Followers

Thursday, October 24, 2013

மலாலா யூசுஃபின் பிரத்யேக பேட்டி!





இந்திய மீடியாவுக்கு முதன் முதலாக மலாலா யூசுஃப் பேட்டியளித்துள்ளார். என்டிடிவி யின் பர்கா தத் அவரை பிரத்யேக பேட்டி கண்டுள்ளார்.

'முதலில் எனது உயிரை காப்பாற்றி நலமாக்கிய அந்த இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். நான் எனது பள்ளியிலிருந்து வெளியேறிய போது இரண்டு நபர்கள் வந்து 'இதில் யார் மலாலா யூசுஃப்?' எனக் கேட்டனர். என்னை அடையாளம் கண்டு கொண்டு என்னை நோக்கி சுட்டனர். நான் தான் மலாலா என்று அவர்களுக்கு பதில் கூறக் கூட எனக்கு அவர்கள் அவகாசம் தரவில்லை. மூன்று தோட்டாக்கள் பாய்ந்தன. ஒன்று என் மீதும் மற்ற இரண்டும் எனது தோழிகள் மீதும் பாய்ந்தன. எனது இரண்டு தோழிகளும் இதனால் பாதிக்கப்பட்டனர். உடன் மயக்கமாகி விட்டேன். என்னை சுற்றி கூட்டம் சூழ்வதை உணர முடிந்தது. எனது தந்தையை அந்த கூட்டத்தில் தேடினேன். அதற்குள் எனது நினைவு என்னை விட்டு சென்று விட்டது.'

"அதன் பிறகு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு எனது சுய நினைவு சென்று கோமா நிலைக்கு சென்று விட்டேன். அந்த நேரத்தில் நடந்த சில நிகழ்வுகள் லேசாக எனது நினைவில் இன்றும் இருந்து வருகிறது. மருத்துவ மனையிலிருந்து சீக்கிரமாக வீட்டுக்கு சென்று விடலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் எனது உடல் நிலையோ அந்த வீட்டுக்கு திரும்பும் சூழலில் இல்லை. அதன்பிறகு என்னை சிகிச்சைக்காக இங்கிலாந்து கொண்டு சென்றனர். அன்றிலிருந்து எனது வாழ்க்கை முற்றிலும் மாறி விட்டது. இன்று மீடியாக்களில் பேசப்படுபவளாக மாற்றப்பட்டுள்ளேன்."

பர்காதத்: தாலிபான்களை கண்டு பயப்படுகிறீர்களா?

மலாலா யூசுஃப்: மனித உருவில் நடமாடும் சில சாத்தான்களை கண்டு பயப்படுகிறேன். தாலிபான்களை அல்ல.

------------------------------------------------------------

பெண்கள் கல்வி கற்பதையோ, அவர்கள் வேலைக்கு செல்வதையோ இஸ்லாம் ஒரு காலும் தடை செய்யவில்லை. அவர்களின் கற்புக்கு பாதகம் வராமல் அவர்களின் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்று தான் இஸ்லாம் கட்டளையிடுகிறது. இதனை நன்கு மலாலா யூசுஃப் போன்றவர்கள் உணர்ந்து கொண்டு இஸ்லாம் காட்டித் தரும் வழியில் தங்களின் முன்னேற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய சமூகம் இவரை எந்த வகையிலாவது இஸ்லாமிய நடைமுறைகளிலிருந்து வெளியாக்க திட்டமிடுவர். அவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் சமயோஜிதமாக நடந்து கொள்வார் என்று நம்புவோமாக...

மேலும் பெண்களின் முன்னேற்றத்துக்கோ, அவர்களின் படிப்பு, வேலைகளுக்கோ தாலிபான்கள் என்றுமே எதிரிகள் அல்ல என்று தாலிபான்களின் தலைவர் முல்லா உமர் தனது பெருநாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களின் பெயரை சமூகத்தில் கெடுக்க அமெரிக்கா பல நாச வேலைகளை செய்து விட்டு பழியை தாலிபான்களாகிய எங்கள் மீது போட்டு விடுகிறது. மீடியாக்கள் எங்கள் வசம் இல்லாததால் இந்த உண்மைகள் வெளியில் வருவதில்லை என்று முல்லா உமர் விடுத்துள்ள செய்தியையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தாலிபான்கள் பல விஷயங்களில் இஸ்லாத்துக்கு மாற்றமாக நடக்கின்றனர் என்பதையும் நான் மறுக்கவில்லை. அதற்கான கண்டனங்களையும் நாம் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானைப் பொறுத்த வரையில் அதன் கட்டுப்பாடு முழுவதும் அமெரிக்க படைகள் வசம் உள்ளது. அமெரிக்கா தாலிபான்கள் மேல் பொது மக்களின் வெறுப்பு ஏற்படுவதற்காகக் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டு பழியை தாலிபான்கள் மேல் போட வாய்ப்புள்ளது. தாலிபான்கள் இந்த செயலை செய்திருந்தால் அதனை வன்மையாக கண்டிப்போம். ஆனால் உண்மை குற்றவாளி யார் என்பது இறைவனுக்கே தெரியும். எனவே தான் மலாலா நேரிடையாக தாலிபான்களை குற்றம் சுமத்தாமல் பொதுவாக குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகினாலே அங்கு அமைதி திரும்ப வாய்ப்புள்ளது. அங்கு அமைதி திரும்பி அந்த மக்கள் சுதந்திரமான ஒரு அரசை பெற்று தங்களின் வாழ்வை அமைதியுடன் கொண்டு செல்ல அந்த ஏக இறைவனிடம் பிரார்த்திப்போமாக....

