Followers

Thursday, April 30, 2020

ஸபூரா ஜர்கர் - வயது 27

ஸபூரா ஜர்கர் - வயது 27
இரண்டு மாத கர்ப்பிணி. சிஏஏ போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக ஜாமிஆ மில்லியா மாணவியான இவரை டெல்லி காவல் துறை கைது செய்துள்ளது. பல குற்ற வழக்குகளை ஜோடித்து இவரை சிறையில் தள்ளியுள்ளது. தனது கணவரிடமும் பேச அனுமதிக்கவில்லை.
கொரோனா தொற்று ஏழை மக்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக தனது தோழிகளோடு சேர்ந்து சமூக சேவை ஆற்றி வந்தவர் இவர். தற்போது இவருக்கு பல மன உளைச்சல்களை டெல்லி காவல் தறை கொடுத்து வருகிறது. போர்க் காலங்களில் கூட கர்ப்பிணிகளை கைது செய்வது உலக மரபல்ல. ஆனால் பாசிச மோடி அரசு இதைப் பற்றி எல்லாமா கவலைப்பட போகிறது.
இந்த கொடூர பாசிச ஆட்சியாளர்களை இறைவன் அழித்தொழிப்பானாக!



3 comments:

Dr.Anburaj said...

கர்ப்பிணி பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கட்டாய கடமை.அம்மணிக்கு படிக்கின்ற வயதில் வீண் வேலை ஏதறகு ? கூட்டம் சோ்ந்தவுடன் ஆவேசம் ஆர்ப்பாட்டம் என்று நிதானம் இழந்து வம்புகள் செய்வது. பின் மாட்டிக்கொண்டு விழிப்பது.

பொய் குற்றச்சாட்டு இவா் மீது போடப்பட்டுள்ளது

என்று நீதிமன்றம் சொல்ல வேண்டும். அதுவரை காத்திருக்க வேண்டும். சிறையில் ஆயிரக்கணக்கில் பெண்கள் உள்ளார்கள். இந்த அம்மணி மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கின்றது. அல் தக்கியாதான் நடப்பு.சதா இந்துக்கள் பற்றி பொய் பிரச்சாரம் அவதூறு பேசுவது முஸ்லீம்களின் 1500 ஆண்டுகால சதித்திட்டம்.

Dr.Anburaj said...


பங்களாதேஷ் பொருளாதாரத்தை பாழாக்க வந்திருக்கும் கோமாளி ஹைபேஒட்-ஆ.இஸ்லாம் இயக்கத்தலைவா் தலைவா் குவாமி மதரசா கல்வி நிறுவனங்கள்
For those who don’t know, this elderly person is the chief of Hefajot e Islam, an Islamist pressure group that proclaims to work for protecting Islam in Bangladesh. On top of that, he is the chairman of Qawmi Madrassa Education Board, the supreme authority of faith-based education system in Bangladesh.
இந்த தலைவா் தனது சீடர்களிடம் தங்களின் பெண்குழந்தைகளை ஆரம்பக் கல்விக்கு மேல்படிக்க வைக்க மாட்டோம் என்ற உறுதிமொழியைப் பெற்றிருக்கின்றான். அப்படி அனுப்பினால் அவர்கள் கீழ்படிதல்இல்லாதவர்கள் அறிவிக்கப்பட்டு மற்றவர்களால் காமபசி தீர்க்கப் பயன்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளான்.
On 11th January 2019, he made his followers promise that they would not send their daughters to schools.[1] It was an annual religious gathering and he warned the attendees saying if they let their daughters study beyond primary level, they would become disobedient and other men would use them to fulfill their lust.

The same man said ‘women are like tamarind and would make real men salivate’ in 2013. He always instructs the adherents to confine ‘their women’ to their houses so that they can’t lead other men to the path of sin.
பெண்கள் புளியம்பழம் போன்றவர்கள்.மற்றவர்கள் நாவில் எச்சில்ஊற வைக்கும் திறன் படைத்தவர்கள். ஆகவே பெண்கள் வீட்டிற்குள்தான் இருக்க வேண்டும் என்று திருவாள மலாந்துள்ளான்.

The irony is, he or his disciples would not let any male doctor examine female members of their families. The first thing they would demand after appearing at a hospital is a ‘Mohila Dactor’ (female physician).
அவரது சீடார்கள் தங்கள் குடும்ப பெண்களை ஆண் மருத்துவர்கள் பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.
People say Bangladesh is an economic miracle. I myself affirm it. My lifestyle now cannot be compared with the way I lived in my childhood. Bangladesh has become an aspiring tiger economy largely because of the hard working Bangladeshi women. They devoted their lives to the garment industry, the sector that has been powering Bangladesh’s economy for decades. A majority of the industry's four million employees are female. They have raised the country’s export earning above $36 billion which was only $377 million during the fiscal year 1972–73. And piggybacking on the industry that our girls built, we all are making our ends meet. The housewives of rural Bangladesh took out loans from microfinance programs and turned their houses into profitable business centers, thus improved the socioeconomic condition of the villages significantly. And now these morons, without any contribution towards the society, living on endowments and donations, trying to make the people think less of their heroes.
பெண்கள் அயத்த ஆடைகள் கமபெனிகளில் உழைத்து குடும்பத்தைகாப்பாற்றி பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவி வரும் வேளையில் இத்தகைய முட்டாள்களால் என்ன நன்மை ஆபத்து எற்படும் என்று அசந்து போய் நிற்கின்றனா் பங்களாதேஷ் மக்கள் -பெண்கள்.
இசுலாம் இனிய மார்க்கமா ?
Footnotes
[1] https://www.thedailystar.net/backpage/news/dont-send-girls-school-college-1686427

Dr.Anburaj said...

