Followers

Wednesday, March 12, 2014

புர்ஹாவை விரும்பும் மேற்கத்திய பெண்கள்!



சவுதியில் பணிபுரியும் வெளிநாட்டு மாற்று மத சகோதரர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பெண்கள் வெளியில் வரும் போது அபாயா எனும் கருப்பு அங்கியை அதாவது புர்காவை போட்டுக் கொண்டு வெளியில் வருவர். பல ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் இந்தியர்களும் இவ்வாறு கடைவீதிகளுக்கு வருவதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.

சவுதி அரேபிய சட்டம் மாற்றுமத பெண்களும் கண்ணியம் கருதி இவ்வாறு உடலை மறைக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தால் சிலருக்கு உடல் எரிச்சல் ஏற்படுவதும் சகஜம்.

ஷெர்ரி என்ற பிரிட்டிஷ் பிரஜை கூறுகிறார் 'கோடை காலங்களில் கருப்பு உடையான இந்த அபாயாவை அணிவது பல சிரமங்களை எனக்கு கொடுத்தது. இந்த உடையை எவ்வாறு உடுத்துவது என்பதும் எனக்கு அவ்வளவாக தெரியாது. ஒரு சமயம் நான் ஷாப்பிங் மாலுக்குள் வண்டியை தள்ளிக் கொண்டு போகும் போது எனது அபாயா வண்டியின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. அங்குள்ள பலராலும் நான் நோட்டமிடப்பட்டேன். இந்த சம்பவம் எனக்குள் வெட்கத்தை வரவழைத்து விட்டது. :-) இந்த சம்பவத்திலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டேன். இன்று என்னிடம் மூன்று அபாயாக்கள் உள்ளது. மூன்றுமே கருப்பு நிறத்தினால் ஆனது. சவுதி பெண்கள் அதிகம் கருப்பு அபாயாக்களையே விரும்புவதால் நானும் கருப்பு கலரையே தேர்ந்தெடுத்தன்.' என்று மகிழ்வுடன் தெரிவிக்கிறார்.

ஃப்ரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த புஷ்ரா எனும் பெண்மணி சொல்கிறார்: 'புர்கா எவ்வாறு உடுத்திக் கொள்வது என்பதை கற்பதற்கு எனக்கு ஐந்து மாதம் பிடித்தது. ஆனால் கற்றுக் கொண்டு அதனை உடுத்தி வெளியில் செல்லும் போதுதான் பெண்மைக்கே ஒரு அழகு கிடைப்பதாக நான் உணர்கிறேன். கருப்பு புர்காவானது பெண்மைக்கு ஒரு கவர்ச்சியை தருவதையும் உணர்ந்தேன். பெண்மைக்கு ஒரு பாதுகாப்பையும் இந்த புர்கா தருகிறது.'

ஆங்கில ஆசிரியராக பள்ளியில் பணி புரியும் கென்யாவைச் சேர்ந்த ஜார்ஜெட் மெடின்ஸ் கூறுகிறார்: 'ஆரம்பத்தில் அபாயா உடுத்துவதை வெறுத்தேன். ஒரு கயிற்றைக் கொண்டு எனது உடலோடு கட்டப்பட்டுள்ளதாக அபாயாவை நினைத்தேன். சுதந்திரமாக நடந்து செல்ல அபாயா ஒரு தடையாக உள்ளதாக உணர்ந்தேன். பொதுவாக வெளிநாட்டுப் பெண்கள் இவ்வாறு அபாயா உடுத்துவது மிகுந்த சிரமத்தை கொடுக்கும் என்பதையும் நான் அறிவேன்.

இந்த நாட்டு சட்டத்தின் படியும், இந்த மக்களின் பழக்கத்துக்கு மதிப்பு கொடுத்தும் உடுத்திய அபாயா இன்று எனக்கு பழக்கப்பட்ட ஒன்றாக ஆகி விட்டது. பல வண்ணங்களில் அபாயாக்கள் இருந்தாலும் கருப்பு கலரே அதற்கு மேலும் மதிப்பைப் பெற்றுத் தருகிறது.'

பிரிட்டிஷ் பிரஜையான கேதி மார்க்ஸ் கூறுகிறார்:'இந்த நாட்டு சட்டத்துக்கு கட்டுப்பட்டு அபாயா உடுத்த தொடங்கினேன். ஆனால் தற்போது அது எனது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. கருப்பிலும் மற்ற பிற வண்ணங்களிலும் நான் அபாயாவை உடுத்துகிறேன். கருப்பு நிறம் துக்ககரமானது என்று சிலர் நினைத்து பல வண்ணங்களில் அபாயாவை உடுத்துகிறார்களோ என்று நான் எண்ணுவேன். எப்படியோ பலருக்கும் இந்த அபாயா ஒரு மாற்றத்தையும் கண்ணியத்தையும் கொடுக்கிறது என்றால் அது மிகையில்லை'

கவர்ச்சி உகைளில் தங்கள் நாடுகளில் வலம் வந்த இந்த மேற்கத்திய பெண்கள் சவுதி வந்து அபாயா, புர்கா போன்ற உடைகளின் அவசியத்தையும், அது கொடுக்கும் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் பற்றி அழகாக விளக்குகின்றனர். ஆனால் நம் நாட்டில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஒரு சில மாணவிகள் புர்காவை ஏதோ வேண்டாத பொருளைப் போல பார்ப்பதை நான் கவனித்திருப்போம். பாலியல் குற்றங்கள் குறைவதற்கு புர்கா மிகச் சிறந்த சாதனம் என்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை. இஸ்லாம் பெண்களுக்கு கொடுத்த இந்த கண்ணியத்தை நமது பெண்கள் பேண நாம் அறிவுறுத்துவோம். அதன் நன்மைகளை விளக்கிச் சொல்வோம்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
07-03-2014

1 comment:

UNMAIKAL said...

இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்


>>>> இங்கே... சொடுக்கி படிக்கவும்.

..