நான்கே நான்கு மணி நேர அவகாசத்தில் நாற்பது நாள் லாக் டவுனை அரசு அறிவித்த நிமிடத்திலேயே மக்களின் துயர் துடைப்பதற்காகக் களம் இறங்கிவிட்டது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்.
நாடு முழுவதும் ஜமாஅத்தின் ஊழியர்கள் ஒரு பக்கம் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்களை வழங்கினார்கள். மறுபக்கம் வீடின்றி, வருமானத்துக்கு வழியின்றி, வேலையின்றி நடுத்தெருவில் நின்ற பாட்டாளிகளை தேடித் தேடிச் சென்று உணவுப் பொட்டலங்களைக் கொடுத்து பசி ஆற்றினார்கள்.
முகக் கவசம் கூட இல்லாமல் நாட்டுக்காக உழைத்து வந்த துப்புரவுப் பணியாளர்கள், அஞ்சல் துறை ஊழியர்கள், காவல்துறையினர் போன்றோருக்கு முகக் கவசங்களைக் கொடுத்தார்கள்.
இவ்வாறாக சின்னச் சின்ன உதவிகளாய்த் தொடங்கிய இந்த துயர் துடைப்புப் பணி இன்று பஞ்சாப் முதல் தமிழகம் வரை, குஜராத் முதல் அஸ்ஸாம் வரை நாடெங்கும் முழு வீரியத்துடன் நடந்து வருகின்றது.
இது வரை மூன்று இலட்சத்துக்கும் அதிகமான (3,02,705) மளிகைப் பெட்டகங்கள் தரப்பட்டிருக்கின்றன. 18,785 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
6,604 பேருக்கு சானிட்டைசர்கள் தரப்பட்டுள்ளன. சற்றொப்ப மூன்று இலட்சம் பேருக்கு (2,99,439) உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 51,286 பேருக்கு முகக் கவசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
16,840 பேருக்கு வேறு வகையான உதவிகள் தரப்பட்டுள்ளன.
இவ்வாறாக ஏப்ரல் 20 வரை 23 கோடி ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பணிகள் சிறக்கவும், நலிவுற்ற, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட, ஆதரவற்ற மக்களின் துயர் நீங்கவும் அல்லாஹ் அருள் செய்வானாக.
எந்த விதமான பிரதிபலனும் எதிர்பாராமல் உயிரைப் பணயம் வைத்து அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்ற ஜமாஅத் ஊழியர்களின் சேவைகளை கருணை மிக்க இறைவன் ஏற்றுக் கொள்வானாக!
இந்த அறப்பணிகளில் பங்கேற்க விரும்புகின்ற நல்லுள்ளங்கள் இணைப்பில் இருக்கின்ற விவரங்களைக் கவனத்தில் கொள்ளவும்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே...!
1 comment:
அறப்பணிகளில் பங்கேற்க விரும்புகின்ற நல்லுள்ளங்கள் இணைப்பில் இருக்கின்ற விவரங்களைக் கவனத்தில் கொள்ளவும்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே...!
எல்லா புகழும் பராபரமே!
Post a Comment