Followers

Friday, October 11, 2013

பலி ஆடுகளா போலீஸ் ஃபக்ருதீனும், பிலால் மாலிக்கும்!
வேலூரில் கொல்லப்பட்ட அரவிந்த ரெட்டியை கொன்றதாக சொல்லி வஜுர் ராஜா- வை பிடித்தார்கள் சிறையில் அடைத்தார்கள். இப்போது போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர்கள் செய்ததாக போலிஸ் சொல்கிறது.! முன்பு குற்றவாளிகளாக போலிசாரால் சொல்லப்பட்ட வசூர் ராஜா இப்போது குற்றவாளியா? நிரபராதியா?

வேலூர் மத்திய சிறையில் இருந்தபடி, ரவுடி வசூர் ராஜா, ரெட்டியை கொலை செய்ததாக, அப்போதைய வேலூர் எஸ்.பி., ஈஸ்வரன் கூறினார். அதன் பின், வேலூர் ஓல்டு டவுனைச் சேர்ந்த தங்கராஜ், பிச்சை பெருமாள், தோட்டப்பாளையத்தை சேர்ந்த சத்யா, உதயா என்ற உதயகுமார், அரியூரை சேர்ந்த ராஜா மற்றும் திட்டம் போட்ட வசூர் ராஜா என, ஆறு பேரை நவம்பர், 22ம் தேதி கைது செய்தனர். ராஜாவை கடலூர் சிறையிலும், மற்றவர்களை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில், 'அரவிந்த் ரெட்டியை கொலை செய்தது, நாங்கள் தான்' என, பயங்கர வாதி, 'போலீஸ்' பக்ரூதீன் வாக்கு மூலம் அளித்திருப்பது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் தெற்கு போலீசார் இந்த வழக்கை விரைந்து முடித்து, நல்ல பெயர் எடுப்பதற்காக, ரவுடி வசூர் ராஜா உள்ளிட்ட, ஆறு பேரை பலி கடா ஆக்கி விட்டதாகவும், அவரை, நான்கு நாள் போலீஸ் காவலில் எடுத்து, ரெட்டியை கொலை செய்ததாக ஒப்பு கொள்ள வைத்து, வழக்கை முடித்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், ரெட்டி கொலை வழக்கை மீண்டும் விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்ட மிட்டுள்ளனர். இதை அறிந்த வேலூர் தெற்கு போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர். பக்ருதீன் கூறியது உண்மை என நிரூபிக்கப்பட்டால், வசூர் ராஜாவை கொலையாளி என, அப்போது அடையாளம் காட்டிய அப்போதைய எஸ்.பி., ஈஸ்வரன், வேலூர் டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் அண்ணா துரை ஆகியோர் மீது, துறை ரீதியான விசாரணை நடத்தி, தவறு உறுதியானால், தண்டிக்க வாய்ப்பு உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


இது இன்றைய தினமலரின் செய்தி:

"இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல, 100 புத்தக வெடிகுண்டுகளை, பயங்கரவாதி அபுபக்கர் சித்திக், தயாரித்து, மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவல், அவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது."

-தின மலர்

துப்பாக்கி குண்டுகளை மறைத்து வைக்க வேறு இடங்களே கிடையாதா? என்ன ஒரு கற்பனை...

இனி வருங் காலங்களில் தின மலரில் போலீஸ் பக்ருதீன் சொன்னதாக இப்படியும் செய்திகள் வரலாம்.:-)

செப்டம்பர் 11 அமெரிக்க தாக்குதலை நடத்தியதும் நாங்கள் தான்:

காந்தியை கொன்று கோட்சேவின் மேல் பழியைப் பொட்டதும் நாங்கள் தான்:

மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்புகளை நாங்களே நிகழ்த்தி சாது பிரக்யாசிங்கை மாட்டி விட்டோம்:

--------------------------------------------------------------

வேலூரில் 23.10.2012 அன்று பா.ஜக. மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த ரெட்டி, பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொல்லப்பட்டார். இது தொடர்பாக வசூர் ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன், ராஜா, பிச்சைப்பெருமாள், தரணிகுமார் ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. பரமக்குடியில் கடந்த 19.3.2013 அன்று நகர பா.ஜ.க. செயலாளர் தேங்காய் கடை முருகன், நிலத்தகராறில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராஜா முகம்மது, மனோகரன், ரபீக் ராஜா, சாகுல் அமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

- தமிழக காவல்துறை தலைவர் ராமானுஜம் 26-07-2013 அன்று வெளியிட்ட அறிக்கை

---------------------------------------------------------------

இதை எல்லாம் இப்படி திட்டமிட்டு இந்துத்வாவினர் செய்வதற்கு பின்னணி என்ன? ஏன்? என்பதற்கு ஒரு இந்துத்வா வாதி தின மலரில் எழுதியுள்ள கமெண்டை பாருங்கள்.


rishi - varanasi,இந்தியா
09-அக்-201302:04:39

பிஜேபி வாக்கு இந்த முறை நிச்சயம் பெருகும். காரணம் விஸ்வரூபம், வெள்ளையப்பான் கொலை , ரமேஷ் கொலை , பொரிக்கி தீவிரவாதிகளின் வாக்குமூலம் , அனைத்து கட்சிகளின் மௌனம் இவை அனைத்தும் பிஜேபி வளர்சிக்கு உதவும் பிஜேபி அழிக்க வாள் ஏந்தினார்கள? இனிதான் பிஜேபி வளரபோகிறது .

