Followers

Saturday, April 04, 2020

நாட்டிலுள்ள பாதிபேர் மின்சாரத்தை OFF செய்துவிட்டால்...

நாளை ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக நாட்டிலுள்ள பாதிபேர் மின்சாரத்தை OFF செய்துவிட்டால்... பவர் கிரிட்டில் திடீர்னு எக்ஸஸ் ஃபிரீகுவன்ஸி போய் ஓவர் வோல்டேஜ் வந்து...மீதி பாதி பேருடைய வீட்டில் ஓடிக்கொண்டு இருக்கும் மின் சாதனங்கள் எரிந்து போகலாம். (நமது பவர் கிரிட் frequency 50 Hz. +0.05 or -0.05 allowed) (Normal Voltage 220 Volts. 5~10% over voltage is safe normally)
அடுத்து...
ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக எல்லாரும் மின்சாரத்தை ON செய்துவிட்டால்... பவர் கிரிட்டில் திடீர்னு ஏற்பட்ட பவர் கன்சம்ப்ஷன் காரணமாக... அண்டர் வோல்டேஜ் ஏற்பட்டு... பவர் கிரிட்டில் லோ ஃபிரீகுவன்ஸி (Hertz)போய்... நாட்டின் பல்வேறு பவர் பிளாண்டின் ஜெனரேட்டர்ஸ் ட்ரிப் ஆகி நாடு முழுக்க பவர் கட் ஆகி 'பிளாக் அவுட்' ஆகவும் வாய்ப்பிருக்கிறது.
நான் 15 வருடங்கள் சவூதியில் பவர் பிளாண்டில் வேலை செய்திருக்கிற அனுபவத்தில் கூறுகிறேன். சவூதியில்... ஒரு பவர் பிளாண்ட் ஸ்டார்ட் செய்து, அதை நேஷனல் பவர் கிரிட் உடன்... வெறும் 5 MW அளவோடு சிங்க்ரோநைஸ் பண்ணுவதற்கே (கிரிட்டுக்கு பவர் சப்ளை செய்யும் போது) ஏகப்பட்ட ப்ரோட்டோகால்ஸ் உண்டு. அரசு மின் இலாகாவிடம் அனுமதி வாங்க வேண்டும். அதேபோல... எங்களின் ஒரு பவர் பிளாண்ட் 120MW அல்லது 70MW உற்பத்தி திறன் கொண்ட ஜெனரேட்டர் ஏதோ ஒரு பிளாண்ட் ப்ரோசஸ் பராமீட்டர் ஓவர் ரேஞ் காரணமாக ட்ரிப் ஆனால்... அது சப்ளை செய்து கொண்டிருந்த 120MW மின்சாரம் திடீர்ன்னு கட் ஆனால்... அது பவர் கிரிட் ஃப்ரீகுவென்சியில் பெரிய டிப் உணரப்படும். அது வோல்டேஜில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். உடனே... ரியாத்தில் இருந்து எல்லாம் எங்களின் கண்ட்ரோல் ரூம்க்கு ஃபோன் வரும்... "என்னாச்சு... சொல்லிட்டு ஷட் டவுன் பண்ண மாட்டீங்களா?" என்று கோபமாக. "ஹலோ... இது நாங்க செஞ்ச ஷட் டவுன் இல்லே... இது...( தன்னாலே ஆன ஷட் டவுன்) ட்ரிப்..." என்போம். ஆனாலும், திருப்தி கொள்ள மாட்டார்கள். ஏனெனில்... அந்தளவுக்கு பவர் டிப் ஏற்பட்டு அவர்களுக்கு அலாரம் வந்திருக்கலாம். பிளாக் அவுட் ஆகும் அளவுக்கு போய் இருக்காது. ஏனெனில்... ஜஸ்ட் 120MW லாஸ் தானே.
ஆனால்...நாளைக்கு...?
