Followers

Saturday, October 12, 2013

மாயா கோட்னானி அவர்களுக்கு மனம் திறந்த ஒரு மடல்!!மாயா கோட்னானி அவர்களுக்கு!

நீங்கள் மருத்துவ துறையில் டாக்டரேட் பட்டம் வாங்கிய ஒரு மருத்துவர் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். எவ்வாறு உங்களால் குழந்தைகளையும், பெண்களையும் வெட்டி அதில் ருசி கண்ட கூட்டத்துக்கு கட்டளை இட முடிந்தது? உயிருக்கு மன்றாடிய குழந்தைகள், தாயின் முன்னால் தந்தையின் முன்னால் கற்பழிக்கப்பட்ட இளம் பெண்கள், முதியவர்கள் கொல்லப்பட்டது என்று இத்தனை அநியாயங்கள் அரங்கேற்றப்படும் போது அதை ஊக்குவித்தோமே என்று உங்கள் மனம் உங்களை கேள்விகள் கேட்கவில்லையா? அந்த இரவுக்குப் பிறகு உங்களால் நிம்மதியாக தூங்க முடிந்ததா? இந்த சம்பவத்துக்குப் பிறகு உங்களின் பிறந்த நாளை நீங்கள் என்றாவது கொண்டாடியது உண்டா?

இந்த கொலைகளுக்குப் பிறகு உங்களால் புன்முறுவல் பூக்க முடிந்ததா? இன்றும் கூட சிகப்பு ரத்தக் கறைகளை ரசிக்கக் கூடிய பெண்ணாகத்தான் இருக்கிறீர்களா? இந்த சம்பவத்துக்குப் பிறகு குழந்தைகளை உங்களால் கொஞ்ச முடிகிறதா? உங்களின் இந்த வெறி பிடித்த குணத்தைப் பற்றி என்றாவது சிந்தித்தது உண்டா? இதற்காக என்றாவது வருந்தியது உண்டா?

அன்பிற்குரிய மாயா கோட்னானி!

நீங்கள் ஒரு பெண், ஒரு தாய், ஒரு சகோதரி, ஒரு பாட்டி என்ற இடங்களைத் தாண்டி நீங்கள் ஒரு மனிதப் பிறவி என்பதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்களிடம் உள்ள அந்த மனிதாபிமானம் எங்கு சென்றது? யாரோ கொடுத்த உத்தரவுகளை அப்பாவிகளான இந்த முஸ்லிம்களின் மீது வெறி கொண்டு செலுத்துகிறோமே! இது தவறில்லையா என்று உங்கள் அடி மனது சொல்லவில்லையா? ஒரு சமூகத்தை நீங்கள் வெறுப்பது என்ற காரணம் கொண்டு அந்த சமூகத்தை ஒட்டு மொத்தமாக அழிக்க முற்படுவது என்ன வகையான தர்மம்? இதைத்தான் இந்து தர்மம் உங்களுக்கு போதித்ததா? ஆட்சியாளர்களே உங்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்திருந்தாலும் உங்களின் மனசாட்சி இந்த காரியங்களை செய்ய எப்படி ஒத்துக் கொண்டது? இந்த கொலைகளை செய்து இந்துக்களின் ஓட்டுக்களைப் பெற்று எதை சாதிக்கப் போகிறீர்கள்? இந்த நாட்டுக்கோ உங்கள் மதத்துக்கோ இதனால் நன்மை விளைந்து விடும் என்று நினைக்கிறீர்களா?

தற்போது சிறையில் உங்கள் மனம் படும் பாட்டை நாங்கள் அறிவோம். இனி வரும் காலங்களிலாவது செய்த தவறுகளுக்கு இறைவனிடம் மன்னிப்பை கேளுங்கள். பாதிக்கப்பட்ட, சுற்றத்தாரை இழந்து தவிக்கும் தற்போது இன்றும் அகதி முகாம்களில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அந்த அப்பாவி முஸ்லிம்களிடம் உங்களின் மன்னிப்பை கொண்டு செல்லுங்கள். உங்களை இந்த நிலைக்கு தூண்டிய அந்த ஆட்சியாளர்களை சட்டத்தின் முன் கொண்டு வாருங்கள். உங்களுக்கு கிடைத்த இதே தண்டனை அந்த கயவர்களுக்கும் கிடைப்பதற்கு ஆவண செய்யுங்கள். இது போன்ற செயல்களால் உங்களின் பாவக் கறைகள் சற்று குறைய வாய்ப்புள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கண்ணீருக்கு அதை மன்னிக்கும் உரிமை அந்த மக்களுக்கே உண்டு என்பதையும் மறந்து விடாதீர்கள்.

