Followers

Tuesday, October 29, 2013

எவரெஸ்ட் சிகரத்தை கடந்த சவுதி பெண்மணி!



எவரெஸ்ட் சிகரத்தை கடந்த முதல் சவுதி பெண்மணி ரஹா மொஹர்ரக்! இவரது சாதனையை பாராட்டி பாராட்டு விழா ஒன்று ரியாத்தில் சென்ற சனிக்கிழமை நடந்தது. சவுதி விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் சல்மான் சைதான் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து ரஹா மொஹர்ரக்கின் சாதனையை வெகுவாக பாராட்டியும் பேசினார்.

ரஹா மொஹர்ரக் இது பற்றி கூறும்போது 'எனது நாட்டுக்காக இந்த சாதனையை செய்து முடிக்க எனது குடும்பம் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. எனது விடா முயற்சியும் எனமேல் எனக்கிருந்த நம்பிக்கையும் இறைவனின் கிருபையும் இத்தகைய சாதனையை எவ்வித சிரமமுமின்றி முடிக்க இலகுவானது. தான்சானியாவில் இருக்கும் கிளிமாஞ்சாரோ சிகரத்தையும் நான் கடந்துள்ளேன். ரஷ்யாவில் இருக்கும் 5642 மீட்டர் உயரமுடைய எல்பர்ஸ் சிகரத்தையும் 2012ல் கடந்தேன். அன்டார்டிகாவில் இருக்கும் வின்சன் மலையையும் 2013ல் கடந்துள்ளேன்.'

'சவுதி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற உலகின் பார்வைக்கு எனது சாதனை சிறந்த பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது எனது சொந்த முயற்சியில் உண்டானது. இதனால் வேறுபலன் எதனையும் அடையவில்லை. சவுதி பெண்களைப் பற்றி உலகம் வைத்துள்ள தவறான எண்ணங்களை மாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினேன். இந்த சாதனையானது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது' என்கிறார் ரஹா முஹர்ரக்.

பெண்கள் படிப்பதையோ, விளையாடுவதையோ, வேலைக்கு செல்வதையோ இஸ்லாமும் தடுக்கவில்லை. சவுதி அரசும் தடுக்கவில்லை. ஆண்களோடு ஒட்டி உறவாடி அதனால் பெண்மைக்கு இழுக்கு வருவதை தடுப்பதற்காகவே சில கட்டுப்பாடுகளை இஸ்லாம் வகுக்கிறது. அதுவும் பெண்களின் நன்மையை நாடியே.... அளவுக்கு அதிகமாக ஆண்களையும் பெண்களையும் கலக்க விட்டதாலேயே பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை தினம் நமது செய்தித் தாள்களில் பார்த்து வருகிறோம்.

இஸ்லாமிய ஆட்சியில் பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற பலரின் விமரிசனங்களுக்கு தனது செய்கையால் அழகிய பதிலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த சகோதரியை நாமும் வரவேற்போம்.

தகவல் உதவி:

அரப் ந்யூஸ்

4 comments:

suvanappiriyan said...

//ஐயோ கொல்கிறார்களே என்னைக் கொல்கிறார்களே என்று கருணாநிதி போல நாடகம் போட்டு உணர்ச்சியைத் தூண்டவில்லை. என் பாட்டியைக் கொன்றார்கள், அப்பாவைக் கொன்றார்கள் என்னையும் கொல்வார்கள் என்று சிறுபிள்ளை போல ஒப்பாரி வைக்கவில்லை.//

குண்டு வைத்தவர்களே எப்படி ஒப்பாரி வைக்க முடியும்? இனி குண்டுகள் வெடிக்காது என்று தெளிவாக தெரிந்ததால்தான் மோடி தொடர்ந்து பேசியிருக்கிறார். அவருக்கு எந்த பதட்டமும் அதுவரை இல்லை. அந்த அளவு எல்லாம் கணக் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடி மக்களிடம் அனுதாபத்தையும் பெற்றாகி விட்டது. என்னதான் சூழ்ச்சிகள் செய்தாலும் 120 சீட்டுக்கு மேல் மோடி பெற முடியாது. அது நிச்சயம்.

Anonymous said...

பார்ப்பன கட்சிக்கு ஒரு நீதி ...
மற்றவர்களுக்கு ஒரு நீதியா?
=======================
நேற்று....