உதாரணமாக...
ஒரு வீட்டில் 1000 Watts அணைக்கப்படுகிறது என்று கொள்வோம்.
ஒரு நகரில் 4000 வீடுகள் எனில்... அதில் 4ல் 1 பங்கினரே மோடியின் பேச்சை கேட்கிறார்கள் என்று கொள்வோம். எனில், அது 1000 வீடுகள். அதன் அணைக்கப்படும் மின் அளவு 1MegaWatt. (1000Watts×1000)
இந்தியாவில் சுமார் 8000 நகரங்கள் உள்ளன. ஆகவே, 8000 MW அணைக்கப்படலாம் என கொள்வோம். மீதி நாட்டிலுள்ள ஊராட்சிகள் மற்றும் கிராமங்கள் எல்லாம் சேர்த்தால்... அவை 2000MW என்று கொள்வோம். ஆக மொத்தம் கூட்டினால்... 10,000 MW = 10 GW.
இந்த மின் அளவு நிஜமாகவே ஒரு பிரம்மாண்டமான பவர். தற்போது பல்வேறு ஊரடங்கு அமலில் உள்ளதால்.... இந்தியாவின் சராசரி உற்பத்தியான 165GW பயன்பாட்டில் இருக்க வாய்ப்பில்லை. அநேகமாக, 100GW பயன்பாட்டில் இருக்கவே வாய்ப்புள்ளது. இதில் 10% ஆன... 10GW (நாடுமுழுக்க ஒரே நேரத்தில் மின் சாதனங்கள் - லைட்ஸ், ஃபேன், ஏசி, டிவி, கம்யூட்டர் எல்லாம் அணைக்கப்பட்டு மக்கள் பால்கனி/மாடி/தெருக்கு வருவதால்) திடீரென கிரிட்டுக்கு உள்ளே வந்தால்... எப்படியும் 55 Hz ஃபிரீகுவன்சி எகிற வாய்ப்புண்டு. வோல்டேஜூம்... 270 போகக்கூட வாய்ப்புண்டு. இந்நேரத்தில்... வோல்டேஜ் ஸ்டெபிலைசர் இல்லாத மின் சாதனங்கள் எரிந்து விட வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதேபோல... 10 நிமிஷம் கழித்து... திடீரென கிரிட்டில் இருந்து 10% மின்சாரம்... அதாவது 10GW கன்ஸ்யூம் செய்யப்பட்டால்... லோ வோல்டேஜ் ஏற்பட்டு கிரிட்டில் பெரிய அண்டர் ஃபிரீகுவன்சி போய்... பல்வேறு பவர் பிளாண்ட் ஜெனரேட்டர்கள் ட்ரிப் ஆகவும் வாய்ப்புண்டு. இதனால்... இன்னும் கூடுதல் பவர் டிப் ஆகி.... ஜீரோ வோல்டேஜ் ஏற்பட்டு டோட்டல் பிளாக் அவுட் கூட நாட்டில் ஏற்படலாம்..! ஆகவே... இதுபோல திடீரென பவர் OFF ஆகி மீண்டும் ON ஆகினால், கிரிட்டில் மிகப்பெரிய பவர் டிப் ஏற்படும். அது பல மின் உற்பத்தி நிலையங்களை ட்ரிப் ஆக்கிவிட்டு... மொத்த இந்தியாவையும் பிளாக் அவுட் எனும் பல மணி நேர இருளுக்குள் இழுத்துச்சென்றுவிடும். மீண்டும்... பல மின் உற்பத்தி நிலையங்கள் ஸ்டார்ட் ஆகி ஜெனரேட்டர் சிங்க் ஆக பல மணி நேரங்கள் பிடிக்கும்..!
ஆகவே... இது விஷயத்தில் 80% மக்களாவது... பிரதமர் பேச்சை கேட்காமல் இருப்பதுதான் நாட்டுக்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கும் மிகவும் நல்லது.



