
'கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஹஜ்ஜூக்கு வர முயற்சி செய்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜூக்கு செல்வதற்கான பணம் என்னிடம் முழுமையடையாமல் போகும். உடன் எனது ஹஜ்ஜூ செய்ய வேண்டும் என்ற ஆவலை அடக்கிக் கொள்வேன். ஆனால் இந்த வருடம் இறைவன் எனது ஆவலை பூர்த்தி செய்துள்ளான். இந்த வருடமும் போதிய பணம் சேரவில்லை. முடிவில் எங்களது வீட்டில் இருந்த இரண்டு பசுக்களை விற்று ஹஜ்ஜூக்கான பணத்தை பூர்த்தியாக்கினேன்' என்று ஆவலோடு சொல்கிறார் 80 வயதைக் கடந்த ஜைனப். இவர் நமது நாடான இந்தியாவிலிருந்து ஹஜ்ஜூ செய்ய வந்தவர்.
'இரண்டு பசுக்கள் போனதைப் பற்றி கவலை இல்லை. ஆனால் எனது 25 வருட கனவு இன்று பூர்த்தியானது மனதுக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. உலக முஸ்லிம்கள் அனைவரோடும் 'எல்லோரும் ஒரு தாய் மக்கள்' என்ற உணர்வோடு நான் செய்த இந்த ஹஜ்ஜை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அளவு சந்தோஷத்தோடு உள்ளேன். மெக்கா நகரம் என்னை பிரமிப்புக்குள்ளாக்கியது. எனக்கு மிகுந்த திருப்தியையும் மன நிம்மதியையும் தந்தது இந்த அழகிய ஊர். எனக்கு அனுமதி கிடைத்தால் இறக்கும் வரை இந்த ஊரிலேயே தங்கி விடலாம் என்று கூட எண்ணுகிறேன். இன்று எனது குடும்பத்தை காண எனது நாட்டுக்கு செல்கிறேன். என் வாழ்நாளில் இந்த ஊரையும் இங்கு நான் பெற்ற படிப்பினைகளையும் மறக்க இயலாது. இந்த வாய்ப்புகளை அளித்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.' என்கிறார் ஜைனப்.
ஹஜ்ஜூக்கு பல லட்சங்களை செலவு செய்து வருபவர்களின் சந்தோஷ பகிர்வுகளை வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவு ஒவ்வொரு வருடமும் பல நாட்டவர்களின் அனுபவங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். அதே சமயம் தனது வாழ்வாதாரமாண பசுக்களை விற்று விட்டு ஹஜ் செய்யுங்கள் என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள் பூரணமாகி எந்த கடன்களும இல்லாத செல்வந்தர்களையே வாழ்நாளில் ஒரு முறை ஹஜ் செய்யுமாறு பணிக்கிறது இஸ்லாம். இந்த மூதாட்டி மெக்காவையும மதினாவையும் பார்க்க வேண்டும்: தனது வாழ்நாளில் காஃபாவிலும் தொழுது விட வேண்டும் என்ற அதீத ஆசையினால் இன்று ஹஜ்ஜை நிறைவு செய்துள்ளார். இவரது ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக் கொள்வானாக!
ஆனால் முழுமையான வசதிகள் இருந்தும் உடல் ஆரோக்கியம் இருந்தும் இப்படி ஒரு கடமை இருப்பதை அலட்சியப்படுத்திக் கொண்டு நம்மில் பல செல்வந்தர்கள் தங்கள் காலங்களை வீணிலே கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு அனுபவம், உலக முஸ்லிம்களோடு பழகும் பாக்கியம் வேறு எந்த சந்தர்ப்பத்திலும் கிடைக்காது. ஒரு முறை ஹஜ் செய்து விட்டால் அவரது வாழ்வே முற்றிலுமாக மாறி விடுவதை நான் கண் கூடாக பார்த்துள்ளேன். எனவே வசதி படைத்த செல்வந்தர்கள் தங்களுக்கு உள்ள கடமையை உணர்ந்து வரும் காலங்களிலாவது ஹஜ்ஜூ செய்வதற்கு உறுதி மொழி எடுப்பார்களாக!