பாட்னா குண்டு வெடிப்பு:
குமரியில் 31 பஸ்கள் உடைப்பு,
8 பேர் கைது!
==========================================
இடிந்தகரையில் கடந்த செப்டம்பெரில் இரண்டு பேருந்துகளை
காவல்துறையே உடைத்து விட்டு ...
மக்கள் உடைக்காத பேருந்துக்கு ,
1,35,000/= அபராதம் விதித்த பின்பே இடிந்தகரையை சேர்ந்த
எட்டுப் பேரும், வைராவிகினற்றை சேர்ந்த மூன்று பேரும்
பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
===========================================
மனதில் எழும் கேள்விகள் :

இதுவரை குமரியில்
எம்.ஆர்.காந்தி குடும்ப சண்டையில் தாக்கப்பட்ட போது
குமரியில் 60 பஸ்கள் உடைப்பு
35 பேர் கைது!

வேலுரில் வெள்ளையப்பன் இறந்த போது
குமரியில் 38 பஸ்கள் உடைப்பு
30 பேர் கைது!

சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் இறந்த போது ...
குமரியில் 47 பஸ்கள் உடைப்பு
26 பேர் கைது!

பேருந்துகள் சேதத்துக்கான மொத்த இழப்பீட்டு தொகையையும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்து நாங்கள் வசூலிப்போம் என்று ஜெயலலிதா சொல்வாரா? இழப்பீடு குறித்த அந்த கோரிக்கை வலுப்படுமா?...

பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் அயோக்கியர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், கூடவே அவர்கள் சார்ந்த கட்சியும் இழப்பீட்டுக்கு பொறுப்பேற்க வேண்டும்!... இது நடக்குமா?

மாமியார் உடைத்தால் மண்குடம்...
மருமகள் உடைத்தால் பொன்குடமா?

ஏம்ப்பா ட்ராபிக் ராமசாமி வகையறாக்கள் ...
இதற்க்கு யாராவது பொதுநல வழக்கு போடக் கூடாதா...

நன்றி:Mugilan Swamiyathal

Unknown said...

குண்டு வைத்தவர்களே எப்படி ஒப்பாரி வைக்க முடியும்? இனி குண்டுகள் வெடிக்காது என்று தெளிவாக தெரிந்ததால்தான் மோடி தொடர்ந்து பேசியிருக்கிறார். அவருக்கு எந்த பதட்டமும் அதுவரை இல்லை. அந்த அளவு எல்லாம் கணக் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடி மக்களிடம் அனுதாபத்தையும் பெற்றாகி விட்டது. என்னதான் சூழ்ச்சிகள் செய்தாலும் 120 சீட்டுக்கு மேல் மோடி பெற முடியாது. அது நிச்சயம்.

ஊடகங்களில் இந்தியன் முஜாஹிதின் அமைப்பைச் சேர்ந்த அன்சாரி என்பவரைக் குண்டு வைத்ததாக மோடியைப் பிடிக்காத பாட்னா அரசு போலிஸ் கைது செய்துள்ளது.அந்த அன்சாரி கூறிய வாக்குமூலத்தில் தாசின் அக்தர் என்பவர்தான் நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் மூளையாக செயல்பட்டவர என்று கூறியதாக வெளிவந்துள்ளது.
எனக்கு ஒரு சந்தேகம்இவ்வளவு கரடியாக கத்தியும் மோடி 120 இடங்கள் பெறுவாரென்று ஏற்றுக்கொள்கிறீர்கள்.

Anonymous said...

இதே விபசார ஊடகங்கள் தான் அஜ்மீர்,மலேகாவ்,மக்கா மஸ்ஜித்,இரயில் மற்றும் பல இடங்களில் குண்டு வைத்தது இந்திய முஜாஹிதீன் என்று பரபரப்பாக செய்தி வெளியிட்டு காசு பார்த்தது.முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து அந்த இயக்கத்தோடு தொடர்பு இந்த இயக்கதார்களோடு தொடர்பு என்பதை ஒப்புக்கொண்டார்கள் என்று காவிதுரை பொய்யான தகவல்களை கொடுத்து இளைஞர்களை நைய புடைத்தார்கள்.பின்னர் அசீமானந்தா, பிரக்யா சிங்,கர்னல் மாட்டிககொண்ட பின் இதே விபச்சார ஊடகங்கள் ஓரவஞ்சனையோடு வாயை மட்டுமல்ல எதையும் திறக்காமல் இருந்தது.இதுதான் பத்திரிகை தர்மமா?இவர்கள் செய்திகள் வெளியிட்டதின் பிரகாரம் பார்த்தால் மோடி வகையறாக்கள் தான் இந்திய முஜாஹிதீனை இயக்குகிறார்கள் என்பது நன்கு புலப்படுகிறது.இதை மட்டும் ஏன் ஊடகங்கள் வெளியிட தயக்கம்.ஏன் என்றால் இவர்கள் இந்திய முஜாஹிதீன் என்ற பெயரை சொல்லி மலம் தின்னும் கூட்டம்தான்

kalam