-------------------------------------------------------------

பக்ருதீன் அலி அகமது என்ற போலீஸ் பக்ருதீன் சின்ன வயதில் தீவிர ரஜினி ரசிகர். ரஜினி படம் பார்ப்பதற்காக இரும்புப் பட்டறையில் வேலைபார்த்துச் சம்பாதித்த ஒரு ரூபாய், ரெண்டு ரூபாயை வைத்துக் கொண்டு டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பார். சிந்தாமணி தியேட்டரில், பாயும் புலி படம் ஓடியபோது ஆண்கள் டிக்கெட் விலை அதிகம் (90 பைசா, ரூ.1.10 பைசா). ஆனால் பெண்கள் டிக்கெட் 30 பைசா, 60 பைசாதான். இதனால், பெண்கள் டிக்கெட்டை 30 பைசாவுக்கு வாங்கிவிட்டு, மீதிக்காசுக்கு முட்டை போண்டா சாப்பிடலாம் என்று கணக்கு போடுவார்.

அதற்காக பெண்களிடம் டிக்கெட் எடுத்துத்தரச் சொல்லி கெஞ்சுவார். சில முறை பெண்கள் காசை வாங்கிவிட்டு, டிக்கெட் எடுத்துக் கொடுக்க மறந்துவிடுவார்கள். அவர்கள் வருவார்கள் வருவார்கள் என்று வாசலிலேயே ஏமாற்றத்தோடு காத்திருப்பார். இப்படி பலமுறை நடந்திருக்கிறது. அதெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும்தான். பிறகு, அவர் வயதொத்த பையன்களிடம் சேர்ந்து பாதை மாறிவிட்டார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/article5217764.ece?homepage=true

ஆக..கூத்தாடிகளை தனது வழிகாட்டியாக கொண்ட பக்ருதீன் இந்துத்வாவாதிகளை போட்டுத் தள்ள வேண்டிய அவசியம் என்ன? இவனுக்கும் இஸ்லாத்துக்கும் என்ன தொடர்பு?

------------------------------------------------------------

போலீஸ் காவலில் இருக்கும் பக்ருதீன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் முதலில் முரண்டு பிடித்துள்ளார். உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், அவர் தோளில் கை வைத்தபடி, “உன் காதல் மனைவி உன்னை உதறித்தள்ளிய பிறகு தான், இப்படி மூர்க்கத்தனமாக மாறிட்டியா?” என்று கேட்டிருக்கிறார். அடுத்த நொடியே பக்ருதீனின் கண்கள் கலங்கிவிட்டன. தன் காதல் மனைவி பற்றி அந்த அதிகாரியிடம் புலம்பியதோடு, அதுவரை மறைத்த தகவல்களையும் போலீஸில் கொட்டியிருக்கிறார்.

கல் நெஞ்சையும் கரைத்த காதல் கதையை அறிய மதுரையில் நாம் விசாரணையை துவக்கினோம். “அடிக்கடி அடிதடியில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்று திரும்பியபோது, பக்ருதீனுக்கு ஏரியாவுக்குள் ஹீரோ இமேஜ் உருவானது. அப்போது மும்தாஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணைக் காதலித்தார். வயதில் பாதிதான் இருக்கும் அந்த பெண்ணும் விரும்பியிருக்கிறார்.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article5217677.ece?homepage=true

-------------------------------------------------------------

எங்களை இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்பவர்களுக்கு, எங்களை இஸ்லாமியர்களே ஒதுக்கித் தான் வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரியுமா? இன்று எங்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி வீதியில் வீராவேசமாகப் பேசுபவர்கள், என் குடும்பத்தினர் சித்ரவதை செய்யப்பட்ட போது எங்கே போனார்கள்? ...

நானும் 1993ல் சவுதி அரேபியாவுக்கு வேலைக்குப் போய்விட்டேன். இதனால் சேர்க்கை சரியில்லாமல் வம்பு, தும்பில் சிக்கி அவனை அடிக்கடி போலீஸார் பிடித்தனர். 18 வயதுக்குள் 5 வழக்குகள் பதிவாகிவிட்டது.

