Followers

Tuesday, October 22, 2013

சாமியார் ஷோபனிடம் அடிபணிந்த மோடி!காங்கிரஸ் எதைச் செய்தாலும் அதனை கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பதையே தொழிலாகக் கொண்ட மோடி சமீபத்தில் சென்னை வந்த போது சாமியாரின் கனவை ஆதாரமாக வைத்து தங்கத்தை தேடும் மத்திய அரசை கிண்டலடிததிருந்தார். நம்ம சாமியாரும் லேசு பட்டவர் அல்ல. பிஜேபியின் அனைத்து நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிப்பவர் போல் தெரிகிறது. மோடியின் கிண்டலுக்கு அவரது பாணியிலேயே சாமியார் கொடுத்த பதிலடியைப் பார்ப்போம்.

''தங்கப் புதையலை தேடும் பணியையும், அதற்கான நடவடிக்கையை எடுத்த என்னையும், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இந்தியாவை, 'சூப்பர் பவர்' நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, நான், முயற்சிக்கிறேன். இதில், அரசியல் பின்னணி இல்லை,'' என, சாமியார் ஷோபன் சர்க்கார் கூறி உள்ளார்.

இது தொடர்பாக, சாமியார் ஷோபன் சர்க்கார், மோடிக்கு எழுதியுள்ள கடிதம்:

புதையல் வேட்டையை அவமதிக்கும் வகையில், நரேந்திர மோடி பேசியுள்ளார். இதன் மூலம், புதையலை தோண்டுவதற்காக நடவடிக்கையை மேற்கொண்ட என்னையும், அவர் அவமதித்துள்ளார்.

சுவிஸ் வங்கிகளில், கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறும் நரேந்திர மோடி, மத்தியில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சி நடந்தபோது, அந்த பணத்தை மீட்பதற்கான நடவடிக்கையை எடுக்காதது ஏன்? நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்காகவும், அதை மக்களிடம் அதிக அளவில் விளம்பரம் செய்வதற்காகவும், பல கோடி ரூபாயை, பா.ஜ., செலவிடுகிறது. இந்த பணம் எங்கிருந்து வந்தது? இது, கறுப்பு பணமா, வௌளை பணமா என்பதை, மோடி விளக்க வேண்டும். அரசு துறைகளில், கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டும் என, சாம் பிட்ராடோ கூறினார். ஆனால், பா.ஜ.,வும், அப்போதைய தலைவர் வாஜ்பாயும், அதை கடுமையாக எதிர்த்தனர். அது தவறு என, இப்போது, பா.ஜ., ஏற்றுக் கொள்கிறதா?

புதையலை தேடும் பணியில், எந்த அரசியல் பின்னணியும் இல்லை. இந்தியாவை, பொருளாதார ரீதியாக, சூப்பர் பவர் நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, புதையல் தேடும் பணிக்கான நடவடிக்கையை எடுத்தேன். நரேந்திர மோடிக்கு, அவரின் வாழ்க்கையில், ஏதாவது பிரச்னை இருந்தால், அதை தீர்ப்பதற்காக, என் ஆசிரமத்துக்கு அவர் வரலாம். இவ்வாறு, அந்த கடிதத்தில் ஷோபன் சர்க்கார் தெரிவித்து உள்ளார்.

இதனை சற்றும் மோடி எதிர்பார்க்கவில்லை. விட்டால் பிஜேபியின் அனைத்து ரகசியங்களையும் போட்டு உடைத்து விடுவாரோ என்ற பயம் மோடிக்கு வரவே உடன் சாமியாரிடம் சரணடைந்த கூத்தை இன்றைய செய்தியில் பாருங்கள்.

புதுடில்லி: உ.பி.,யில் தங்கப்புதையல் குறித்த கனவு தகவலை தெரிவித்த ஷோபன் சாமியார் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உ.பி., மாநிலம் உன்னாவ் பகுதியில் உள்ள தாண்டியா கெராவில் உள்ள கோட்டையில் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாக மன்னர் தனது கனவில் வந்து தெரிவித்ததாக ஷோபன் சாமியார் கூறினார். இதனையடுத்து இந்திய தொல்லியல் துறை தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனை சென்னையில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ஷோபன் சாமியார் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் ஷோபன் சாமியார் மற்றும் அவரது ஆதரவாளர்களை சமாாதனப்படுத்தும் விதமாக மோடி தனது டுவீட்டர் இணையதளத்தில் புகழ்ந்துள்ளார். அதில், ஷோபன் சர்க்காரை நம்பும் லட்சக்கணக்கானோர் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் மீது நான் மிகவும் மதிப்பு வைத்துள்ளேன்" என கூறியுள்ளார்.

தத்து பித்தென்று உளறி சாமியாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு உடன் வெட்கமில்லாமல் சரணடைந்த இந்த மோடிதான் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறாராம். சாமியாரை இன்னும் கொஞ்சம் பேச விட்டிருந்தால் குஜராத் கலவரங்களைப் பற்றியும் அங்கு மோடி இதுவரை செய்த ஊழல்கள் பற்றியும் ஒரு பிடி பிடித்திருப்பார். நல்ல வேளை மன்னிப்பின் மூலம் பெரும் ஆபத்திலிருந்து தப்பித்தார் மோடி! :-)


1 comment:

ராவணன் said...

ஒங்க அன்னை இத்தாலி கிறித்துவ சோனியாவே உங்களுக்கு சரி....

…இஸ்ரேலை ஆதரிக்கும்...எப்போதும் விட்டுக்கொடுக்காத அமெரிக்கா....
…அந்த அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணிந்து அதன் காலடியில் விழுந்துகிடக்கும் சவுதி அரேபியா....

…அப்படிப்பட்ட அந்த சவுதி அரேபியாவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நீங்களும் இஸ்ரேலிய ஆதரவாளரே....
…சூப்பர் அண்ணாச்சி.....