'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, March 22, 2014
இனிப்பு நீர், இரத்த அழுத்தம் அறியும் கைக்கடிகாரம்!
மன்னர் காலித் பல்கலைக் கழகத்தில் பாடம் பயிலும் சவுதி மாணவி காதா அல் கஹ்தானி. இவர் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இனிப்பு நீர், இரத்த அழுத்தம், இதய துடிப்பு, உடலின் உஷ்ண நிலை போன்றவற்றை துல்லியமாக கணக்கிட்டு நமக்கு அடிக்கடி அறிவுரித்துக் கொண்டிருக்கும் ஒரு கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளார்.
இது பற்றி இவர் கூறும் போது 'எனது பாட்டிக்கு இனிப்பு நீர், இரத்த அழுத்தம், இதய துடிப்பு சீரின்மை போன்றவைகளால் படுக்கையில் இருக்கும் போது அவருக்கு துணையாக நான் இருந்தேன். பாட்டி படும் சிரமத்தையும் பார்த்தேன். இது போன்ற நோயாளிகளுக்காக ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று என்னுள் ஒரு உத்வேகம் பிறந்தது. அதன் அடிப்படையில் இந்த கடிகாரத்தை வடிவமைத்துள்ளேன். இதனால் எனது பாட்டியை போன்ற பல நோயாளிகளின் சிரமம் குறையும்' என்கிறார்.
ஆடை குறைப்பும் ஆண்களோடு ஒட்டி உரசி செல்வதும்தான் பெண்களின் முன்னேற்றம் என்று பலர் நினைத்து வருகின்றனர். பெண்களின் கண்ணியம் குறையாமல் அவர்களின் கற்புக்கு பாதகம் ஏற்படாமல் அவர்களின் முன்னேற்றத்தை இஸ்லாம் வரவேற்கவே செய்கிறது. ஹிஜாப் அல்லது புர்கா இந்த பெண்ணின் அறிவை மட்டுப்படுத்தவில்லை.
தகவல் உதவி
சவுதி கெஜட்
21-03-2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment