AHMEDABAD: The state's intelligence bureau (IB) has alerted the Gujarat Police of possibility of low-intensity blasts during the coming byelections in the state and they are most likely to take place during chief minister Narendra Modi's rallies.
http://timesofindia.indiatimes.com/india/Low-intensity-blasts-may-target-Narendra-Modis-rallies-Gujarat-intelligence-bureau/articleshow/20163056.cms?intenttarget=no
குறைந்த சக்தியுள்ள குண்டுகள் நரேந்திர மோடி பேசக்கூடிய கூட்டங்களில் வெடிக்க வாய்ப்புண்டு என்று குஜராத் ஐபி குஜராத் அரசுக்கு சில நாட்களுக்கு முன்பே தெரியப்படுத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. இது எப்படி சாத்தியம்? இந்த உண்மைகளை தெரிந்த அந்த அதிகாரி யார்? எப்படி இவ்வளவு துல்லியமாக அந்த செய்தியை குஜராத் அரசுக்கு சொல்ல முடிந்தது?
இந்தியன் முஜாஹிதீனின் தலைவன் என்ற பெயரில் யாசின் பட்கல் என்ற ஒருவனை சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனரே! அந்த நபரின் நிலை என்ன? அவன் தான் உண்மையான தலைவன் என்றால் இது வரை நடந்த குண்டு வெடிப்புகளுக்கான ஆதாரங்கள் கிடைத்து விட்டதா? இவரோடு தெடர்புடைய இவருடைய கூட்டாளிகள் யார்? யார்? இந்தியா முழுக்க குண்டு வெடிப்பு நடத்த மிகப் பெரிய நெட்வொர்க் தேவை. யாரெல்லாம் இதில் உடந்தை. இந்தியன் முஜாஹிதீனின் தலைவன் சிறையில் இருக்கும் போது நேற்று நடந்த பாட்னா குண்டு வெடிப்பை டெல்லி சிறையில் இருந்தே தனது ஆட்கள் மூலம் செயல்படுத்தினானா யாசின் பட்கல்?
இந்த முறை கைது செய்யப் பட்டவர்கள் என்ன வாக்கு மூலம் கொடுத்தார்கள் என்பது நமக்கு தெரியாது. முகத்தையும் மூடி யாருக்கும் தெரியாமல் ஒரு நாள் தூக்கிலும் ஏற்றி விடுவார்கள். குண்டு வைப்பவன் வழக்கம் போல் தனது வேலையை தொடர்ந்து கொண்டே இருப்பான். இதுவே நமது நாட்டின் வழமையாகி விட்டது.
மோடிக்கும் நிதிஷ்குமாருக்கும் கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மோதல் நடப்பது அனைவருக்கும் தெரியும். இருவருமே வளர்ச்சியை முன்னிறுத்தி தங்களை பிரதம வேட்பாளராக முன்னிறுத்தும் போக்கு கொண்டவர்கள். பாஜகவுக்கும், நிதிஷ்குமாருக்கும் கூட்டணி முறிவு பற்றி ஏற்பட்ட பிறகுதான் பீஹாரின் புத்தகயாவில் குண்டுவெடித்தது. இக்குண்டு ‘Made in Gujarat’ என ஐக்கிய ஜனதாதளம் கூறிய கருத்து பாஜகவை கோபப்படுத்தியது.
இப்போது ‘சக்தி குறைந்த’ குண்டு வெடித்ததாக வெளியிடப்படும் செய்திகள் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ‘நான் கொல்லப்படலாம்’ என்று ராகுல் காந்தி கூறிய கருத்து தேசமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, மோடியின் விளம்பர யுக்திகளை தவிடுபொடியாக்கிய தருணத்தில் இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதை கவனிக்க வேண்டும். ‘2014 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி...’ காவி பயங்கரவாதிகளால் திட்டமிடப்படும் பல்வேறு சதிகளில் இதுவும் ஒன்றா? என்ற கேள்வியைப் புறக்கணித்துவிட முடியாது. எது எப்படியாயினும் அப்பாவி மக்களை பயங்கரவாதத்தின் மூலம் அரசியல் ஆதாயங்களுக்காக கொல்வதை, அச்சுறுத்துவதை ஜனநாயக சக்திகள் திரண்டு எழுந்து தடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு சாதி, மதம், மொழி, இனம் இல்லை. ஆனால் இப்போது ‘அரசியல் + அதிகாரம்’ என்ற ஆசை வந்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல.
