Followers

Thursday, October 17, 2013

ஹஜ்ஜூக்கு வந்த அமெரிக்க புதிய முஸ்லிம்கள்!



ஹஜ்ஜூக்கு வந்த அமெரிக்க புதிய முஸ்லிம்கள்!

அமெரிக்காவிலிருந்து இந்த வருட ஹஜ்ஜூக்காக வந்துள்ள ஜமீல் வாகர் தனது கருத்தாக 'முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களை அன்போடு அணுகி இஸ்லாத்தின் மேல் உள்ள தவறான கருத்துக்களை களைய முற்பட வேண்டும்' என்ற கோரிக்கையை வைத்துள்ளார். நியூயார்க் சிடியில் வசிக்கும் இவர் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் பிஸினஸூம் பார்த்து வருகிறார்.

இந்த வருடம் அமெரிக்காவிலிருந்தும் கனடாவிலிருந்தும் 2000 க்கும் மேற்பட்ட ஹாஜிகள் வருகை புரிந்துள்ளனர். மற்ற நாடுகளிலிருந்து வந்த ஹாஜிகள் மொத்தம் 1.6 மில்லியன்கள் ஆகும். இதில் அதிகமான ஹாஜிகள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். மினாவில் ஒரு அமெரிக்க ஹாஜிகள் குரூப் 'ஹஜ்ஜூக்குப் பிறகு நமது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்' என்று புதிய முஸ்லிம்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தது. புதிய முஸ்லிம்கள் இந்த சொற்பொழிவுகளை மிக ஆர்வத்தோடு கேட்டு குறிப்புகளும் எடுத்துக் கொண்டிருந்தனர்.

'என்னைக் கேட்டால் மாற்று மதத்தவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய ஒரு பயம் இருக்கிறது. இது ஒரு வன்முறை மார்க்கம் என்ற தோற்றம் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றுவதே நம்முன் உள்ள தலையாய பணி. 35 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தொழுவதற்கு பள்ளிகளை தேடி வெகு தூரம் செல்ல வேண்டும். ஆனால் தற்போது அமெரிக்காவில் திரும்பிய இடமெல்லாம் மசூதிகளாக இருக்கின்றன. மசூதிகளில் கூட்டமும் நிரம்பி வழிகிறது. நிரம்பி வழியும் அந்த கூட்டமும் இளைஞர்களாக இருப்பது மேலும் ஆச்சரியப்பட வைக்கிறது' என்கிறார் ஜமீல்.

'எனது மகன் ஷான் அல்பேனி மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறான். இன்று வரை ஹலால் உணவங்களையே தேடி செல்கிறான். அவனது மாற்று மத நண்பர்களும் இவனை பின் பற்றி ஹலால் உணவகங்களையே அதிகம் நாடுகின்றனர். முஸ்லிம்களாகிய நம்மை விட சில நல்ல பழக்கங்களை மாற்று மதத்தவர்களும் கொண்டுள்ளதை இங்கு நாம் மறுக்க முடியாது. அவர்களது நம்பிக்கைகளை கேலி செய்வது: கிண்டல் செய்வது: அவர்கள் மனம் புண்படும்படி வார்த்தைகளை வீசுவது என்ற பல செயல்களை நாம் குறைத்துக் கொண்டு அவர்களை அன்போடு அணுக வேண்டும். அவர்களுக்கும் நமக்கும் உள்ள மிகப் பெரிய இடைவெளியை குறைக்க முயற்சிக்க வேண்டும். இது போனற நல்ல செயல்கள் அவர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இன்முகத்தோடு அணுக வழி வகுக்கும். இதனால் குறைந்த பட்சம் இஸ்லாத்தைப பற்றிய தவறான பிம்பம் விலக வாய்ப்புள்ளது' என்கிறார் ஜமீல் வாகர்.

'2000 க்கும் மேற்பட்ட ஹாஜிகள் அமெரிக்காவிலிருந்தும் கனடாவிலிருந்தும் வருகை புரிந்துள்ளோம். ஹஜ் எங்களுக்கு சிறந்த வழி காட்டிகளின் உதவியால் மிக சிறப்பாகவும் சிரமமில்லாமலும் முடிந்தது. நான் முதல் வகுப்பு பயணம் என்பதால் 14 ஆயிரம் டாலர் கட்டி வந்துள்ளேன். இரண்டாம் வகுப்பு பயணக் கட்டணமாக 10000 டாலர் பணம் கட்டியும் பலர் வந்துள்ளனர். எங்களின் இந்த பயணம் மிக சிறப்பாக அமைய உறு துணை புரிந்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.' என்கிறார் ஜமீல் வகார்.

