Followers

Saturday, October 19, 2013

இந்தியாவின் முதலாம் இசுலாமிய வங்கி!

சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டட்;

இந்தியாவின் முதலாம் இசுலாமிய வங்கி வெற்றி பாதையில் முன்னேறுகிறது!

இந்திய இசுலாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த வட்டி இல்லாத இசுலாமிய வங்கி சேவைகளுக்கான வங்கி ஒன்றிற்க்கு மத்திய அரசும்,இந்திய ரிசர்வ் வங்கியும் அணுமதி அளித்ததனை தொடர்ந்து கேரள அரசின் ஆதரவோடு தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் வட்டி இல்லா வங்கியான ‘சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிடட்’ (சி.எப்.எஸ்.எல்) இசுலாமிய மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றதுடன்.வளைகுடா நாடுகளிலும் மிகுந்த வரவேற்ப்பினை பெற்று வருகிறது. இவ்வங்கியில் முதலீடுகள் செய்வதற்க்கு அரபு நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

‘ஷரியத்’ சட்டங்கள் கூறும் பொருளாதார தத்துவஙகளை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு இந்தியன் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் ‘சேரமான் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடட்’ உடன் வர்த்தக உறவு கொள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் உள்ள சில வங்கிகளும்,தன காரிய அமைப்புகளும்,தனியார் முதலீட்டாளர்களும் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

‘சி.எப்.எஸ்.எல்’ -ன் நிர்வாக இயக்குனர் டாக்டர்.பி.முஹம்மத் அலி(கல்பாஃர்) அவர்களின் தலைமையில் துபாய் நகரில் ‘சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிடட்’ இன் முதலீட்டாளருக்கு வங்கி குறித்து அறிமுகப்படுத்தும் பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

அரபு நாடுகளில்,வியாபாரம் மற்றும் விற்பனை துறைகளில் ஈடுபடும் வளைகுடா வாழ் இந்தியர்கள் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு வங்கியில் முதலீடு செய்வதற்க்கும் வர்த்தக உறவுவுகள் வைத்துக் கொள்வதற்கும் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். இந்தியர்கள் மட்டும் அல்லாது பெருமளவு அரபு வியாபாரிகளும் சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டடில் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளவும் வங்கியின் பங்குகளில் முதலீட்டாளர்களாக சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமிரகம் மட்டும் அல்லாது மற்ற இதர வளைகுடா நாடுகளிலும் வங்கியை அறிமுகப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட இருக்கிறது.ஒமான் அரசுடன் தொடர்புடைய சில நிறுவனங்கள் வட்டி இல்லாத ரீதியில் செயலாற்றும் சேரமான் பினான்சியல் சர்விசஸ் உடன் வர்த்தக உறவில் இணைவதற்க்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறது.வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவினான முதலீடுகள் பெறுவதற்கான திட்டம் மிக பெரும் வெற்றி திட்டமாக மாறி இருக்கிறது என்று வங்கியின் தலைமை நிர்வாகி டாக்டர்.முஹம்மது அலி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தியாவில்,தமிழ் நாடு,மற்றும் வட இந்திய மாநிலங்களில் இருந்தும் வங்கிகளில் முதலீடுகள் செய்வதற்க்கு சில அமைப்புகள் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் வளர்ந்து வரும் வேளையில் வரும் டிசம்பர் மாதத்தில் வங்கியின் முதல் ‘செயல் திட்டம் ‘ செயலாற்ற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பதினைந்திற்க்கும் மேற்பட்ட மிக பெரும் செயல் திட்டங்கள் ‘சி.எப்.எஸ்.எல்’ இடம் இருப்பதாக டாக்டர்.பி.முஹம்மது அலி தெரிவிக்கிறார்.

2009 ஆம் ஆண்டு அச்சுதானந்தன் அரசு அறிமுகப்படுத்திய ‘அல் பரக்கா பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டட்’ என்ற நிறுவனமே தற்போது பெயரை மாற்றி ‘சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டட்’ஆக செயல் பட்டு வருகிறது. இதர பொதுவுடமை வங்கிகளுடன் இணைந்து செயல்பட மத்திய ரிசர்வ் வங்கி அணுமதியும் அளித்து இருக்கிறது.

ஆயிரம் கோடி ரூபாய்கள் தொடக்க மூலதன முதலீடாக கொண்டு செயல்படும் வங்கியில் ஆக மொத்தம் 11 சதவிகிதம் கேரள மாநில தொழில் வளர்சி நிறுவனத்தின் பங்காகவும்,
பாக்கி உள்ள தொகைகளை தனியார் முதலீட்டாளர்களிடமிருந்தும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமிருந்தும் சேகரிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.இவ்வாறு பெறப்படும் தொகைகள் கேரள மாநில தொழில் வளர்ச்சி திட்டங்களிலும், மாநிலத்தின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் திட்டங்களிலும்,வக்பு நிலங்களை மேம்படுத்தும் திட்டங்களிலும்,சிறு தொழில் திட்டங்களிலும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு அதனில் இருந்து கிடைக்கும் லாப/நஷ்ட கணக்குகளை அணுசரித்து முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும்.

இத்தகைய திட்டங்களுக்கு பணம் கொடுப்பதோடு மட்டும் அல்லாது திட்டங்களை நல்ல முறையில் கொண்டு செல்ல முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் மற்றும் பொருளாதார ஆலோசனைகளை வழங்கவும் திட்டமிட்டு இருப்பதாக வங்கியின் நிர்வாக இயக்குனர் ஏ.பி.எம். ஹனீஷ் ஐ.ஏ.எஸ் தெரிவித்தார்.
’ஷரியத்’ தடை செய்திருக்கும் தொழில் துறை திட்டங்களிலோ அல்லது விற்பனை கூடங்களிலேயோ ‘சி.எப்.எஸ்.எல் ‘ பணத்தினை முதலீடு செய்யாது என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

வட்டி லாபத்தை ஷரியத்திற்கு எதிராக கருதுவதால் இந்திய இசுலாமியர்கள் பொதுவுடமை வங்கிகளிலும்,பொது துறை நிறுவனங்களிலும் பெருமளவிளான முதலீடுகளை செய்ய தயங்குகிறார்கள் அல்லது அத்தைகைய நிறுவனங்களில் முதலீடுகளை செய்ய ஆர்வமும் காட்டுவதில்லை.அவ்வாறு விட்டு நிற்கும் இசுலாமிய முதலீட்டாளர்களை கவரும் விதத்தில் கேரள அரசின் துனையோடு தொடங்கப்பட்ட சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டட்-ற்க்கு இந்திய இசுலாமியர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதோடு வங்கியினை வெற்றி பாதையில் கொண்டு செல்வார்கள் என எதிர்ப்பாக்கப்படுகிறது.இவ்வாறு கிடைக்கும் பணத்தினை நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் வளர்ச்சி திட்டங்களுக்கும் செலவிட திட்டமிட்டு இருப்பதாகவும் வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு; http://www.cheraman.com/

No comments: