Followers

Friday, October 18, 2013

டெல்லிக்கு ராஜான்னாலும்.....குலாம் நபி ஆசாத்!



ஆம்....டெல்லிக்கு ராஜான்னாலும்....மத்திய மந்திரி சபையில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தாலும் இறைவனின் முன்னால் அவரும் ஒரு சாதாரண மனிதனே.... இந்த வருட ஹஜ் புனித பயணத்திற்கு தலைமை ஏற்று மெக்காவுக்கு வருகை புரிந்த மத்திய மந்திரியைத்தான் மேலே நாம் பார்க்கிறோம். அவரோடு சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் ஹமீத் அலியும் தனது ஹஜ் பயணத்துக்காக மெக்கா வந்திருந்தார்.

இருவரும் அதிக வயதுடைய ஹாஜிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த வருட ஹஜ்ஜின் அதிக வயதுடைய இஸ்மாயில் (வயது 107) அவர்களை இருவரும் சந்தித்தனர். இவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலிருந்து ஹஜ் பயணத்திற்காக வந்திருந்தார். அதே போல் பெண்களில் அதிக வயதுடைய ஹவ்வாபீவி ஷேக்கையும் (வயது 105) இருவரும் மரியாதை நிமித்தம் சந்தித்தனர். இந்த பெண்மணி இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து வருகை புரிந்திருந்தார்.

இந்திய ஹாஜிகளுக்காக சவுதி அரசு செய்து தந்திருக்கும் வசதிகளை குலாம் நபி ஆசாத் பாராட்டினார். ஹாஜிகளுககான இருப்பிட வசதி மிக தூய்மையாக பராமரிக்கப்படுவதாகவும் முன்பு 12 நபருக்கு ஒரு கழிவறை கட்டப்பட்டிருந்தது. தற்போது ஆறு பேருக்கு ஒரு கழி வறை வீதம் மேம்படுத்தப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் மத்திய அமைச்சர் அரப் நியூஸூக்கு பேட்டி அளித்தார்.

மத்திய மந்திரி உம்முல் குரா என்ற இடத்துக்கு வருகை தந்து காஷ்மீர், குஜராத் ஹாஜிகளை சந்தித்து நலம் விசாரித்தார். 50 படுக்கைகளுடன் கூடிய மருத்துவ மனையையும் பார்வையிட்டார். அஜீஸியா என்ற இடத்துக்கு வந்து அங்குள்ள தமிழக மற்றும் கேரள ஹாஜிகளை நலம் விசாரித்தார். அங்கு 30 படுக்கைகளுடன் கூடிய மருத்துவ மனையையும் பார்வையிட்டு அவை சுகாதாரமாக பேணப்படுவதையும் பார்வையிட்டார்.

ஹஜ்ஜூக்கு வருகை புரிந்துள்ள பல பெண்கள் தங்கள் அறைகளில் சமையலில் ஈடுபடுவதை அதிகமாக பார்க்க முடிவதாகவும், இதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தூதரக அதிகாரிகள் ஹாஜிகளை அறிவுறித்தினர். ஏனெனில் இதனால் ஹாஜிகள் வணக்கங்களில் ஈடுபடும் நேரம் குறைவாவதை சுட்டிக் காட்டினர். வரும் குழுக்கள் சிறந்த உணவுகளை தயாரித்து கொடுத்தாலும் சிலர் தங்கள் கைகளால் சமைத்து சாப்பிடுவதையே விரும்புகின்றனர். எனவே அடுத்த வருடங்களில் பொது சமையல் அறை ஒவ்வொரு குரூப்புக்கும் அமைத்துக் கொடுக்க முயற்சிக்கப்படும் என்றும் தூதரக அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர்.

'ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளுக்கு வசதிகளை சவுதி அரசு மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதற்கு முன் நான் வந்ததற்கும் தற்போது உள்ள சூழ்நிலைக்கும் மிகுந்த வித்தியாசத்தை உணர்கிறேன். இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அனைத்து அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்கிறார் குலாம் நபி ஆசாத்.

தகவல் உதவி அரப் நியூஸ்.

3 comments:

Anonymous said...

இளைஞர் கடத்தல் : பாஜக பிரமுகர்கள் கைது!

கோவை: தன்னுடைய வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி விட்டு, எதிரிகள் வீசியதாக நாடகமாடி கைதான கோவை பாஜக பிரமுகர், ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இவரை நேற்று முன் தினம் கோவை வேளாண் பல்கலைக் கழக நுழைவாயிலின் அருகே, வழிமறித்த பாஜக இளைஞரணித் தலைவர் விஜயகுமார் மற்றும் ரமேஷ் ஆகியோர் காவல்நிலையத்தில் பொய்வழக்கு கொடுத்து கட்சியை களங்கப்படுத்தி விட்டாயே என்று கூறி வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றவே, கத்தியால் ராமநாதனை சரமாரியாக குத்தினர். பின்னர் இவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.

