200 வெளிநாட்டவர்... இவர்களால் கொரோனா பரவாதா?
இந்தியா கேட் பகுதிக்கு இரண்டு பஸ்களில் 200க்கும் அதிகமான வெளிநாட்டவர் டேராடூனிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். 'எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று பத்திரிக்கையாளர் கேட்க பதிலளிக்க மறுக்கின்றனர் வெளி நாட்டினர்.
காவல் துறையிடம் 'ஊரடங்கு அமுலில் இருக்கும் போது இவ்வளவு பேரை அடைத்து எங்கு கொண்டு செல்கிறீர்கள்? எப்படி வெளியில் நடமாட அனுமதித்தீர்கள்?' என்ற கேள்விக்கு 'மேலிட உத்தரவு' என்ற பதில் மட்டுமே வருகிறது.
40 பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய ஒரு பேரூந்தில் 100 பேரை அடைத்து ஏன் வெளியே கொண்டு வந்தார்கள்? சமூக இடைவெளி இங்கு கேலிக் கூத்தாகியுள்ளது.
ஒருவரிடம் கேட்டால் 'விமான நிலையம் செல்வதற்காக வந்தோம் ' என்கிறார். விமான பயணம் அனைத்தும் ரத்தாகியிருக்கும் போது இவர்களுக்கு மட்டும் விஷேசமாக எங்கிருந்து வரும் விமானம்? இதற்கு அனுமதி கொடுத்த மேலிடப் புள்ளி யார்? அனைவரும் வெளி நாட்டவர். இவர்களுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டதா? இவை எதற்கும் உங்களுக்கு பதில் கிடைக்காது. ஏனெனில் இது மேலிட உத்தரவு.
இந்துத்வாக்களின் ஆட்சியில் இந்த நாடு இன்னும் எதை எல்லாம் சந்திக்கப் போகிறதோ?
No comments:
Post a Comment