இறைவன் உங்களை நேர்வழிப்படுத்துவாராக...

இப்படிக்கு

மதசார்பற்ற இந்திய நலன் நாடும் ஒரு குடிமகன்!

4 comments:

Anonymous said...

9.உணர்வு:கேள்வி – அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் உள்ளார்களா என்பதை உறுதி செய்யவேண்டும் என்று மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை பா.ஜ.க. ஏன் எதிர்க்கிறது?

அபு ஜாசிம், கொல்லாபுரம்

பதில் –

முஸ்லிம்களைப் பற்றி மட்டும் மத்திய அரசு இப்படி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால், மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதுபோல் பா.ஜ.க. நினைக்கிறது. நடு நிலையாளர்களையும் குழப்புகிறது. மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையை பாஜக புரிந்து கொள்ளவில்லையா? அல்லது புரிந்து கொள்ளாதது போல் நடிக்கிறதா என்று தெரியவில்லை. முஸ்லிம் என்ற காரணத்துக்காக தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவிகள் கைது செய்யப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தான் சுற்ற்றிக்கை கூறுகின்றது. நாட்டில் எந்த இந்துவும் இந்து என்ற காரணத்திற்காக பொய்வழக்கில் கைது செய்யப்பட்டதில்லை. இந்துக்களிலும் அப்பாவிகள் மீது ஏராளமான பொய் வழக்குகள் உள்ளன. திருட்டு வழிப்பறி போன்ற வழக்குகளில் இந்துக்களில் பலர் மீது பொய்வழக்குகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் இந்துக்கள் என்ற காரணத்திற்காக இந்த வழக்குகள் போடப்படவில்லை. திருட்டு, வழிப்பறி, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் கணிசமான அளவுக்கு போடப்பட்ட பொய் வழக்குகளில் எல்லா மதத்தினரும் உள்ளனர்.

இதுபோன்ற வழக்குகள் குறித்து மத்திய அரசு அறிக்கை அனுப்பினால் முஸ்லிம்கள் என்று மட்டும் குறிப்பிடுவதைத் தவறு என்று சொல்லலாம். மத்திய அரசின் சுற்ற்றிக்கை இதைப் பற்றி பேசவில்லை. இரு சமூகங்களுக்கு இடையே மோதல் நடக்கும்போது முஸ்லிம்கள் மட்டுமே பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்படுகின்றனர். மற்ற சமுதாயத்தினருக்கு மோதலில் தொடர்பு இருந்தால் மட்டுமே அவர்கள் சில நேரங்களில் கைது செய்யப்படுவார்கள். பொய்வழக்கில் இந்து என்ற காரணத்துக்காக எந்த இந்துவும் கைது செய்யப்பட்டதில்லை. இது போன்ற வழக்குகளைத் தான் மத்திய அரசின் சுற்ற்றிக்கை கூறுகிறது........

Anonymous said...

.....குண்டு வெடிப்புகள் மற்றும் தீவிரவாதச் செயல்கள் எங்கே நடந்தாலும், அதுபற்றி புலன் விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் மறுகணமே நான்கு முஸ்லிம்களைப் பிடித்து அந்த வழக்கில் அவர்களைச் சேர்த்து விடுகின்றனர். பின்னர் காலம் கடந்து உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் அப்பாவி முஸ்லிம்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதில்லை. இது போன்ற வழக்குகளைத் தான் மத்திய அரசின் சுற்றறிக்கை குறிப்பிடுகிறது. இது போன்ற வழக்குகளை எந்த இந்துவும் சந்தித்ததில்லை. குண்டு வெடிப்பிலும் தீவிரவாதச் செயல்களிலும் தொடர்பு உள்ளது நிரூபிக்கப்பட்டால் தவிர எந்த இந்துவும் இது போன்ற வழக்குகளில் பொய்யாக கைது செய்யப்பட்டதில்லை. சந்தேகத்தின் பெயரில் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் ஒருவன் கிடைத்தால், அவனை சர்வதேச பயங்கரவாதியைப்போல் சித்தரித்து சிறையில் அடைக்கின்றனர். இந்த அவலத்தை வேறு எந்தச் சமுதாயமும் சந்திக்கவில்லை. இதுபோன்ற வழக்குகளைக் குறித்துத்தான் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. முஸ்லிம்கள் மட்டுமே சந்திக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசும்போது முஸ்லிம்கள் என்று கூறுவது எப்படி மதச்சார்பின்மைக்கு எதிரானது ஆகும். இதிலும் பாஜகவின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வருகிறது. தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்று சுற்றறிக்கை அனுப்புவதைக் கண்டிக்கும் பாஜக, எங்கள் பிரதமர் வேட்பாளர்மீது போலி என்கவுண்டர் வழக்கு பற்றி ஆர்வம் காட்டவேண்டாம் என்று பிரதமரைக் கோருகிறது. முஸ்லிம் பெண்கள் உட்பட பல முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரையும் என்கவுண்டர் வழக்கில் சுட்டுத் தள்ளிய விஷயத்தில் மோடிக்குச் சம்பந்தம் உண்டு என்று அடுக்கடுக்கான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டு இருக்கின்றன.

