Followers

Saturday, April 04, 2020

துபாயிலிருந்து, மார்ச் 17ம் தேதி... (தேதியை கவனியுங்கள்)

துபாயிலிருந்து, மார்ச் 17ம் தேதி... (தேதியை கவனியுங்கள்)
மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த #இந்தியர் ஒருவர் இந்தியா திரும்பினார்.
வந்தவர், தம் உறவினர் மற்றும் கிராமத்தினரை எல்லாம் அழைத்து, நல்ல உள்ளத்தோடு மார்ச் 20ஆம் நாள் (1 நாள் சுய ஊரடங்குக்கு 2 நாட்கள் முன்பு) நல்விருந்து ஒன்றை அளித்துள்ளார். அந்த விருந்தில் 1500 பேர் கலந்து கொண்டனர். நிச்சயமாக இது பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது. இதிலெல்லாம் ஒரு சிறு குற்றமும் எவரும் கூற முடியாது.
ஆனால்...
மார்ச் 25ஆம் தேதி (அதாவது, துபாயிலிருந்து திரும்பிய 1 வாரத்தில்... 21 நாள் ஊரடங்கின் முதல் நாள்...) உடல் நலக்குறைவு ஏற்பட்ட அவர்... ஊரடங்கு காரணமாக... 4 நாள் கழித்து(மார்ச் 29ல்)தான் மருத்துவமனைக்கே சென்றுள்ளார். அவருக்கும் அவருடைய மனைவிக்கும் #கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அதற்கான பரிசோதனை செய்ததில்... டெஸ்ட் ரிசல்ட் #பாஸிட்டிவ் வந்துள்ளது..!
பின்னர், அதிகாரிகள் அவருடைய குடும்பத்தினரை எல்லாம் கூப்பிட்டு டெஸ்ட் எடுத்ததில்... 11 பேருக்கு பாஸிட்டிவ் வந்துள்ளது..!!
இதனையடுத்து அவர் குடியிருக்கும் காலனி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இனிதான் அந்த கிராமம் முழுவதுக்கும் மற்றும் விருந்து சாப்பிட்ட 1500 பேருக்கும் டெஸ்ட் எடுத்தாக வேண்டும்.
இங்கே நான் கூற விரும்பும் முக்கிய மூன்று குறிப்புகள்:
1. அவர் முறையாக இந்திய ஏர்போர்ட் வழியாகத்தான் 'ஸ்கிரீன்' செய்யப்பட்டு வந்தார்.
2.அவர் டில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு செல்லவில்லை.
3. அவர்.… #முஸ்லிமல்ல..!
ஆகவே... இதை நம் சங்கி அரசுகளும், சங்கி ஆதரவு ஊடகங்களும், சங்கிகளும் பொது மக்களுக்கு சொல்லாமல் அப்படியே கடந்துவிடுவர். NDTV போன்ற ஒருசில நேர்மையான ஊடகங்கள் தவிர்த்து... மற்றவை எல்லாமே... திரும்பவும் டில்லி மாநாடு முஸ்லீம்கள் என்றே கொரோனா செய்திகள் வாசித்துக்கொண்டு இருப்பர்.
https://www.ndtv.com/…/coronavirus-madhya-pradesh-man-who-t…?



1 comment:

Dr.Anburaj said...

முஸ்லீம் மதத்தைச் சாராத ஒருவருக்கு கொரானா வந்து விட்டது என்கிறாா். அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுத்து விட்டதே.சரிதானே. இதில் என்ன பிரச்சனை சு..ன் க்கு.
விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.பின்
அவருக்கு என் எப்படி தொற்ற வந்தது என்பது ?

அல்லாவிடம்தான் கேட்க வேண்டும். கேட்டுச் சொல்லங்கள்.