கொரோனா பாதிப்பு இந்தியாவுக்கு சாதகமாகுமா?
கொரோனா பாதிப்பால் சீனாவிலிருந்து 56 பெரு நிறுவனங்கள் அந்நாட்டை கை கழுவி மற்ற நாடுகளில் கடை விரித்துள்ளன. நமது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சீனாவிலிருந்து புலம் பெயரும் கம்பெனிகள் இந்தியாவை தேர்ந்தெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால் வெளியேறிய நிறுவனங்களில் 3 மட்டுமே இந்தியாவை நோக்கி வந்தன. 26 நிறுவனங்கள் வியட்நாமை நோக்கி சென்று விட்டன. 11 பன்னாட்டு நிறுவனங்கள் தாய்வானில் கடை விரித்துள்ளது. மற்றும் உள்ள 8 கம்பெனிகள் தாய்லாந்தை நோக்கி ஓடுகின்றன.
ஏன் நமது இந்தியாவை தேர்ந்தெடுக்கவில்லை? உழைக்கும் மக்கள் மிக சொற்ப தொகைக்கு கிடைக்கும் இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்கள் கை கழுவ காரணம் என்ன?
அழகிய இந்தியாவை இன்று மோடியும் அமித்ஷாவும் சின்னாபின்னப்படுத்தி விட்டார்கள். மாட்டுக் கறி விவகாரத்தில் எத்தனை கொலைகள்? முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் அமித்ஷாவின் அடியாட்களால் துவம்சம் செய்யப்பட்டதை சமீபத்தில் டெல்லியில் கண்டோம். அனைத்து தூதரகங்களும் டெல்லியில்தான் உள்ளன. அனைத்து தூதர்களும் தங்கள் நாட்டுக்கு தற்போதய இந்திய நிலையை பட்டியலிட்டுக் கொடுத்திருப்பார்கள். பல கோடிகளை கொட்டி தொழில் தொடங்குபவன் நாடு அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பான். ராமர் கோவில், பொது சிவில் சட்டம், குடியுரிமை பறிப்பு என்று தினமும் மற்றவர் குடிகளை கெடுத்து அதில் இன்பமடையும் அமித்ஷா போன்ற உள்துறை மந்திரிகளை கொண்ட ஒரு நாட்டில் முதலீடு செய்ய அவன் என்ன கிருக்கனா? எவனும் இனி வரப் போவதில்லை. மொத்த தங்கத்தையும் விற்று தீர்த்தாகி விட்டது. இனி வெளிநாடுகள் கடன் தரப் போவதில்லை. கொரோனா வேறு இன்னும் ஆறு மாதத்துக்கு இந்தியாவை நிமிர விடாது. பசி, பட்டினி என்று காலம் தள்ளப் போகும் ஒரு நாட்டை எந்த முதலாளியும் தேர்ந்தெடுக்க மாட்டான். மோடியும் அமித்ஷாவும் அதிகாரத்தில் இருக்கும் காலமெல்லாம் இந்தியாவுக்கு எந்த விமோசமும் இல்லை. வருங்கால இந்தியா மிக பயங்கரமானதாக நமக்கு இருக்கப் போவதென்னவோ உண்மைதான்.
ஆனால் இறைவன் நினைத்தால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தலாம். அந்த நம்பிக்கையில்தான் நமது வாழ்வும் ஓடுகிறது.
ஆக்கம்
சுவனப்பிரியன்
சுவனப்பிரியன்
1 comment:
ராமர் கோவில், பொது சிவில் சட்டம், குடியுரிமை பறிப்பு என்று தினமும் மற்றவர் குடிகளை கெடுத்து அதில் இன்பமடையும் அமித்ஷா போன்ற உள்துறை மந்திரிகளை கொண்ட ஒரு நாட்டில் முதலீடு செய்ய அவன் என்ன கிருக்கனா?
இந்தியா-இந்துஸ்தானம் நட்டப்பட்டு போனதில் அரேபிய அடிமை சு..ன் க்கு ஏக மகிழ்ச்சி
01) பன்னாட்சி கம்பெனிகாரன் கடை விரிக்க நிலம் தண்ணீா் மின்சாரம் வரிச்சலுகை என்று
சில நிபந்தனைகளை சலுகைகளைக் கேட்பான்.இதற்கு அரசு சம்மதித்தாலும் கார்ப்பாரேட்களுக்கு சலுகை கொடுக்கிறான் என்று பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியில் ஒரே கூப்பாடு போட்டதன் விளைவு.சதா அரசாங்கத்தை மலினப்படுத்தி செய்யப்பட்ட பொய்யான வெத்து கூச்சல் பிரச்சாரம் காரணமாக இருக்கலாம்.
02.சதா முஸ்லீம்கள் கலவரம் செய்து கொண்டுயிருந்ததை தடுக்க டெல்லி அரசும் தம்ழ்நாடு அரசும் இயலாது தவித்தன. கொரானா பரவ காரணமாக இருந்த தப்லீக் மாநாட்டை டெல்லி அரசு முறையாக கையாளவில்லை. விளைவு கொரானா கடும் வேகமாக பரப்பப்பட்டது.காயல்பட்டணத்து அரசு மருத்துவமனை மருத்துவா் அவரது மனைவியும் தப்லீக் மாநாட்டிற்குச் சென்று காயல்பட்டணம் அரசு மருத்துவமனை முழுவதும் கொரானாவை பரப்பி பாழாக்கி விட்டார்கள். அதனால் காயல்பட்டணம் அரசு மருத்துவமனை சில நாட்கள் மூடப்பட்டது.தற்போது திறந்திருக்கலாம்.
Post a Comment