---------------------------------------------------------
இந்திய உளவுத்துறையால் கைது செய்ததாக கூறப்படும் யாஸீன் பட்கல் என்ற நபர் உண்மையில் யாஸீன் பட்கல் அல்ல என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இதுக்குறித்து வழக்கறிஞர் எம்.எஸ்.கான் கூறியதாவது; ‘யாஸீன் பட்கல் என்று கைது செய்யப்பட்ட நபர் முஹம்மது அஹ்மத் சித்திபாபா ஆவார். இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 12 நபர்களில் ஒருவராக இண்டலிஜன்ஸ் அதிகாரிகள் இவரை குறிப்பிடுவது தவறாகும். இவர் தாம் யாஸீன் என்பதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு புலனாய்வு ஏஜன்சிகளுக்கு உண்டு. கைது செய்யப்பட்டவர் யாஸீன் என்பதை நிரூபிக்க அவர்களின் வசம் ஆதாரம் எதுவுமில்லை.’ என குறிப்பிட்டார்.
அஹ்மத் சித்தி பாபாவை யாஸீன் பட்கல் என்று பெயர் மாற்றியது இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகள் என்று அவரது உறவினரும், பெங்களூரைச் சார்ந்த வழக்கறிஞருமான அக்மல் ரஸ்வி நேற்று முன் தினம் குற்றம் சாட்டியிருந்தார்.
10-வது வகுப்பு கூட வெற்றிப் பெறாத முஹம்மது அஹ்மத் சித்திபாபாவை, பொறியியல் பட்டதாரியாக மாற்றியது மற்றும் 1983-ஆம் ஆண்டு பிறந்த அஹ்மதை 1973-ஆம் ஆண்டு பிறந்தார் என்று உளவுத்துறையும், ஊடகங்களும் கூறுவது குறித்து அக்மல் ரஸ்வி விமர்சித்திருந்தார்.
-http://newindia.tv/tn/india/141-crime/1800-2013-08-31-03-09-02
------------------------------------------------------------
நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ
"Whenever a bomb blast occurs or such incident takes place, within an hour or so many TV channels start showing that an email or sms has come from the Indian Mujahideen, JeM or Harkatuljihad-e-Islam, or some Muslim name, claiming responsibility.
"An email or sms can be sent by any mischievous person. But when your start screening this on TV and next day in print. The certain message you (media) are sending is that all Muslims are terrorists and they having nothing to do except to throw bombs....You are demonising the entire Muslim community and promoting communalism", Katju said.
"Is this the responsible behaviour of the media? I think it is totally irresponsible behaviour which is promoting communalism in the country. This is very bad. I have raised voice against this, but they said I am suppressing the media", Katju said.
http://www.indianexpress.com/news/media-demonising-muslim-community-markandey-katju/1098926/
-------------------------------------------------------------
நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலனடைந்தது யார்? இதோ விடை கிடைத்து விட்டது.
பாட்னா தொடர் குண்டுவெடிப்பை மேற்கோள்காட்டி, நாடு தழுவிய அளவில் பாஜக பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு மாநிலத் தலைநகரங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள அக்கட்சி, பல்வேறு மாநில அரசுகள் பாதுகாப்பு விஷயத்தில் வேண்டுமென்றே அலட்சியமாக இருக்கிறது என்றும், தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் மென்மையானப் போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் மக்களுக்குச் சொல்ல முடிவு செய்துள்ளது.
இதற்காக, அனைத்து முக்கிய நகரங்களிலும் பாஜக தலைவர்கள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தி, பாட்னாவில் மோடி கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு குறித்து விளக்கம் அளிக்கவுள்ளது.