1995ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு வைத்த வழக்கில் அவனை சம்பந்தமே இல்லாமல் கைது செய்தனர். அன்று முதல் அவனைத் தீவிரவாதி என போலீஸார் கூற தொடங்கினர். இதில் உண்மைக் குற்றவாளி வெங்கடேசன் என்ற முஸ்தபாதான் என்று தெரியவந்தது. இந்த வழக்கில் பக்ருதீன் உள்ளிட்டவர்களை பொய்யாக கைது செய்ததற்காக வெடிமருந்து வாங்கிய உதவி ஆய்வாளரை சி.பி.ஐ. கைது செய்தது. அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.

கடந்த 1998ல், மதுரை மதிச்சியத்தில் பரமசிவம் என்பவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றான். அங்குதான் தப்பான வழிக்கு போக காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். 2001ல் ஜாமீனில் வந்தவன், திருமங்கலம் கோர்ட்டில் போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையிட்டு, இமாம் அலியை மீட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டு, எங்கள் நிம்மதிக்கு உலை வைத்தான். அந்த வழக்கில் 7 ஆண்டு சிறையில் இருந்தான்.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/article5210258.ece

திருந்தி வாழ நினைத்த பக்ருதீனை நமது காவல் துறையும் விடவில்லை.

காவல் துறை மனது வைத்தால் யாரையும் கொலைகாரனாக மாற்ற முடியும்: உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைத்து விட முடியும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். இனி என்னவெல்லாம் பொய்கள் சபை ஏறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.2 comments:

Anonymous said...

• 1) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ? Ans: RSS pracharaks Sandeep Dange and Ramji.

• 2) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ? Ans: Sandeep Dange and Ramchandra Kalsangra. Lokesh Sharma. (RSS)

• 3) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ? Ans: arrests Devendra Gupta, Chandrashekhar and Vishnu Prasad Patidar. Accused Sunil Joshi, who was killed weeks before the blast, is believed to have been a key ப்லான்நேர்

4) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ? Ans: 2 dead Both accused are members of the Sanathan Sanstha. Malgonda Patil and Yogesh Naik were riding a scooter laden with explosives, which accidentally went off.

5) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ? Ans: Abhinav Bharat and Rashtriya Jagaran Manch accused of involvement. Arrested include Pragya Singh Thakur, Lt Col Srikant Purohit and Swami Amritanand Dev Tirth, also known as Dayanand Pandey.

• 6) தானே சினிமா தியேட்டரில் வெடிகுண்டு வைத்தது யார்? Ans:RSS Affiliated to Hindu Janjagruti Samiti and Sanathan Sanstha, Ramesh Hanumant Gadkari and Mangesh Dinkar Nikam arrested. Blast planned to oppose the screening of Jodhaa Akbar.

• 7) கான்பூர் மற்றும் நந்தேட் நகரங்களில் குண்டு வைத்தது யார்? Ans: Two members of Bajrang Dal—Rajiv Mishra and Bhupinder Singh—were killed while assembling bombs in Kanpur. In April 2006, N. Rajkondwar and H. Panse from the same outfit died under similar circumstances in a bomb-making workshop in Nanded.

''சத்தியமங்கலம், அருகே உள்ள சதுமுகை என்னும் ஊரில் விநாயகர் சிலைக்கு சிலர் செருப்பு மாலை அணிவித்தனர். இதற்குக் காரணம் முஸ்லிம்களும் திராவிடர் கழகத்தினரும்தான் என்று குற்றம்சாட்டி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில் அதைச் செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகியோர் என்பது தெளிவானது.

9) தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது, முஸ்லிம்கள்தான் இதற்குக் காரணம் என்று கூறி ராமகோபாலன் உள்ளிட்ட இந்துத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில், குண்டு வைத்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், லட்சுமி நாராயண சர்மா என்பது நிரூபிக்கப்பட்டது.

10) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குண்டு வெடித்தபோதும், 'இஸ்லாமிய தீவிரவாதிகளை கைதுசெய்’ என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அப்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி. எதிர்க் கட்சியாக இருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர்தான், தி.மு.க-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அதைச் செய்தார் என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெளிவானது.

11) தானே தன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டை வீசிவிட்டு பிறகு மாட்டிகொண்டது. யார் ? திண்டுக்கலில்,பி.ஜே.பி நிர்வாகிகள் பிரவீன் குமார், கமலகண்ணன். கோவையில் பி.ஜே.பி முன்னாள் மண்டல செயலாளர் ராமநாதன்.

jaisankar jaganathan said...

அருமை சுவனப்பிரியன். நீங்க மட்டும் கிறிஸ்துவரா இருந்திருந்தா போப்பின் எல்லா கொலைகளும் கர்த்தரின் அருள் ஆகி யிருக்கு.

நீங்க இந்துவா இருந்திருந்தா தலித் இன மக்கள் எல்லோருக்கும் பாப்பானுங்க சேவை செய்யுறதா எழுதியிருப்பீங்க

தவறி முஸ்லீமா பொறந்துட்டீங்க. என்சாய் பண்ணுங்க.