியாதவரா ?
மற்றொரு கூட்டம் ரோமுக்கு குடைப் பிடிக்கிறது.
வெள்ளையனின் குடிகார கலாச்சாரத்தை பின்பற்றி,
இந்த பூமிக்கு சொந்தமான
கலாச்சாரத்தையே இழிவு படுத்துகிறார்கள்.
வெள்ளைக்கார தூதரையும், வெள்ளைக்கார குருமார்களையும் வணங்கும் நீங்கள் இந்த
மண்ணில் தோன்றிய சித்தர்களையும்,
முனிவர்களையும், ரிஷிகளையும் புறக்கனிக்கிறீர
்கள். ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் விட செயின்ட் ஆண்டனியும், செயின்ட் ஜோசப்பும்,
உங்களுக்கு பெரிதாய் போய்விட்டது ?
உலகில் ஐந்தில் ஒருவன் இந்தியன். கோடிக்கணக்கான இந்தியர்களில் எத்தனை பேர்
போப் ஆகி உள்ளனர் ? குறைந்தபட்சம் எத்தனை பேர் கார்டினலாகத்தான் ஆகியுள்ளனர் ?
கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உங்கள் வெள்ளைக்கார துரைமார்கள் கொடுக்கும்
மரியாதை இதுதானா ? இப்படிப்பட்ட தீண்டாமையிலிருந்து நீங்கள் விலக வேண்டாமா ?
வாடிகன் எனும் வெள்ளைக்கார
கம்பெனிக்கு இந்தியாவில் கோடிக்கணக்கில் சொத்துக்கள், லட்சக்கணக்கில் ஊழியர்கள், ஆயிரக்கணக்கில் கிளைகள், ஆனால் சேர்மேன் மட்டும் வெள்ளைக்காரனாகவே இருக்கிறான். இதுவரை வந்துள்ள 266 போப்புகளில், 95 சதவீதம்
ஐரொப்பியர்கள், 217 பேர் இத்தாலியில் இருந்து மட்டுமே.
ஒரு இந்தியனை காணவில்லையே. ஏன்
உலகிலேயெ பெரிய கண்டமான ஆசியாவிலிருந்தே காணவில்லையே ? (சிரியாவை தவிர) இப்படி ஒரு இன வெறி பிடித்த மதம்
உங்களுக்கு தேவையா ?
பார்பணன் அந்த காலத்தில் அடிக்கி ஆண்டதாக பேசும் நீங்கள் இந்த வெள்ளைக்காரனின்
அடக்கு முறையில்
இருந்து வெளியே வரப்போவது எப்போது ?
ஆரியன், திராவிடன்
என்று நம்மை பிரித்து விட்டு போன
வெள்ளைக்காரன் உங்களை மட்டும்
எங்கு வைத்துள்ளான் பார்த்தீர்களா ? உங்கள்
பாட்டன் வணங்கிய இறைவன்
உங்களுக்கு கேவலமாக தெரிகிறது, ஆனால்
வெள்ளையன் சொல்லிக் கொடுத்த வெட்டிக்
கதைகள் மட்டும் நிஜமாக தோன்றுகிறதே ?
கோவிலுக்குள் வராதே என்பவனை வீதியில்
போட்டு அடியுங்கள். தவறில்லை. ஆனால் மதம்
மாறுகிறேன் என்று வெள்ளைக்காரன்
சித்தாந்தங்களை பின்பற்றி சீரழிவது என்ன
வாழ்க்கை ? அரேபியனின் பாலைவண
சித்தாந்தங்களை தூக்கி பிடிப்பது தான் என்ன
நியாயம் ? யோசியுங்கள்
நண்பர்களே யோசியுங்கள். என்னை மதவாதி,
மதவெறி பிடித்தவன்
என்று திட்டிக்கொண்டே மனதிற்குள்
உண்மையை ஆராயுங்கள்

சுவனப் பிரியன் said...

//அந்நிய அடிமைகளுக்கு ஒரு கடிதம்,
வஞ்சகர்களே, மத வியாபாரிகளே, எங்கள் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் அந்நிய அடிமைகளே, எங்கள் பூமியை எங்களுக்கே அந்நியன் ஆக்க நினைக்கும்
சூழ்ச்சிக் காரர்களே, உங்களிடம் சில கேள்விகள் பதில் சொல்ல முடியுமா நீங்கள் ?//

நானும் சில கேள்விகள் கேட்கிறேன்.

ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக பிழைப்புக்கு வந்தாய். சரி எனது மண்ணில் பிழைத்து விட்டு போ! ஆனால் உண்டகத்துக்கு ரெண்டகம் பார்ப்பது போல் எனது முன்னோர்களை சூத்திரன் என்று அடிமை படுத்தி மண்ணின் மைந்தர்கள் கோவிலுக்குள் நுழைய தடுக்கும் உனது மதத்தை விட அரேபிய மதமோ ஐரோப்பிய மதமோ எந்த விதததிலும் குறைந்ததாகி விடாது.

எனது முன்னோர்கள் இந்த மண்ணில் வணங்கியது 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையைத்தான். அதுதான் இஸ்லாமு;ம் சொல்ல வருவது.