6 comments:

Dr.Anburaj said...

வீட்டிற்கு வெளியே அல்லது பால்கனி -மேல்மாடி யில் விளக்கேற்றுவது மெழுகுவர்த்தி ஏற்றுவது டாா்ச் லைட் அடிப்பது செல்போன் லைட் ஆன் செய்வதுதான் முக்கியம்.வீட்டில் என்றால் மொட்டைமாடியில் - வீட்டு முற்றத்தில் - என்ற அளவில் என்று அா்த்தம். வெளியே விளக்கேற்றும் போது வீட்டிற்குள் மின் விளக்கை அணைக்க அவசியம் இல்லை.

பிரதமா் சொன்னதை சற்று சரியாக புரிந்து கொள்ளுங்கள்.
சாட்டலைட் வழியாக நாட்டையே படம் எடுப்பார்கள். விளக்குள் நன்கு இருட்டான பகுதியில் எரிந்தால் படம் தெளிவாக வரும் - அதற்காக பிரதமா் சொல்லியிருக்கலாம்.

மின் சாரம் குறித்த விரிவான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி. இயற்பியல் பாடம் படித்தவர் என்ற முறையில் நானும் பாடங்களை நினைவு படுத்திக் கொண்டேன்.
--------------------------------------------------------
கொரானாவால் சாவு எண்ணிக்கை
இத்தாலியில் 15000
ஸ்பெயினில் 9000
அமெரிக்காவில் 3000
இந்தியாவில் 112

இது குறித்து ஒரு பதிவையும் செய்யவில்லையே.தேசத்துரோகி என்றால் முதல் ஆள் சு..ன் தான். ஏன் இவ்வளவு மட்டமாக போகின்றது உமக்கு புத்தி.

Dr.Anburaj said...

விளக்ககேற்றும் பகுதி இருட்டாக இருந்தால் ஏற்றப்படும் விளக்குதெளிவாகத் தெரியும்.

சார்ட்லைட் மூலம் படம் எடுக்கும் போது இருண்டபகுதியில் விளக்கேற்றினால்தான் தெளிவாக தெரியும்.

வீட்டு வாசலில் பால்கனியில் மொட்டை மாடியில் விளக்கேற்றும் போது அப்பகுதி இருட்டாக இருந்தால் சாட்டலைட் படம் தெளிவாக கிடைக்கும்.

நான் எனது பால்கனியில் விளக்கேற்றும் போது எனது வீட்டிற்குள் விளக்குகளை அணைக்க அவசியம் இல்லை.இதையுமா பிரதமா் சொல்ல வேண்டுமா ?

நமது வசதி பாதுகாப்பு படி விளக்குகளை வைத்துக் கொள்ளலாம்.

இதை கூட புரிந்து கொள்ள தங்களுக்கு அறிவு இல்லையா ?

Dr.Anburaj said...

மன்னிக்கக்கூடாத குற்றம்!
தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு குறித்த தலையங்கம்

By தினமணி ஆசிரியர் | Published on : 04th April 2020 07:41 AM
உலகம் தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் போராடிக் கொண்டிருக்கும்போது, கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு கூட்டப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது. தவறு செய்தது போதாது என்று தாங்கள் செய்த தவறை அவர்களில் பலர் நியாயப்படுத்த முயல்வதும், அந்த அமைப்பினருக்குச் சிலர் ஆதரவுக் குரல் கொடுப்பதும், இதை மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று கூறி அடக்கி வாசிக்க முயல்வதும், ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இழைக்கும் துரோகம்.

தில்லி நிஜாமுதீனில் செயல்படும் தப்லீக் ஜமாத்தின் தலைமையகம், அலமி மர்கஸ் பங்களேவாலி மசூதியில் அமைந்திருக்கிறது. இப்போது வெளிவரும் செய்திகளிலிருந்து, மதத் தீவிரவாதத்தின் நாற்றங்காலாக இந்த அமைப்பு செயல்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15-ஆம் தேதிவரை தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான பங்களேவாலி மசூதியில் நடந்த மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், உலகின் ஏனைய இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.

200 பேர்களுக்கும் அதிகமானவர்கள் கூடும் எல்லா விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், மதச் சடங்குகள் ஆகியவற்றையும் தடை செய்து தில்லி அரசு பொதுத்தடை அறிவித்த அன்றுதான் தப்லீக் ஜமாத்தின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது. உடனேயே அந்த மாநாட்டை ரத்து செய்து முடிவுக்குக் கொண்டுவந்திருந்தால், எல்லோரும் அவரவர் ஊருக்குத் திரும்பி இருப்பார்கள்.

Dr.Anburaj said...