பாட்னா, ஹைதராபாத், ராய்ப்பூர், சண்டிகர், சம்பா, பெங்களூர், போபால், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், லக்னோ, கோல்கத்தா, புவனேசுவரம், அகமதாபாத் மற்றும் குவகாத்தி ஆகிய நகரங்களில் இது தொடர்பாக பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
-தி ஹிந்து தினசரி
10 comments:
Khan Sahib
.......பாட்னா தொடர் குண்டுவெடிப்பை மேற்கோள்காட்டி, நாடு தழுவிய அளவில் பாஜக பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ....................... இதற்காகத்தான் திட்டமிட்டு இந்த குண்டு வெடிப்பே நடத்தப் பட்டது போல் தெரிகிறது. இந்தியன் முஜாகிதீன் தொடர்பு, இப்படி ஒரு அமைப்பு போலியாக உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது, முசாபர் நகர் கலவரம் பழிவாங்கல் என்பது எல்லாம் நம்பும்படி இல்லை. ஒரு கல்லில் பல மாங்காய் தந்திரம் போல இருக்கிறது. மோடியின் எதிப்பாளர் நிதிஷ் மேல் குற்றம், மோடி மேல் அனுதாபம், முஸ்லிம்கல் மேல் வெறுப்பு, என்று பல சாதகங்கள் ப.ஜ.க. வுக்கு. போற்றுதலுக்குரிய நேர்மையான அதிகாரி கார்கரே அவர்களை த்தான் கொன்று விட்டார்களே பாவிகள். அவரை போன்ற ஒரு அதிகாரி யாராவது நேர்மையாக விசாரணை நடதிதினால் தான் உண்மை வெளிவரும். இல்லை என்றால் முஸ்லிம்கள் அரசியல் விளையாட்டில் பகடை காயாக உருட்டப்படுவார்கள்.
மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு, இந்துத்துவாக்களின் தொடர்பை ஆராய வேண்டும் - ஆதாரங்களுடன் திக் விஜய் சிங் கோரிக்கை.
மோடியின் கூட்டங்களில் குறைந்த பாதிப்புள்ள குண்டுகள் வெடிக்கலாம் என்று சில மாதங்களுக்கு முன்பு குஜராத் உளவுத்துறை கூறியிருந்தது. இந்த குண்டுவெடிப்புகள் இந்துத்துவாக்களால் நடத்தப்படலாம் என்றும் அது தெரிவித்திருந்தது. டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் இதுக்குறித்த செய்தி கடந்த மே மாதம் வெளியானது. தற்போது குஜராத் உளவுத்துறை கணித்தது போலவே குறைந்த பாதிப்புள்ள குண்டுகள் வெடித்துள்ளதால், இதில் இந்துத்துவாக்களின் தொடர்பை இந்திய உளவுத்துறை ஆராய வேண்டும் என்று மேற்சொன்ன ஆதாரங்களுடன் உளவுத்துறைகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங்.
திக் விஜய் சிங் கிளப்பியுள்ள இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா ஆதார லிங்க்: http://timesofindia.indiatimes.com/india/Low-intensity-blasts-may-target-Narendra-Modis-rallies-Gujarat-intelligence-bureau/articleshow/20163056.cms?intenttarget=no
-ashik ahamed
சகோ சுவனபிரியன்,
சவூதியில் 5 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற
சவூதி மத போதகர் க்கு 8 ஆண்டு சிறையும் 600 க்கு மேற்பட்ட சவுக்கடியும் தீர்ப்பு !!
On October 7, 2013, it was announced that Al-Ghamdi had been sentenced to 8 years in prison, plus 600 lashes இஸ்லாமிய சட்டம்(ஷரியா ) தான் உலகத்துக்குச் சிறந்த சட்டம் என்று வாதிடுபவர் நீங்கள்
இதுதான் உங்கள் சிறந்த சட்டமா?
கேவலம் !!!
சகோ சுவனபிரியன்,
சவூதியில் 5 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற
சவூதி மத போதகர் க்கு 8 ஆண்டு சிறையும் 600 க்கு மேற்பட்ட சவுக்கடியும் தீர்ப்பு !!