தகவல உதவி:
சவுதி கெஜட்.
5 comments:
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : 12 ஆண்டுக்குப் பிறகு 'நிரபராதி' என 'முஹம்மத் ஹனீப்' விடுவிப்பு!
ஊர் திரும்ப பணமில்லாமல் மேலும் 2 மாதம் ஜெயிலில் வேலை செய்த அவலம் !!
சோக கதை கேட்டு தாய் உள்ளிட்ட கிராம மக்கள் கண்ணீர் !!!
குஜராத் மாநிலம் 'மீர் கஞ்ச்' மாவட்டம் 'ஹகீம் டோலா' பகுதியை சேர்ந்த 'மரியம் காத்தூன்' என்ற மூதாட்டியின் மகன் முஹம்மத் ஹனீப்.
2002 ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது காணாமல் போய் விட்ட அவரை, இறந்து விட்டதாக கருதி வாழ்ந்து வந்த அவரது தாயார், 3 நாட்களுக்கு முன் (20/10/13) மகன் ஹனீபை உயிருடன் பார்த்து அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார்.
ஆனால், அவரது சோகக் கதையை கேட்டு தாய் உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
குஜராத் கலவரத்தின் போது, அஹ்மதாபாத் வீதியில் கூலி வேலை செய்துக் கொண்டிருந்த ஹனீபை பிடித்த போலீசார், கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சேர்த்து ஜெயிலில் அடைத்து விட்டனர்.
அவருடன் சேர்த்து கைது செய்யப்பட மேலும் 5 நபர்கள் 4 ஆண்டுகள் வரை ஜெயிலில் இருந்து விட்டு பிறகு விடுதலையாகியுள்ளனர்.
ஆனால், முஹம்மத் ஹனீப் மட்டும் தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹனீப் குறித்த எந்த தகவலும் அவரது தாய் உள்ளிட்ட எவருக்கும் தெரிக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் இவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
அஹ்மதாபாத் ஜெயிலிலிருந்து ஊர் திரும்ப பணமில்லாமல் மேலும் 2 மாதம் ஜெயிலில் வேலை செய்து பணம் பெற்று ஊர் திரும்பியுள்ளார்,ஹனீப்.
இவரைப் போலவே இன்னும் ஓராயிரம் அப்பாவி 'ஹனீப்'கள் குஜராத் சிறைகளிலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் 'மனித உரிமை' இயக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்ற வாரம் 'பக்ரீத்' அன்று மாட்டை குர்பானி கொடுத்த 37 முஸ்லிம்கள் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர், என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
http://www.vinavu.com/2013/10/22/gujarat-cattle-matter-more-than-people/
//ஹஜ்ஜூக்கு பல லட்சங்களை செலவு செய்து வருபவர்களின் சந்தோஷ பகிர்வுகளை வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவு ஒவ்வொரு வருடமும் பல நாட்டவர்களின் அனுபவங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். //
உண்மை. நம்மையும் ஒரு மதிப்பீடு செய்துகொள்ள உதவும் அனுபவங்கள் இவை.
இப்போதும் இந்த மூதாட்டியின் ஆர்வம் சிலிர்க்க வைக்கிறது.
பிரியங்கா சோப்ராவுக்கும் பிரதமர் ஆசை!
"என் தந்தையின் இழப்பு, என்னை மிகவும் பாதித்து விட்டது. புற்றுநோயால், என் தந்தை எந்த அளவுக்கு அவதிப்பட்டார் என்பது, எனக்கு தான், தெரியும். அதுபோன்ற நிலை, வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. இதனால் தான், புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, என்னால் முடிந்த அளவு, உதவ முடிவு செய்துள்ளேன். அதன், முதல் கட்டமாகத் தான், இந்த நன்கொடையை அளித்துள்ளேன். ஊழலுக்கு எதிரான விஷயங்களிலும், ஆர்வம் காட்டி வருகிறேன். நான், பிரதமரானால், நாட்டிலிருந்து, ஊழலை அடியோடு ஒழிப்பேன். இவ்வாறு, பிரியங்கா கூறினார்."
தினமலர்
23-10-2013
பல உயிர்களை கொன்று குவித்த நரேந்திர மோடியே வெட்கமில்லாமல் பிரதமராக ஆசைப்படும் போது நீயெல்லாம் ஆசைப்படுவது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமில்லை அம்மணி......
முசுலீம் தீவிரவாதி ----------------------------- கடந்த ஞாயிறன்று எனது சித்தப்பா இல்லம் சென்றிருந்தேன் .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தோழர்களில் ஒருவர் அவர்.அவர் வீட்டு மாடியில் இசுலாமியர் ஒருவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறார்.திமுகவின் மாவட்ட பிரதிநிதி அவர். எனது சித்தப்பா பேரன் தீபாவளியையொட்டி பொம்மை துப்பாக்கி வைத்து ரோல் கேப் வைத்து சுட்டு விளையாடுவதை பார்த்து அந்த இசுலாமிய நண்பரின் ஏழு வயது மகனும் கேட்டு அடம்பிடிதிருக்கான்.அவரும் வாங்கி கொடுத்துள்ளார்.
மாலையில் ஏன் சித்தப்பா வீட்டிற்கு சென்று பேசிகொண்டிருக்கையில் அவரும் வந்தார்.மூவரும் பேசிகொண்டிருந்தோம்.அப்போது அந்த முசுலீம் நண்பரின் மகன் துப்பாக்கியை வைத்து விளையாடி கொண்டு வர உடனே எனது சித்தப்பா "என்ன பாய் இப்போவே ட்ரைனிங் கொடுக்கிறீங்க போல என்று சிறிது கொண்டே சொன்னதும் அவர் முகம் மாறிவிட்டது. எனக்கும் சற்றே அதிர்ச்சி.கம்யூனிச சிந்தை உள்ள ,ஊடக விபச்சாரிகளின் திட்டமிட்ட பிரசாரத்தை நன்கு அறிந்த ,பாசிச கும்பலின் திட்டமிடலை தெரிந்த இவர் இப்படி சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன். அந்த முசுலீம் நண்பர் " ஏன் மாமா உங்க பேரன் வச்சிருந்தால் அது விளையாட்டு என் மகன் வச்சிருந்தால் அவன் தீவிரவாதியா''? என்று கேட்டுகொண்டே தலை நிமிர்ந்தவரின் கண்கள் கலங்கி கண்ணீரை உதிர்த்தது . அதை கண்டதும் இருவரும் பதறி அவரை சமாதானபடுத்தினோம்.என் சித்தப்பாவை கடிந்து கொண்டேன்.'' தம்பி விஸ்வரூபம் படத்தை எதுக்கு எதிர்தாங்கன்னு இப்போதான் புரியுது .என்றார். அவரின் "உங்க பேரன் வச்சிருந்தா விளையாட்டு என் மகன் வச்சிருந்தா தீவிரவாதியா" என்ற கேள்வி இன்னும் என் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது .அவரின் கலங்கிய முகம் மனதை விட்டு மறைய மறுக்கிறது . என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் ? இவர்களின் அச்சத்தை போக்க வேண்டியது நம் கடமையல்லவா ?
படித்ததில் ரசித்தது:
”ராமநாதபுரம் ஒரு குட்டி காஷ்மீராக மாறி வருகிறது : ராம.கோபாலன் குற்றச்சாட்டு”
அப்புறம் என்ன?ஆப்பிள் செடியை நட்டு முளைக்குதான்னு பார்க்க வேண்டியதுதானே?
- Ayub
(விகடன் வாசகர் பின்னூட்டம்)
-thanks tp husainamma!
Post a Comment