தகவல உதவி

அரப் நியூஸ்


3 comments:

Anonymous said...

(உதகையில் நடந்த இந்து முன்னணி மா நாட்டின் போது உதகை திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டு வெளியீடு இது)

இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். மேதாவிகளின் கவனத்திற்கு...

1.நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தாதீர்கள்.ஏனெனில், இதைக்
கண்டுபிடித்தவர் பென் ஜமின் பிராங்கலின் என்னும்
கிறித்தவர்.

2.நீங்கள் இரயில் வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில்
இதை கண்டுபிடித்தவர் ஹென்றி போர்டு என்ற
கிறித்தவர்.

3.நீங்கள் கேமிராவை பயன்படுத்தாதீர் கள். ஏனெனில் இதைக்
கண்டுபிடித்தவர் தாமஸ்பெல்ஸ் உட் என்ற
கிறித்தவர்.

4.நீங்கள் திரைப்படங்களை பார்க்கா தீர்க ஏன் பார்க்கக் கூடாது என்ற
சந்தேகம் தோன்றினால் இதை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர். அதனால் திரைப்படம் பார்க்காதீர்கள் .

5.நீங்கள் கிராம போனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக்
கண்டுபிடித்தவர் தாமஸ்ஆல்வா எடிசன் என்ற
கிறித்தவர்.

6.நீங்கள் வானொ லியை கேட்காதீர்கள்.ஏனெனில் இதைக்
கண்டுபிடித்தவர் மார்கோனி என்ற கிறித்தவர்.

7.நீங்கள்கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக்
கடிகாரத்தைக் கணடு பிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிறித்தவர்.

8.நீங்கள் அச்சுப் பொறியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அதைக்
கண்டுபிடித்தவர் ஹீடன் பார்க்கேக்ஸடன் என்ற கிறித்தவர்.

9.பவுண்டன் பேனாவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக்
கண்டுபிடித்தவர் வாட்டர்மேன் என்னும் கிறித்தவர்.

10.நீங்கள் டயரை பயன்படுத்தாதீர்கள்.ஏனெனில் இதைக்
கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிறித்தவர்.

11.நீங்கள் டெலிபோனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக்
கண்டுபிடித்தவர் அலெக் சாண்டர் கிரஹாம்பெல் என்ற
கிறித்தவர்.

12. நீங்கள் தையல் மிஷின் என்ற கருவியை பயன்படுத்தாதீர்
கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ்
என்ற கிறித்தவர்.

13. நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள்.
ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது. அரபு நாடு களுக்கு பிழைக்கப் போன இந்துக்களை திரும்பி வரும்படி கூறி விடுங்கள். ஏனெனில் அது முஸ்லிம் நாடு.

14.உங்கள் கால், கை, உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக்
கொள்ளாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர்
வில்லியம் ரோன்டஜன் என்ற கிறித்தவர்.

குறிப்பு: நம் நாட்டிலுள்ள நம் இனத்தை சேர்ந்த கிறித்தவர்கள்
முஸ்லிம்கள் ஆகி யோருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்
கொள்ளக் கூடாது என இந்துக்களுக்கு அறிவுறுத்தி மத
கலவரத்தை தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியினரால்
போடப்பட்ட தீர்மானத்திற்கு ப் பதிலாக இது அமையும்.

Unknown said...

அமெரிகாவையும் கெடுத்துட்டீங்களே. இனிமேல் சுதந்திரத்துக்கு எங்க போவோம்

suvanappiriyan said...

//அமெரிகாவையும் கெடுத்துட்டீங்களே. இனிமேல் சுதந்திரத்துக்கு எங்க போவோம் //

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று இருந்த எனது முன்னோர்களை கெடுத்து பல தெய்வ வணக்கத்தில் நீங்களும் உங்கள் முன்னோர்களும் தள்ளியது போலவா! :-)

உண்மையை இப்படியெல்லாம் ஒத்துக்கப்படாது ஜெய்சங்கர்.