Followers

Sunday, October 20, 2013

'தி மெஸ்ஸேஜ்' - திரைப்படம் எனது பார்வையில்...



தமிழில் முதலாம் பாகம் அறிமுகம்....



தமிழில் இரண்டாம் பாகம் அறிமுகம்....




20 வருடங்களுக்கு முன்பு நான் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த போது இந்த படத்தை ஆங்கிலத்தில் பார்த்துள்ளேன். ஆனால் நமது தாய் மொழியில் பார்க்கும் போது கிடைக்கும் விளக்கங்களுக்கு இணையே கிடையாது என்பதற்கு இந்த படம் ஒரு சாட்சி. அழகிய காட்சிகள். சிறந்த வசனங்கள். முக்கிய நிகழ்வுகளை பொறுக்கி எடுத்து படத்தில் இணைத்திருப்பது இந்த படத்தை மேலும் மெருகூட்டுகிறது. படத்தின் கதாநாயகனை காட்டாமலேயே கதையை எடுத்துச் செல்லும் பாங்கு இயக்குனரின் திறமையை வெளிக்காட்டுகிறது. நம் ஊர் அமீர், சமுத்திர கனி போன்ற இயக்குனர்கள் இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை கலப்படம் இல்லாமல் உலகுக்கு தர முயற்சிக்கலாம்.

அன்றைய அரபு உலகம் எப்படி இருந்தது என்பதை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொள்கிறோம். ஏறக்குறைய தற்போதய நமது தமிழகத்தை ஒத்திருந்தது அன்றைய அரபுலகம். இன்றும் தமிழகத்தில் பார்பனர்கள் அதிகம் வாழும் அக்ரஹாரங்களுக்குள் தலித்கள் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியாது. வியாபாரங்களும் செய்து விட முடியாது. சாதி இந்துக்கள் வாழும் கிராமங்களில் தலித்களுக்கு தனி டம்ளர் முறை, சிரட்டை முறை இன்றும் மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் நிலவுவதை பார்க்கிறோம். தலித்கள் தான் சம்பாதித்து தனது உழைப்பால் காலுக்கு செருப்பை வாங்கி அதை போட்டுக் கொண்டு நடக்க சில கிராமங்களில் இன்றும் தடை போடப்படுவதைப் பார்க்கிறோம். ஒரே இந்து மதத்தில் உள்ள வன்னிய பெண்ணும், தலித் ஆணும் திருமணம செய்து கொள்ள தடுக்கப்படுகவதைப் பார்க்கிறோம். இதற்காக வெட்டுக் குத்துகளும் நடப்பதை தினமும் பார்க்கிறோம். பார்பனர், தேவர், செட்டியார், வன்னியர், தலித் என்று இந்த காலத்திலும் தரம் பிரிக்கப்படுவதை பார்க்கிறோம். சாதிக் கட்சிகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெருகி வருவதையும் பார்க்கிறோம்.

படித்து விட்டால் இந்த வன் கொடுமைகள் குறைந்து விடும் என்று நம்பி தலித்களை கலெக்டராகவும், டாக்டராகவும், பொறியாளர்களாகவும், ஆக்கி அழகு பார்த்தோம். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மத்திய அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் ஒரு மேல் சாதி காரரின் சிலைக்கு மாலை அணிவித்த அடுத்த நிமிடம் பார்ப்பனர்களால் அந்த சிலைக்கு தண்ணீர் ஊற்றி தீட்டு கழிக்கப்பட்டதை பார்த்தோம். கலெக்டராகவும், மருத்துவராகவும் தலித்கள் இருந்தாலும் முதலில் அவரின் சாதியைத்தான் நோட்டமிடுகின்றனர் பெரும்பாலான இந்துக்கள். சத்துணவுக் கூடத்தில் கூட தலித்கள் சமைத்த உணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என்று வீம்பு பேசி தினமும் சமைத்த உணவுகள் குப்பைத் தொட்டியில் கொட்டப்படும் கொடுமை உலகிலேயே நம் நாட்டில்தான் நடந்து வருகிறது. சாதி வெறி, குல வெறி அந்த அளவு நமது மக்களை பாடாய் படுத்துகிறது.

