Followers

Saturday, March 29, 2014

சவுதி மாணவியின் மற்றுமொரு கண்டுபிடிப்பு!



தாயிப் பெண்கள் பல்கலைக் கழகத்தில் நானோ துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருபவர் ஹிந்த் அப்துல் கபார். சவுதி பெண்மணியான இவர் தீயணைப்பு, பாதுகாப்பு, மற்றும் ராணுவத்தினருக்கான ஒரு உடையை நானோ துறையை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார்.

உம்முல் குரா பல்கலைக் கழகத்தில் இவரின் கண்டு பிடிப்பை பாராட்டி இவருக்கு டாக்டரேட் பட்டமும் கொடுக்கப்பட்டது. இவரது கண்டு பிடிப்பு பற்றி விவரிக்கும் போது 'இந்த உடையின் மொத்த எடையே 2.9 கிராம் தான் இருக்கும். ராணுவ வீரர்களும், பாதுகாப்பு துறையைச் சார்ந்தவர்களும் மிக இலகுவாக அணிவதற்கும், அணிந்த உடையை மிக இலகுவாக கழட்டவும் தோதான முறையில் வடிவமைத்துள்ளேன். நானோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி இந்த உடையை தயாரித்துள்ளேன். அரபுலகுக்கு இது ஒரு புதிய முயற்சி என்றே நினைக்கிறேன்' என்கிறார் மாணவி ஹிந்த் அப்துல் கஃபார்.

விழாவில் பலரும் இவரின் முயற்சியை பாராட்டி பேசினர். விழாவின் முடிவில் இவருக்கு இந்த சாதனையை நினைவு கூர்ந்து டாக்டரேட் பட்டமும் வழங்கப்பட்டது.

இஸ்லாமிய சட்ட திட்டங்களோடு வாழ்ந்து வரும் ஒரு பெண்ணுக்கு அந்த சட்டங்கள் வாழ்வில் சாதிக்க எந்த தடையும் ஏற்படுத்தவில்லை என்பதை இந்த பெண்மணியின் கண்டு பிடிப்பு நமக்கு அறிவுரித்துக் கொண்டிருக்கிறது. இது தான் உண்மையான பெண் விடுதலை. உடையை குறைப்பது அல்ல பெண் விடுதலை.

தகவல் உதவி
சவுதிகெஜட்
27-03-2014

3 comments:

Seeni said...

அருமை..

Anonymous said...

பெண்
விடுதலை என்றாலே அது ஆடை குறைப்புதான் என்றுதான் உங்கள் குருவி
மண்டைகளுக்கு உமது மார்க்கம் போதிக்கிறதா? உலகில் பெண்ணுரிமைக்காக
போராடுபவர்கள் எல்லாம் ஆடை குறைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றுதான்
போராடுகிறார்களா அய்யா. என்ன ஒரு ஈனத்தனமான சிந்தனை. நீரெல்லாம் ஊருக்கு
உபதேசம் செய்து பதிவு எழுதுகிறீர்.

ஆனந்த் சாகர் said...

//இஸ்லாமிய சட்ட திட்டங்களோடு வாழ்ந்து வரும் ஒரு பெண்ணுக்கு அந்த சட்டங்கள் வாழ்வில் சாதிக்க எந்த தடையும் ஏற்படுத்தவில்லை என்பதை இந்த பெண்மணியின் கண்டு பிடிப்பு நமக்கு அறிவுரித்துக் கொண்டிருக்கிறது.//

இஸ்லாமிய சட்டம் ஒரு அறிவிலியால் தான்தோன்றித்தனமாக ஏற்படுத்தப்பட்ட இருட்டு சட்டம். அது மனித நாகரீகத்திற்கு, வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எதிரான காட்டுமிராண்டி சட்டம். காட்டுமிராண்டிகள் மட்டுமே அதை ஏற்றுக்கொள்வர். இந்த பெண்மணியின் சிறு கண்டுபிடிப்பிற்கும் இஸ்லாமிய சட்டத்திற்கும் சம்பந்தமில்லாமல் முடிச்சு போடுவது கேலிக்கூத்து.

// இது தான் உண்மையான பெண் விடுதலை. உடையை குறைப்பது அல்ல பெண் விடுதலை.//

உடையை குறைப்பதுதான் பெண் விடுதலை என்று யார் கூறியது? பெண்களை துணியால் மூட்டை கட்டி நடமாட விடும் காட்டுமிராண்டிகளுக்கு பெண் விடுதலை பற்றி பேச அருகதை உண்டா?