லண்டன் : லண்டனை சேர்ந்த, பெண், தான் வளர்த்த நாயை திருமணம் செய்து கொண்டுள்ளார்.லண்டனை சேர்ந்தவர், அமண்டா ரோட்ஜர்ஸ், 47. இவர், 20 ஆண்டுகளுக்கு முன், ஒருவரை திருமணம் செய்தார்.
ஆனால், சில மாதங்களிலேயே, பல பிரச்னைகளால், இருவரும், பிரிந்தனர். அன்று முதல் தனிமையில் வாழ்ந்து வந்த அமண்டா, 'ஷீபா' என்ற, செல்ல நாயை வளர்த்து வருகிறார். குரோஷியா நாட்டின், ஸ்ப்லிட் நகரத்தில், 200 பேரின் முன்னிலையில், அமண்டாவுக்கும், மணப்பெண் உடையில் வந்த, ஷீபாவுக்கும் திருமணம் நடந்தது.
இதுகுறித்து, அமண்டா கூறியதாவது:ஷீபாவிடம், நான் முட்டிப்போட்டு, காதலை தெரிவித்தேன்; வாலாட்டி, என் காதலை, அது ஏற்றுக் கொண்டது. நான் கவலையாக இருக்கும் போதெல்லாம், ஷீபா, என்னை சிரிக்க வைத்து, எனக்கு ஆறுதல் கூறும்; ஒரு கணவருக்கு இருக்க வேண்டிய குணங்களும் அதனிடம் இருக்கிறது. இந்த திருமணம் சட்ட ரீதியாக செல்லாது என்றாலும், ஷீபா எனக்கு முக்கியம்.இவ்வாறு அமண்டா கூறினார்.
-தின மலர் செய்தி 11-03-2014
"எந்த வீட்டார் (தமது இல்லத்தில்) நாய் வளர்க்கின்றனரோ அவர்களுடைய நற்செயல்களின் நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கணிசமான அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டை நாயையும் தவிர". என்று அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி) இப்னு உமர் (ரலி) வழியாக புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ. அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன).
கால்நடைகளையும் தோட்டங்களையும் காவல் காக்க நாய்களை வளர்க்கலாம்: அதே சமயம் செல்லப் பிராணிகளாக நாயை படுக்கை அறை வரை கொண்டு வருவதை நபிகள் நாயகம் தடுத்துள்ளார்கள். எத்தனையோ வீட்டுப் பிராணிகள் இருக்க நாய்களை வீட்டுக்குள் தடுத்ததன் காரணத்தை இங்கிலாந்து பெண்ணின் செய்கையின் மூலம் தெரிந்து கொண்டோம். நபி அவர்களின் ஆதாரபூர்வமான எந்த சொல்லும் செயலுக்குப் பின்னால் ஒரு உண்மை மறைந்துள்ளதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. முகமது நபி இறைத் தூதர்தான் என்பதற்கு இந்த ஹதீதும் நமக்கு சான்று பகர்ந்து கொண்டிருக்கிறது.
1 comment:
மதுரையில் பரபரப்பு : வெடிகுண்டுகளுடன் 3 காவி தீவிரவாதிகள் கைது - ஓட்டுக்களை பெற மோடியின் சதியா ?
மதுரை உத்தங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த காவி தீவிரவாதி திருச்செல்வம் என்பவனை போலீஸார் கைது செய்தனர்.
அவன் கொடுத்த தகவலின்பேரில் மேலூரில் பதுங்கியிருந்த தங்கராஜ் மற்றும் கவியரசன் என்ற மேலும் இரு காவி தீவிரவாதிகளை கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்தபோது, 2 நாட்டு வெடிகுண்டு, 2 பைப் வெடிகுண்டு, 6 ஜெலட்டின் குச்சி, ஒரு கத்தி, வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்கள் மற்றும் 7 மீ வயர், லேப்டப் செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Post a Comment