இதே நிலைதான் அன்றைய மக்காவிலும். இதை விட அதிக சாதி வெறி பிடித்தவர்களாக அன்றைய அரபுகள் இருந்தனர். பிலால் கருப்பு அடிமை என்பதற்காக எந்த அளவு கொடுமைபடுத்தப்பட்டார் என்பதை மிக அழகாக இந்த படத்தில் காட்டியுள்ளனர். திருடவில்லை: பொய் பேசவில்லை: யாரையும் அடிக்கவில்லை: ஏக இறைவனை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக அந்த மாபாவிகள் சுடு மணலில் வெற்று உடம்பில் பாராங்கல்லை தூக்கி வைக்கிறார்கள் என்றால் எந்த அளவு இஸ்லாத்தின் மீது வன்மம் இருக்கும். அதே நிலைதான் குஜராத்திலும் பார்தோம். முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தை வைத்து கர்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை தீயில் இட்டு பொசுக்கியதும் நம் நாட்டு இந்துத்வா வாதிகள் தான். இவ்வளவு வன்மத்தை இவர்கள் மனதிலே இருத்த காரணம் ஏக இறைவனை இவர்கள் வணங்குகிறார்கள் என்ற ஒரு காரணம் தான்.

இந்த படததின் டிவிடிக்களை நாம் வாங்கி நமது இந்து, கிறித்துவ நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கலாம். இதனால் இஸ்லாத்தின் மேல் உள்ள வெறுப்பு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.

----------------------------------------------------------------


'தி மெஸ்ஸேஜ்' உருது மொழியில்......



----------------------------------------------------------------

'தி மெஸ்ஸேஜ்' ஆங்கிலத்தில்....





----------------------------------------------------------------

படத்தின் டிவிடிக்களை பெற்றுக் கொள்ள

Mass communication
95668 40261
95000 04961

---------------------------------------------------------------

இந்து பத்திரிக்கையில் வெளியான இந்த படத்தைப் பற்றிய செய்தியையும் பார்ப்போம்....



இன்றைய உலகம் இஸ்லாத்துக்கும் அமெரிக்காவின் தலைமையிலான மற்ற நாடுகளுக்கும் இடையே எல்லாத் தங்களிலும் வெளிப்படையான மோதலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லா நாடுகளுமே ஏதோ ஒரு வகையில் இந்த முரண்பாட்டின் தாக்கத்தை உணர்ந்துகொண்டிருக்கின்றன. இஸ்லாமும் பிற மார்க்கங்களும் ஒத்திசைந்து வாழவே முடியாது என்ற அளவுக்கு வலுவான கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, தனிநபர்களின் பார்வைக்காக திரையிடப்பட்ட தி மேசஜ் என்ற ஆங்கிலத் திரைப்படம் இஸ்லாத்தைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கிறது.

1976ஆம் ஆண்டு ஹாலிவுட்டைச் சேர்ந்த முஸ்தபா அக்காடால் உருவாக்கப்பட்ட இப்படம், தொடக்கத்திலேயே கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. பண உதவியும் கிடைக்கவில்லை. ஆகவே லிபியாவின் அதிபராக இருந்த மும்மர் கடாபி மற்றும் வேறு சில இஸ்லாமிய நாடுகளின் உதவியுடன் லிபியா, லெபனான் போன்ற நாடுகளில் படப்பிடிப்பை நடத்த வேண்டிய நிலைமைக்கு அக்காட் தள்ளப்பட்டார். எல்லா சிரமங்களையும் மீறி எடுக்கப்பட்ட இந்தப் படம் தன் நோக்கத்தைச் செவ்வனே பூர்த்தி செய்துள்ளது என்பதை அதனுடைய ஆங்கில மூலமும் அதன் தமிழாக்கமும் தெளிவாக உணர்த்துகின்றன.


1 comment:

Unknown said...

//
ஏக இறைவனை இவர்கள் வணங்குகிறார்கள் என்ற ஒரே காரணம் தான்// சுவனபிரியரே,
உங்கள் கண்டுபிடிப்பு ரொம்ப கேவலமாக இருக்கிறது. என்னவோ உங்கள் கூட்டத்தைப்
பார்த்தும் உங்கள் மதத்தை பார்த்தும் இந்துக்கள் பொறாமைப்படுகிறார்கள்
என்ற ரீதியில் அல்லவா கூறியிருக்கிறீர்கள்