கிரிமினல் குற்றத்தில் தொடர்புடையவர் என்று தெரிந்தபின்னர் தான் மோடியை பிரதமராக இவர்கள் அறிவித்தார்கள். பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டபின்னர் என்கவுண்டர் பிரச்சினை எழுப்பப்படவில்லை. இந்த அறிவுகூட பா.ஜ.க.தலைவர்களில் ஒருவருக்கும் இல்லை. அப்பாவிகள் மீது வழக்கு போடுவதைத் தவிர்க்குமாறு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையைக் கண்டித்துக் கொண்டு கிரிமினல் மோடிமீது வழக்குப் போடவேண்டாம் என்று கூறுவது எவ்வளவுபெரிய முரண்பாடு? மக்கள் இதையெல்லாம் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர். இந்த நேரத்தில் முஸ்லிம்கள் இன்னொரு விஷயத்தையும் மறந்துவிடக்கூடாது. மத்திய அரசு இப்படி அறிக்கை அனுப்பியுள்ளதால் காங்கிரஸ் கட்சி இதுபோல் அப்பாவிகளைத் தீவிரவாதிகளாக ஆக்கவில்லை என்று கருதக் கூடாது. இதில் பாஜகவை மிஞ்சும் அளவுக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உள்ளன. டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏராளமான அப்பாவி முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக ஆக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இன்றும் சிறையில் உள்ளனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்தான் இது அதிகம் என்பதை இந்த அறிக்கை மூலம் மறைக்க முடியாது. தேர்தல் நெருங்குவதால் காங்கிரஸ் நடத்தும் நாடகம்தான் இது என்பதில் சந்தேகம் இல்லை. திருடி விட்டு ஓடுபவன் திருடனைப் பிடி என்று கத்திக் கொண்டு ஓடுவது போல் தான் காங்கிரசின் இந்த அறிக்கையை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்

Anandan Krishnan said...

// (மதசார்பற்ற)!//

சார் காமடி பண்ணாதீங்க,

Anandan Krishnan said...

//காபிர் என்ற சொல் சூத்தினைப் போல் இழிவு படுத்தப்பட்ட சொல் என்பதை குர்ஆனைக் கொண்டு நீங்கள் நிரூபித்து விட்டால் நான் எழுதுவதையே விட்டு விடுகிறேன். ://

சுவனப்ரியன், உங்கள் குர் ஆன் உங்களுக்குதான் வேத நூல், எனக்கு அது ஒரு குப்பை. யார் அல்லா என்பவன் அவனை நான் ஏற்று கொள்ளவிட்டால் எனக்கு காபிர் என்று பெயர் இடுவாரா, இஸ்லாமியர்கள் கூடத்தான் இந்து சமயத்தை ஏற்று கொள்ளவில்லை, உங்களுக்கெல்லாம் "லெப்பைகள்" என்று நாங்கள் பெயர் வைக்கட்டுமா. "லெப்பைகள்" என்றால் எங்கள் ஊரில் "மூளை இருந்தும் பயன்படுத்த தெரியாதவர்கள்" என்று அர்த்தம். அதாவது மரமண்டைகள் என்று பொருள். இது மோசமான சொல் அல்ல, இது தான் யதார்த்தம், உங்கள் கூட்டம் மொத்தமுமே அப்படிதான் இருக்கிறது. எனவே இனிமேல் துலுக்கர்கள் என்றால் லெப்பைகள் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்

//இது முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல: முழு மனித குலத்துக்கும் சொந்தமானது இந்த குர்ஆன்.//

தேவை இல்லை அண்ணாச்சி, நாங்கள் இறைவனை வணங்கி கொண்டு தான் இருக்கிறோம், நேர் வழியில் தான் இருக்கிறோம். குரானும் இஸ்லாமும் அரபிகளுக்கும் உங்களை போன்ற அறிவிலிகளுக்கும் மட்டுமே சொந்தம்.