Followers

Sunday, March 02, 2014

முகமது நபிக்கு மட்டும் ஏன் விசேஷ சலுகை?

//33:49-51 - இது குரானிலிருந்து.. ஹத்தீசெல்லாம் இல்லை ... அதாவது கடவுள் நபிக்கு மட்டும் கொடுக்கும் “நன்கொடைகள்”!!!! நன்கொடைகளைக் கணக்கு வைக்க அடைப்பானுக்குள் எண்கள் கொடுத்துள்ளேன். //

இது மட்டும் அல்ல. இன்னும் சில விஷேஷ சட்டங்கள் நபிக்கு உண்டு.

1.ஜகாத் எனும் அரசுக் கருவூலத்திலிருந்து தாமும் தமது குடும்பத்தாரும் எதையும் பெறுவது ஹராம் என்று தடை போட்டது.

2. உலகம் உள்ள வரை எனது பரம்பரைக்கு இந்த விதி பொருந்தும் என்று கட்டளையிட்டது.

3. தனது இறப்புக்குப் பின் தமக்கு சொந்தமான உடமைகள் அனைத்துக்கும் தமது வாரிசுகள் உரிமைக் கொண்டாடக் கூடாது என்று அறிவித்து அரசாங்கத்தில் சேர்த்து விட்டுச் சென்றது. ஆனால் மற்றவர்களுக்கு இந்த சட்டம் கிடையாது.

4. தாமும் தமது குடும்பத்தவரும் யாரிடமும் எக்காலத்திலும் தர்மம் பெறக் கூடாது என்று சட்டம் போட்டது.

5. மற்றவர்கள் ஐந்து நேரம் தொழ வேண்டுமென்றால் தமக்கு மட்டும் நள்ளிரவில் தொழும் ஆறாவது தொழுகையை கடமையாக்கிக் கொண்டது.

6. இரவு பகல் 24 மணி நேரமும் மற்றவர்கள் நோன்பு நோற்கக் கூடாது என்று தடுத்து விட்டு அந்த சிரமத்தை தாம் மட்டும் மேற்கொண்டது.

இப்படி பல விஷயங்கள் முகமது நபிக்கு மட்டும் சிறப்பாக இருந்துள்ளது. இவை அனைத்தும் அவருக்கு மேலும் சிரமத்தைக் கொடுக்கும் சட்டங்கள். மேலும் இறைவன் முகமது நபியை கண்டித்த பல வசனங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் உலகுக்கு அறிவித்து விட்டார்.

திருமணம் சம்பந்தமாக வரும் இந்த சலுகை ஒன்றுதான் அவருக்கு சாதகமான ஒன்று மற்ற அனைத்தும் அவருக்கு சிரமத்தைக் கொடுப்பவையே! முதல் திருமணம் 25 ஆம் வயதில் நடந்தது. அன்றிலிருந்து 25 ஆண்டுகள் ஒரு மனைவியுடனேயே வாழ்க்கை நடத்தியுள்ளார். 50 வயதுக்கு பிறகுதான் மற்ற பெண்களை திருமணம் முடிக்கிறார். உடல் பசிக்காக திருமணம் முடித்திருந்தால் இளமையிலேயே முடித்திருக்க வேண்டும்.

பிறகு எதற்கு இந்த திருமணங்கள் என்ற கேள்வி வரலாம்.

மனிதனின் வாழ்வில் குடும்பவியல் சட்டங்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன. தாம்பத்ய உறவு, குழந்தைகள் வளர்ப்பு, மனைவியின் தேவைகளை கவனித்தல், சுற்றத்தாரை கவனித்தல், மனைவி மகனுக்கான பாகப்பிரிவினை, என்று அனைத்து சட்டங்களும் மனித குலத்துக்கு கிடைக்க வெண்டும் என்றால் அது அவரின் மனைவிகள் மூலமாகத்தான் கிடைக்க முடியும். ஹதீதுகளை அறிவித்தவர்களில் அன்னை ஆயிஷா அவர்களின் ஹதீதுகள் அதிகமாக நாம் பார்க்க முடிகிறது. நபிகளின் மனைவிகளின் மூலம் இஸ்லாமிய சமூகத்துக்கு பல ஆயிரக்கணக்கான சட்டங்கள் கிடைத்துள்ளன. இந்த காரணத்துக்காகத்தான் இறைவன் முகமது நபிக்கு சில சலுகைகளை வழங்குகிறான். அந்த சலுகைகளால் பயன் பெற்றது முகமது நபியை விட இந்த மனித குலம்தான். எனது இந்து நண்பர் (வழக்கறிஞர்) பாகப்பிரிவினை சட்டங்களை படித்து விட்டு அசந்து விட்டார். இவ்வளவு தெளிவான சட்டங்களை எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும் வகையில் கண்டிப்பாக ஒரு தனி மனிதனால் தரவே முடியாது என்று அடித்து சொல்கிறார்.