ஒரு டம்ளர் பால்!

ச.நாகராஜன்

ஒரு ஏழைச் சிறுவன். வீடு வீடாக தேவைப்பட்ட பொருள்களைப் பலருக்கும் விற்று சிறிது காசு சம்பாதிப்பான். கிடைக்கும் காசை வைத்து பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டுவான்; தனது புத்தகங்களையும் வாங்கிப் படிப்பான்.

ஒரு நாள் அவன் கையில் ஒரே ஒரு பைசா (டைம் Dime) தான் இருந்தது. ஒரே பசி.

தான் செல்லவிருக்கும் அடுத்த வீட்டில் அந்த ஒரு டைமைக் கொடுத்து ஏதேனும் வாங்கி உண்ணலாம் என்று அவன் முடிவு செய்தான்.

ஆனால் அடுத்த வீட்டின் கதவைத் தட்டிய போது வெளியே வந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்து அவன் தயங்கினான். தான் கேட்க நினைத்ததைக் கேட்க அவனால் முடியவில்லை. ஆனால் பசியோ பசி!

ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறு கேட்டான் அவன்.

அந்த இளம் பெண் அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து அவன் அளவற்ற பசியால் துடிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டாள். ஆகவே தண்ணீருக்குப் பதிலாக ஒரு பெரிய டம்ளரில் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

மெதுவாக அதைக் குடித்த அந்தச் சிறுவன், “நான் இந்தப் பாலுக்காக எவ்வளவு கொடுக்க வேண்டும்?” என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான்.

“எனக்கு ஒன்றும் தர வேண்டாம். அன்பிற்கு விலை பேசக் கூடாது என்று என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாள்” என்றாள் அவள்.

“அப்படியானால் என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றான் அந்தச் சிறுவன்.

அந்தச் சிறுவனின் பெயர் ஹோவர்ட் கெல்லி (Howard Kelly).

அந்த வீட்டை விட்டு வெளியேறும் போது ஒரு புத்துணர்ச்சியைப் பெற்றான் அவன். கடவுள் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை கூடியது; நல்ல உணர்ச்சிகள் கூடியது!

ஒரு தக்க தருணத்தில் இப்படி ஒரு அன்பைக் காட்டிய பெண்மணி அவனுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தாள்.

வருடங்கள் ஓடின.

அவன் ஒரு பெரிய டாக்டராக ஆனான்; பெயரும் புகழும் பெற்றான்.

ஒரு நாள் எந்த இளம் பெண் அவனுக்குப் பாலை வழங்கினாளோ அவளுக்கு கடுமையான நோய் ஒன்று வந்தது.

அவள் வசித்து வந்த ஊரில் உள்ள டாக்டர்கள் திகைத்தனர்; அதைக் குணப்படுத்த அவர்களால் முடியவில்லை.

அவர்கள் நகருக்குச் சென்று ஹோவர்ட் கெல்லியைப் பார்க்குமாறு ஆலோசனை கூறினர்.

அந்தப் பெண்ணும் ஸ்பெஷலிஸ்டான ஹோவர்ட் கெல்லியைப் பார்க்கச் சென்றாள்.

அந்தப் பெண் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்பதைக் கேட்டவுடன் கெல்லியின் கண்கள் பளபளத்தன. நேராக நோயாளி இருந்த இடத்திற்கு விரைந்து சென்றார்.

ஆம், அதே பெண் தான்! அவர் நன்றாக அடையாளம் கண்டு கொண்டார்.

உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினார். எப்பாடு பட்டேனும் அவளைக் காப்பாற்றுவது என்று உறுதி பூண்டார்.

பெரும்பாடு பட்டு கடைசி கடைசியாக அவர் வென்றார். அந்தப் பெண் பூரண குணமடைந்தாள்.

கெல்லி அக்கவுண்ட்ஸ் பிரிவின் அதிகாரிக்கு அந்தப் பெண்மணிக்கு ஆன செலவுக்கான பில்லைத் தனக்கு அனுப்பச் சொன்னார். அக்கவுண்ட்ஸ் பிரிவும் அவரது அங்கீகாரத்திற்காக அந்த பில்லை அவரிடம் அனுப்பியது.

அந்தப் பில்லைப் பார்த்தார் அவர்! பெருந்தொகை தான்!!

அந்த பில்லின் கீழே கோடியில் சில வார்த்தைகளை அவர் எழுதி விட்டு, அந்த பில்லை அந்தப் பெண்ணிடம் அனுப்பச் சொன்னார்.

அந்தப் பெண்மணி நடுநடுங்கிக் கொண்டிருந்தாள், பில்லை நினைத்து - இந்த ஜென்மத்தில் அந்த பில் தொகையைத் தன்னால் கட்ட முடியுமா என்பதே அவள் பயம்!

அந்த பில்லை வாங்கிப் பார்த்தாள்! அடேயப்பா!

ஆனால் பில்லின் அடியில் ஓரத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள் அவள் கவனத்தை ஈர்க்கவே அவள் அதைப் படித்தாள் :

“Paid in full with one glass of milk”

Signed Howard Kelly

ஒரு டம்ளர் பாலால் பில் முழுவதும் கட்டப்பட்டது.

ஹோவர்ட் கெல்லி.

அந்தப் பெண்மணியின் கண்களில் நீர் துளித்தது.

அவள் ஹோவர்ட் கெல்லி யார் என்பதை இப்போது தெரிந்து கொண்டாள்.

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!