3 comments:

Anonymous said...

மலாலா பாகிஸ்தானிய பெண் இல்லையா?

- தவறான செய்திகளுக்கு பலியாகாதீர்கள் சகோ..

கடந்த இரண்டு நாட்களாக சமூக தளங்களில் பல சகோதரர்கள் "மலாலா பாகிஸ்தானிய பெண் இல்லை - திடுக்கிடும் தகவல்" என்ற ஒரு பதிவை ஷேர் செய்திருந்தார்கள். இந்த கட்டுரை நதீம் பராச்சா என்ற ஊடகவியாளருடையது. இந்த மனிதர் இந்த கட்டுரையை பாகிஸ்தானின் டான் ஊடகத்திற்காக எழுதினார். இதனை தான் காப்பி செய்து சகோதரர்கள் கொடுத்த தளத்தில் (lathee farook என்று தொடங்கும் லிங்க்) போட்டுள்ளார்கள்.

கட்டுரையின் உண்மை தன்மையை இப்போது காண்போம். இந்த கட்டுரை தொடங்கும் போதும் முடியும் போதும், டிஸ்கி (குறிப்பு) என்று போட்டு அதில் "இந்த கட்டுரை கேலிக்காகவும், கற்பனையாகவும் எழுதப்பட்டது" என்பதை டான் ஊடகம் தெரிவித்து விடுகின்றது. ஆனால் இந்த டிஸ்கி நம் சகோதரர்கள் கொடுத்த தளத்தில் இல்லை. இருந்திருந்தால் நம் சகோதரர்கள் இதனை ஷேர் செய்திருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகின்றேன். இவை எல்லாத்தையும் விட, அந்த கட்டுரையை முழுமையாக படித்தால் அதில் உள்ள கேலியை நாம் புரிந்துக்கொள்ளலாம். உதாரணமாக: மலாலா குறித்த உண்மையை வெளியே தெரிவித்த ISI ஏஜென்ட், தன்னை யாரும் கண்டுபிடிக்க கூடாதென்று ஸ்பைடர்மேன் உடையில் தோன்றி விளக்கமளித்தார் என்று கூறி அவர் அந்த உடையில் தோன்றும்படியான படு கிண்டலான படத்தையும் டான் வெளியிட்டிருந்தது (இத்துடன் அந்த படத்தை அட்டாச் செய்துள்ளேன்).

மேலும், மலாலா சுடப்படும் போது, உண்மையை யாரும் அறியாமல் இருக்க, தக்காளி சாஸை தன் மீது தடவிக்கொண்டு ரத்தம் வருவது போல நடித்தார் என்றும் அந்த கட்டுரையில் வருகின்றது. இப்படி அந்த கட்டுரையின் கேலிகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். மலாலா குறித்து எதிர்மறையான கருத்துக்கள் நிலவுவதால் அவற்றை கிண்டலடித்து இந்த கட்டுரையை எழுதியுள்ளார் நதீம். ஆகவே சகோதரர்களே, ஏதோ ஒரு தளத்தில் வெளியான செய்தியின் உண்மை தன்மையை ஆராயாமல் தயவுக்கூர்ந்து பதியாதீர்கள்/ஷேர் செய்யாதீர்கள். டானில் வெளியான அந்த கட்டுரை:

http://dawn.com/news/1048776/

வஸ்ஸலாம்...

-ashiq ahamed

suvanappiriyan said...

//சமீபத்தில் ஜப்பான் இருக்கும் எல்லா இஸ்லாமியர்களும் ஜப்பானிய மொழியை கட்டாயம் கற்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மற்றும் இஸ்லாமியர்கள் தங்கள தொழுகை மற்றும் மத சம்பந்தப்பட்ட கடமைகளை தாங்கள் வசிக்கும் வீட்டிலேயே நடத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது.//

பொய்களை பரப்ப ஒரு அளவு இல்லையா? பழைய மாதிரி பொய்களை சொன்னால் யாரும் கண்டு பிடிக்க முடியாது என்று நினைக்க வேண்டாம். கூகுளில் அடித்தால் விபரங்களை அள்ளி தந்து விடுகின்றனர். வெள்ளிக் கிழமை ஜூம்ஆவுக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறது. அங்கு இஸ்லாம் எந்த அளவு வளர்ந்து வருகிறது என்பதை இந்த லிங்குகளில் சென்று பார்த்துக் கொள்ளவும்.

http://www.islamiccircleofjapan.org/

http://www.japanesemuslims.com/

http://www.nippon.com/en/features/c01302/


Anonymous said...

என் அப்பா, பாட்டி ஆகியோர் கொல்லப் பட்டார்கள். நானும் கொல்லப்படலாம் - ராகுல் உருக்கம்

அவங்க எல்லாம் பி எம் ஆனாங்க..கொல்லப்படாங்க..நாங்க உங்கள காப்பாத்திருவோம்..நீங்க பி.எம் ஆனாதானே உங்கள அவங்க கொல்லுவாங்க..நாங்க உங்கள பி.எம் ஆகவுடாம உங்களையும் காப்பாத்திருவோம்..நாட்டையும் காப்பாத்திருவோம் - நம்பி நாராயணன்

என்ன நம்பி நாராயணன் சார், பச்சப்புள்ள மாதிரி பேசுறீங்களே..

காந்தியடிகள் என்ன பிரதமராவா ஆனார்.
அவரை அநியாயமா ஆர்.எஸ்.எஸ்.காரன் - கோட்சே எனும் பார்ப்பனன் போட்டுத் தள்ளவில்லையா?

-ஆளூர் ஷாநவாஸ்