மார்ச் 16-ஆம் தேதி, 50 பேருக்கும் அதிகமானோர் கூடும் எல்லாக் கூட்டங்களையும் மார்ச் 31 வரை தடை செய்வதாக தில்லி அரசு அறிவித்தபோதாவது, உடனடியாக அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்புவதில் மசூதி நிர்வாகம் முனைப்புக் காட்டியதா என்றால் அதுவும் இல்லை. இந்த மாநாடு கூடுவது முன்கூட்டியே தெரிந்திருந்தும் தில்லி அரசும், தில்லி காவல்துறையும் உடனடியாக அதைத் தடுக்கவும் முடக்கவும் செய்யாமல் இருந்தது மிகப்பெரிய தவறு.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் தப்லீக் ஜமாத் அமைப்பாளர்களிடம், மசூதியிலிருந்து அனைவரும் கலைந்து போகும்படி ஐந்து நாள்கள் கெஞ்சி இருக்கிறார்கள். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் இரவு நேரத்தில் நேரில் சென்று, நிலைமையை விளக்கி வேண்டிக்கொண்ட பிறகுதான், கூடியிருந்தவர்களைத் தனிமைப்படுத்தவும், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அனுமதித்திருக்கிறார்கள். ஜனநாயக இந்தியா இதை சகித்துக் கொண்டிருக்கிறது.

9,000-க்கும் அதிகமான தப்லீக் ஜமாத்தின் தொண்டர்களும் அவர்களது நெருக்கமான தொடர்புகளும் தீநுண்மி நோய்த்தொற்றுக்காகத் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் 500}க்கும் அதிகமானவர்கள் தில்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கு பெற்றவர்கள். தமிழகத்திலிருந்து மாநாட்டில் கலந்துகொண்ட 1,500 பேர்களில் 1200 பேர்தான் திரும்பியிருக்கிறார்கள். திரும்பியவர்களில் 364 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்குத் தீநுண்மி நோய்த்தொற்றைக் கொண்டு சேர்த்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தப்லீக் ஜமாத் தொண்டர்கள். அது குறித்து அவர்களுக்குக் கொஞ்சம்கூட வருத்தமோ, குற்ற உணர்வோ இல்லை என்பதுதான் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.

Dr.Anburaj said...

தில்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 188 பேரில் பலர் தங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யக்கூடாது என்று முரண்டு பிடிக்கிறார்கள். மருத்துவர்களையும் செவிலியர்களையும் சிலர் தாக்கியிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் மாநாட்டிலிருந்து திரும்பியவர்களைப் பரிசோதிக்கச் சென்ற மருத்துவக் குழுவினரைக் கல் எறிந்து விரட்டி அடித்திருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நடந்திருக்கின்றன.

தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து 960 பேர் வந்திருக்கிறார்கள். மதப்பிரசாரம் செய்ய வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அதற்கான நுழைவு அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு அனுமதி பெற்று தில்லி மாநாட்டுக்கு வந்தவர்கள் இந்தியா முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களது நுழைவு அனுமதி இப்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஊரடங்கு வேண்டுகோளை மீறும்படியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது தேவையற்றது என்றும் தப்லீக் ஜமாத்தின் தலைவர் மௌலானா சாத் கந்தால்வியின் குரல் பதிவு வேண்டுகோள் இப்போது வெளியாகியிருக்கிறது. மௌலானா சாத் கந்தால்வி தலைமறைவாகியிருக்கிறார்.

Dr.Anburaj said...

தப்லீக் ஜமாத்தின் பொறுப்பற்றதனத்தையும்,

அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்படடு
இருக்கும் ஆபத்தையும் கண்டிப்பதை விட்டுவிட்டு,

மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று அறிக்கை விடுகிறார்களே, அவர்களது பொறுப்பற்றதனத்தை என்னவென்று சொல்ல?
---------------------------------------------------------------------
நாடு பரவலாக தற்சமயம் புதிய தொற்று ஏற்பட காரணம் தவ்லிக் ஜமாத் மாநாடு.
அதை பதிவு செய்ய மனம் மறுக்கின்றதே.

நோய் தொற்று ஏற்பட்டவர்கள் அரசுக்கு ஒத்துழைக்காது செய்யும் அடாவடிகள் கொஞ்சமா ?

முஸ்லீம்கள் என்றால் இவ்வளவு நயவஞ்சகமா ?

முஸ்லீம்களின் நயவஞ்சக செயலை உலகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றது. கவனம்.எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்ற முடியாது.