நமது இந்திய சட்டங்கள் சுதந்திரம் அடைந்ததிலிருந்து 50 முறைகளுக்கு மேல் திருத்தங்கள் பெற்று விட்டது. ஒரு நாட்டுக்கே இந்த நிலைமை. ஆனால் முகமது நபி வகுத்துத் தந்த சட்டங்கள் உலக முஸ்லிம்களால் எந்த மாற்றமும் இன்றி எந்த குழப்பமுமின்றி இன்று வரை செயல்படுத்தப்பட்டு வருவதிலிருந்து இந்த சட்டங்களின் மேன்மையை அறிந்து கொள்ளலாம்.

4 comments:

Anonymous said...

ஹிந்து சகோதரர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி.
1. தனது மகனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை (மறுமகளை) ஏன் நபிகள் நாயகம் மணந்தார்?
2. தத்தெடுப்பு இஸ்லாத்தில் ஏன் தடை செய்யப்பட்டது?:
------------------

"நீ அனாதை குழந்தைகளை எடுத்து வளர்த்தால், உயிரோடிருக்கும் போதே அவர்களுக்கு தர வேண்டியதை தந்து விடு. நீ இறந்த பிறகு, சொத்துக்காக உனது ரத்த பந்தங்கள் அந்த குழந்தையை மீண்டும் அனாதையாக்கி அநீதி இழைக்கும் அவல நிலையில் விட்டு விடாதே" என அல்லாஹ் திருக்குரானில் எச்சரிக்கிறான்.

பெருமானாருக்கு ஆன் வாரிசுகள் கிடையாது. ஜைத் எனும் ஒரு நேர்மையான கருப்பு தலித் அடிமையை தத்தெடுத்து பிறகு தனது சொந்த உயர்குல குரைஷி பிராமண வம்சத்திலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார். ஆனால் அந்த திருமணம் முறிந்துவிட்டது.

பிறகு அல்லாஹ் தத்தெடுப்பை திருக்குரான் மூலம் தடைசெய்தான். பெருமானார் செய்த தத்தெடுப்பை முறிப்பதற்காக அவரால் தத்தெடுக்கப்பட்ட அடிமையால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையே திருமணம் செய்ய அல்லாஹ் கட்டளையிட்டான்.

தனது வளர்ப்பு மகனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையே பெருமானார் திருமணம் செய்தது இன்றைய பிறப்புரிமை சட்டத்துக்கு அடிப்படையாய் அமைந்தது என்று சட்டவல்லுனர்கள் கருதுகிறார்கள்.

முதலில் சொத்துரிமை என்பது சொந்த ரத்த பந்தங்களுக்கே உண்டு எனும் சட்டமும் அடுத்தபடியாக ஒரு நாட்டின் குடியுரிமை(Citizenship by birth) சொந்த தகப்பனின் குடியுரிமையையே சாரும் எனும் சட்டமும் தெள்ளத்தெளிவாக மனித இனத்துக்கு பறைசாற்றப்பட்டது.

இந்த கட்டத்துக்கு முன்னால் வளர்ப்பு பிள்ளைகளும் ரத்த பந்தங்களும் சொத்துக்காக ஒருவரையொருவர் வெட்டிக்கொன்றனர்.. ஆகையால்தான் பெருமானாரின் இந்த திருமணத்தை அனைத்து கோத்திர தலைவர்களும் ஏகமனதாக வரவேற்றனர்.

இன்று உலகத்தில் அனைத்து நாடுகளிலும் பிறப்புரிமை சட்டம் பெருமானார்(ஸல்) வகுத்த அடிப்படையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தத்து பிள்ளைகளுக்கு, இந்தியா உட்பட உலகில் எந்த நாட்டிலும் வளர்ப்பு பெற்றோரின் சொத்தை இயற்கையாக அனுபவிக்கும்(Natural right of inheritance) வாரிசுரிமையோ, குடியுரிமையோ கிடையாது.

அப்படியிருந்திருந்தால், இந்நேரம் காசு கொடுத்து வளர்ப்பு தந்தையை விலைக்குவாங்கி எந்த நாட்டின் குடியுரிமையையும் எளிதாக யார் வேண்டுமானாலும் வாங்கும் குழப்பமான நிலை உருவாகியிருக்கும்.

ஒரு தேசத்தின் அடிப்படை சட்ட உரிமைகளுக்கு பெருமானாரின்(ஸல்) இந்த திருமணம் வழிவகுத்தது என்றால் மிகையாகாது.

