Followers

Monday, October 14, 2013

நிற வெறி! மொழி வெறி! இன வெறி! கடந்த ஒற்றுமை!உலகில் வேறு எங்கும் இப்படி ஒரு புரட்சியை நாம் பார்திருக்கிறோமா? வெள்ளையனும், கருப்பனும், அமெரிக்கனும், ஆப்ரிக்கனும், இந்தியனும், பாகிஸ்தானியும் நிற வெறி, குல வெறி, பிறந்த மண் வெறி அனைத்தையும் தூர வைத்து விட்டு உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள். நமக்குள் பேதங்கள் இல்லை. என்று உறுதி பூண்டு இறைவனை நினைவு கூற இதோ இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட உலக மக்கள் ஒன்று கூடி விட்டார்கள்.

ஒரே சீருடை: அதிலும் வெள்ளை சீருடை: அணிந்து மன்னனிலிருந்து பாமரன் வரை தோளோடு தோள் சேர்த்து 'லப்பைக் அல்லாஹூம்ம லப்பைக்: லப்பைக் லா ஷரீக லக்க லப்பைக்' 'வந்து விட்டேன்! இறைவா! உன்னிடமே வந்து விட்டேன்! உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்து விட்டேன். நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.' என்ற விண் முட்டும் கோஷத்தோடு மினா பள்ளியில் ஹாஜிகள் அமர்ந்திருக்கும் காட்சியே நாம் பார்ப்பது.

அனைவருக்கும் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

இந்த நன்னாளில் உலகம் முழுவதும், அதிலும் குறிப்பாக நமது நாட்டிலும் அமைதி தவழ்ந்து அனைத்து மக்களும் சாதி இன பேதமின்றி ஒற்றுமையாக வாழ அந்த ஏக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

3 comments:

சுவனப் பிரியன் said...

//அவன் அப்படி கேவலமாக நடாத்தும்போது, இசுலாமியன், இந்து என்று பார்ப்பதில்லை. அவன் பார்பதெல்லாம் இவனொரு கூலிக்காரன் இவனை இப்படித்தான் நடாத்தவேண்டுமென்பதே. ஏனென்றால் வெ சா சுட்டிய பங்களாதேசி ஓட்டுனர் ஒரு இசுலாமியன்.,//

அந்த யுட்யூபினை நானும் பார்த்தேன்! அந்த பங்களாதேசத்தவர் செய்த குற்றத்தையும் நாம் பார்க்க வேண்டும். அந்த நாட்டு மன்னரையும், அந்நாட்டு ஆட்சி அமைப்பையும் இழிவாக பேசியதுதான் அந்த பங்களாதேஷியை இம்சிக்க காரணம். இங்கு ஆட்சியாளரை தரக்குறைவாக பேச இந்நாட்டு மக்கள் ஒத்துக் கொள்வதில்லை. ஆனால் அதற்காக சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அந்த பங்களாதேஷியை அடித்தது மிக தவறு.

மேலும் இங்கு பல மசூதிகளில் நான் தலைவராக நின்று தொழுகை நடத்தியுள்ளேன். என்னைப் பின்பற்றி சவுதி, எகிப்து, சூடான் நாட்டவர்கள் தொழுதுள்ளார்கள். ஒரே தட்டில் அமர்ந்து அவர்களோடு சாப்பிடுகிறேன். எனது நண்பன் ஒருவன் சவுதி பெண்ணை திருமணம் முடித்து குழந்தையும் பெற்றுள்ளான். எனவே படித்தவர்களுக்கு சிறந்த மரியாதை கிடைக்கிறது. வீட்டு வேலைக்கும் ஆடு மேய்க்கும் தொழிலுக்கும் ஒத்துக் கொண்டு வந்தவர்களுக்கு அந்த வேலைதானே கொடுக்க முடியும். எனவே படிக்காமல் வரும் சகோதரர்கள் இனி தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு வளை குடாக்களுக்கு வருவது நல்லது.

தமிழ் நன்றாக தனது கருத்துக்களை வைக்கிறார்.

jaisankar jaganathan said...

எல்லாம் சரிதான் சுவனம். ஆனால் சன்னி ஷியா மசூதில ஏன் பாம் வைக்குறாங்க்ன்னு மட்டும் சொன்னால் தன்யனாவேன்

சுவனப் பிரியன் said...

//நேற்று மலேசியா நீதிமன்றம் ‘அல்லா’ என்ற பெயரை இசுலாமியர் தவிர வேறெவரும் பிரயோகிக்ககூடாது. அதைப்போல இந்துக்கடவுள்களை இந்துக்கள் மட்டும்தான் தொழவேண்டுமென்பீர்களா?//

இவ்வாறு மலேசிய அரசாங்கம் சொல்ல ஒரு காரணம் உள்ளது. மலேசிய கிறித்தவர்களில் சிலர் பைபிளில் உள்ள தேவன்தான் அல்லாஹ். அதே போல் குர்ஆனில் உள்ள அல்லாஹ் தான் எங்களின் தேவன்: எனவே அல்லாஹ்வின் பிள்ளைதான் ஏசு என்ற ரீதியில் இஸ்லாமியரிடையே பிரசாரம் பண்ண ஆரம்பித்தார்கள். ஏக இறைவனை பறை சாற்றும் இஸ்லாத்தில் இந்த வாதம் குழப்பத்தை உண்டு பண்ணும். எனவேதான் கிறித்தவர்களின் குழப்பத்தை முறியடிக்க மலேசிய அரசு இவ்வாறு ஒரு ஆணையை பிறப்பித்தது.

இஸ்லாமிய பார்வையில் கடவுள், இறைவன், அல்லாஹ், கர்த்தர், காட் என்ற அனைத்து சொற்களும் ஏக இறைவனையே குறிக்கும்.

'அல்லாஹ் என்று அழையுங்கள்: ரஹ்மான் என்று அழையுங்கள்: நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன'

-குர்ஆன் 17:110