On October 7, 2013, it was announced that Al-Ghamdi had been sentenced to 8 years in prison, plus 600 lashes இஸ்லாமிய சட்டம்(ஷரியா ) தான் உலகத்துக்குச் சிறந்த சட்டம் என்று வாதிடுபவர் நீங்கள்
இதுதான் உங்கள் சிறந்த சட்டமா? கேவலம் !!!
suvanappiriyan on October 29, 2013 at 4:29 pm
Your comment is awaiting moderation.
//அமெரிக்கவில் நடந்த இரட்டை குண்டு வேடிபிட்கு பிறகு அவர்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள்//
அந்த தாக்குதலுக்குப் பிறகு தான் இஸ்லாம் மிக வேகமாக பரவுகிறது. சர்ச்களெல்லாம் மஸ்ஜிதுகளாக மாற்றப்படுகின்றன. யுட்யூபில் தேடி பார்க்கவும்.
suvanappiriyan on October 29, 2013 at 4:32 pm
Your comment is awaiting moderation.
//அதற்கு முக்கிய காரணம் வன்முறை மூலம் இன்று நம் கண்ணெதிரே கோடிக்கணக்கான ஷியா முஸ்லீம்களையும், லட்சக்கணக்கான அகமதியாக்களையும், லட்சக்கணக்கான பஹாயிக்களையும் படுகொலை செய்து அமைதியை நிலைநாட்டி வருகின்றனர். //
சமணர்களை கழுவிலேற்றியது: பவுத்தர்களை கொன்றொழித்தது: அதன் மேல் இந்து மதத்தை நிறுவியது எவ்வாறு என்பதெல்லாம் நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா என்ன?
suvanappiriyan on October 29, 2013 at 4:35 pm
Your comment is awaiting moderation.
//Mr Suvanapriyan will hopefully respond. Let us hear his version of this Islamic atrocity.//
நான் பதில் அளித்தாலும் பலவற்றை இந்த தளம் வெளியிடுவதே இல்லை. மாற்றுக் கருத்துக்களை அனுமதிக்காத போது கட்டுரையின் வீரியமே குறைந்து விடும் என்பதை தமிழ் இந்து தளத்தினர் எப்போது விளங்குவார்களோ……
//சவூதியில் 5 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற
சவூதி மத போதகர் க்கு 8 ஆண்டு சிறையும் 600 க்கு மேற்பட்ட சவுக்கடியும் தீர்ப்பு !!//
சவுதியின் சட்டம்தான் இஸ்லாமிய சட்டம் என்று எங்கும் நான் சொல்லவில்லையே! இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கட்டுப்படுத்துவது குர்ஆன்தானேயொழிய சவுதி அல்ல.
தீவிரவாதி என்று குற்றம் சாட்டி போலீஸ் துன்புறுத்திய கஷ்மீர் இளைஞர்: நீதிமன்றம் விடுதலை! குமுளி: ஹிஸ்புல் முஜாஹிதீன் போராளி என்று குற்றம் சாட்டி போலீஸ் கைது செய்து துன்புறுத்திய கஷ்மீர் இளைஞரை, குற்றமற்றவர் என்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. போலி ஆவணம் உபயோகித்து சிம் கார்டு வாங்கினார் என்று குற்றம் சாட்டி கஷ்மீரைச் சார்ந்த இளைஞரையும், கடை உரிமையாளரையும் கேரள போலீஸ் கைது செய்தது. 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்ததைத் தொடர்ந்து கஷ்மீரைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர் அல்தாஃப் அஹ்மத் கானுக்கு (வயது 32) துயரம் துவங்கியது. பத்தாம் வகுப்பு பயிலும்போது போராளிகளுக்காக ஆயுதம் கடத்தினார் என்று குற்றம் சாட்டி ஜம்மு போலீஸ் அல்தாஃபை கைது செய்து 2 ஆண்டுகள் சிறையில் அடைத்திருந்தது. பின்னர் ஸ்ரீநகர் நீதிமன்றம் அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்திருந்தது. பின்னர் அமைதியான வாழ்க்கை தேடி குமுளியில் உள்ள தனது உறவினரின் வியாபார நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார் அல்தாஃப்.