அதே சமயம், பெருமானாரே(ஸல்) 6 வயதில் தாய் தந்தையை இழந்து அனாதையாகிய பின் அவருடைய பிராமின் பெரியப்பா அபுதாலிபின் பாதுகாப்பில் 8 வயது முதல் 50 வயது வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anonymous said...

தந்தை பெரியார் ஏன் தனது வளர்ப்பு பெண்(தத்தெடுத்த மகளல்ல) மணியம்மை அம்மையாரை மணந்தார்?:

அனாதை குழந்தைகளை தத்தெடுப்பது எவ்வளவு மகத்தான செயல். இதை இஸ்லாத்தில் தடை செய்தது மனிதாபிமானமற்ற செயல் என்று பல ஹிந்து கிருத்துவ சகோதரர்கள் சொல்கிறார்கள்.

முதலில் பெருமானாரே 6 வயது முதல் ஒரு அனாதையாகத்தான் வளர்ந்தார் என்பதை நாம் மறந்துவிடலாகாது . அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பதையோ, ஆதரவு தருவதையோ அவர்களுக்கு பாதுகாவல் தருவதையோ இஸ்லாம் தடுக்கவில்லை. மாறாக அனாதை குழந்தைகளுக்கு ஆதரவு தருவோர் மீது அல்லாஹ் அளவற்ற அருள் பொழிகிறான்.

"ஆனால் உண்மையை அவர்களிடமிருந்து மறைக்காதீர். உண்மையான பெற்றோர் பற்றிய விபரம் தெரிந்திருந்தால் அதை அழகாக சொல்லிவிடுங்கள் . அல்லாஹ் நாடினால் அவர்களுடைய ஏழை பெற்றோர் நாளை செல்வந்தராக மாறிவிடலாம். அப்பொழுது அவர்களுக்கு சேர வேண்டிய பங்கு வந்து சேரும்.

அதுமட்டுமின்றி நீங்கள் செய்ய நினைப்பதை நல்ல நிலையில் இருக்கும் போதே செய்துவிடுங்கள் . நீங்கள் இறந்த பிறகு உங்களுடைய ரத்தபந்தங்கள் அவர்களை சொத்துக்காக அடித்து விரட்டும் நிலையில் விடாதீர். தத்து பிள்ளை எனும் கண்மூடித்தனமான பாசத்தில் அவர்களுடைய வாழ்க்கையை நாசம் செய்துவிடாதீர்" எனும் மகத்தான நீதியை மனித இனத்துக்கு அல்லாஹ் பெருமானார்(ஸல்) மூலம் கற்றுத் தந்தான்.

தந்தை பெரியார் 71ஆம் வயதில் மணியம்மை அம்மையாரை மணந்ததும் இதே அடிப்படையில்தான். வயதான காலத்தில் அவரை கண்ணும் கருத்துமாக காத்து பணிவிடைகள் செய்து வந்த மணியம்மை அம்மையாரை, தான் இறந்துவிட்டால் தனது சொந்தபந்தங்கள் சொத்தை பிடுங்கிகொண்டு நடுத்தெருவில் விட்டுவிடுவார்கள் என பயந்தார். ஆகையால் அவரை முறைப்படி திருமணம் செய்து தனது சொத்துக்களுக்கு வாரிசாக நியமித்தார்.

Anonymous said...

ஹிந்து சகோதரர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி.

9 வயதான அன்னை ஆயிஷாவை அண்ணல் நபி(ஸல்) ஏன் 54 வயதில் மணந்தார்?
-----

முதலில் நான் கேட்கும் கேள்வி:

1400 வருடங்களுக்கு முன்பு உங்களுடைய கொள்ளூப்பாட்டிக்கு எத்துனை வயதில் திருமணம் நடந்தது?

"குடும்பம் நடத்தும் பக்குவமுள்ள பருவமடைந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாமென திருக்குரான் அறிவிக்கிறது".

1956 வரை பருவமடைந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்யலாம் என்பதுதான் சமூக வழக்கமாக இந்தியாவில் இருந்தது. 130 வருடங்களுக்கு முன்பு கஸ்தூரி பாய் அம்மையாரை காந்தி மணந்த போது இருவருக்கும் வயது 13 என்பதை மறந்து விடலாகாது.

சரி. இப்பொழுது பெருமானார்(ஸல்) ஏன் 12 பெண்களை மணந்தாரென பார்க்கலாம்.

