
அர்னார்ட் வேன் டோர்ன் - ஐரோப்பாவின் டச்சு சமூகத்தை சேர்ந்த இந்த சினிமா டைரக்டரை பலரும் அறிந்திருப்பர். 'ஃபித்னா' என்ற பெயரில் நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் முகமாக ஒரு சினிமாவை தயாரித்து பலரது விமர்சனத்துக்கும் ஆளானார். தான் செய்த பெரும் தவறை உணர்ந்து தற்போது திருந்தி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு ஹஜ் செய்ய சவுதி வந்திருந்தார்.
'நான் முன்பு செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசியல் கட்சி ஒன்றை துவங்க இருக்கிறேன். அது நெதர்லாந்துக்கு மட்டுமல்லாது முழு ஐரோப்பாவுக்கும் பயனுள்ள கட்சியாக இருக்கும். இந்த கட்சியின் முக்கிய கொள்கை இஸ்லாத்தை பாதுகாப்பதாகவும் முஸ்லிம்களை அரவணைத்து செல்லக் கூடியதாகவும் இருக்கும். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாதவர்களையும் ஒன்றிணைத்து இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் எதிர் கொள்ளும் பிரச்னைகளை களைய நாங்கள் முன்னுரிமை கொடுப்போம்.
நான் போன வருடம்தான் இஸ்லாத்தை தழுவினேன். பிப்ரவரியில் உம்ராவுக்காக சவுதி வந்தேன். தற்போது இந்த வருடம் ஹஜ்ஜையும் முடித்துள்ளேன். முன்பு அந்த திரைப்படத்தை எடுத்த போது எனக்கு இஸ்லாத்தைப் பற்றிய ஒரு பொய்யான தோற்றத்தையே காட்டினர். ஊடகங்களும் அதைத்தான் செய்தன. அவ்வாறு ஒரு படம் எடுத்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். கிரீட் வெல்டர்ஸ் என்ற அரசியல் கட்சியின் ஆலோசனையின் பேரிலேயே அந்த படத்தை எடுத்தேன். அதில் உள்ள விபரங்களை கொடுத்தது இந்த அரசியல் கட்சிதான்.
நான் முன்பு செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக 'மனித குலத்தின் முன் மாதிரி முகமது நபி' என்ற படத்தை எடுக்கும் திட்டம் தற்போது உள்ளது. இதற்கு கனடா முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தெரிவுத்துள்ளன. அவர்களின் ஒத்துழைப்போடு எனது அடுத்த படம் வெளி வரும். முகமது நபியின் வாழ்க்கையில் நடந்த சில வரலாறுகளை குறும்படங்களாக எடுக்கும் திட்டமும் உள்ளது. இது ஐரோப்பாவில் உள்ள ஐந்து மொழிகளில் வெளியாகும். மதினா நகரத்தின் சரித்திரத்தை விவரிக்கும் 'மதினா' என்ற திரைப்படம் எடுக்கும் திட்டமும் உள்ளது.
ஒரு இடத்தில் நான் ஆச்சரியப்பட்டு போனேன். பாதுகாப்புக்காக நின்ற ஒரு ஊழியர் வயதின் தள்ளாமையால் சிரமப்பட்ட ஒரு மூதாட்டியை தனது தோளில் சுமந்து கொண்டு ஜமராத் பாலத்தில் சாத்தானுக்கு கல் எறிவதற்கு உதவி செய்த காட்சி என்னை பிரமிப்புக்குள்ளாக்கியது. அந்த மூதாட்டி யார்? எந்த நாடு? என்றெல்லாம் அந்த சகோதரர் பார்க்கவில்லை. இது போன்று மனதை நெகிழச் செய்த பல நிகழ்வுகள். இவற்றை எல்லாம் புத்தகமாக தொகுத்து வெளியிட உள்ளேன்.
முன்பு செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கோரினேன். தற்போது எனது வாழ்வு முற்றிலுமாக மாறி விட்டது. எனது தாயகத்துக்கு சென்று எனது மனைவிக்கும் எனது மூன்று குழந்தைகளுக்கும் இஸ்லாத்தை எத்தி வைப்பேன். முன்பே அவர்கள் குர்ஆனை படித்து வருகிறார்கள். அவர்களின் மனத்திலும் மாற்றத்தை இறைவன் ஏற்படுத்துவான் என்று நம்புகிறேன்' என்று உணர்வுபூர்வமான பேட்டியை சவுதி கெஜட்டுக்கு அளித்தார் இந்த சினிமா டைரக்டர்.
இஸ்லாத்தை ஒழிப்பதை தங்களது முழு நேர வேலையாக செய்து வரும் நம் ஊர் இந்துத்வாவாதிகளும் ஒரு நாள் உண்மையை உணர்ந்து இவரைப் போல் செய்த தவறுகளுக்கு இறைவனிடம் மன்னிப்பை கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த நாளுக்காக நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
4 comments:
pakirvukku nantri!
திரு கணபதி ராமன்!
//மதவாதியான சுவனப்பிரியன் இப்போது நுழைந்துவிட்டார். இனியென்ன ஆசாராம்பாபு, ராம்தேவ்தான், சங்கராச்சாரியார், காரிட்னல்களும் பிஷப்புக்களும் வரவேண்டியதுதான் பாக்கி.//
எனக்கும் ஆசாராம் பாபுக்கும் சங்கராச்சாரியாருக்கும் மதத்தை கடைபிடிக்கும் விஷயத்தில் பெருத்த வேறுபாடு உண்டு. ஆசாராம் பாபுவும் சங்கராச்சாரியாரியாரும் மதத்தை பயன் படுத்தி அதன் மூலம் தங்களது காம வெறியை தீர்த்துக் கொண்டவர்கள்.
ஆனால் நானோ இஸ்லாத்தை முடிந்த வரை பரிபூரணமாக பின்பற்றி எனது மனைவிக்கும் எனது குழந்தைகளுக்கும் எனது பெற்றோருக்கும் எனது நாட்டுக்கும் என்னை படைத்த இறைவனுக்கும் உண்மையாளனாக இருந்து வருகிறேன். எனவே இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேற்படி நண்பர் செங்கொடி இறையில்லா இஸ்லாம் answering islam போன்ற வலைதளங்களைப் படித்திருக்க மாட்டாா். அல்லது சவுதிகாரன் பெரும் தொகையை 10 போல் குமுஸ் பெண்களையும் அளித்திருப்பான். அண்ணன் அசந்து விட்டாா் போங்கள்
//மேற்படி நண்பர் செங்கொடி இறையில்லா இஸ்லாம் answering islam போன்ற வலைதளங்களைப் படித்திருக்க மாட்டாா். அல்லது சவுதிகாரன் பெரும் தொகையை 10 போல் குமுஸ் பெண்களையும் அளித்திருப்பான். அண்ணன் அசந்து விட்டாா் போங்கள்//
:-)
வயிற்றெரிச்சல் உங்கள் பின்னூட்டத்தில் நன்றாகவே தெரிகிறது. அமைதியடைவீராக.....
Post a Comment