இதனிடையே பாஸ்போர்ட்டுக்காக அளித்த விண்ணப்பம் குறித்த விரிவான விசாரணைக்கு கஷ்மீருக்கு அனுப்பப்பட்டது. இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்ற காரணத்தால் அல்தாஃப் மீது தீவிரவாத முத்திரை குத்தி குமுளியில் கஷ்மீரி கைத்தறி விற்பனை நிறுவனத்தில் இருந்து போலீஸ் கைது செய்தது. தீவிரவாதச் செயல்களுக்காக போலி அடையாள ஆவணங்களைத் தயாரித்து கேரளாவில் தலைமறைவாக இருந்தார் என்று அல்தாஃப் மீது கேரள போலீஸ் வழக்கு பதிவு செய்தது. கொடிய தீவிரவாதி போலவே அல்தாஃப் மீதான வழக்கை கேரள போலீஸ் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் கஷ்மீர் முதல்வர் தலையிட்டு அல்தாஃப் மீது தீவிரவாத வழக்குகள் ஒன்றும் இல்லை என்று கூறி ஸ்ரீநகர் போலீஸ் அறிக்கை அளித்தது. இதனால் 45 தினங்கள் கழித்து அல்தாஃபிற்கு ஜாமீன் கிடைத்தது. தீவிரவாத வழக்கு தொடர்பாக குமுளி போலீஸ் பதிவு செய்த வழக்கு நீடிக்காது என்பதை கண்டறிந்து நீதிமன்றம் அல்தாஃப் மற்றும் சிம் கார்டு விற்ற கடை உரிமையாளர் ஷாகுல் ஹமீது ஆகியோரை விடுவித்தது. செய்யாத குற்றத்திற்காக தீவிரவாத முத்திரை குத்தப்பட்டதால் தனது வியாபாரத்தை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக ஷாகுல் ஹமீது கூறுகிறார். நீதிமன்றம் குற்றமற்றவர் என்று விடுவித்த போதும் பல வேளைகளிலும் போலீஸ் தன்னை தேடி வருவதாகவும், இது தன்னை மன ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் அல்தாஃப் கூறுகிறா
- See more at: http://www.thoothuonline.com/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/#sthash.CpJp4AOu.dpuf வாங்குவது மக்களின் வரிப்பணத்தில் சம்பளம்..வாங்குகிற சம்பளத்துக்கு பாசிச சக்திகளுக்கு மட்டும் தான் எடுபிடியாக செயல்படுகின்றான்ர் போலும்..
ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில்
கரீம் நகர்: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள், கோவில் கட்டி, தினமும் வழிபாடு நடத்தி வருகின்றனர். தெலுங்கானா மசோதா, சட்டமாக மாறியதும், நிரந்தரமாக கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர்.
மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்க, ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், தெலுங்கானா மாநிலம் அமையும் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்; பிற பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தெலுங்கானா எதிர்ப்பாளர்கள், சில நாட்களுக்கு முன், தெலுங்கானாவுக்கு அனுமதி அளித்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, சமாதி கட்டினர். அதற்கு பதிலடியாக, தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள், சோனியாவுக்கு கோவில் கட்டியுள்ளனர். கரீம் நகரின், முக்கிய சாலை சந்திப்பில், முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு, சிலை உள்ளது. அதன் அருகில், கார்டு போர்டால், கோவில் உருவாக்கப்பட்டு, அதன் உள்ளே, சோனியா படம் வைக்கப்பட்டு, நேற்று முன்தினம் பூஜை செய்யப்பட்டது. அதில், காங்கிரஸ், எம்.பி., பொன்னம் பிரபாகர் உட்பட, பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். தினமும், காலையும், மாலையும் பூஜை செய்யப்படும் என அறிவித்துள்ள காங்., தலைவர்கள், தெலுங்கானா மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதும், நிரந்தர கோவில் கட்டப்படும் என, அறிவித்துள்ளனர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ எப்படி இருக்கிங்க....
பாய் உங்கள் முகநூல் முகவரி இருந்தால் தாருங்கள் ....
அருமையான பதிவு....
Post a Comment