50 வயது வரை ஒரே ஒரு மணைவி கதீஜா அம்மையாருடன் வாழ்ந்தார். அவர் இறந்த பிறகு ஒவ்வொரு கோத்திரத்தினரும் தங்களுடைய குடும்பத்தில் ஒரு பெண்ணை நபிகள் திருமணம் செய்து தங்களை கௌரவிக்க வேண்டுமென வற்புறுத்தினர். அதனடிப்படையில் 12 கோத்திரங்களிலிருந்தும் ஒவ்வொரு பெண்ணை திருமணம் செய்ய அல்லாஹ் கட்டளையிட்டான். இதன் மூலம் உயர்ஜாதி கீழ்ஜாதி ஏற்றத்தாழ்வுகள் மறைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

12 பெண்களில் 11 பேர் விதவைகள். அன்னை ஆயிஷா மட்டுமே கன்னிப் பெண் என்பதை கவனிக்க வேண்டும்.

அன்னை ஆயிஷாவின் பெயரை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள். ஷா(sha) என்று முடியும் அரபி பெயர் ஏதாவது உண்டா?. ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதே சமயம் ஷா என்று முடியும் ஆ ஷா, உ ஷா, வர்ஷா, ஹர்ஷா, அபிலாஷா, அனிஷா, அலிஷா, நிஷா, நடாஷா, மனிஷா, திஷா …. என ஹிந்து பிராமண பெண்களின் பெயர்கள் கிட்டத்தட்ட 150 இருக்கிறது. (shaவையும் shahவையும் போட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம். shah என்றால் பாரசீக மொழியில் அரசனென்று பொருள். sha என்றால் வேதமறிந்தவரென்று பொருள். shastry எனும் பெயர் ஆதாரம்).

ஒரு உண்மையான வேதமறிந்த பிராமணன், 8 வயது பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமென மனுசாஸ்திரம் சொல்கிறது. ஆகையால்தான், 1400 வருடங்களுக்கு முன் உயர்குல குரைஷி பிராமண நியதிப்படி, அன்னை ஆயிஷாவை 9 வயதில் பெருமானாருக்கு(ஸல்) அவருடைய தந்தை அபுபக்கர் திருமணம் செய்து கொடுத்தார்.

இன்றைய தினம் 40 வயதாகியும் வரதட்சனை, வேலையின்மை, குடும்பச்சுமை, போதிய வருமானமின்மை போன்ற காரணங்களால் ஆணும் பெண்ணும் திருமணமாகாமல் அவதியுறுகின்றனர். இதற்குக் காரணம், தவறான கல்வி முறைதான் என்பதில் சந்தேகமில்லை. நூறு வருடங்களுக்கு முன்பு வரை மனித சமுதாயத்தில் வேலையில்லா திண்டாட்டமே இருந்ததில்லை. அவரவர் குரு குலத்திலும் மதரசாவிலும் அறிவுப் பசியை தணிக்க படித்தனர்.

பிழைப்பதற்கு குடும்பத்தொழிலும் விவசாயமும் செய்தனர். அனைவரிடமும் உணவுக்கு ஒரு கானி நிலமாவது இருந்தது. ஆகையால்தான், 1900 வரை 15 வயதுக்குள் பெரும்பாலான ஆண் பெண்களுக்கு திருமணம் சர்வசாதாரணமாக நடந்தது. இன்றும் பல பணக்கார குடும்பங்களில் இது போன்ற திருமணங்கள் நடக்கின்றன. எந்த சட்டத்தாலும் அவர்களை எதுவும் செய்ய முடியாது.

இன்று நாம் வயித்துப்பசிக்கு வழி காண படிக்கிறோம். என்ன படித்தாலும் வேலை கிடைப்பதில்லை. யாரிடமும் எந்த குடும்பத்தொழிலும் கிடையாது. சரியான வயதில், சரியான வழியில் விரகதாபத்தை தணிக்க முடியாத காரணத்தால்தான் கற்பழிப்பு குற்றங்களூம் பெருகுகின்றன என்பதை மறுக்க முடியாது.

பல்கலைக் கழகங்களை ஒட்டுமொத்தமாக மக்கள் புறக்கணித்து குடும்பத் தொழில் சார்ந்த சமுதாயமாக மாறினால், அனைத்து சமுதாய பிரச்னைகளும் மறைந்து விடும் என்பதில் ஐயமில்லை.

UNMAIKAL said...

.
சொடுக்கி படிக்க‌

>>>>> பகுதி 46. ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அருந்து????. எட்டு வய‌துக்குள் உன் ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்து கொடுக்காவிட்டால் ருதுவாகி கல்யாணமாகாமல் இருக்கும் காலம் வரை..ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.
>>>>> பகுதி 45. மகளை எட்டு வயதுக்குள் திருமணம் செய்து கொடுத்துவிடு. அவள் ருதுவாகித்தான் கல்யாணம் பண்ணி வைக்கிறான் என்றால் தகப்பனுக்கு மிக அசிங்கமான குமட்டுகின்ற‌ தண்டனை --‍ மநு.


.