இதனால் ஆவேசம் கொண்ட ராமநாதனின் ஆதரவாளர்கள் பழிக்குப் பழி என்ற எண்ணத்துடன், கத்தியால் குத்திய விஜயகுமாரின் நண்பனான கார்த்திக் (வயது 23) என்ற இளைஞனை ஆம்னி வேனில் கடத்தினர். கடத்தப்பட்ட கார்த்திக்கை, தொலைவில் உள்ள பகுதிக்கு கொண்டு சென்று, அடித்து உதைத்துள்ளனர். அடி தாங்க இயலா நிலையில் கார்த்திக் அலறவே, அலறல் சத்தம் கேட்டு சுற்றியுள்ள மக்கள் திரண்டு வரவும், கடத்தல் கும்பல் தப்பியோடிவிட்டது.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து ஆள் கடத்தலில் ஈடுபட்ட ராமநாதனின் ஆதரவாளர்களான 9 பாஜக பிரமுகர்களை கைது செய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.

நன்றி.இந்நேரம்.காம்

சிராஜ் said...

யாராக இருந்தாலும் பள்ளிக்குள் நுழைந்து விட்டால் அவர் சாமானியரே...

இஸ்லாம் சத்தம் இல்லாமல் சாதித்ததில் இது மிக முக்கியமானது...

Anonymous said...

ஆக்கூரில் வீட்டில் தனியா இருந்த பெண்ணிடம் கத்தியை கழுத்தில் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய வாலிபரை துணிச்சலாக போராடிய பிடித்த மாற்றுமத சகோதரர்கள்? முஸ்லிம் ஜமாத பாராட்டியது!!!!!! 18-10-13 மயிலாடுதுறை அருகே உள்ளது செம்பனார்கோவில் மடப்புறதில் வசித்து வருபவர் ஹஜ்ஜி முகமது இவர் சவுதி அரேபியா ஜித்தாவில் உள்ளார் முகம்மது மனைவி நஜிராபானு. இவரது மகன் வஜிகர்ரஹ்மான.. இன்று (18ஆம் தேதி) மதியம் மகன் பள்ளிவாசலில் ஜும்மா தொழுகைக்கு வெளியே சென்ற போது இதை பயன்படுத்தி உள்ளே சென்று 3 நபர்கள் பதுங்கியிருந்து திடீரென்று நஜிராபானுகழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைகளை கொடு இல்லையேல் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். பயத்தால் கத்தி கூச்சலிட்டுள்ளார் அந்த நேரத்தில் கழுத்தில் கத்தியால் குத்தியபோதும் விடாமல் சத்தம்போடடுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனே அந்த வீட்டினை நோக்கி ஓடினர்... இதனைக்கண்ட இரண்டுபேர் பைக்கில் ஏறி தப்பிவிட்டனர்.. அப்போது ரோட்டில் நீன்று கொண்டிருந்த ஆக்கூரை சேர்ந்த தமிழரசன் மற்றும் அவரது நண்பர்கள் கையில் கத்தியுடன் ஓடிவந்த நபரை இருவரும் தைரியமாக பிடித்து நையப்புடைத்தனர். பள்ளிவாசலுக்கு பிடிபட்டவனை ஒப்படைத்தனர்.

தமிழரசன் மற்றும் அவரது நண்பனை பள்ளிவாசல் நிர்வாகம்,மற்றும் சங்க நிர்வாகிகள் பாராட்டி பொன்னாடை போர்த்தினார். உடனடியாக செம்பனார்கோவில் போலீசுக்குத் தகவல் கொடுத்து அவர்கள் வந்து அடிபட்டுக்கிடந்த வாலிபரை விசாரித்தனர். விசாரணையில் பூம்புகார் கீழையூர் ராஜ்குமார் என்றும் அவனுடன் மணிவாசகம் மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோர் வந்ததாகவும் கூறினான் இரண்டுநாட்கள் நோட்டம் விட்டு ஆண்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் நுழைந்து நகையை பறிக்க முயன்றதாக தெரிவித்தான்.

போலீசார் விரட்டிச்சென்று மற்ற இரண்டு நபர்களையும் கைதுசெய்துள்ளனர். அந்தப்பெண்மணி உயிரைப் பணயம் வைத்து கத்திக்கூச்சலிட்டதாலும் ஊர் மக்கள் ஒன்றுதிரண்டதாலும் இந்த குற்றம் தடுக்கப்பட்டது, ஒருவேளை நகையை பிடுங்கியிருக்கலாம் அல்லது கொலைகூட நடந்திருக்கலாம். எப்படி இருந்தாலும அந்தப்பெண்மணியின் வீரத்தைப் பாராட்டியாக வேண்டும் இதுபோன்ற துணிச்சல் அனைத்துப் பெண்களிடமும் வரவேண்டும்...

மாற்றுமத நண்பர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.மூன்று இடங்களில் கத்தியைக் அழுத்தியதால் கீறல்கள் இருந்ததாக தெரிகிறது...